மேலும் 30 பாரதியார் கட்டுரைப் பொன்மொழிகள்; நவம்பர் 2024 காலண்டர் (Post No.13,853)

November 7, 2024 Skanda Shasti

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,853

Date uploaded in London – 4 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

QUOTATIONS ARE TAKEN FROM PROJECT MADURAI WEBSITE MATTER.

சென்ற அக்டோபர் மாத காலண்டரில் முப்பது பாரதியார் கட்டுரைப்  பகுதி பொன்மொழிகளைக் கண்டோம்; இங்கே மேலும் 30 பொன்மொழிகளைக்  காண்போம்.

பண்டிகை தினங்கள் –2-கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 7- கந்த சஷ்டி, சூர சம்ஹாரம்; 14- குழந்தைகள் தினம், நேருஜி பிறந்த நாள் ; 15- குருநானக் ஜெயந்தி; 23- சத்யசாயி பாபா பிறந்த தினம்.

அமாவாசை-1, 30 ; ஏகாதசி-12, 26;  பெளர்ணமி – 16;

சுபமுகூர்த்த நாட்கள் – 7,8, 20, 21, 27, 28, 29

****

நவம்பர் 1 வெள்ளிக்கிழமை

‘நிகழும் காளயுக்தி வருஷம் சித்திரை மாதம்31-ம் தேதி திங்கட்கிழமை யன்று மாலை புதுச்சேரியில்ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் திருவிளக்கு பூஜைசெய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு ஸ்திரீகள் கூடி விளக்குபூஜை முடித்துப் பாட்டுகள் பாடினர். அப்பால் ஸ்ரீ வ.வே. சுப்பிரமணிய அய்யரின் பத்தினியாகிய திருமதி. பாக்கியலக்ஷ்மியம்மாள் பின்வரும் உபன்யாஸம்பு   ரிந்தனர்:-

****

நவம்பர் 2 சனிக்கிழமை

உங்களில் ஒவ்வொருவருடைய கொள்கைகளைஇன்று வாய் விட்டு விஸ்தாரமாகச் சொல்லிவிடுங்கள்.மனதிலுள்ள பயம், வெட்கம் என்ற பேய்களை தைர்யவாளால் வெட்டி வீழ்த்திவிட்டு பாரத ஸஹோதரிகள்பாரதமாதாவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பதே என்னுடையப்ரார்த்தனை. ஓம் வந்தே மாதரம்.

****

நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை

 ஸகோதரிகளே, தயங்காதீர்கள், மலைக்காதீர்கள்.திரும்பிப் பாராமல் நாம் செய்யவேண்டிய எந்தக்கார்யத்தையும் நிறைவேற்றும் வரை – நம்முடையலக்ஷ்யத்தை அடையும் வரை – முன் வைத்த காலைப்பின் வைக்காமல் நடந்து செல்லுங்கள். பேடிகளாயிருந்தால்திரும்புங்கள் .

****

நவம்பர் 4 திங்கட்கிழமை

உலகமெங்கும் விடுதலை யருவிநீர் காட்டாறுபோலே ஓடி அலறிக்கொண்டுவரும் ஸமயத்தில் நீங்கள்நாவு வறண்டு ஏன் தவிக்கிறீர்கள்?

****

நவம்பர் 5 செவ்வாய்க் கிழமை

பயமே பாபமாகும்’ என்று விவேகாநந்தர்”சொல்லியதை மறவாதீர்கள். நந்தனார் விடுதலைக்குப் பட்டசிரமங்களை நினைத்துப் பாருங்கள்..

****

நவம்பர் 6 புதன்கிழமை

”ஆதியில் பரம சிவனால் படைப்புற்ற மூல பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் ஸம்ஸ்கிருதமும் தமிழுமேயாம்” என்று பண்டைத் தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறுமே புராணக் கற்பனை அன்று. தக்க சரித்திர ஆதாரங்களுடையது.

****

நவம்பர் 7 வியாழக்கிழமை 

மனித நாகரீகத்தில் முதன் முதலாக இவ்விரண்டு பாஷைகளிலேதான் உயர்ந்த கவிதையும், இலக்கியமும், சாஸ்திரங்களும் ஏற்பட்டன. மற்றபாஷைகளின் இலக்கிய நெறிகள் இவற்றுக்கும் பின்னேசமைதன.

****

நவம்பர் 8 வெள்ளிக்கிழமை

அதாவது ஆரியரும் தமிழருமே உலகத்தில் முதல் முதலாக உயர்ந்த நாகரீகப்பதவி பெற்ற ஜாதியார். இங்ஙனம் முதல் முறையாக நாகரீகம் பெற்ற இவ்விரண்டு வகுப்பினரும் மிகப் பழைய நாட்களிலேயே ஹிந்து மதம் என்ற கயிற்றால் கட்டுண்டு ஒரே கூட்டத்தாராகிய செய்தி பூமண்டலத்தின் சரித்திரத்திலேயே மிக விசேஷமும் நலமும் பொருந்திய செய்திகளில் ஒன்றாகக் கணித்தற்குரியது.

**** 

நவம்பர் 9 சனிக்கிழமை

‘ஸ்திரீகள் பதிவிரதையாக இருக்க வேண்டும்’ என்று எல்லாரும் விரும்புகிறார்கள். அதிலே கஷ்டம் என்ன வென்றால், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில்ஒவ்வொருவனும் தன் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்கவேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை ஒவ்வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளைப் பதிவிரதை என்று நம்புகிறான்.

****

நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை

உலகத்திலுள்ள மதபேதங்களை யெல்லாம் வேருடன் களைந்து ஸர்வ ஸமய ஸமரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்குத் தமிழ் நாடே சரியான களம்.

****

நவம்பர் 11 திங்கட்கிழமை

உலகமுழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிறோம்.

****

நவம்பர் 12  செவ்வாய்க் கிழமை

ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது. மதுமாம்ஸங்கள் இல்லாதிருந்தால் பிராமணருக்கு பெரிய கீர்த்தி.அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்.

****

நவம்பர் 13 புதன்கிழமை

‘நான்’ ‘எனது’ என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத்தாமே பலவிதமானஅச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையை ஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து..

****

November 14, Children’s Day

நவம்பர் 14 வியாழக்கிழமை 

பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும் ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத்   தகாதென்றும், சண்டாளன்   ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு வந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால், வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள்.

****

நவம்பர் 15 வெள்ளிக்கிழமை

விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரேவழிதான் இருக்கிறது. விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைபுனர் விவாகம் செய்துகொள்ளலாம்.

****

நவம்பர் 16 சனிக்கிழமை

பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.

****

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ”புருஷ-விதவை” களின் (அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ஸ்ரீமான் காந்தி சொல்லுவதுபோல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.

****

நவம்பர் 18 திங்கட்கிழமை

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.—பாரதியார்

****

நவம்பர் 19  செவ்வாய்க் கிழமை

அதற்கு நான்:- ”சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று” என்றேன்.

****

நவம்பர் 20 புதன்கிழமை 

”காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?” என்று அந்த முஸல்மான் கேட்டான்..அதற்கு நான்:- ”ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான்– பாரதியார்

நவம்பர் 21 வியாழக்கிழமை 

ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்துபிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள்.

****

நவம்பர் 22 வெள்ளிக்கிழமை

உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள்.

*****

நவம்பர் 23 சனிக்கிழமை

ஓளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.

****

நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 

பண்டைத்தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில்,தமிழ் நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்துகொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளைமுன்னிட்டு விளங்குவது..

****

நவம்பர் 25 திங்கட்கிழமை

மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது,

****

நவம்பர் 26 செவ்வாய்க் கிழமை

மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும்”புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே..தமிழ்நாடுவேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்

*****

நவம்பர் 27 புதன்கிழமை

ராமகிருஷ்ணர் ‘நீ யுண்டு, நீ யுண்டு,நீ யுண்டு, நானில்லை, நானில்லை, நானில்லை’ என்று ஜபம் பண்ணினார். அவர் சோம்பேறியா? ஆஹா! ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உண்டாக்கினார். விவேகானந்தரோ புதிய பாரத தேசத்தை உண்டாக்கினவர்களிலமுதல் வகுப்பைச் சேர்ந்தவர்.

****

நவம்பர் 28 வியாழக்கிழமை 

வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டுமுன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன.

****

நவம்பர் 29 வெள்ளிக்கிழமை

சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்..

****

நவம்பர் 30 சனிக்கிழமை

விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், ‘உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில்நிற்பன’ என்பதை வெளி நாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாகப் பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.

****

BONUS QUOTES

‘பாரத தேசமே லோக குரு’ என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது

*****

‘கீதாஞ்சலி’ முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? தெய்வீகக் கதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்படமாட்டாரோ?

–subham—

Tags – மேலும் 30, பாரதியார், பொன்மொழிகள், நவம்பர் 2024, காலண்டர் , கட்டுரைகள்,

Leave a comment

Leave a comment