WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,602
Date uploaded in London – – 27 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆரய்ச்சிக் கட்டுரை 13
வேத காலம் என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த காலம்; அதே நேரத்தில் சங்க காலம் போலவே போர்களும் நிகழ்ந்த காலம் ; மக்கள் வீரத்துக்கு முதலிடம் தந்தனர். எனக்கு வீரம் மிக்க புத்திரர்கள் பிறக்க வேண்டும் என்ற துதிகள் ரிக்வேதம் முழுதும் நிரவிக் கிடக்கின்றன
மந்திரம் 41 இந்த ஆடல் பாடலையும் போர் முரசு ஒலிகளையும் எடுத்து இயம்புகிறது. ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டும் போர் பற்றியனவே. சங்கத் தமிழ் இலக்கியத்தில் போர் என்ற அம்சத்தை விலக்கினால் வரலாறு என்பதே இராது.காதலும், கொடையும் இன்றும் உளது; ஹோமர் எழுதிய முதல் கிரேக்க காவியம் இலியட்- உம் போர் பற்றியதே.
இந்த அதர்வண வேத பூமி சூக்தத்துக்கு முன்னதாகவே ரிக் வேதத்திலும் ஆடல் பாடல் உண்டு.
ரிக் வேதத்தில்
1-92-8; 2-22-4; 5-52-12 ஆகியவற்றில் நடனம் ஆடுவோர் பற்றிய குறிப்புகள் உள்ளன இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் நிறைய உள . (இது பற்றி பல கட்டுரைகள் இந்த பிளாக்கில் உள்ளன.)
XXXX
மந்திரம் 37ல் தஸ்யூக்கள் என்ற சொல் வருகிறது. எல்லா சமய நூல் களிலும் எதிரிகள் என்று சிலர் வருணிக்கப்படுகின்றனர். அவர்களை உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களாகவோ அல்லது உள்நாட்டு, வெளி நாட்டு படைகளாகவோ வியாக்கியானக்காரர்கள் எழுதியுள்ளனர். 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன், தஸ்யூக்களை திருடர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளான். உண்மை அப்படியிருக்க , விஷமக்கார வெள்ளைக்காரர் கள் தஸ்யூக்களை மட்டும் பூர்வ குடி மக்களாகச் சித்தரித்து இனவாதம் பேசியுள்ளனர். நல்ல வேளையாக அந்தப் பயல்கள் தமிழ் இலக்கியத்தைப் படிக்கவில்லை. சுமார் 1200 ஆண்டுகளுக்கு, தமிழர்கள் குடுமி பிடிச் சண்டையில் ஈடுபட்டனர்; சேரனும் சோழனும் பாண்டியனும் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்தான். அதையெல்லாம் இனப் பூசல் என்று சொல்லியிருப்பான் வெளிநாட்டுக்காரன்.
பாடல் 38-ல் யாக பூமி வருணிக்கப்படுகிறது ; இதை புறநானூற்றில் முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய பாட்டிலும். பூஞ்சாற்றூர் பார்ப்பான் விஷ்ணுதாசன் பற்றிய பாடலிலும். இராஜ சூயம் செய்த சோழன் பாட்டிலும் காண்கிறோம் .
பாடல் 39-ல் சப்த ரிஷிகள் என்னும் 7 ரிஷிகள் பற்றி வருகிறது அவர்களை ‘கைதொழு எழுவர்’ என்று சங்க இலக்கியமும் பாடுகிறது. பிராமணர்கள் தினமும் 3 வேளை செய்யும் சந்தியாவந்தனத்திலும் 7 ரிஷிகள் வருகின்றனர் . பாணினியும் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அதே வரிசையில் 7 ரிஷிகள் பெயரை அடுக்கியுள்ளான்.
ரிக் வேதம் முழுதும் ரிஷிகளை “உலகைப் படைப்போர்” என்று வருணிக்கின்றனர் ; அதே சொற்கள் — பூதக்ருதே ரிஷயஹ — இங்கும் வந்துள்ளது. பகவத் கீதையில் கண்ணனும் இதைச் சொல்கிறான் தன்னைப் போலவே சக்திபடைத்தவர்கள் சனகர் முதலானோர் என்பார். ரிபுக்கள் என்னும் தேவர்கள் மனித நிலையிலிருந்து தெய்வமானதை ரிக்வேதமே விளம்பும்.
‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்னும் கட்டுரையில் திருவள்ளுவரும் இதைச் சொல்லுவதை எழுதியுள்ளேன் .
40- ஆவது பாடலில் செல்வத்தை வாரி வழங்க மீண்டும் வேண்டுகிறார் முனிவர்/ரி ஷி.
41ல் ஆடல் பாடல் மிக்க இன்பமயமான வேத கால வாழ்வின் சித்திரத்தைப் பார்க்கலாம்
42-ல் வேளாண்மையைப் போற்றும் சமுதாயத்தைக் காண்கிறோம்
வேத கால மக்களை நாடோடிகள் என்று சித்திகரித்த விஷமக்கார கும்பல்களுக்கு வேட்டு வைக்கும் பாடல் இது. ரிக் வேதம், அதர்வண வேதம் எல்லாவற்றிலும் சாகுபடி செய்து விளைவித்த தானியங்களைக் காண்கிறோம். அடுத்த பாட்டும் நகர நாகரீகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது
பாடல் 43ல் தேவர்களால் உருவாக்கப்பட்ட நகரங்களை பார்க்கலாம். இன்றுவரை ‘புரம்’ என்பது பூரி, பூர், ஊர் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் பூமியை பிரஜாபதி காக்கவேண்டும். அப்போதுதான் பூமி நம்மீது வளம் சொரிவாள் என்கிறார் புலவர்.; முழுக்க முழுக்க ஆக்கபூர்வ சிந்தனை; நம்பிக்கையூட்டும் காட்சிகள்
63 மந்திரங்களில் மீதமுல்ல 20 மந்திரங்களை அடுத்து வரும் கட்டுரைகளில் தொடர்ந்து காண்போம்.
மந்திரம் 37
யாப ஸர்ப்பம் விஜமானா விம்றுக்வரீ யஸ்யாமாஸன்னக்னயோ யே அப்ஸ்வ ந்தஹ
பரா தஸ்யூன் தததீ தேவபீயூனிந்த்ரம் வ்ருணானா ப்ருதிவீ ந வுத்ரம்
சக்ராய தத்ரே வ்ருஷபாய வ்ருஷ்ணே -37
பொருள்
எந்த பூமாதேவியின் நீரில் நெருப்பு உண்டோ, தூய்மை செய்யும் அவள், பாம்பினை நடுங்கச் செய்தாள் ; கடவுள் விரோதிகளான தஸ்யூக்களை நீக்கி, காளை போன்ற வலிமைக்கு இந்திரனை வைத்துக் கொண்டு விருத்திரனை அகற்றினாள் -37
xxxx
மந்திரம் 38
யஸ்யாம் ஸதோ ஹவிர்தானே யூபோ யஸ்யாம் நிமீயதே
ப்ரஹ்மாநோ யஸ்யாமர்ச்சந் த்யுக்பிஹி ஸாம்னா யஜுர்விதஹ
யுஜ்யந்தே யஸ்யாம்ருத்விஜஹ ஸோமமிந்த்ராய பாதவே –38
எந்த பூமியின் மீது யாக குண்டமும், மண்டபமும், யூப நெடுந்தூண்களும் நிற்கின்றனவோ அங்கே பிராமணர்கள் ரிக், சாம, யஜுர் வேத துதிகளைப் பாடுகின்றனர் ; இந்திரனை சோம ரசம் பருகச் செய்வதற்காக புரோகிதர்கள் சுறுசுறுப்பாக உள்ளனர்.-38
xxxx
மந்திரம் 39
யஸ்யாம் பூர்வே பூதக்ருத ருஷயோ கா உதாந்ருசுஹு
ஸப்த சத்ரேண வேதஸோ யக்ஞேன தபஸா ஸஹ –39
பொருள்
எந்த பூமியில் சப்த ரிஷிக்கள் வேதம், யாகம், தவம் ஆகியவற்றுடன் துதித்தார்களோ , உலகைப் படைக்கும் ரிஷிகள் புனித மொழிகளை வழங்கி கினார்களோ – 39
xxxx
மந்திரம் 40
ஸா நோ பூபிரா திசது யத்தனம் காமயா மஹே
பகோ அனுப்ரயுங்க் தாமிந்த்ர ஏது புரோ கவஹ –40
பொருள்
அந்த பூமியானது நாங்கள் விரும்பும் செல்வம் அனைத்தையும் வழங்கட்டும் பகன் என்னும் தேவன் பணிகளை வழங்கட்டும்; இந்திரன் எங்களை வழி நடத்திச் செல்லட்டும் – 40
Xxxx
மந்திரம் 41
யஸ்யாம் காயந்தி ந்ருத்யந்தி பூம்யாம் மர்த்யா வ்யை லபாஹா
யுத்யந்தே யஸ்யாமாக் ரந்தோ யஸ்யாம் வததி துந்துபிஹி
ஸா நோ பூமிஹி ப்ர ணுததாம் ஸபத்னான ஸபத்னம் மா ப்ருதிவீ க்ருணோது -41
பொருள்
எந்த பூமியில் மக்கள் ஆடியும் பாடியும் மகிழ்கிறார்களோ, எங்கே கூடிக்குலவி கதைக்கிறார்களோ, எங்கே போர் முரசுகள் ஆரவாரம் செய்கின்றனவோ , அந்தப் பூமாதேவியானவள் எங்கள் எதிரிகளை விரட்டட்டும்; எதிரிகள் இல்லாத பூமியை அவள் எங்களுக்கு அளிப்பாளாகுக –41
Xxxx
மந்திரம் 42
யஸ்யாமன்னம் வ்ரீஹி யவௌ யஸ்யா இமாஹா பஞ்ச க்ருஷ்டயஹ
பூம்யை பர்ஜன்ய பத்ன்யை நமோஸ்து வர்ஷ மேதஸே -42
பொருள்
எந்த பூமியில் அரிசியும் யவம் முதலிய தானியங்களும் விளைகின்றனவோ , எங்கு ஐந்து இன மக்கள் வாழ்கின்றனரோ மழை பொழியும் பர்ஜன்யனை துணையாக உடைய அந்த பூமாதேவியை வணங்கித் துதிக்கிறோம்.- 42
Xxxx
மந்திரம் 43
யஸ்யா புரோ தேவக்ருதாஹா க்ஷேத்ரே யஸ்யா விகுவர்த்ததே
ப்ரஜாபதிஹி ப்ருதி வீம் விஸ்வ கர்பா மாசா மாசாம் ரண்யாம் நஹ க்ருணோது-43
பொருள்
தேவர்கள் உருவாக்கிய நகரங்கள் எங்குள்ளனவோ , எங்கு பல்வேறு பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனரோ , எந்த பூமாதேவி அவளுடைய கருப் பையினுள் அனைத்தையும் தாங்கி நிற்கின் றனளோ அவளை எங்கள் நலனை முன்னிட்டு பிரஜாபதியானவர் கருணை மிக்கவளாக ஆக்கட்டும் -43
Xxxx
வேதத்தில் நடனம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › வ…
5 Apr 2015 — வேதத்தில் பரத நாட்டியம்! … ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் …
ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள் …
https://tamilandvedas.com › ஜப்ப…
·
28 Nov 2019 — Related · மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்! (Post No.10476) December 23, 2021 In “க. தியாகராஜன்”.
வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868)
https://tamilandvedas.com › வள்…
1 May 2017 — வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868) … (Post 10,408) December 4, 2021 In “அதர்வண வேதம்“.
சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு
https://tamilandvedas.com › சங்க…
13 Apr 2014 — வேதத்தில் இருந்து தோன்றியது இசை என்றும் சொல்லுவர். சாமவேதம் இசையுடன் ஒதப் …
பரத முனிவர் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › பர…
3 Aug 2021 — பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! … முன்னொரு கட்டுரையில் பரத நாட்டியம் …
கம்ப ராமாயணத்தில் பரத நூலும், சுரத நூலும்! (Post …
https://tamilandvedas.com › கம்ப-…
14 Nov 2016 — Related · பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! (Post No.9930) August 3, 2021 In “கதை” · நாட்டிய நாடகம் ..
மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post …
https://tamilandvedas.com › மனி…
12 Jun 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. மனிதன் …
TO BE CONTINUED……………………………..
tags- பூமி சூக்த கட்டுரை 13, வேத காலம் , ஆடல் பாடல்