வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2(Post No.13,847)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.847

Date uploaded in London – –3 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-11-24 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2

சுவாமிகள் அருளிய மயூர பந்தம்

சுவாமிகள் அருளிய மயூர பந்தப் பாடல் இது:

வரதந திபநக ரகமுக வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு
முனிவருதி 

 இது சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல மந்திரப் பாடலாகும்.

சுவாமிகள் இயற்றிய சதுரங்க பந்தம்

சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சதுரங்க பந்தத்தின் இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.

·         பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி

·         துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.

·         இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.

குமாரஸ்தவம்

1918-ம் ஆண்டு சுவாமிகளுக்கு வெப்பு நோய் பாதித்தது. உடனே மந்திர நூலான குமார ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். நோய் உடனே நீங்கியது. இதை ஓதுவோருக்கு நோய்கள் தீரும், முருகன் தன் இரு தேவியருடனும் காட்சி தருவார் என்று இவர் கூறி அருளியுள்ளார். சக்தி வாய்ந்த இதை ஓதி பக்தர்கள் இன்றும் நல்ல பயனை அடைவது கண்கூடு.

ஷண்முக கவசம்

தனது தந்தையார் இறந்த சமயத்தில் அவர் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு 30 பாடல்கள் கொண்ட ‘சண்முக கவசம்’  என்னும் நூலை இயற்றினார்

6 மண்டலங்களில் 6666 பாடல்கள்

சுவாமிகள் இயற்றிய ஒவ்வொரு பாடலும் தனித்தன்மைகொண்டது.

சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 அரும் தமிழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.

சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.

சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.

சண்முக கவசம். பஞ்சாமிருத வண்ணம், குமரகுருதாச சுவாமிகள் பாடல் (1266), ஸ்ரீமத் குமார சுவாமியம்  (1192).திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135, திருப்பா (திட்ப உரை) – 1101, காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம் – 608,

சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258 ஜீவயாதனா வியாசம் (ஜீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235, பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230, செக்கர் வேள் செம்மாப்பு – 198, செக்கர் வேள் இறுமாப்பு – 64, தகராலய ரகசியம் – 117,, குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100, சேந்தன் செந்தமிழ் – 50, குமாரஸ்தவம் 44, தென்னாட்டுத் திருத்தலதரிசனம் 35

பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30, ஆனந்தக்களிப்பு 30, சமாதான சங்கீதம் 1, சண்முக ஸஹஸ்ர நாமார்ச்சனை 2

ஆகியவை சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களைக் கொண்டுள்ளது.

சமாதி

1926-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி உயில் ஒன்றை எழுதி தேஜோ மண்டலசபை அமைப்பை உருவாக்கி செயல்முறை ஒன்றை சுவாமிகள் உருவாக்கினார்.

சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதியன்று காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதி அடைந்தார்.

சுவாமிகளின் சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் திருமடவளாகத்துள் அமைந்துள்ளது.

தமிழின் தெய்வத் தன்மையை உணரவும் முருகனின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை பெறவும் பக்தர்கள் துதிக்க அருட்பாடல்களைத் தந்த ஒரு பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் என்றால் அது மிகையாகாது!

**

Leave a comment

Leave a comment