நள தமயந்தி, கீத கோவிந்தம் மொழிபெயர்த்த ஜெர்மன் கவிஞர் ரூக்கர்ட் (Post No.13,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,745

Date uploaded in London – 4 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நள தமயந்தி, கீத கோவிந்தம் மொழிபெயர்த்த ஜெர்மன் கவிஞர் ரூக்கர்ட் (Post No.13,745)

ஜெர்மனியின் புகப்பெற்ற கவிஞர் பிரடெரிக் ரூக்கர்ட்

மொழிபெயர்ப்பின் நோக்கம்  

“கீழை நாடுகளும் மேலை நாடுகளும் பரஸ்பரம்  ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதே மொழிபெயர்ப்பின் நோக்கம்”.

The aim of all translations is that men should know about their aspirations and further friendship among nations.– Friedrich Rueckert 1788- 1866

Dass uber ihrer Bildung ang die Mensschheit sich verstaend ‘ge. Dazu dient jeder Urweltklang, den ich verdeutschend baend’ge. Friedrich Rueckert 1788- 1866

கவிஞர் பிரடெரிக் ரூக்கர்ட் கீழ்த்திசை மொழிகளில் குறிப்பாக பாரசீக சமஸ்க்ருத மொழிகளில் புலமை பெற்றவர்.

கவிதைகள் மூலம் மட்டுமே ஒரு நாட்டின் உள்ளத்தை, இதயத்தை அறிய முடியும் என்ற கொள்கையில் ஆழ்ந்த நமபிக்கை கொண்டவர்  பாரசீக கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் JALAL UD DIN RUMI கவிதைகளை 200 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தார் அராபிய கவிஞர் மகமத் ஹரீரியின் MAKAMAT OF HAIRI  கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

அவருக்கு சம்ஸ்க்ருத மொழியின் பேரில் ஆர்வம் ஏற்படவே வில்கின்ஸ் இலக்கண புஸ்தகத்தைக் Wlkin’s Grammar கொண்டு ஸம்ஸ்க்ருதத்தைக் கற்றார். சம்ஸ்க்ருதத்தில் நல்ல புலமை பெற்ற பின்னர் பிரான்ஸ் பாப் FRANZ BOPP என்னும் புகழ்பெற்ற அறிஞரை சந்த்தித்தார் . அவருடைய மாணவன் நான் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார்.

பிறந்த தேதி –16-5-1788

இறந்த தேதி- 31-1-1866

பிறந்த ஊர் – Schweinfurt

இறந்த இடம் – Neusess

கல்வி கற்ற இடங்கள் – Jena  University  ஜேனா பல்கலைக்கழகம்

வேலை- Professor of  Oriental Languages, Erlangen  கீழ்த்திசை மொழிகளின் பேராசிரியர் 

****

மொழிபெயர்த்த நூல்கள்

கவிதை வடிவில் மஹாபாரத சுருக்கம்

சில திருக்குறள்கள்

அதர்வ வேத பாக்கள்

பிராமணர்களின் ஞானம் – ஆறு தொகுதிகள்

The Wisdom of the Brahmin in six volumes

கீத கோவிந்தம்- அஷ்டபதிகள்

நள தமயந்தி சரிதம்

சத்தியவான் – சாவித்திரி முதலிய கதைகள்

அமருசதகத்தின் காதல் பாடல்கள்

தனித்தனியாக அவர் மொழிபெயர்த்த பாடல்களாலும் கட்டுரைகளும் நிறைய உள்ளன

****

கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’,  ‘இனம் இனத்தோடு சேரும்’ என்பதற்கிணங்க கவிஞர் என்ற முறையில் இவர் கவிஞர்களின் ஆழ்ந்த ஞானத்தை எளிதில்  உணர்ந்தார்

சம்ஸ்க்ருதம் பற்றி ரூக்கர்ட் சொன்னது-

சம்ஸ்க்ருதம் ஒரு கடினமான மொழி; நமது தலைமுறை இஹை முழுதும் கற்க இயலாது நாம் நம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் என்ன நினைத்தாலும் சரி (இதுவே என் கருத்து) .

It is an extremely difficult language and our generation will not yet  master it , however critical we are towards ourselves and  others.

திறனாய்வு

ரூகார்ட்டின் சிறப்பு என்னவென்றால்  தன து மொழிபெயர்ப்புகளைத் தானே திறனாய்வு செய்வார் ;குற்றம் குறைகளை எடுத்து ஆராய்வார். இவர் ஒரு கவிஞர் என்பதை இவரது மொழிபெயர்ப்புகள் காட்டி விடுகின்றன. அவரை மிஞ்ச  எவரும் இல்லை என்ற அளவுக்கு அவரது படைப்புகள் உள்ளன.

—subham—

Tags– நள தமயந்தி, கீத கோவிந்தம்,ஜெர்மன் கவிஞர் ரூக்கர்ட்,ஜெர்மனியின் புகப்பெற்ற, கவிஞர் பிரடெரிக் ரூக்கர்ட்

Leave a comment

Leave a comment