
Post No. 13,740
Date uploaded in London – 3 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-10 —
Part 2

இதோ மேலும் சில சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்
யதா கரச் சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேதா ந து சந்தனஸ்ய
ததைவ லோகா பஹுஸாஸ்த்ரயு க்தாஹா தர்மேண ஹீனாஹா பசுபிஸ் சமானஹா —சமயோசித பாஹ்ய மாலா
சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் , நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.
ஒப்பிடுக —
கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர வாசனை?
Does an ass appreciate the odour of musk?
****
ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்
ச ஏவ தசபிப் புத்ரைர் பாரம் வஹதி கர்த்தபீ.
–சுபாஷித ரத்ன சமுச்சயம்
ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.
(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)
****
கழுதையின் தூசி
அஜா ரஜஹ கரா ரஜஹ ததா சம்மார்ஜநீ ரஜஹ
தீப மஞ்சகயோஹா சாயா சக்ரஸ்யாபி ச்ரியம் ஹரேத்
கழுதையின் தூசி , ஆட்டின் தூசி துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)
****
குயிலும் கழுதையும்
வாங் மாதுர்யாத் சர்வ லோக பிரியத்வம்
வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்
கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ பனீதம்
கோ வா லோகே கர்தபஸ்யா (அ) பராதஹ
குயிலின் இனிமையால் அதை எல்லோரும் நேசிக்கிறார்கள்
கழுதையின் குரலால் அதை வெறுக்கிறார்கள்; அதே போல மக்களும் இனிய சொற்களால் மகிழ்கிறார்கள் ; கடும் சொற்கள் பேசுவோரை வெறுக்கிறார்கள்.
*****
கழுதையும் குதிரையும்
போதித்தோ (அ)பி பகு சூக்தி விஸ்தரைஹி
கிம் கலோ ஜகதி சஜ்ஜனோ பவேத்
ஸ்நாபிதோ(அ)பி பஹூசோ நதி ஜலைஹி
கர்த்தபஹ கிமு ஹயோ பவேத் க்வசித்
எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு புண்ணிய நதிநீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!
****
கழுதைப் பாலின் விலை
கழுதையை எல்லோரும் மட்டம் தட்டினாலும் கழுதைப் பாலின் மகத்துவம் குறையவில்லை. எகிப்திய அழகி கிளியோபாட்றா கழுதைப்பாலில் குளித்த காலத்திலிருந்து இன்று வரை விலை உயர்ந்து கொண்டே போகிறது ; கட்டுரை எழுதும் (2024) நேரத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை 3200 ரூபாய். கழுதைப் பால் பவுடர் விலையோ கிலோவுக்கு ரூ.60,000 இது கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் 16 கழுதைகளை வைத்து நடத்தும் பண்ணையின் பால் விலை ஆகும்.
****

Tamil Proverbs on Donkeys and Asses
ஒரு சுவையான கதை!
2253. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.
இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.
ஒரு நாட்டினை ஒரு மன்னர் ஆண்டு வந்தார் அவருக்கு முடிவெட்டக்கூட நேரம் கிடைக்காது , அவ்வளவு சுறுசுறுப்பான பேர்வழி. ஆகையால் அந்த ஊரிலுள்ள மிகத் திறமையான நாவிதன், மன்னர் தூங்கும்போதே அழகாக முடிவெட்டி விடுவான்.
இப்படிப் பல வருடங்கள் ஆனபோது மன்னனுக்கு திடீரென நன்றி உணர்வு தோன்றியது . அவனை நாவிதன் என்ற நிலையிலிருந்து பிராமணன் என்ற உயார்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது உடனேயே சபையிலுள்ள வேதம் அறிந்த பார்ப்பனர்களைக் கலந்தாலோசித்தான். அவர்களும் மன்னரின் யோசனையை ஏற்று அம்பட்டனைப் பிராமணனாக்கி விடுவதற்காக யாகத் தீயை வளர்த்தனர்.
முதலமைச்சருக்கு இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்பது புரிந்தது. ஆயினும் மன்னரிடம் நேரடியாகச் சொல்லாமல் வேறு ஒரு தந்திரம் செய்தார் . அந்தணர்கள் யாகம் வளர்த்த இடத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு மண்டபம் கட்டி யாகத்தீயை வளர்த்தார். எதிர்ப் பந்தலில் நாவிதனுக்கு என்ன என்ன சடங்குகளைச் செய்தனரோ அவைகளை இவர் ஒரு கழுதைக்குச் செய்தார். மன்னனுக்கு செய்தி எட்டியது .
எதிர்ப்பந்தலில் நாவிதன் யாகத் தீயை வலம் வரும்போது பிராமணர்கள் உரத்த குரலில் மந்திரம் சொன்னார்கள் . முதலமைச்சரும் அதே போல கழுதையை வலம் வரச் செய்து உரத்த குரலில் மந்திரங்களை முழங்கச் செய்தார். அரசன் அந்த மண்டபத்துக்கு வந்து அமைச்சரே என்ன செய்கிறீர்கள் என்று வினவினான்.
மன்னர் மன்னா ! நீர் ஒரு நாவிதனைப் பிராமணனாக்குவது போல நானும் ஒரு கழுதையைக் குதிரை ஆக்குவதற்காக முயற்சி செய்கிறேன் என்று பதில் தந்தார் ; மன்னனுக்கு அதன் பின்னாலுள்ள கருத்து புரிந்தது. இரண்டும் நடக்க முடியாத செயல் என்று அறிந்து யாகத்தை நிறுத்தி, அந்த நாவிதனுக்கு நிறைய தங்கம், ரத்தினம் முதகலியவற்றைப் பரிசளித்து அனுப்பினான்.

****
1711. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.
As a Washerman’s vehicle (a donkey) carries its load.
2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
A vicious donkey has mischievous propensities.
233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன ?
What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.
434. அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?
What matters it whether a horse or an ass grazes in a garden that lies waste ?
1192. உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனது போல.
As the wearied ass went to the salt-pit.
1494. எடுக்க முன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.
It is said that the ass fell down with a broken hip as soon as it was loaded.
1641. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.
1702. என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.
No instruction however explicit or agreeable will enter the ear of an ass.
1707. என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.
The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.
2075. கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.
The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.
2127. கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது, சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்.
When repeatedly urged to bray, even an ass will not do so, when asked to sing, even a poet will refuse.
2172. கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.
A blacksmith’s shop, and the place in which asses roll themselves are alike.
2175. கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை.
The story of one striking an ass with a sugar-cane.
2176.கரும்பைக் கழுதை முன் போட்டால் கழுதைக்குத் தெரியுமோ கரும்பு ருசி?
Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?
2242. கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.
To effect your object, if necessary, cling to the legs of an ass.
2243. கழுதை காணவேண்டினால் குட்டிச்சுவரிலே காணலாம்.
If an ass be wanted, it may be found feeding near a ruinous wall.
2244. கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.
If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.
2245. கழுதைக்கு ஏன் கடிவாளம்?
Why a bridle for an ass?
2246. கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து.
Dust is medicine for the gores of an ass.
2247. கழுதையும் குதிரையும் சரி ஆமா ?
Are an ass and a horse equal ?
2248. கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல.
Like yoking an ass and a horse together.
2249. கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?
Can an ass appreciate fragrant powder?
2250. கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா ?
Does an ass become a horse by being saddled?
2251. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.
The ass by wearing away has become an ant.
2252. கழுதைக்கு ஏன் கலினம், அல்லது கடிவாளம்?
Why a bit or a bridle for an ass?
2254. கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை.
Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying.
2255. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
Having married an ass, do you fear his kicking ?
2256. கழுதைமேல் ஏறி என்ன, இறங்கி என்ன ?
What matters it whether you mount an ass, or alight from one ?
2257. கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை, இறங்கியும் சிறுமை இல்லை.
Though you may ride on an ass, you gain no honour, nor are you disgraced by dismounting.
2258. கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?
Did the washerman become a farmer by ploughing with an ass ?
2259. கழுதை உழுது குறவன் குடி ஆனானா?
Has the forester become a farmer by ploughing with an ass?
2260. கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன ?
What profit or loss will arise from plucking off the hair of an ass ?
2261. கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?
Can one reign as a king by selling ass-hair?
2262. கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?
Does an ass appreciate the odour of musk?
2263.கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.
The foreign country of an ass is a ruinous wall.
2264. கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்.
If an ass goes astray, it may be found near a ruinous wall.
2265. கழுதைப் பொதியில் ஐங்கல மாறாட்டமா?
Are there five kalams of fraud in the pack on an ass?
2266. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.
You say get a handful, although it be but ass dung.
2364. கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.
As an ass went on a pilgrimage before a copper-smith.
2428. காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.
He who never walked a katham is an ass.
2429. காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.
He whose reputation does not reach a katham is like an ass.
2458. காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.
The ass grazes in the grounds of the industrious.
2460. காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.
If necessary, secure your purpose by clinging to the feet of an ass.
2570. குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?
Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?
2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.
A vicious donkey has mischievous propensities.
3293. சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.
A man of luxurious habits is an ass.
4268. நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.
As an ass put its mouth into a full sack.
4614. பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல.
Like an ass going round a place where a palmyrah tree had been felled.
5373. மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.
A crop-nosed ass does not fear driving rain.
5427. மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.
It is said that the braying ass interrupted the ass that was grazing.
5430. மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
I will tend the donkeys, or go on a pilgrimage.
5517. வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதை மேல் ஆசை.
The washerman longs for the washer-woman, and the washer woman’s desire is fixed on her donkey.
5552. வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.
In the course of time the mother-in-law became a donkey.
5608. வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.
Let the ass go that brought evil on itself by braying.
5621. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள்.
When a distinguished dancing girl becomes old, she may tend asses.

அடுத்த பகுதியில் சங்கத் தமிழ்க் கழுதைகளைக் காண்போம்.
To be continued…….
—subham—
Tags- தமிழ், ஸம்ஸ்க்ருதம், கழுதைகள், ஷேக்ஸ்பியர், -10
Part 2 கழுதை, பழமொழிகள் ,சுவையான கதை