WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.754
Date uploaded in London – —7 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (11)
ராமாயணத்தில் வரங்கள் (11) திதிக்கு கச்யபர் வரம் கொடுத்தது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் நாற்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்துக்களின் உற்பத்தி” என்ற ஸர்க்கம்.
மஹரிஷி விஸ்வாமித்திரர் ஶ்ரீ ராமருக்கு மருத்துக்களின் உற்பத்தியைப் பற்றிய வரலாற்றை விரிவாகக் கூறினார்.
திதியும் அதிதியும் கச்யப முனிவரின் இரு மனைவிகள் ஆவர்.
முன்பொரு காலத்தில் பாற்கடலைக் கடைந்த சமயத்தில் தேவர்களுக்கும் போர் நடந்தது.
திதியின் அசுரர்களான புத்திரர்களை அதிதியின் தேவர்களான புத்திரர்கள் கொன்று விட்டார்கள்.
வருத்தமுற்ற திதி கச்யபரைப் பார்த்து “உங்களது புத்திரர்களாலேயே என் புதல்வர்கள் மாண்டு விட்டனர். இந்திரனைக் கொல்லத் தக்க ஒரு புத்திரனைப் பெற ஆசைப்படுகிறேன்” என்றாள்.
உடனே கச்யபர், “அப்படியே ஆகட்டும்” என்றார்.
பால காண்டம், நாற்பத்தாறாவது ஸர்க்கத்தில் உள்ள 5 மற்றும் ஆறாவது ஸ்லோகங்களைக் காணலாம்:
ஏவம் பவது பத்ரம் தே சுசிர்பவ தபோதனே|
ஜனயிஷ்யஸி புத்ரம் த்வம் ஷக்ரஹன்ந்தாரமாஹவே |\
தபோதனே – தவமே செல்வமாகக் கொண்டவளே
ஏவம் – இப்படியே
பவது – ஆகட்டும்
தே – உனக்கு
பத்ரம் – க்ஷேமம் உண்டாகும்
த்வம் – நீ
ஆஹவே – யுத்தத்தில்
ஷக்ரஹந்தாரம் – இந்திரனைக் கொல்லக் கூடியவனான
புத்ரம் – பிள்ளையை
ஜனயிஷ்யஸி – பெறுவாய்
சுசி: – சுசியாய்
பவ – நட
பூர்ணே வர்ஷஸஹஸ்ரே து சுசிர்யதி பவிஷ்யஸி |
புத்ரம் த்ரைலோக்யபர்தாரம் மத்தஸ்த்வம் ஜனயிஷ்யஸி |\
வர்ஷ ஸஹஸ்ரே – ஆயிரம் வருஷம்
பூர்ணே – முடிவடையும் வரையில்
சுசி: து – தோஷமற்றவளாகவே
பவிஷ்யஸி – இருப்பாயே
யதி – ஆனால்
த்வம் – நீ
மத்த: – என்னிடத்தினின்றும்
த்ரைலோக்யபர்தாரம் – மூவுலகையும் நிர்வகிக்கும்
புத்ரம் – பிள்ளையை
ஜனயிஷ்யஸி – பெறுவாய்
இவ்வாறு கூறிய கச்யபர் தன் கையால் திதியைத் தடவைக் கொடுத்தார். பின்னர் தவம் செய்யச் சென்று விட்டார்.
திதி கடுமையான தவத்தை மேற்கொண்டாள். தேவேந்திரன் அவளுக்குப் பணிவிடை செய்து வந்தான்.
ஆயிரம் வருடம் முடிய இன்னும் பத்து ஆண்டுகளே மீதி இருந்தன.
அப்போது திதி இந்திரனை நோக்கிக் கூறினாள் இப்படி :
வரோ வர்ஷஸஹஸ்ராணே மம தத்த: சுதம் ப்ரதி |\
– பால காண்டம் 46-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 15
தவ பிதா – உன் தந்தையால்
வர்ஷ ஸஹஸ்ராணே – ஆயிரம் வருடங்களின் முடிவில்
வர: – வரமானது பிரார்த்தனையின் நிறைவேற்றமாக
மம – எனக்கு
தத்த: – அருளப்பட்டது
என்று இவ்வாறு கூறிய திதி மேலும் கூறினாள்:”இன்னும் பத்து வருடங்களில் உன் தம்பியைப் பார்ப்பாய். அவனுடன் சகோதர பாவத்துடன் பழகு”
பின்னர் நடுப்பகலில் திதி தன் இரு காலடிகளையும் தலையில் படும்படி வைத்துக் கொண்டு நினைவிழந்தாள்.
உடனே இந்திரன் அவள் உடம்பில் நுழைந்து அங்கு இருந்த கர்ப்பத்தை ஏழு துண்டுகளாகத் துணித்து விட்டான். கர்ப்பத்தில் இருந்த சிசு அழ ஆரம்பித்தது. திதி விழித்து விட்டாள். “கொல்லப்பட வேண்டாம்” என்று அவர் அலறவே அவள் மீதுள்ள மரியாதையால் இந்திரன் அவர்களைக் கொல்லாமல் உடம்பிலிருந்து வெளியில் குதித்து விட்டான்.
உடனே திதி, “ எனது குற்றத்தாலேயே (அசுசியாக இருந்ததால்) இந்த கர்ப்பம் ஏழு துண்டுகளாக ஆகி விட்டது. ஒரு நன்மையைச் செய். இந்த ஏழு துண்டுகளும் ஏழு மருத்துக்களுடைய பதிவி பரிபாலக தேவதைகளாக ஆகட்டும்” என்றாள்.
இந்திரன், “நீங்கள் சொன்னபடியே நடக்கும். உம்முடைய பிள்ளைகள் தேவதா ரூபிகளாய் சஞ்சரிப்பார்கள்” என்றான்.
இப்படியாக மருத்துக்களின் உற்பத்தி பற்றி விஸ்வாமித்திர மஹரிஷி ராமருக்கு எடுத்துரைத்தார்.
**