ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,807

Date uploaded in London – 23 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

 ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807)

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல்லே!

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி

பிழைக்க முடியல்லே

இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்

பேதம் தெரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே

அவன் இருக்கின்றான்

அவன் இருக்கும் இடத்தினிலே

நான் இருக்கின்றேன்

நாளை எங்கே யாரிருப்பார்

அதுவும் தெரியல்லே

இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்

பேதம் தெரியல்லை

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று

காசை எண்ணுகிறான்

நம்பி ஒருவன் சிறையில் வந்து

கம்பி எண்ணுகிறான்

உண்மை இங்கே கூட்டுக்குள்ளே

கலங்கி நிக்குதடா

அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு

வெளியில் நிற்குதடா

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல

முகம் இருக்குதடா

மோசம் நாசம் வேஷமெல்லாம்

நிறைந்திருக்குதடா

காலம் மாறும் வேஷம் கலையும்

உண்மை வெல்லுமடா

கதவு திறந்து பறவை பறந்து

பாடிச் செல்லுமடா

அட என்னத்தச் சொல்வேண்டா

தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று

யாருக்கும் தெரியல்லே

அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்

பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

—–பலே பாண்டியா திரைப்படம்

Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan

Raven in Tower of London

பலே பாண்டியா திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும் பாடல் பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் மூலம் ஒரு காலத்தில் அண்டங் காக்கை எல்லோர் வாயிலும் முழங்கியது. காகம் பற்றி சாணக்கியர் முதல்  வராஹமிஹிரர், வள்ளுவர் வரை  எல்லோரும் பாடி விட்டனர். ஆயினும் இவைகளை ப்  

 பற்றிய ஜோதிடத்தை- சகுனத்தை– ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும் சம்ஸ்க்ருதத்தில் வராஹ மிஹிரரும் மட்டுமே பாடியுள்ளனர் அது மட்டுமல்ல; ரோமானிய கிரேக்க சாம்ராஜ்யங்களிலும் இவை பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன

முதலில் ஷேக்ஸ்பியர் சொன்னதைக் கேளுங்கள்:

ஷேக்ஸ்பியர் கெட்ட சகுனங்களைக் காட்டுவதற்கு ஆந்தைகளையும் கிரகணங்களையும் பயன்படுத்தியதை முன்தைய கட்டுரைகளில் கண்டோம். அதற்கு அடுத்தபடியாக அவர் பயன்படுத்தும் கெட்ட பறவைகள் எல்லாம் காகம் குடும்பத்தைச் (crows, magpies, ravens and rooks ) சேர்ந்தவையே .

இதோ அண்டங் காக்கை (raven) ..

மேக்பெத் மற்றும் ,ஹாம்லெட் நாடகங்களில் கொலைகள் மிகுதி; அவை நடப்பதற்கு முன்னால் சகுனங்களைக் காட்டி அல்லது சொல்லி கிளைமேக்ஸ் உண்டாக்குகிறார் நமது புலவர்:

லேடி மேக்பெத் கொலை நடக்கப் போவதை இப்படி சொல்லிக் காட்டுகிறார் :

The raven himself is hoarse

That croaks the fatal entrance of Duncan

Under my battlements. Come, you spirits

That tend on mortal thoughts, unsex me here,

அண்டங் காக்கை அபத்தமான கொடுரமான குரலில் கத்துகிறது — என்கிறார்

****

“Yes / As sparrows [dismay] eagles, or the hare the lion” (1.2.34-35).

இன்னும் ஒரு இடத்தில் வரும் வசனம்

ஆமாம் குருவிகளும் கழுகும் போல,  முயலும் சிங்கமும் போல.

****

“Stones have been known to move and trees to speak; / Augurs and understood relations have / By magot-pies and choughs and rooks brought forth / The secret’st man of blood” (3.4.122-125).

Magot-pies (magpies), choughs (jackdaws), and rooks are all birds that can be taught to speak a few words. And of course,

கொலை நடந்த பின்னர் வரும் காட்சியில் கொலைகளை மறைக்க முடியாது ஏனெனில் காகக் குடும்பப் பறவைகள் அதைக் காட்டிவிடும் என்கிறார் நாடக ஆசிரியர் . மாமிசத்தைத் தின்ன அவை வரும் அல்லது அவைகளின் குரல் காட்டிவிடும் என்று உரைகாரர்கள் பொருள் கற்பிக்கின்றனர்.

மாக்பெத் நாடகத்தில் கொலைகள் நடத்தப்பட்ட பின்னர் இரவுநேரம்  நெருங்குகிறது அப்போது வரும் வசனத்திலும் காகம் அடிபடுகிறது

Light thickens; and the crow / Makes wing to the rooky wood: / Good things of day begin to droop and drowse; / While night’s black agents to their preys do rouse” (3.2.53). “Night’s black agents” are all things that hunt and kill in the dark, including birds of prey.

****

காகத்தைக் கண்டு இந்துக்கள் பயப்படுவதில்லை ; தினமும் அதற்குச் சோறுபோட்டுவிட்டுத்தான் தமிழ் இந்துக்கள் சாப்பிடுவர். மேலும் அதை சனி பகவானின் வாகனம். ஜாதகத்தில் சனி திசை வந்தாலும் எள்ளு விளக்கு ஏற்றி வழிபடுவர் ஆயினும் அது வலமாகப் பறக்கிறதா, இடமாகப் பறக்கிறதா என்றெல்லாம் சகுன சாத்திரமும் தமிழ்ப் பழமொழிகளும் செப்பும். மேலும் தமிழ் பஞ்சாங்கங்களில் வரும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் சகுனம் சொல்லும் ஐந்து பறவைகளில் காகமும் ஒன்று.

ஷேக்ஸ்பியர் அவரது ஜுலியஸ் சீசர் நாடகத்தில் காகத்தையும் கெட்ட சகுனத்துக்குப் பயன்படுத்துகிறார்:

In “Julius Cæsar,” (v. 1), Cassius, on the eve of battle, predicted a defeat, because, to use his own words:—

                           “Crows and kites
Fly o’er our heads and downward look on us,
As we were sickly prey: their shadows seem
A canopy most fatal, under which
Our army lies, ready to give up the ghost.”

தோல்வி ஏற்படப்போவதை காசியஸ் சகுனங்களைக் காட்டிக்  கூறுகிறார்

காகங்களும் பருந்துகளும் நமது தலைக்கு மேலே பறக்கின்றன ; நாம் அவைகளின் இரை போல எண்ணி நம்மையே பார்க்கின்றன.

****

கிங் ஜான் , ட்ராய்லஸ் அண்ட் கிரஸ்ஸிடா Troilus and Cressida” (i. 2); “King John” நாடகங்களிலிலும் இதே சகுனம் வருகிறது ;வர்ஜில் என்ற கவிஞர் பல நூற்றாண்டுகளுக்கு  முன்னர் இதை ப்    பயன்படுத்தி இருக்கிறார் .

****

தமிழ் நாட்டிலும் இதர மாநிலங்களிலும் சோளக்காட்டு பொம்மையை வைத்து பறவைகளை விரட்டுவார்கள்; சங்க காலத்தில் பெண்கள் ஆலோலம் பாடி பறவைகளை விரட்டினார்கள்; ஐரோப்பாவில் காகங்களை இப்படி விரட்டியதால் அந்த பொம்மைகளுக்கு ஸ்கேர் க்ரோ Scare Crow என்று காகத்தின் பெயரைத்தான் வைத்துள்ளனர்.

வட இங்கிலாந்தில் சிறுவர்கள் காகங்களை விரட்ட கீழ்க்கண்ட வரிகளை சொல்லுவர்; இதில் காகத்தின் மேலுள்ள வெறுப்பு வெளிப்படுகிறது :

“Crow, crow, get out of my sight,

 Or else I’ll eat thy liver and lights.”

*****

காகத்திடமிருந்து கற்கவேண்டிய ஆறு குணங்கள், லண்டனில் ராஜ வம்சத்தைப் பாதுகாக்க அண்டங்காக்கை,களை கோஹினூர் வைரமுள்ள டவர் ஆப் லண்டனில் பாதுகாத்து வளர்ப்பது பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன்  ஆனால் வராஹமிஹிரர் அண்டங்காக்கை, காகம் , வாலாட்டிக் குருவிகள் பற்றி சொன்ன சகுன ஜோதிடம் பலருக்கும் தெரியாது.

அவைகளையும் காண்போம் .

தொடரும் ……………………………

Tags — அண்டங்காக்கை, காகம், ஷேக்ஸ்பியர், ஜோதிடம்-1 வராஹமிஹிரர், வள்ளுவர் , சகுனம், Part 1,RAVENS AND OMENS

Leave a comment

Leave a comment