
Post No. 13.748
Date uploaded in London – —5 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (9)
ராமாயணத்தில் வரங்கள் (9) மஹரிஷி சூலி ஸோமதை என்ற கந்தர்வகுமாரிக்கு வரம் கொடுத்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் முப்பத்திஎட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ஸகரமகாராஜனின் அச்வமேத யாக ஆரம்பம்” என்ற ஸர்க்கம்.
விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராமருக்குக் கூறிய சரிதங்களில் ஸகர மகாராஜனின் சரிதமும் ஒன்று.
முன்னொரு காலத்தில் ஸகரன் என்ற பெயருள்ள ஒரு மன்னன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவன் விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த கேசினி என்ற ராஜகுமாரியை மணந்தான். காச்யப முனிவரின் மகளான சுமதி என்பவள் அவனுக்கு இரண்டாவது மனைவியாக இருந்தாள்.
பிள்ளைகள் இல்லாத காரணத்தால் ஸகரன் இமயமலைக்கு இரு மனவிகளோடும் சென்று கடும் தவம் புரிந்தான்.
நூறு வருடம் கடந்தன. பிருகு முனிவர் ஸகரருக்கு ஒரு வரத்தை அளித்தார்.
அத வர்ஷசதே பூர்ணே தபஸாராதிதோ முனி: |
சகரஸ்ய வரம் ப்ராதப்ருகு: சத்யபராக்ரம: |\
அத – அந்த பிரகாரம்
வர்ஷ சதே – நூறு வருடங்கள்
பூர்ணே – நிரம்புகையில்
தபஸா – தவத்தால்
ஆராதின: – ஆராதிக்கப்பட்ட
சத்யபராக்ரம: – சத்ய பராக்ரமரான
முனி: – முனிவரான
ப்ருகு – பிருகு மஹரிஷி
சகரஸ்ய – சகரருக்கு
வரம் – வரத்தை
ப்ராதாத் – அளித்தார்
அபத்யலாப: சிமஹான் பவிஷ்யதி தவானக|
கீர்திம் சாப்ரதிமாம் லோகே ப்ராப்ஸ்யஸே புருஷர்ஷப: |\
அனக – பாபமில்லாதவனே
தவ – உனக்கு
சுமஹான் – அனேக
அபத்யலாப: – புத்திர லாபம்
பவிஷ்யதி – உண்டாகப் போகிறது
புருஷர்ஷப: – புருஷ ஸ்ரேஷ்டனே
லோகே -உலகில்
அப்ரதிமாம் – ஒப்பற்ற
கீர்திம் ச – கீர்த்தியையும்
ப்ராப்யஸே – அடையப் போகிறாய்
ஏகா அனயிதா தாத புத்ரம் வம்சகரம் தவ |ஷஷ்டிம் புத்ரஸஹஸ்ராணி அபரா அனயிஷ்யதி ||
தாத – குழந்தாய்
தவ – உன்னுடைய
ஏகா – ஒருத்தி
வம்சகரம் – வம்சத்தை விளங்க வைக்கும்
புத்ரம் – ஒரு புத்திரனை
அனயிதா – பெறுவாள்
அபரா – மற்றொருத்தி
ஷஷ்டி – அறுபது
புத்ரஸஹஸ்ராணி – ஆயிரம் புத்திரர்களை
ஜனயிஷ்யதி – பிறப்பிப்பாள்
– பாலகாண்டம், 38-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 6,7,& 8
இவ்வாறு பிருகு முனிவர் ஸகரருக்கு வரம் தந்து, கூறவே அவர் மிகவும் மகிழ்ந்தார்.
எவளுக்கு ஒரு புத்திரன், எவளுக்கு அறுபதினாயிரம் புத்திரர்கள் என்று ஸகரன் அவரைக் கேட்க அது உங்கள் இஷ்டம் என்றார் பிருகு முனிவர்.

ஏகோ வம்சகரோ வாஸ்து பஹவோ வா மஹாபல: |
கீர்திமந்தோ மஹோத்ஸாஹா: லா வரா கம் வரமிச்சதி ||
ஏக – ஒருவன்
வா – மாத்திரம்
வம்சகர: – குலத்தை நிலைநிறுத்துகின்றவனாக
பஹவ: – ஆவான்
பஹவ: – அநேகர்கள்
வா – உள்ளபடி
மஹாபலா: – மஹா பராக்கிரமமுடையவர்கள்
கீர்திமான் – கீர்த்தியுள்ளவர்கள்
மஹோத்ஸாஹா: – வெகு உற்சாகமுள்ளவர்கள்
கா – எவள்
கம் வரம் – எந்த வரத்தை
இச்சதி – வேண்டுகிறாள்
வா – இதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
– பாலகாண்டம், 38-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 12
என்றார் பிருகு முனிவர்
குலத்தை விருத்தி செய்யும் ஒரு புத்திரனை கேசினி வேண்டினாள்.
கருடனுடன் பிறந்த சுமதி அறுபதினாயிரம் புத்திரர்களை வேண்டினாள்.
அதன் படியே கேசினி கெட்ட காரியங்களில் பெயரெடுத்த அஸமஞ்சன் என்பவனைப் பெற்றாள்.
சுமதியோ நல்ல காரியங்களைச் செய்யும் அறுபதினாயிரம் புத்திரர்களைப் பெற்றாள்.
பிரபலமான இந்த வரலாறு இப்படியாக விஸ்வாமித்திர மஹரிஷியால் ராமருக்கு உரைக்கப்பட்ட ஒன்றாகும்.
**