Post No. 13,769
Date uploaded in London – 11 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜோதிடம் பற்றிய நம்பிக்கையில் மூன்றாவது பகுதி
மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள் ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்—14
****
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் அவரது கால ஐரோப்பியர்களின் ஜோதிட நம்பிக்கைகளை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள் இதோ :
Pardon me, good lady,
For by these blessèd candles of the night,
Had you been there I think you would have begged
The ring of me to give the worthy doctor.
–Merchant of Venice
‘BLESSED’ CANDLES – Merchant of Venice
மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ் நாடக வசனத்தில் வரும் வரிகள் –
இரவுநேரத்தில் ஒளிவீசும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மெழுகுதிரிகள் — இதை வியாக்கியானம் செயத சிலர், இது ஏசுகிறிஸ்த்துவால் ஆசீர்வதிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் என்றும் இன்னும் சிலர், இவை விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் என்றும் சொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட விண்மீன்களின் உண்மைப் பொருளை விளக்கவில்லை.
இது நமது மகாபாரதத்தில் உள்ளது .
இந்திர லோகம் சென்று அதி நவீன ஆயுதங்களை பெறுவதற்காக அர்ஜுனனும் மாதலியும், பூமிக்குத் திரும்பிவரும், ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறார்கள்; அபோது விண்கலத்தின் பைலட்டிடம் அர்ஜுனன் வியப்புடன் ஒரு கேள்வியைக் கேட்கிறான்.
மாதலி! வெளியே தெரியும் ஒளிவீசும் பொருட்கள் என்ன?
ஓ, அவைதான் இறந்து போன நமது முன்னோர்கள் ; இப்படி ஒளி ரூபத்தில் இருக்கிறார்கள்
வன பர்வத்திலுள்ள இந்த வரிகள் உண்மை என்பதை நாம் நட்சத்திரங்களுக்கு இட்ட பெயர்களே காட்டுகின்றன. அகஸ்தியர், துருவன், திரிசங்கு, ஸபத்ரிஷிகள் , அருந்ததி.
சப்த ரிஷிக்கள் – அத்ரி, பிருகு, குத்ச, வசிஷ்ட, கெளதம, காஸ்யப ஆங்கீரஸ – இந்த எழுவரையும் தமிழர்கள் வணங்குவதை நற்றிணைப் பாடல் விதந்து ஓதுகிறது. அருந்ததி நட்சத்திரத்தை தமிழ்ப் பெண்கள வணங்குவதை சங்க இலக்கியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. திருமணமான இரவில் அருந்ததி காட்டல் என்பது இந்துக்களின் முக்கியச் சடங்கு.
அந்த அருந்ததி வசிஷ்ட்ட நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டே இருக்கும் ஸ்பத ரிஷிகளின் பெயரை இன்று பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லி சந்தியாவந்தனம் செய்வார்கள்; அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் வியக்கும் சம்ஸ்க்ருத ஆசிரியர் பாணினி சொல்கிறார் ; ஆக இந்துக்கள்தான் முதல் முதலில் விண்மீன்களுக்கு பெயர் சூட்டினர். பின்னர் கிரேக்கர்கள் நம்மைக் காப்பி அடித்தனர்; வெள்ளைக்காரர்களுக்கு கிரேக்க விஷயங்கள் மட்டுமே தெரியும் ; இந்துக்கள் பற்றி அதிகம் தெரியாது.
****
I am constant as the northern star
I could be well moved, if I were as you;
If I could pray to move, prayers would move me.
But I am constant as the northern star,
Of whose true-fixed and resting quality
There is no fellow in the firmament.
The skies are painted with unnumbered sparks,
They are all fire and every one doth shine;
But there’s but one in all doth hold his place.
–Julius Caesar
These lines come from Caesar’s speech in Act III, scene i,
ஜூலியஸ் சீசர் நாடகத்தில், அவனை நண்பர்களே சேர்ந்து படுகொலை செய்யும் முன்பாக, அவன் பேசிய வசனத்தில் சொல்கிறான் – நானா வட நட்சத்திரம் போல உறுதியான வன். சொன்ன ;சொல் மாறமாட்டேன்.
இதிலுள்ள வட நட்சத்திரம் என்பது துருவ நட்சத்திரம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆயினும் துருவ நட்சத்திரம் பிரபலமானது கப்பலோட்டிகளால்தான்; அது ஒன்றுதான் எப்போதும் மாலுமிகளுக்கு வடதிசையைக் காட்டிக்கொண்டிருந்தது என்று எழுதியுள்ளனர் .
அவர்களுக்கு இந்துக்களின் துருவன் பற்றித் தெரியாது மாற்றாந் தாயினால் புறக்கணிக்கப்பட்ட துருவன் என்னும் சின்னப் பையன் நாராயணனை வணங்கி நட்சத்திரமானது இந்துக்கள் எல்லோருக்கும் தெரியும்
துருவ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு உறுதி, நிலையான என்று பொருள். இது நமது யஜுர் வேதத்தில் உள்ளது ; மேலும் பூமியின் அச்சு சுழன்று கொண்டிருப்பதால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறும். இந்த விஷயம் கூட மஹாபாரதத்தில் உள்ளது பின்னால் வந்த வான சாஸ்திரிகள் இது பற்றி விரிவாகவே ஸம்ஸ்க்ருதத்தில் விளக்கியுள்ளனர். ஜூலியஸ் சீசர் பேசியபோது இதை அறிந்தே சொல் லி இருக்க வேண்டும்.
துருவ என்பதை அராபியர்கள் துர்பன் என்பர். அப்படியே சம்ஸ்க்ருதச் சொல்! ப = வ என்பது உலகம் முழுதும் உள்ளது.
சிந்து- சரஸ்வதி நதி நாகரிக முத்திரையில் ‘தேவ’
தேவ என்ற சொல்லு ஒளிர்பவன் என்று பொருள்; இறைவனை நாம் தேவ என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுகிறோம்; அவனது மனைவியை தேவி என்போம் ; சிந்து சமவெளி முத்திரைகளில் மிகவும் முக்கியமாக வருவது மீன் முத்திரை; இதைக் கடவுள் என்று பலரும் வியாக்கியானம் செய்கின்றனர். உண்மையில் இது தேவ, தேவி என்ற பொருள் தரும் அடையாளக்குறி ஆகும் ஆக இந்துக்கள் எழுதிய ஒளிவீசும் புண்ய ஆத்மாக்களை சிந்து சமவெளி முத்திரைகள் காட்டுகின்றன என்று நான் கருதுகிறேன். (முன்னரும் இது பற்றி எழுதியுள்ளேன் )
*****
Hold, take my sword. There’s husbandry in heaven;
Their candles are all out. Take thee that too.
A heavy summons lies like lead upon me,
And yet I would not sleep: merciful powers,
Restrain in me the cursed thoughts that nature
Gives way to in repose!– Macbeth
இது மாக்பெத் நாடகத்தில் வரும் வசனம் . இதில் நடசத்திரங்களுக்கு தேவதைகள் ஒளியுட்டுவதாகவும் ‘இன்று நமது கொலைத் திட்டத்துக்கு சாதகமாக தேவதைகள் , சில நட்சத்திரங்களுக்கு மட்டுமே ஒளியைக் கொடுத்திருப்பதாகம் சொல்கிறான். இதில் எவருக்கும் கருத்து வேறு பாடு இல்லை. ஆகவே நட்சத்திரங்கள்–தேவதை தொடர்பினை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் ;இதை எழுத்து வடிவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மஹாபாரதத்தில் கொடுத்துவிட்டோம் .
****
“When he shall die,
Take him and cut him out in little stars,
And he will make the face of heaven so fine
That all the world will be in love with night
And pay no worship to the garish sun.”
― William Shakespeare, Romeo and Juliet
ரோமியோ ஜூலியட் நாடகத்தில் காதலி ஜூலியட் பேசும் வசனத்தில் ரோமியோவை நட்சத்திரம் ஆக்கி விடுங்கள்; வானத்தில் எப்போதும் ஒளிவீசிக்கொண் டிருக்கட்டும் என்கிறாள் ; இதுவும் இந்துக்கள் சொல்லுவதை உறுதிப்படுத்துகிறது புண்யாத்மாக்கள் மட்டுமே ஒளிவீசும் விண்மீன்களாக முடியும்.
ஷேக்ஸ்பியர் தன்னுடைய 400 வான சாத்திரக் குறிப்புகளில் இது போல ஏராளமான நம்பிக்கைகளை முன் வைக்கிறார் சகுனங்கள் பற்றி அவர் சொல்லுவ மேலும் சான்றுகள் கிடைக்கின்றன .
தொடர்ந்து காண்போம்
–subham–
Tags–மேலும் சுவையான, ஜோதிடச் செய்திகள், ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத, நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன்மொழிகள்-14,நம்பிக்கை,மூன்றாவது பகுதி