Post No. 13,828
Date uploaded in London – 29 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வேதகாலத்தை வான சாஸ்திரம் மூலம் கண்டுபிடித்த ஹெர்மன் ஜாகோபி Herman George Jacobi
ஹெர்மன் ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞர் வேத காலம் என்பது 6500 ஆண்டுகளுக்கு முன்னர் என்று கண்டுபிடித்தார். ஒரு அற்புதமும் நிகழ்ந்தது. ஜெர்மானியர் ஆராய்ச்சி பற்றி அறியாத மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் அதே முடிவை அறிவித்தார் . ஒரியன் அல்லது ஓரையன் நட்சத்திர கூட்டம் பற்றிய திலகரது புஸ்தகத்தில் இது வெளியானது.
ஹெர்மன் ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞர் பல துறைகளில் வல்லவர். கணிதம் பயின்றார். பின்னர் ஸம்ஸ்க்ருதமும் கற்றார். அவரது ஆசிரியர் வீபர் (WEBER).
இந்திய ஜோதிடம் மற்றும் ஹோரா என்ற சொல்லின் தோற்றம் என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சிக்காக ஜாகோபிக்கு பான் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்தியாவுக்கு இரு முறை வந்து நீண்ட காலம் தங்கினார். மனு ஸ்ம்ருதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பியூலருடன் ராஜஸ்தானில் பயணம் செய்தார். சமண மத மடங்களில் பேரார்வம் கொண்டு பழமை மாறாத சம்பிரதாயம் உடைய ஜைன மடங்களுக்குச் சென்றார்; அவர்களது ஆசார்யர்கள் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் ஆக்கினார். யோகம், வைசேஷிகம் முதலிய துறைகளிலும் புஸ்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தார். சமண மத தீர்த்தங்கரர்கள் ஆன மகாவீரரும் பார்ஸ்வ நாதரும் வரலாற்று நாயகர்கள், கட்டுக்கதைகள் என்றும் அல்ல நிரூபித்தார். புத்த மதத்திலிருந்து உதித்ததே சமண மதம் என்று அக்காலத்தில் நிலவிய வாதத்தைத் தகர்த்தார். கல்வெட்டு ஆராய்சசியாளர்களுக்கு உதவும் இந்திய திதி அவற்றுக்கு நிகரான ஆங்கில ஆண்டு என்ற கால அட்டவணையை வெளியிட்டார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் கல்கத்தா பல்கலைக்கழகம் இவரை விரிவுரை ஆற்ற அழைத்து கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கணித அடிப்படையில் கிரகங்கள் நட்சத்திரங்களின் இயக்கத்தைக் கணக்கிட்டு வேத காலம் என்பது கி.மு 4500 BCE என்றும் அறிவித்தார்.
இப்போது விஞ்ஞானிகள் வேதத்திலுள்ள சூரிய கிரகணக் குறிப்புகளைக் கொண்டு ஜாகோபி, திலகர் ஆகியோர் சொன்னது சரியே என்று காட்டியுள்ளனர். வேத காலம் எனது சிந்து சரஸ்வதி தீர நாகரீகத்துக்கு முந்தியது என்பதை ஜாகோபி முதல் நவீன பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கேந்திர விஞ்ஞானிகள், அமெரிக்க நாசா NASA விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
HERMAN GEORGE JACOBI 1850- 1937
பிறந்த தேதி – 1-2-1850
பிறந்த ஊர் – KOELN (Cologne)
இறந்த தேதி – 19-10-1937
கல்வி கற்ற இடம் – KOELN, BERLIN UNIVERSITY
அவரது குரு – A.WEBER
பார்த்த வேலைகள் – MUENSTER UNIVERSITY பேராசிரியர்.
DOCTORATE AWARDED BY – BONN UNIVERSITY, CALCUTTA UNIVERSITY
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள் –
BOOKS OR ARTICLES ON INDIAN CALENDAR CALCULATIONSIN INSCRIPTIONS, YOGA, JAIN ACHARYAS, VAISHEKA SASTRA , JAIN PHILOSOPHY
Zwei Jainastotras (1876)
Jaina Sutras, Part I (1884) (Ākārāṅga Sūtra and Kalpa Sūtra)
Jaina Sutras, Part II (1895) (Uttarādhyayana and Sūtrakritāṅga)
Ausgewählte Erzählungen in Maharashtri (i.e. Selected tales of the Maharashtri, 1886)
The Computation of Hindu Dates in the Inscriptions (1892)
Das Ramayana, Geschichte und Inhalt nebst Concordanz nach den gedruckten Rezensionen (1893)
Compositum und Nebensatz, Studien über die indogermanische Sprachentwicklung (1897)
On the Antiquity of Vedic Culture (1908)
Schriften zur indischen Poetik und Ästhetik (i.e. Writings on Indian poetics and aesthetics, 1910)
Die Entwicklung der Gottesidee bei den Indern und deren Beweise für das Dasein Gottes (i.e. The development of the Indians’ idea of God and their proofs for God’s existence, 1923)
Über das ursprüngliche Yogasystem (i.e. About the original system of Yoga, 1929 / 1930)
ஹரிபத்ரா, விமலசூரி என்ற சமண ஆசிரியர்களின் நூல்களை மொழிபெயர்த்தார். பிராகிருத மொழியில் இருந்த சமண ராமாயணத்தை வெளியிட்டார். அபப்பிராம்ச என்ற மொழி பற்றி மேற்கோள்கள் மட்டுமே இருந்தன. அவர் இந்த மொழியையே கண்டுபிடித்து அப்படி ஒரு மொழி இருந்தது என்பதைக் காட்டினார். ஒப்பீட்டு மொழியியலில் இருந்த ஆர்வம் காரணமாக பிராகிருத மொழி பற்றியும் நிறைய எழுதினார் .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அவர் தொடாத இந்தியவியல் துறை எதுவும் இல்லை; பிராகிருதம், சம்ஸ்க்ருதம் ஜோதிடம் வானவியல், பஞ்சாங்கக் கணக்கீடு, சமண மதம், நியாயம் வைசேஷிகம், கணிதம், உயிரியல் ஆகிய எல்லாவற்ரையும் பற்றி எழுதினார் அவர் எழுதிய படைப்புகள் பல வாதப் பிரதிவாதங்களை எழுப்பின.
மஹாபாரதம் பற்றியும் தனது ஆராய்சசிகளை வெளியிட்டார் கவிதையியலில்( poetics) இருந்த ஆர்வம் காரணமாக ஆனந்தவர்த்தனவின் அலங்கார சாஸ்திரம் த்வனி ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார்.
****
Tagged with சூரிய கிரஹணம்
Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
7 Dec 2017 — கிரஹணம் மூலம் ரிக் வேத காலம் நிர்ணயம் (Post No.4466) · Written by London Swaminathan · Date: 7 DECEMBER 2017 · Time …
வேத காலம் | Tamil and Vedas
Tamil and Vedas
https://tamilandvedas.com › tag
கிரஹணம் மூலம் ரிக் வேத காலம் நிர்ணயம் (Post No.4466). Written by London Swaminathan. Date: 7 DECEMBER 2017. Time uploaded in …
ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு …
Tamil and Vedas
https://tamilandvedas.com › ரிக…
14 Jul 2021 — உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி …
—Subham—-
Tags- Herman Jacobi, Jai Studies, Age of Vedas, வேதகாலம், வான சாஸ்திரம், ஹெர்மன் ஜாகோபி, சமண மத ஆராயச்சி , கல்வெட்டு காலம் , கணக்கீடு , அபிப்பிராம்ச மொழி , சமண ராமாயணம்