LTTE girl assassinating Raji Gandgi and 20 others.
Post No. 13,778
Date uploaded in London – 14 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வணங்குவது போல வந்து படுகொலை செய்யும் நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் இரண்டு நடந்தன. இதை திருவள்ளுவர் தமிழ் வேதத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே படம்பிடித்துக் காட்டிவிட்டார். இது பற்றிய பழமொழிகள் நிறைய உள்ளன.
ஜப்பானிய மொழியில்
குச்சி நீ மிட்சு அரி ஹாரா நீ கென் அரி என்பார்கள் இதன் பொருள் நாக்கில் தேன், வயிற்றில் கத்தி.
ஹிந்தியில்
बाहर से दोस्त अंदर से जानी दुश्मन A friend outside, enemy inside
பாஹர் சே தோஸ்த் அந்தர் சே ஜானி துஷ்மன்
வெளியே நண்பன் வேடம், உள்ளே எதிரி – என்று பொருள்.
பாகல் மேம் சூரி முங் மேம் ராம் ராம்
நெஞ்சில் கத்தி வாயில் ராம் ராம்
बग़ल में छुरी मुँह में राम राम
ஆங்கிலத்தில் நெஞ்சில் சிலுவை இதயத்தில் பிசாசு
A cross on the breast, and the devil in the heart or
அல்லது ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்
A wolf in sheep’s clothing.
Many kiss the hand they wish to cut off
வெட்டப் போகும் கைக்குப் பலரும் முத்தம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லுவார்கள்
தமிழ் மொழியில்
அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமுமா?
What! is it nectar at the tip of the tongue while poison is at the root? Said of one, or to one whose professions are at variance with his intentions.
அகோர தபஸி விபரீத சோரன்! (சோரன்= திருடன், கள்ளன்)
A terrible ascetic, an atrocious cheat என்றும் சொல்லுவார்கள்
****
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய பார்லிமெண்டில் (Senate) 70 எம்.பிக்கள் (Senators) சேர்ந்து ஜூலியஸ் சீசர் என்ற மன்னனைக் கொன்றனர். அதில் முக்கியமானவர் அவரது ஆத்ம நண்பரான புரூட்டஸ்-சும் ஒருவர். சீசர் அதிர்ச்சி அடைந்து நீயுமா புரூட்டஸ் ?என்று சொல்லிக்கொண்டே செத்தார்
பெரிய புராணத்தில் வரும் மெய்ப்பொருள் நாயனார் கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முத்தநாதன் செய்த படுகொலையை விவரிக்கிறது
மேலை நாடுகளும் இந்தியாவும் பயங்கர வாத இயக்கம் என்று அறிவித்த விடுதலைப் புலிகள் இயக்கம், ஒரு பெண்ணை அனுப்பி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது; அந்த நிகழ்ச்சி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு சாவு மணி அடித்து அதை அடியோடு அழித்தது. இதே போல சீசரின் உறவினர்களும் அவரது எதிரி களுக்கு சாவு மணி அடித்து புதிய ரோமானிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினர் .
வள்ளுவன் வாக்கு
திருவள்ளுவரும் சொல் வணக்கம், வில் வணக்கம் பற்றி எச்சரிக்கிறார். தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார். அவருக்கும் ஜூலியஸ் சீஸர் கதை தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமையான்— குறள் 827
பொருள்
வில் வளைவது தீமை வரப் போவதைக் காட்டும். அதே போல பகைவர்கள் வணக்கத்தோடு சொல்லும் சொல்லை நன்மை என்று கருதி விடக்கூடாது ((வணங்குவது போல வணங்கி காலை வாரி விடுவர்; புலி பதுங்குது பாய்வதற்காகத் தானே)- 827
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து- 828
பொருள்
பகைவர் வணங்கும் கைகளுக்கு உள்ளும் கொலைக் கருவியை மறைத்து வைத்திருப்பர். அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தகையதே-828
****
ராஜிவ் காந்தி கொலை
ராஜீவ் காந்தி, இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த , தானு என்ற தேன்மொழி இராசரத்தினத்தால் நடத்தப்பட்டது.கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி, மற்றும் 19 பேர் அந்த மனித குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹரிபாபு என்ற அந்தப் பேர்வழியும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்; அவரும் அதே இடத்தில் செத்து விழுந்தார். நல்ல வேளையாக அவரது காமெரா கிடைத்தது; அதுவே எல்லோரையும் காட்டிக் கொடுத்துவிட்டது தன்வினை தன்னைச் சுடும்.
****
மெய்ப்பொருள் நாயனார் கதை
சேதிநாட்டில், திர்க்கோவலூரில்,மலையமான் குலத்தில் வந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். எப்பொழுதும் திருநீறு பூசி சிவனைப் பூஜித்து, மெய்ப்பொருள் காண்பதையே லட்சியமாகக் கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று. அவரிடம் பலமுறை போரில் தோற்றுப்போன முத்தநாதன் என்பவன், நேர் வழியில் வெல்லுவது அரிது என்று கருதி, பொய்யான தவ வேடம் பூண்டு வந்தான். சிவ குரு என்று சொல்லி எல்லாக் காவல் நிலைகளையும் தாண்டி வந்தபோதும் மெய்ப் பொருள் நாயனாரின் முக்கியக் காவல் அதிகாரி தத்தன் மட்டும் சந்தேகக் கண்ணுடன் பார்த்தான். படுக்கை அறையில் மனைவியுடன் இருப்பதையும் மீறி மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளி அறையில் நுழைய மஹா ராணி திடுக்கிட்டு எழுந்தாள். மன்னரோ முத்த நாதன் சிவனியார் வேடத்தில் வந்ததால் வணங்கி என்ன காரணத்தினால் வந்தீர்? என வினவ புதிய ஆகம நூல் கிடைத்து இருப்பதாகவும் அதை உபதேசிக்க வந்து இருப்பதாகவும் சொன்னான்.
முத்தநாதன் ‘மனதிலே கரு(று)ப்பு வைத்து’
முத்த நாதனின் வேடத்தை சேக்கிழார் வருணிக்கும் அழகே அழகு. உடம்பெல்லாம் வெண்மை நிறம். ஆனால் மனம் மட்டும் கறுப்பாம்:
மெய்எலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்
மனைவி உடனிருந்தால் உபதேசிக்க முடியாது என்று சொல்லி அவளை அனுப்பச் செய்துவிட்டு, மன்னர் தனியாக வந்த போது புத்தக் கட்டை (ஏட்டுச் சுவடிக் கட்டு) அவிழ்ப்பது போல அவிழ்த்து ஏடுகளுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவரைக் கொலை செய்தான்.
சப்தம் கேட்டு தத்தன் உள்ளே வந்து, முத்த நாதனைக் கையும் களவுமாகப் பிடித்த போதும் சிவ சின்னங்களை அணிந்திருந்த ஒரே காரனணத்துக்காக அவரை, ‘தத்தா இவர் நமர் (நம்ம ஆள்)’ என்று சொல்லி ஊர் எல்லை வரை பாதுகாப்போடு அழைத்துச் சென்று விடுக என்று கட்டளையும் இடுகிறார். தத்தனும் அப்படியேசெய்தான்.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
தின்னவரும் புலிதனையும் -……………….
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
என்ற பாரதி பாட்டை நினைவுபடுத்துகிறது மெய்ப்பொருள் நாயனாரின் செயல்.
கைத்தலத்து இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருள்எனத் தொழுது வென்றார்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்
****
பைபிளிலும் ஜூடாஸ் பற்றி ஏசு கிறிஸ்து இப்படி எச்சரித்ததாக இருக்கிறது
In the Bible we have
But Jesus said unto him, Judas,
Betrayest thou the son of Man with a kiss
–St Luke 22-48
****
சீனாவிலும் இப்படி ஒரு பழமொழி இருக்கிறது
லீ லிஙப்பூ ,என்ற பெயரில் ஒரு பிரதம அமைச்சர் டாங் வம்ச அரசர் சுவாங் சாங்கிடம் பணியாற்றினார் அந்த அமைச்சர் கபட நாடகத்தில் ருத்திராட்ச பூனை! உடம்பு /உள்ளம் முழுதும் விஷம்.! தேள் போல எவரைக் கொட்டுவது என்று எப்போதும் காத்திருந்தார்; காலப்போக்கில் மக்களுக்கு இது தெரிய வரவே அவரது குட்டு அம்பலமானது அதிலிருந்து வாயில் தேன் வயிற்றில் கத்தி என்ற பழமொழி சீனாவில் தோன்றியது.
–subham—
Tags- தமிழ் படுகொலைகள் , பழமொழிகள், ராஜீவ் கொலை, விடுதலைப் புலிகள், மெய்ப்பொருள் நாயனார் ஜூலியஸ் சீசர், முத்த நாதன் ப்ரூட்டஸ் , சீன ஜப்பானிய இனி பழமொழிகள் கபட வேடம்,