ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில்: ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற கோவில்கள் –36 (Post.13,744)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,744

Date uploaded in London – 4 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part-36

Sri Ramalayam, Peddathumbalam Village

கர்னூல் மாவட்டத்தில் பெத்தத்தம்பலம் என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுப் பழமையான ராமர் கோவில் இருக்கிறது. ஆலயத்தின் பரப்பு சுமார் அரை ஏக்கர் ; ஆனால் கோவிலுக்குச் சொந்தமான சுற்று வட்டார இடம் முப்பது ஏக்கர். அனைத்தையும் பொது மக்கள் ஆக்ரமித்துக் கோவில் வாசல் வரை கட்டிடங்களைக் கட்டிவிட்டனர். அவைகளில் மசூதி, , தர்கா ஆகியனவும் அடக்கம். எரிகிற வீட்டில் பிடுங்கினது மட்டும் லாபம் என்பது பழமொழி அல்லவா !.

பாண்டவர் கட்டியதாக நம்ப ப்படும் இந்த ராம லட்சுமண சீதா தேவி கோவில் இரண்டாம் புலிகேசி காலத்தில் மீண்டும்  எழுப்பப்பட்டது. கோவிலுக்குள் ராமர் , லட்சுமணர் ,சீதா தேவி இப்போதும் வழி படப்படுகின்றனர் ஆனால் சுற்றிலும் புதிய கட்டிடங்கள்.!

சிறுவர் சிறுமியர் விளையாடும் இடமாக கோவில் விளங்குகிறது. இது மத்திய தொல்பொருட் துறை பாதுகாப்பில் இருக்கிறது சாளுக்கியர் கால சிற்பங்கள் கோவில் சுவரை அலங்கரிக்கின்றன.

2017 முதல் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. கோர்ட்டும் ஆக்ரமிப்பு அகற்ற உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால் முப்பது ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் நீடிக்கின்றன.

இந்துக்கள் கோவில்களை பராமரிக்கவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு; அது மட்டுமல்லாமல் கோவில் நிலத்தைக் கூசாமல் ஆக்ரமித்து வீடுகளும் கட்டிவிட்டார்கள். அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதை !

கோவில் பற்றி அதையக் விவரங்கள் எழுத்தில் இல்லை; ஆயினும்பத்து நிமிட யூயூ டியூப் வீடியோக்கள் இருக்கின்றன.

****

பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில்

பஞ்சமுகி — ஐந்துமுக- அனுமன் கோவில் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் அருகில்  உள்ளது.  ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும்  இடம் மந்த்ராலயம் . இது கர்னூல் நகரிலிருந்து சுமார் 90 கிமீ.  மந்த்ராலயத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது

அங்கே ராகவேந்திரா சுவாமிகள் வழிபட்டு அருள் பெற்றதாக அதிகம். ஐதீகம்

ஆஞ்சநேயரின்  ஐந்து முகங்களில் அனுமன், வராஹம், ஹயக்ரீவர், நரசிம்மர் , கருடர் ஆகியோரை தரிசிக்கலாம். கோவில் வளாகத்தில் பிற கடவுளர் சந்நிதிகளும் இருக்கின்றன.

அனுமன் உருவம் மலை மீது பாறையில் உள்ளது மேலும் ஓரிடத்தில் ஆண்டுதோறும் அனுமனுக்கு புதிய பாத ரட்சைகளும் வைக்கப்படுகின்றன. அனுமனே அவைகளை அணிவதாக மக்கள் நம்புகின்றனர்.

பாறையிலும் அனுமன் காலடிச் சுவடுகள் செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் இங்கே 12 ஆண்டுகள் தவம் செய்தார்

பஞ்சமுக ஆஞ்சநேயர், இராமாயண காலத்தில் மயில்ராவணனைக் கொல் வதற்கு எடுத்த வடிவம் ஆகும்.

கோவிலைச்  சுற்றியுள்ள மலைகளில் வினோதமான பாறை வடி வங்களையும் காணலாம்  ஒரு பாறை படுக்கையும் தலையணையும்’ போல இருக்கிறது சுமார் 20 கிலோ  மீட்டர் தொலைவில் கிராம தேவதை கோவிலும் இருக்கிறது.

ஒவ்வொரு பாறை வடிவத்துக்கும் மக்கள் ஒரு கதையை எட்டுக்கட்டியுள்ளார்கள். நேரம் இருப்பவர்கள் ஒவ்வொரு கதையையும் கேட்டு ரசிக்கலாம்.

கோவில் குன்றின் மீது குகையில் இருப்பதால் படிகளில் ஏறிச்செல்ல வேண்டும்..

–subham—

Tags- பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில் , கர்னூல், ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில் , ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற கோவில்கள் — பகுதி -36, panchamukhi

Leave a comment

Leave a comment