2. உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; பீமன் பற்றிய பழமொழி! (Post 13,742)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,742

Date uploaded in London – 3 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Bhima Vs Duryodhana

Part 2

விஷத்தை விஷத்தால்  முறிக்கலாம் என்பது சீனா, கொரியா ,ஜப்பான் ,வியட்நாம் முதலிய நாடுகளில் உள்ளது . இதற்கு இணையாக முள்ளை முள்ளால் எடுக்கனும், வைரத்தை வைரத்தால் அறுக்கலாம் என்பதைச் சொல்லலாம் .

இது ஹோமியோபதி தத்துவம், இந்துக்களின் ஆசமனம், பீமனின் மஹாபாரதக் கதையால் உண்டான பழமொழி

கெளவர்களுக்குப் பாண்டவர்கள் மீது அசாத்தியமான பொறாமை; அதிலும் குறிப்பாக பீமன் மீது அவர்களுக்கு காட்டம் அதிகம். அவனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சின்ன வயதிலேயே முயற்சித்தனர். ஒரு முறை இரு தரப்பினரும் விளையாடச் சென்றபோது பீமனுக்கு விஷத்தைக் கலந்து கொடுத்து சாப்பிட வைத்தனர். அத்தோடு நில்லாமல் விஷப்  பாம்புகள் உள்ள குளத்தில் அவனைத் தள்ளி விட்டனர் ; அவை பீமனைக் கடிக்கவே விஷம் விஷத்தை முறித்தது; பீமன் அழகாகக் குளித்துவிட்டு வெளியே வந்தான்.

இது கணித பாடத்திலும் நாம் கற்கும்  உண்மை ; மைனஸ் என்பதை மைனஸால் பெருக்கினால் பிளஸ் தான் வரும்.

 Minus Multiply Minus is Plus. Negative multiplied by Negative is a positive number, which means that the product of two negative integers is always positive.

ஹோமியோபதியும் இந்துக்களின் கொள்கையின் அடிப்படையில் அமைந்ததே ; எந்தப் பொருள் உடல் நலத்தைக் கெடுக்குமோ அந்தப்பொருளைச் சிறுகச்சிறுக  அளித்தால் அதுவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் .

சந்திர குப்த மெளரியனை உருவாக்கி நந்த வம்சத்தைப் பூண்டோடு அழித்த சாணக்கியன், சந்திர குப்தனுக்கு நாள்தோறும் சிறுகச்சிறுக விஷத்தைக் கொடுத்தான் இதனால் அவனுக்கு விஷத்தினால் சாவு ஏற்பட முடியாது.

பிராமணர்கள் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் ஆறு, ஏரி, குளம், கிணற்றின் நீரை முதலில் மூன்று முறை கையில் எடுத்து இறைவன் பெயரைச் சொல்லி அருந்துவர்; இதற்கு ஆசமனம் என்று பெயர்.. இதனால் அந்த ஊர்த் தண்ணீரால் அவர்களுக்கு எந்தக் கெடுதியும் வராது 

****

புலித் தோல் போர்த்திய பசு ;

புலித் தோல் போர்த்திய கழுதை

என்பன குறள் , பஞ்ச தந்திரக் கதைகளிலும் உள்ளது. இது பைபிள் வரை சென்ற பழமொழி. விலங்குகளின் பெயர்கள் மட்டும் ஆடு, மாடு, புலி, சிங்கம் என்று மாறும். அதாவது வேறு வேறு வேஷம் போட்டு மக்களை ஏமாற்றுவது அல்லது பயமுறுத்துவதை இது எடுத்துக்காட்டும்.

பஞ்ச தந்திரக் கதை பலருக்கும் தெரிந்ததுதான்

சுகுப்தம் ரக்ஷ்யமானோ அபி தர்ஷயன் தருணம் வபுஹு

வ்யாக்ர சர்ம ப்ரதிச்சன்னா நோ வாக்ருதே ராசபோ ஹதஹ 

இதன் பொருள் : கழுதையானது புலியின் தோலை அணிந்து வந்து சுகமாக வசித்தது; எல்லா பிராணிகளும் பயந்து ஓடின. அதை பார்த்து சந்தோஷத்தில் கழுதை தனது சுயமான குரலில் கத்தவே எல்லா பிராணிகளும் அதைக் கண்டு அடித்துக் கொன்றது ; கழுதையை அதன் குரலே காட்டிக்  கொடுத்துவிட்டது.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.–குறள் 273:

இதை வள்ளுவன் பசுமாட்டுக்குப் பயன்படுத்துகிறான்

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.- என்பது இதன் பொருள்.

ஒரு குட்டிக் கதை

சீனாவிலும் இந்த விஷயம் ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது.  ஒரு நரியைப் புலி பிடித்துக்கொண்டது ; அதனிடமிருந்து தப்பிக்க நரி ஒரு தந்திரம் செய்தது. நான் யார் தெரியுமா? காட்டு ராஜாவின் பிரதிநிதி; என்னை இறைவனே அந்தப் பதவியில் அமர்த்தியுள்ளார்; நீ வேண்டுமானால் என்னுடன் வந்து பார்; எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு  பயந்து  ஓடுவதைப் பார் என்று சொல்லி புலியைக்   கூடவே அழைத்துச் சென்றது; உண்மையிலேயே எல்லா விலங்குகளும் பயந்து ஓடி ஒளிந்தன ; நரியைக் கண்டு அல்ல; புலியைக் கண்டு அஞ்சி!  அது  புலிக்குத் தெரியவில்லை!

கன்பூசியஸ் நூலிலும் இதுபோல ஒரு கதை உண்டு. ஒரு ஆடு புலித்தோலைப் போர்த்திக்கொண்டு காட்டில் திரிந்தது. . ஒரு நாள் ஒரு ஓநாய் வேகமாக வருவதைப்   பார்த்தவுடன் பீதி ஏற்பட்டது; தன்  புலி வேஷத்தையே மறந்து ஓடத் துவங்கியது .

வேஷம் போடுவோரின் சுய ரூபம் ஒரு நாள் வெளிப்பட்டே ஆகும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது உண்மையே.

–subham—

Tags- உலகம் முழுதும், தமிழ்ப் பழமொழிகள், பீமன் ,பழமொழி

விஷம், புலித்தோல் , போர்த்திய, பசு, ஆடு ,கழுதை,

Leave a comment

Leave a comment