WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.768
Date uploaded in London – —11 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 4-9-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
ஆழ்நிலை தியானம் மற்றும் யோகாவை உலகெங்கும் பரப்பிய மகேஷ் யோகி! – 2
ச. நாகராஜன்
நுண்ணறிவின் 40 அம்சங்களை வளர்க்கும் தியானம்!
நுண்ணறிவுக்கு 40 குணாதிசயங்கள் உள்ளன.
1)ஆற்றலுடன் கூடிய மௌனம், 2)எப்போதும் நீரோட்டம் போல அமைந்துள்ள விழிப்பு நிலை,3) கொடுத்தலும், உருவாக்குதலும், 4)துடிப்புள்ள முழுமை நிலை, 5)வெளிப்படுத்தும் திறன்,6) மாற்றும் திறன், 7)விரிவடையும் திறன், 8) தனக்கு பரிந்துரைத்தல், 9)அளத்தலும், நிர்ணயித்தலும்,10) அனைத்தும் அறிதல், 11)வேறுபாடுகளை அறிதலும் முடிவெடுத்தலும், 12)குறிப்பாகச் சொல்லுதல்,13) விரிவாக்கல், 14)ஒருங்கிணைத்தல், 15)பகுத்தாய்தல், 16)முழுமையாக வாழ்தல், 17)ஒருங்கிணைத்து ஒத்திசைத்தல், 18)மறைந்திருத்தலும், முன்னேற்றமும், 19)நிலைநிறுத்தல், 20) போஷித்தல்,21) வகைப்படுத்தல், 22)சமான உறவு, 23)சமச்சீர்ப்படுத்தல், 24) பிரித்தல், 25)தகவல் தொடர்பும், பேச்சாற்றலும், 26) பகுத்தாராய்தல், 27)அனைத்தையும் ஒருங்கு சேர்த்தல், 28)அறிவு ஒளி பெறுதல், 29)ஆழ்நிலை அடைதல், 30)கலக்குதல், 31)முழுமையை விகசிக்க வைத்தல், 32)புராதனமானதும் எப்போதும் உள்ளதும், 33)நினைவாற்றல், 34)எங்கும் விரவியுள்ள முழுமை, 35)அமைதிப்படுத்தல், 36)பகிர்தல், 37)பரப்புதல், 38)கட்டவிழ்த்தல், 39)கரைதல், 40) உதிரிப் பகுதிகளை நீக்கி முழுமையை உருவாக்கல் ஆகிய நுண்ணறிவின் நாற்பது குணாதிசயங்களையும் வேதம், உபநிடதம், சாத்திரங்கள் விளக்கியுள்ளன.
40 QUALITIES OF INTELLIGENCE
1. Holistic Dynamic Silence 2) Flowing Wakefulness 3. Offering and Creating 4. Reverberating WHOLENESS 5. Expressing 6. Transforming 7. Expanding 8. Self -Referral 9. Measuring and Quantifying 10. All Knowing 11. Distinguishing and Deciding 12. Specifying 13. Enumerating 14. Unifying 15. Analysing 16. Lively Absolute 17. Integrating and Harmonizing 18. Invincible and Progressive 19. Establishing 20. Nourishing 21. Differenctiating 22. Equivalancy 23. Balancing 24. Separating 25. Communication and Eloquence 26. Disagonising 27. Synthesizing 28. Enlightening 29. Transcending 30. Stirring 31. Structuring 32. Blossoming of Totality 33. Ancient and Eternal 34. Memory 35. All-pervading WHOLENESS 36. Silencing 37. Unfolding 38. Dissolving 39. Omnipresent 40. Unmanifesting the parts but manifesting the whole
இந்த நாற்பது அம்சங்களையும் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானப் பயிற்சி, யோகமுறைகள் மற்றும் பறக்கும் திறனுடன் கூடிய சித்தி திட்டம் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.
2000-ம் ஆண்டில் அவர் அமைதிக்கான உலக நாடு ஒன்றை உருவாக்கினார்.
ஆழ்நிலை தியானம் எங்கெல்லாம் அதிகமாகப் பரவியதோ அங்கெல்லாம் அந்த நாடுகளில் குற்ற விகிதம் கணிசமாகக் குறைந்ததை புள்ளி விவரங்களுடன் தந்து அந்தந்த நாட்டின் அறிஞர்கள் சுட்டிக் காட்டி மகிழ்ந்தனர்.
Mahesh Yogi with the Beatles
குடும்பம்
மஹரிஷியின் சகோதரரும் அவரது நெருங்கிய உறவினர்களும் ஆசிரமத்தின் பணியை மேற்கொண்டதோடு முக்கிய பொறுப்புகளையும் வகித்தனர்.
மறைவு
ஸ்விட்சர்லாந்தில் செலிஸ்பர்க்கைத் தன் தலைமையகமாகக் கொண்டு உலக மையங்களை அவர் இயக்கலானார். பின்னர் 1991-ம் ஆண்டு
நெதர்லாந்தில் உள்ள விளாட்ராப் என்ற இடத்திற்குச் சென்ற அவர் 2008-ல் அவர் மறையும் வரை அங்கேயே தங்கலானார்.
வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் தனது இரு அறைகளை விட்டு வெளியே வரவில்லை.
பெரும்பாலும் வீடியோக்கள் மூலமாகவே அவர் பார்வையாளர்களைச் சந்தித்தார்; உரைகளை நிகழ்த்தினார்.
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி உறங்குகையில் மிக அமைதியாக அவர் தன் உடலை உகுத்தார். அப்போது அவருக்கு வயது 91.
மறைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆழ்நிலை தியான இயக்கத் தலைமைப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அவரது மறைவை ஒட்டி ஒலிபரப்பு ஒன்றை மேற்கொண்ட பி.பி.சி. உலக ஒற்றுமைக்கும் உலக மக்களுக்காகவும் ஓயாமல் உழைத்த மாமனிதர் மகேஷ் யோகி என்று வானளவாகப் புகழ்ந்தது
தபால்தலை
30-8-2019 அன்று மகேஷ் யோகியை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு தபால்தலை ஒன்றை வெளியிட்டது
மஹரிஷியின் பொன்மொழிகள்
ஒரு மனிதனை ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும், தேவையான செல்வத்துடனும் நீடித்த ஆயுளுடனும் வாழ வைக்கும் ஆசனங்கள் மற்றும் தியான முறைகளைக் கற்பிப்பதே ஆழ்நிலை தியானம் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
மஹரிஷி தனது வாழ்க்கையில் ஏராளமான அறிவுரைகளைத் தந்துள்ளார். அவற்றில் சில:-
இருளுடன் சண்டை போடாதிர்கள். ஒளியை ஏற்றுங்கள். இருள் தானே மறையும்.
எப்போதும் சந்தோஷமாக இருப்பதே முக்கியமானது. சந்தோஷமாக இருக்கும் போது இயற்கையின் அரிய உதவி மிக அதிகமாகக் கிடைக்கும்.
மனமே தான் எல்லாம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம்.
குறிப்பு
யோகாவினால் ஏற்படும் பயன்களை இந்தக் கட்டுரையாசிரியர் எழுதி 20-6-2023 மாலைமலர் இதழில் வெளியான ‘அறிவியல் வியக்கும் யோகா’ என்ற கட்டுரையில் காணலாம். மாலைமலர். காம் இணையதள ஈ-பதிப்பில் எப்போதும் இதைப் படிக்க முடியும்.
***