Post No. 13,848
Date uploaded in London – 3 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை!- Part 2
நேற்று முதல் பகுதி வெளியானது
இந்திய நகரங்களை அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ?
ஆந்திரத்தில் கடப்பா ஜில்லாவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஸ்ரீ வீர பிரம்மேந்திர சுவாமிகள் எழுதிய கால ஞானம் என்னும் நூலில் எழுதிய ஆயிரக்கணக்கான, எதிர்காலம் பற்றிய அறிவிப்புகளை மேலும் காண்போம் .
அவரது ஆரூடங்களைப் படிக்கும் போது இந்தியா மீது சீனாவோ பிரிட்டனோ அமெரிக்காவோ அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர், மூன்றாவது உலகயுத்தம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருப்பதால் பிரம்மகிரி மடத்தின் வீர பிரம்மேந்திர சுவாமிகள் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது .
அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் எதிரிகள் ; அமெரிக்கா ஹிட்லரையும் , கிறிஸ்தவர்களையும், வெள்ளைக்காரர்களையும் தாக்காமல் மில்லியன் கணக்கில் ஜப்பானிய புத்தமதத்தினரை அணுக்குண்டு வீசி அழித்ததை நாம் அறிவோம். ஆகையால் எந்த ஒரு யுத்தத்திலும் இந்துக்களுக்குத்தான் ஆபத்து அதிகம்.
కాలజ్ఞానం கால ஞானம்
ஒரு குறிப்பிட்ட நாளில் இருபத்தோரு இந்திய நகரங்கள் அழியும்
***
திருப்பதி காஞ்சி திருவள்ளூர் போன்ற கோவில்களில் விக்ரகங்களில் மாறுதல்கள் ஏற்படும் .
***
கலியுக முடிவில் கிருஷ்ணா நதி நீர்மட்டம் உயர்ந்து குன்றின் மீதுள்ள கனக துர்கா கோவிலைத் தொடும் .
****
ஒரு மூன்று வயதுக்கு குழந்தையும், ஒரு சேவல் கோழியும் வருங்காலத்தை உரைக்கும் .
****
(அவர் கூறிய அதிசய பறவைகள், அதிசய காளைகள் பற்றிய விஷயங்களை நான் எழுதவில்லை; காரணம் என்னவெனில் இவையெல்லாம் மறைபொருளில் சொன்ன விஷயங்களாக இருக்கலாம். அவைகளை நாம் அப்படியே மொழி பெயர்க்கக் கூடாது; எடுத்துக் காட்டாக இரண்டு பொன்னிறப் பறவைகள் வானில் பறந்து பாவாத்மாக்களை அழிக்கும் என்பதை நாம் இப்போது ட்ரோன் DRONE என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்துக்குப் பின்னர் ட்ரோன் DRONE போல புதிய அதி நவீன தாக்குதல் கருவிகள் வரக்கூடும் ).
எடுத்துக்காட்டாக, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மறைபொருள் கூற்று என்று நிறைய பாடல்களை எழுதியுள்ளார். பாகற்காய் விதை போட்டேன் ;கத்தரிக்காய் முளைத்தது என்பார்; உடனே அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் உரைகாரர்கள் ஆன்மீக விஷயங்களை விளங்கியுள்ளனர்.
மேலும் சில ஆரூடங்கள்
கர்நாடகத்திலுள்ள ஹம்பியில் உள்ள அனுமான் சிலை பாவாத்மாக்கள் அதிகரித்ததால் உரத்த குரலில் கர்ஜிப்பார் ; அதைக் கேட்போர் காய்ந்த இலைகளை போல கீழே விழுந்து இறப்பார்கள்( என் கருத்து- இது ஒரு பூகம்பக் குறிப்பாக இருக்கலாம்)
பல குருமார்கள் தங்களைக் கலியுக கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள் .
பல மடங்களில் உயர் ஜாதியினருக்குப் பதிலாக பிற ஜாதி மக்கள் தலைமை ஏற்பார்கள்.
சுவாமிகளின் ஆரூடங்களை வியாக்கியானம் செய்வோர் ஒரிஜினல் நோத்ர்தாமல் விஷயத்தில் குழம்பியது போல தவிக்க வேண்டியிருக்கிறது ஏனெனில் அவர் பஞ்சாங்கத்திலுள்ள அறுபது வருட சுழற்சிக் காலண்டரில் உள்ள ஆண்டுகளைக் கூறி, இது நடக்கும், அது நடக்கும் என்கிறார். பிரபவ என்ற ஆண்டை எடுத்துக் கொண்டால் அது ஒவ்வொரு அறுபது ஆண்டுக்கும் ஒரு முறை வரும். இதே போல கலியுகத்தை எடுத்துக்கொண்டால் அவர் சொல்லாவிடினும் ஏனைய வட்டாரங்களிலிருந்து அது கிமு. 3102 ல் துவங்கியதாக அறிந்து நாம் எழுதுகிறோம். வான சாத்திரக் குறிப்புகளும் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை; ஆதலால் குறிப்பாக இந்த ஆண்டு என்று சொல்ல முடியாமல் யூகிக்க வேண்டி இருக்கிறது
ஒரிஜினல் நோத்ர்தாமல் விஷயத்தில் எல்லோரும் பொய் சொல்லுவது போல இவர் விஷயத்த்திலும் புஸ்தகங்கள் வந்துள்ளன; அதாவது நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, பாருங்கள் சுனாமி வருவதை அவர் அன்றே சொன்னார்; பாருங்கள் கோவிட்/ சீன வைரஸ் நோய் பற்றி அவர் அன்றே சொன்னார் என்று புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கும் கும்பல்களும் உண்டு .
இதே போல முஸ்லீம் சூபி மதப் பிரிவு சந்நியாசி நைமதுல்லாவும் , ஒரிஸ்ஸாவில் ஜெகன்நாத் சாட்டர்ஜீயும் ஆரூடங்களை கூறி யுள்ளனர்.
–subham—
Tags- ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை!- Part 2 , இந்திய நகரங்கள், அமெரிக்கா, அணுகுண்டு , தாக்குதல்