காக்கிநாடா கோவில்கள்- PART 37 (Post  No.13,759)

Annnavaram Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,759

Date uploaded in London – 8 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

37ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part-37

ஆந்திர  பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன . அவைகளாவன :

அன்னவரம் சத்ய நாராயண கோவில் Annavaram Satyanarayana Temple, கொல்லால மாமிததா கோதண்டராமசுவாமி கோவில் Kodandarama Temple,, Gollala Mamidada,; கொல்லால மாமிததா சூர்யா நாராயண சுவாமி கோவில் Suryanarayana Swamy Temple, Gollala Mamidada; குக்குடேஸ்வரர் கோவில் Kukkuteswara Temple,; குமாரராமா கோவில் Kumararama; தளும்புலம்மா லோவா கோவில் Talupulamma Lova.

ஒவ்வொன்றாக தரிசிப்போம்  

****

கொல்லால மாமிதாத சூர்ய நாராயண சுவாமி கோவில்

Suryanarayana Swamy Temple

இந்த சூர்யநாராயண சுவாமி கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லால மாமதாத ஜமீன்தாரால் கட்டப்பட்டது. பதினாறு ஏக்கர் ரப்பில் புல்வெளி, தென்னந்தோப்புக்கு இடையே ஜமீன்தார் கொவ்வுரி பசவ ரெட்டி இதைக் கட்டினார். அருகில் அந்தர்வாஹினி நதியும் அழகு சேர்க்கிறது .கோபுரத்தின் உயரம்  210 அடி. காக்கிநாடாவிலிருந்து இருபது கி.மீ தொலைவு.

வைஷ்ணவ ஆகமப்படி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ரத சப்தமி , பீஷ்ம ஏகாதசிகள் முக்கிய விழாக்கள் . தென்னந்தோப்பில் கணபதி சந்நிதியும் உளது.

கிழக்கு கோபுர உயரம் -170 ; 9 நிலைக் கோபுரம், 5 கலசங்கள்

மேற்கு உயரம் -210; 11  நிலைக் கோபுரம், 5 கலசங்கள்

நடுவிலுள்ள ஒரு மண்டபத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு (1975) முன்னர் கண்ணாடி மண்டபத்தையும் கட்டியுள்ளனர்

இந்த ஆலயத்தை கோபுரல மாமிதாத என்றும் அழைப்பார்கள் ; கோபுரம் அவ்வளவு உயரம்!

கர்ப்பக்கிரகத்துக்கு மேலே இரண்டாவது அடுக்கிலுள்ள கண்ணாடி மண்டபத்தில் கண்ணாடி ஓவியங்கள் உள்ளன; அங்கு ராம பட்டாபிஷேகக் காட்சிகளையும் காணலாம். கோபுரத்துக்கு மேலேயும் செல்லலாம். அங்கிருந்து கோபுரத்திலுள்ள ராமாயணக் காட்சிகளையும் பார்க்கலாம்

  இவையெல்லாம் வேறு எங்கும் காண முடியாத விஷயங்கள்.  தனி மனிதர் ஒருவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு உயர கோபுரத்தை எழுப்பி சோழ , பாண்டிய, நாயக்க மன்னர்களைத் தோற்கடித்துவிட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

*****

பித்தாபுரம் குக்குடேஸ்வர சுவாமி கோவில்

குக்குடேஸ்வர சுவாமி கோவில் ஆந்திர பிரதேசத்தில் காகிநாடா மாவட்டத்தில் இருக்கிறது. காகிநாடாவிலிருந்து இருபது  கி.மீ தொலைவு.  இது சைவர்களுக்கும் சாகத்தர்களுக்கும் முக்கியமான் ஸ்தலம்.

குக்குடம் என்றால் கோழி/ சேவல்

இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தின் வடிவம்  மேல் பகுதியில் அந்த வடிவத்தில் இருப்பதால் குக்குடேஸ்வர சுவாமி என்று பெயர்.

தேவியின் பெயர் ராஜ ராஜேஸ்வரி .

இது பதினெட்டு சக்தி பீடங்களில் ஒன்று . சமுத்திர குப்தனின் அலகாபாத் கல்வெட்டிலும் இந்த ஸ்தலம் குறிப்பிடப்படுகிறது

இந்த ஆலய  வளாகத்தில் குந்திமாதவ சுவாமி கோவில், ஸ்ரீ ஸ்ரீ பாத வல்லப க்ஷேத்ரம், வேணுகோபால சுவாமி கோவில் ஆகியனவும் இருக்கின்றன  லெபாக்ஷி போல பெரிய ஒற்றைக் கல்  நந்தியும் த்வஜ ஸ்தமபம் அருகில் உள்ளது.. சிவராத்ரி காலத்தில் நிறைய கூட்டம் வருகிறது’

இந்தக் கோவிலுக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு பித்ருக்களின் அருளைப் பெறும் கயா க்ஷேத்ரமாகவும், தத்தாத்ரேயர் அவதார ஸ்தலமாகவும் கருதப்படுகிறது

கோவில் புஷ்காரிணியின் நடுவிலுள்ள பெரிய மணடபத்தில் கயாசுரன் சிலை இருக்கிறது.

*****

அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணா கோவில்

அன்னாவரம் வீர வெங்கட சத்யநாராயணா கோவில் ஒரு விஷ்ணு கோவில் . இது ரத்தினகிரி மலையில் பம்பா நதிக்கரையில் அமைந்துள்ளது.

ஆலயத்துக்குப் படிகளில் ஏறியோ சாலை மார்க்கமாகவோ போக முடியும் . கோவிலுக்குச் செல்ல 460  படிகள் உள்ளன.

கோவில் இரண்டு அடுக்குகளில்  அமைந்துள்ளது  கோவில் ஒரு ரதம் போல நான்கு மூலைகளில் நான்கு சக்கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது  முக்கிய நுழைவாயில் தங்கத் தகடுகளால் வேயப்பட்டிருக்கிறது.

காக்கிநாடாவிலிருந்து 40  கி.மீ,ராஜமுந்திரியிலிருந்து 80 கி.மீ ; விசாகையிலிருந்து மூன்று மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

அருகிலேயே ராமர் கோவில், வனதுர்கா, கனக துர்கா கோவில்களும் இருக்கின்றன.

கோவிலின் முன் பகுதி ரத வடிவில் சூர்ய சந்திரர்கள் ரத சக்கரங்கள் என்றும் சொல்லப்படுகிறது உயரத்தில் இறைவன் சிலைகள் இருப்பது அவரே பிரபஞ்சத்தை காலச் சக்கரம் வழியே இழுத்துச் செல்கிறார் என்ற அர்த்தத்தில் சிற்பிகள் வைத்துள்ளனர். அனந்த லக்ஷ்மி சத்யவதி என்பது தேவியின் திருநாமம்

****

குமாரராமா கோவில்

காகிநாடாவிலிருந்து12 கி.மீ தொலைவில் சாமல்கோட் இருக்கிறது இது பஞ்சராம ஸ்தலங்களில் ஒன்றாகும் SRI CHALUKYA KUMARARAMA SRI BHIMESWARASWAMY  TEMPLE  ஸ்ரீ பீமேஸ்வர சுவாமி  ஒரே கல் சிவலிங்கமாக காட்சி தருகிறார்  அங்கே ஒரே கல்லிலான நந்தியும் இருக்கிறது சிவன் கோவில் மேல் அடுக்கில் இருக்கிறது. பாலா திரிபுர சுந்தரி இங்குள்ள அம்மன் ஆகும். அழகான புஷ்கரிணியும் (குளம்) ஆலய வளாகத்தில் இருக்கிறது இது சாளுக்கியர் கால ஒன்பதாம் நூற்றாண்டுக் கோவில்.

இங்குள்ள லிங்கம் 16 அடி உயரமானது. முதல் அடுக்கில் இதன் பீடம் இருக்கிறது . லிங்கம் இரண்டாவது அடுக்கு வரை செல்கிறது நூறு தூன்க்கள் உள்ள மண்டபத்தில் நிறைய சிற்பங்களும் அலங்கார வேலைப்பாடுகளும் கண்ணுக்கு விருந்து அளிக்கின்றன.

த்ரராக்ஷரம கோவில் போலவே இது உள்ளது

கோவிலைக்கட்டி முடிக்க மன்னன் பிடிமானுக்கு முப்பது ஆண்டுகள் ஆயின. மன்னனின் பெயரில் லகோவில் அழைக்கப்படுகிறது  சாளுக்கியருக்குப் பின்னர் வந்த காகதீயர்கள் கோவிலை மேலும் அழகுபடுத்தினர்

அண்மைக்கால கல்வாராய்ச்சியில் மேலும் பல சிலைகளை இங்கே கிடைத்தன. கார்த்திகை மார்கழி மாத உற்சவங்கள் சிறப்பான முறையில்கொண்டாடப்படுகின்றன

மாண்டவ்ய நாராயண சுவாமி கோவிலும் அருகில் இருக்கிறது. இது மாண்டவ்ய மகரிஷி வழிபட்ட ஆலயம்  அருகில் த்ரி முக லிங்கம் கோவிலும் இருக்கிறது 14அடி உயரமுள்ள லிங்கத்தின் மேல்பகுதியை மட்டுமே காணமுடியும், ஏனைய பகுதிகள் மண் மூடிவிட்டு பிரம்மா விஷ்ணு சிவனுடைய மூன்று முகங்கள் லிங்கத்தில் இருப்பதால் திருமுக  த்ரி முக்கலும் என்பது இறைவனின் பெயர்

–SUBHAM—

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part-37

குமாரராமா , கொல்லால மாமிதாத, சூர்ய நாராயண சுவாமி கோவில் ,அன்னாவரம் ,பித்தாபுரம், குக்குடேஸ்வர

Leave a comment

Leave a comment