Post No. 13,763
Date uploaded in London – 9 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’ என்று சொன்ன ஜெர்மானியர்! ( Post .13,763)
available from pustaka.co.in
available from pustaka.co.in
பீட்டர் வான் போலன் (1796-1840), நமக்கு பல அதிசய செய்திகளை விட்டுச் சென்றுள்ளார் அராபிய , பாரசீக, சம்ஸ்க்ருத மொழிகளைக் கற்ற இந்த ஜெர்மானியர் எகிப்திய நாகரீகம் , இந்தியாவிலிருந்து கடன் வாங்கியதே என்று இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டார். இன்றைய ஆய்வுகள் அதை உண்மையென்று காட்டுகின்றன
(முழு ஆதாரங்களும் என்னுடைய தமிழ் ஆங்கிலப் புஸ்தகங்களில் உள்ளன.)
பீட்டர் போலனின் மிகப் பெரிய சாதனை – எகிப்து தொடர்பான புராதன இந்தியா . பல தொகுதிகளாக வெளியான இந்த பிரம்மாண்டமான புஸ்தகத்தில் இந்தியாவிலிருநு சென்ற பண்பாடுதான் எகிப்திய நாகரீகமாக பரிணமித்தது என்று காட்டியுள்ளார்.
ANCIENT INDIA WITH SPECIAL REFERENCE TO INDIA = DAS ALTE INDIEN MIT BESONDERER BERUKSCICHITGUNG AEGYPTIANS
PETER VON BOHLEN 1796 -1840
பிறந்த தேதி -13-3-1796
பிறந்த ஊர் FRISIA VILLAGE பிரிசியா
இறந்த தேதி 6-2-1840
கல்வி கற்ற இடம் HAMBURG, BONN ஹாம்பர்க், பான் நகரங்கள்
அவரது குரு FRANZ BOPP பிரான்ஸ் பாப்
பார்த்த வேலைகள் – LECTURER IN SANSKRIT, ARABIC, PERSIAN AT KOENIGSBERG சம்ஸ்க்ருத விரிவுரையாளர். பின்னர் பேராசிரியர்.
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –
NITI SATAKA OF BHARTRUHARI, RITU SAMHARA OF KALIDASA
காளிதாசனின் ரிது சம்ஹாரம் பர்த்ருஹரியின் நீதி சதகம் ; இவைகளை ஜெர்மன் மொழியில் ஆக்கினார் .
****
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
பீட்டர் போலன் பிரிசியா என்னும் ஒரு சின்னக் கிராமத்தில் ஏழைக் கு டியானவர் குடும்பத்தில் பிறந்தார் . அவருடைய புத்திசாலித்தனத்தைக் கவனித்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் அவர் கல்வி கற்க உதவி செய்தார். ஆயினும் சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து அநாதை ஆனார்; .அதற்குப்பிறகு வாழ்க்கையே போராட்டமானது. அவர் பார்த்த வேலைகள் — பண்ணைக் கூலியாள், ஒரு பிரெஞ்சு தளபதியின் எடுபிடி ஆள், படகோட்டி, கடைக்கார வேலையாள் !
இதற்குப்பின்னர் ஹாம்பர்க் நகர பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் . எபிரேயம் /ஹீப்ரு, அராபிய, பாரசீகம் முதலிய மொழிகளைக் கற்று ஹாம்பர்க் நகர நூலகத்தில் இருந்த அந்த மொழி நூல்களுக்கு அட்டவணை தயாரித்தார்.
இதற்குப் பின்னர் பான் நகருக்குச் சென்று வில்லியம் , ஸ்லெகல் , பாப் ஆகியோருடன் சேர்ந்து சம்ஸ்க்ருத மொழியைப் பயின்றார். பிரான்ஸ் பாப், இவரருக்கு சம்ஸ்க்ருத இலக்கணத்தைப் போதித்தார் பின்னர் கோநிஸ்பர்க்கில் மூன்று மொழிகளுக்கு ஆசிரியர் ஆகி மூன்றே ஆண்டுகளில் பேராசிரியர் பதவிக்கு உயர்ந்தார் பிற மொழிகளை ஒதுக்கி விட்டு சம்ஸ்க்ருத மொழிக்கடலில் மூழ்கினார் எகிப்திய இந்திய ஆராய்ச்சிக்கு கிரேக்க ஆசிரியர்கள், பயணிகள் எழுதிய விஷயங்களைப் படித்தார் .
மனு ஸ்ம்ருதியை ஆதாரமாக வைத்து இந்திய சட்டம் பற்றிய அத்தியாயத்தை எழுதினார் .
போலன் இறந்த பின்னர்தான் முழு அளவுக்கு சம்ஸ்க்ருத நூல்கள் ஜெர்மனியில் கிடைத்தன. அப்போது அவர் இருந்திருந்தால் இன்னும் எழுதிக்குவித்து இருப்பார்.
இவர் பர்ஹருஹரியின் நீதிசதகம், காளிதாசனின் ருது சம்ஹாரம் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து வெளியிட்டார். சிலர் இவரது அணுகுமுறையை விமர்சித்தபோதும் லாசன் என்ற அறிஞர் இவருடைய நூல்களைப் பயனுள்ளவை என்று புகழ்ந்தார்
இங்கிலாந்துக்குச் சென்ற போலனை நோய் தொற்றிக்கொண்டது; இரண்டு ஆண்டுகளுக்கு பென்ஷன் உதவித் தொகை பெற்ற அவர், ஹால் HALLE நகரில் இறந்தார்.
போலன் எழுதிய சுயசரிதை நூல் அவர் இறந்த பின்னர் வெளியானது
என் கருத்து
130 சம்ஸ்க்ருத அறிஞர்களின் வாழக்கை வரலாற்றினையும் சாதனைகளையும் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வியப்பு !
எதற்காக இவர்கள் பல சம்ஸ்க்ருத சுவடிகளை ஜெர்மனிக்கு எடுத்துச் சென்றார்கள்?
பல கீழ்த்திசை மொழிகளைக் கற்றும் ஏன் சுமக்கிருதக் கடலில் மூழ்கி வேறு மொழிகளை ஒதுக்கினர்?
கடல் போல ஜெர்மன் மொழியில் இவர்கள் எழுதியதை நம்மவர்கள் ஏன் ஆங்கிலத்திலோ இந்திய மொழிகளிலோ வெளியிடவில்லை ?
இனிமேலாவது அதைச் செய்வார்களா? அந்தக் கடலில் உள்ள முத்து பவளங்களையாவது நமக்கு எடுத்து வழங்குவார்களா ?.
ஜெர்மன் மொழியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களை அழைத்து மாக்ஸ்முல்லர் பவன்களில் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தால்கூட பலன் தரும்.
—SUBHAM—
TAGS- பீட்டர் வான் போலன், PETER VON BOHLEN , ‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’