Post No. 13.850
Date uploaded in London – –4 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்!
ச. நாகராஜன்
26-9-1980 அன்று வெளியான தமிழ் திரைப்படம் சுஜாதா. இதை இயக்கியவர் மோகன். விஜயன், சரிதா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
இதில் வரும் ஒரு பாடல் இது:
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
—BGM—
பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
—BGM—
பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…
பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
—BGM
இந்தப் பாடலைப் பாடியவர் : திருமதி கல்யாணி மேனன்,
பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்
இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்
இந்தப் பாடலை ஒட்டி உண்மையான ஒரு சோக சம்பவம் உண்டு.
கல்யாணி மேனன் (பிறப்பு : 23-6-1941 மறைவு 2-8-2021) சிறந்த மேடைப் பாடகி. திரைப்பட வாய்ப்புக்காக பல முறை அவர் முயன்றார். ஒன்றிரண்டு பலித்தது.
அவரது கணவர் திரு கே.கே மேனன் இந்திய கடற்படையில் ஒரு அதிகாரி. அவர் டெல்லி சென்றிருந்த சமயம் சுஜாதா படத்தில் பாடுவதற்கு வருமாறு கல்யாணி கூறப்படவே, அவர் மனம் மிக மகிழ்ந்தார்.
அவர் தன் கணவருக்கு இதைத் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட கணவர் டில்லியிலிருந்து விமானத்தில் கிளம்பி வருவதாகவும் ரிகார்டிங் போது கண்டிப்பாகத் தான் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
காலையில் ரிகார்டிங் ஆரம்ப வேலைகள் நடந்தன. மணி இரண்டு ஆயிற்று. மேனன் வரவில்லை. இனியும் காத்திருக்க வேண்டாம் என்று பாடலைப் பதிவு செய்தார் இசை அமைப்பாளர்.
கணவர் ஏன் சொன்னபடி வரவில்லை என்று குழம்பி இருந்த கல்யாணி மேனனுக்கு வந்தது தலை மேல் இடி விழுந்தது போல ஒரு செய்தி.
அவசரம் அவசரமாக டில்லி விமான நிலையத்திற்கு விரைந்த மேனன் வண்டியின் வேகத்தால் அது விபத்திற்குள்ளாக அவர் மரணமடைந்தார்.
செய்தி கிடைத்தபோது அனைவரும் துக்கமடைந்தனர்.
நீ வருவாய் நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
என்ற கண்ணதாசனின் வரிகள் வேறு விதமான அர்த்தத்தை நிஜ வாழ்க்கையில் கல்யாணி மேனனுக்குத் தந்து விட்டது.
இவரது மகன் தான் ராஜீவ் மேனன்.
ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து இவர் இசை அமைப்பில் பிரபலமானார்.
2000-ம் ஆண்டில் ராஜீவ் மேனனின் ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ படம் வெளியிடப்பட்டபோது அதன் முதல் பாடல் கேஸட்டை கமல்ஹாஸனிடமிருந்து கல்யாணி மேனன் பெற்றார்.
ஐஸ்வர்யா ராயின் இசை ஆசிரியையாக இவர் ஒரு படத்திலும் தோன்றியிருக்கிறார்.
தனது 80-ம் வயதில் இவர் மரணமடைந்தார்.
ஒரு பாடலுக்குள் இவ்வளவு சோகமா?
நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது!
***