WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.806
Date uploaded in London – —23 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
படித்ததை எல்லாம் நம்பாதே! பார்த்ததை எல்லாம் நம்பாதே!
ச. நாகராஜன்
ஒரு மிக மோசமான காலகட்டத்திற்குள் நுழைந்து விட்டோம் என்று யாரேனும் நினைத்தால் அதை தப்பு என்று சொல்லி விட முடியாது.
ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அபாயகரமானது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பலரும் சொல்லி வருகின்றனர்.
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி தவறானது அல்ல; ஆனால் அது கெட்டவர்களின் கையில் சேர்ந்தால் உலகம் உருப்படாது என்பதே இவர்களின் எச்சரிக்கையாகும்.
சமீபத்தில் 9-10-2024ல் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா சொன்ன ஒரு பொன்மொழி இது:
“மக்கள் தாங்கள் படித்ததை எல்லாம் உண்மை என்றே இன்னும் நம்புகிறார்கள்.”
ஏராளமான போலிச் செய்திகள் வருகின்றன. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல ஆளாளுக்கு அவனவன் “கதை” விடுகிறான்.
இதை யூ டியூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் காண முடிகிறது.
ஆகவே இவற்றில் படிப்பதைக் குறையுங்கள்; படித்ததைப் பகிரவே பகிராதீர்கள் – இது நிச்சயமான உண்மை என்பதை சரி பார்க்காதவரை!
சமீபத்தில் உலா வரும் ஒரு செய்தி இது: இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்பொழுது தலை தூக்கும். ஏமாளிகள் தங்கள் நேரத்தை வீணாக்குவதோடு தங்கள் நண்பர்கள், உறவினர்கள் நேரத்தையும் வீணாக்குவார்கள்.
செய்தி கீழே உள்ளது:
Your Life in 2030 (according to the NWO Globalists) என்பது தலைப்பு.
NEW WORLD ORDER UN Agenda 21/2030 Mission Goals
One World Government
One World Cashless Currency
One World Central Bank
One World Military
The End of National Sovereignty
The End of ALL Privately Owned Property
The End of the Family Unit
Depopulation: Control of Population Growth and Population Density
Mandatory Multiple V
Universal Basic Income (Austerity)
Microchipped Society for Tracking and Controlling Purchasing and Travel
Implementation of a World Social Credit System (like China has)
Trillions of Appliances Hooked into the 5G Monitor System (Internet of Things)
Government Raised Children
Government Owned and Controlled Schools, Colleges and Universities
The End of Private Transportation, Owning Cars etc.
All Businesses Owned by Government Corporations
The Restriction of Nonessential Air Travel
Human Beings Concentrated into Human Settlement Zones – Cities
The End of Immigration
The End of Private Farms and Grazing Livestock
The End of Single Family Homes
Restricted Land Use that Serves Human Needs
வடிகட்டிய பொய் இது. இதற்கும் ஐநா சபைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
இது போல ஆயிரக்கணக்கான மோசமான பொய்ச் செய்திகள் அன்றாடம் சோம்பேறிகளால் பரப்பப்படுகின்றன; பகிரப்படுகின்றன.
ஃபேக்ட் செக் என்ற தளத்தில் இது உண்மை தானா என்று பாருங்கள்; உடனே ‘வண்டவாளம் தண்டவாளத்தில்’ ஏறிவிடும்.
330 கோடி யூ டியூப் காணொளிக் காட்சிகளில் மிகச் சிலவே பார்க்கக் கூடியவை.
முட்டாள்களாலும், மோசடிப் பேர்வழிகளாலும் தமக்குத் தெரிந்த பல கணினி, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு/மாற்றப்பட்டு இவர்களால் பரப்பப்படும் செய்திகளைத் தவிர்ப்போம்.
இவற்றை என்ன செய்யலாம். பார்க்காதீர்கள்; படிக்காதீர்கள் – முடிந்தவரை
எனது வேண்டுகோள்:
எதையும் யாருக்கும் அனுப்பாதீர்கள் – உண்மை என்று தெரிந்து கொள்ளாதவரை!
***