.jpg)
Post No. 13.743
Date uploaded in London – —4 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
குமுதம் பக்தி ஸ்பெஷல் 26-9-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அனுமனும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும்!
ச. நாகராஜன்
அனைவரின் மனதையும் கவர்ந்த அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்தவர் பராக் ஒபாமா. டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஜனாதிபதியாக 2009-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு முடிய பதவி வகித்தார். அமெரிக்க வரலாற்றில் இவரே முதல் ஆப்பிரிக்க அமெரிக்க ஜனாதிபதி என்பது குறிப்பிடத் தகுந்தது.
2016-ம் ஆண்டு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், “நான் எப்போதும் சில பொருள்களைக் கூடவே பையில் எடுத்துச் செல்கிறேன். நான் சந்தித்த சில முக்கிய மனிதர்களை நினைவுகூரும் வகையில் அமைந்தவை அவை. இருந்தாலும் கூட ஆன்மீகம் சம்பந்தமான அந்தப் பொருள்களை எப்போதும் என் கூடவே எடுத்துச் செல்ல முடியாது. அதே சமயம் சிலவற்றை எனது பையில் எப்போதும் நான் வைத்துக் கொள்கிறேன்” என்றார் அவர்.
அந்தப் பொருள்கள் என்ன என்று பேட்டி எடுத்த பெண்மணி ஆவலுடன் கேட்க தன் பையிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து விளக்கினார் ஒபாமா. அதில் அனுமனும் சிறிய சிலை ஒன்றும் இருந்தது.
“இந்துக் கடவுளான அனுமன் பலம், புத்தி, வித்யா ஆகிய அனைத்தையும் தரும் ஊக்க சக்தி. இதை என்னுடன் எப்போதும் கொண்டு செல்வதால் தான் அளப்பரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறேன் என்று அவர் கூறிய போது பேட்டியாளர் மட்டும் ஆச்சரியப்படவில்லை;உலகமே ஆச்சரியப்பட்டது.
இளமையில் இந்தோனேஷியாவில் ஒபாமா இருந்த போது இதிஹாசங்களான இராமாயண, மஹாபாரதம் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.
அனுமனைப் பற்றி நன்கு தெரிந்து அவரை எப்போதும் கூடவே வைத்திருந்த பரக் ஒபாமா, அனுமனது அருளால் வெற்றி கொண்ட அமெரிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்ததில் வியப்பில்லை!
**