Post No. 13,844
Date uploaded in London – 2 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முதலில் ஒரிஜினல் நோத்ர்டாமஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் :
நோத்ர்டாமஸ் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். மைக்கேல் டி நோத்ர்டாமஸ் (Michel de Nostredame), (1503 — 1566)
என்பவர் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புரியாத — இரு பொருள்படும் — செய்யுள் வடிவில், இனி உலகத்தில் என்ன நடக்கப்போகிறது என்று எழுதி புஸ்தகமாக வெளியிட்டார் ; கிறிஸ்தவ மத தலைமையகம் அவரை எச்ச ரித்தவுடன் உயிருக்குப் பயந்து நோத்ர்டாமஸ் தலைமறைவானார். ஏனெனில் அக்காலத்தில் கிறிஸ்தவ வெறியர்கள் அறுபதாயிரம் பேரை தூக்கில் தொங்கவிட்டும் GALILEO கலீலியோ போன்றோரின் கண்களைக் குருடாக்கியும் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற யுவதியை உயிருடன் தீயில் எரித்தும் கொன்று குவித்த காலம்
அவர் பல பொருள்படும் வகையில்/ பாணியில் செய்யுட்களை எழுதியதால் எல்லோரும் நினைத்த படி புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கின்றனர். அதாவது மோசடி செய்து வருகிறார்கள். இனி அணுகுண்டு விழும், உலகம் அழியும் என்று அவர் சொன்னதாக எழுதியதை எல்லாம் நீங்கள் கூகுள் செய்தால் நல்ல நகைச்சுவை வெடிகள் கிடைக்கும் சிரித்து மகிழுங்கள்!
நடந்து முடிந்த விஷயங்களுக்கு அவர் பெயரைச் சொல்லி வியாக்கியானம் செய்த புஸ்தகங்கள், அதி பயங்கர தமாஷ்; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மக்களை ஏமாற்றி காசு சம்பாதித்தார்கள்; இனி நடக்கப்போவதை ஒருவர் சொல்லி அது நடந்தும் விட்டால் ஒருவரை நம்பலாம். அதுவும் பல விஷயங்களை அவர் சொல்லி அது உண்மையானல்தான் நம்பவேண்டும்; நிற்க
ஹிந்து நோத்ர்டாமஸ் யார்?
ஹிந்து நோத்ர்டாமஸ் வீர பிரம்மேந்திர சுவாமிகள் ஆந்திரத்தில் புகழ்பெற்றவர் . ஆந்திரத்தில் யாகந்தியில் உள்ள குகையில் சில காலம் தங்கியிருந்து కాలజ్ఞానం கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.
அவருடைய కాలజ్ఞానం கால ஞானம் என்னும் தெலுங்கு மொழி நூலில் இனி எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.
அவரது பிரம்மகிரி மடத்தின் சுவர்களில் அவைகளை பொறித்தும் உள்ளனர். அந்த மடம் கடப்பாவிலிலிருந்து எழுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ போத்தலூரி வீர பிரம்மேந்திர சுவாமிகள் பக்கதர்களுக்கு முன்னால் உயிருடன் சமாதியில் புகுந்தார். அவர் பதினாறாம் நூற்றாண்டில் அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்
அவர் தெலுங்கு மொழியில் எழுதியதை சிலர் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். அவற்றின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்
அவர் சொன்ன விஷயங்கள் :
2007– ஆம் ஆண்டில் பேஸ்புக்கிலும் வெப்சைட்டிலும் கண்ட விஷயங்களைத் தருகிறேன்
பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் ஆவார்கள்; எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
****
வீரபோக வசந்த ராயலு என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்; எப்போது பெண்கள் கையில் முழு ஆதிக்கமும் போகிறதோ அப்போது நான் பிறப்பேன்.
நாட்டில் பல இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கும்
பஹுதான்ய (2055) வருடத்தில் 25 நகரங்களில் ரத்தக் களறி ஏற்படும்; பெரும் நாசங்கள் ஏற்படும்
காஷ்மீரிலும்
காசியிலும் போர் நிலை ஏற்படும்
கங்கை நதி திசை மாறி காசியில் புகும்.
மெக்கா மசூதியில் புனிதம் கெடும் நிகழச்சிகள் நடந்து பெரும் போர் வெடிக்கும்.
வன விலங்குகள் நகரங்களில் திரியும்
நெல்லையில் பெரிய வெள்ள விபத்து நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் இறப்பர்.
To be continued…….
–subham—
Tags-வீர பிரம்மேந்திர சுவாமி, కాలజ్ఞానం, கால ஞானம், பிரம்மகிரி மடம்