உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; அர்ஜுனன் கதை-3 (Post.13,752)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,752

Date uploaded in London – 6 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்-3 அர்ஜுனன் கதை 

தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் நம்பவேண்டும். அதே போல குருசொல்வதை சீடன் நம்பவேண்டும். படைத்தளபதி சொல்வதை படை வீரன் நம்ப வேண்டும்;அப்போதுதான் வெற்றி!

இப்படி நம்பிக்கை இருக்கிறதா என்று பார்க்க சீனாவிலும் ஒரு அரசன் டெஸ்ட் / சோதனை வைத்தான்; நம்பாதவர்களைக் கொன்று குவித்தான்.

கிருஷ்ணன்- அர்ஜுனன் நட்புறவு உலகறிந்தது. ஆயினும் மஹாபாரதப் போருக்கு முன்னால், அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் ஒரு பரீட்சை வைத்தான்; அதில்  அர்ஜுனன்  வெற்றி பெற்றான். இதனால் அவர்களுக்குப் போரிலும் வெற்றி கிட்டியது. ஸ்ரீ சத்ய சாய் பாபா இந்தக் கதையை சொன்னபடி தருகிறேன்.

இதற்கான சீன ஜப்பானிய பழமொழி :கருப்பு நிறத்தைக் காட்டி வெள்ளைஎன்பது. அல்லது மானைக் காட்டி குதிரை என்பது. 

மாலை நேரத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காட்டுப்பாதை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தனர் . கிட்டத்தட்ட இருண்டுவிட்டது . ஒரு மரத்திலுள்ள பறவையைக் காட்டி அர்ஜுனா, அந்த மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்! என்று கிருஷ்ணன் சொன்னான். அர்ஜுனனும் ஆமாம் ஆமாம் மயில் ரொம்ப அழகாக இருக்கிறது என்றான்.

உடனே கிருஷ்ணன் இல்லை, இல்லை, அது கழுகு என்றான்.  அர்ஜுனனும் ஆமாம் ஆமாம் அந்த கழுகு அழகாக இருக்கிறது என்றான்.  உடனே கிருஷ்ணன் அவன் முதுகில் தட்டி நன்றாகப் பார்க்கக்கூடாதா? சரியான மண்டு நீ! மக்கு நீ! என்று கிருஷ்ணன் வைதான்.  உண்மையில்  அது புறா நன்றாகப்  பார்!  என்றவுடன் அர்ஜுனனும்  ஆமாம் ஆமாம் அது புறா என்றான்.

கிருஷ்ணன் கோபம் வந்தவன் போல நடித்து உனக்கு புத்தியே இல்லை; யாரவது ஏதாவது சொன்னால் உன் சொந்த புத்தியைப் பயன்படுத்தி அது என்ன, ஏது என்று அறிய வேண்டும் என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் சொல்கிறான்:

“கிருஷ்ணா! நான் என்ன சொன்னாலும் அந்தப் பறவையை மாற்றும் வல்லமை படைத்தவன் நீ!  உன் சொல்தான் எனக்கு முக்கியம் அந்தப் பொருள் இல்லை”.

இதைக் கேட்டவுடன் கிருஷ்ணன். அகம் மகிழ்ந்து ,உளம்குளிர்ந்து, நீதான் என் உண்மையான பக்தன்!  என்னையே நம்பி என்னையே நினைத்து எல்லா காரியங்களையும் செய் என்று ஆசீர்வதிக்கிறான்.

குரு பக்தி என்பதும் கடவுள் நமபிக்கை என்பதும் இப்படி இருக்க வேண்டும்.

****

சீனாவில் ஒரு அரசனின்  பிரதம மந்திரி தனது மந்திரிகளையும் தளபதிகளையும் கொடூரமான முறையில் சோதனை செய்தான். அவன் பெயர் ஜாவோ காவோ குயின் வம்ச மன்னனின் மந்திரி .

Zhao Gao was Prime Minister of the second emperor of the Quin Dynasty -221 to 206 BCE.

திறமையற்ற மன்னனைக் கவிழ்ப்பதற்காக தனக்கு கீழேயுள்ளவர்களை அழைத்து  ஒரு மானைக் காட்டி அந்தக் குதிரையைப் பார்த்தீ ர்களா ? என்று கேட்டான். யார் யார் ஆமாம் குதிரையைப் பார்த்தேன் என்று சொன்னர்களளோ அவர்களை சேர்த்துக் கொண்டான் ; இல்லையே அது மான் அல்லவா என்று சொன்னவர்களை ஒவ்வொருவராகக் கொன்றுவிட்டான் அதாவது விசுவாசம் இல்லாதவர்கள் என்பது அவனது கருத்து.

****

 குருடன் கையில் விலாங்கு மீன் அகப்பட்டது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

இதற்கு இணையான மேலை நாட்டுப் பழமொழி குருடன் கூட சில நேரங்களில் முயலைப் பிடித்துவிடுவான் என்பதாகும்.

சீனாவில் ஆயிரம் தவறு செய்பவன் ஒரு நல்லதைச் செய்துவிடுவான் என்றும் ஆயிரம் பிழைகளுக்கு நடுவில் ஒரு சாதனை நிகழக்கூடும் என்றும் சொல்வார்கள்.

ஏன் என்றால் அதற்குப்பின்னால் ஒரு கதை உள்ளது

யான் யிங் என்ற பிரதம மந்திரிக்கு நன்றிக கடனாக ஆயிரம் பொற்காசுகளை  கீ வம்ச மன்னன் தூக்கி ஜிங் அனுப்பினான். ஆனால் பலமுறை அனுப்பியும் பிரதமர் அதை ஏற்கவில்லை .அவர் சொன்ன காரணம் :

ஒரு அறிவாளி ஆயிரம் நல்லது செய்தும் ஒரு தவற்றினை செய்ய இயலும்; அதே போல ஒரு முட்டாளும் கூட ஆயிரம் தவறுகளுக்குப் பின்னர் ஒரு நல்ல யோஜனையைக் கூறுவான் ; என்னுடைய யோஜனை இம்முறை சரியாக இருந்தது அவ்வளவுதான் என்று பணிவோடு சொல்லிவிட்டார்.

As a return of courtesy Duke Jing of Qi sent a thousand pieces of gold to Yan Ying, the Prime Minister of the state of Qi during 770-476 BCE period. He repeatedly refused to accept it telling,‘A wise man weighing a matter thousand times  may make a slip, while a fool, weighing the issue a thousand times , may hit upon a good idea. A careful consideration may prove that my idea is correct’

ஷேக்ஸ்பியரும் கூடஇதை வேறுவிதமாகச் சொல்கிறார்

 This fellow is wise enough to play the fool,

And to do that well craves a kind of wit.–  Shakespeare in Twelfth Night

இந்த ஆளுக்கு முட்டாளாக நடிக்கும் திறமை இருக்கிறது; அதற்கும் கூட கொஞ்சம் புத்திசாலித்தனம் வேண்டும்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் சொல்கிறார் – முட்டாள்களும் குழந்தைகளும் உண்மையைச் சொல்லிவிடுவார்கள்!

****

Big fish eat little fish

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி

இது உலகம் முழுதும் ஒலிக்கும் பழமொழி ; மெலியாரை வலியார் கொல்வர் அல்லது தோற்கடிப்பர். பங்குச் சந்தை என்னும் ஸ்டார்க் மார்க்கெட் செய்திகளைப் படிப்போர் இதை அடிக்கடி பத்திரிகைகளில் பார்ப்பார்கள். அதாவது சின்னக் கம்பெனிகளை பெரிய கம்பெனிகள் சுவாஹா செய்துவிடும்; அக்கினியில் போடுவதை அது விழுங்குவது போல, பெரிய கம்பெனிகள்  விழுங்கி விடும்.

தமிழில் பழமொழி நானூறிலும் ஒரு பாடலில் இதைக் காணலாம்

சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,

பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ

விராஅம் புனல் ஊர!- வேண்டு அயிரை இட்டு,

வராஅஅல் வாங்குபவர்.

இம்மையில் தம்மால் இயன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியவர்க்கு ஈய வேண்டும். இந்த நல்வினை செய்து மறுமையில் வீடுபேறு முதலியன பெற நினைக்க வேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள் அயிரை என்னும் சிறிய மீனைத் தூண்டிலில் கோத்துவிட்டுப் பெரிய வரால் மீனை இழுப்பவரோடு ஒப்பர்.

சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம் சில்லறையை விட்டாத்தான் பெருந்தொகையை எடுக்கலாம் – தாயைப் போல பிள்ளை சினிமாபாட்டு.

—SUBHAM—

உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் 3 அர்ஜுனன் கதை, சீனக் கதை ., சின்ன மீனை போட்டு

Leave a comment

Leave a comment