Post No. 13,858
Date uploaded in London – 6 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செவிடன் காதில் சங்கு ஊதியது போல
Like blowing a conch in the ear of the deaf
எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல
As it rained on a buffalo
இந்த இரண்டு பழமொழிகளின் மொத்தக்க கருத்து பயனற்ற செயல் ; எருமை மாடோ செவிடனோ செவி சாய்க்கமாட்டார்கள்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லுவதைக் கேட்காமல் கவனத்தை வேறு பக்கம் திருப் பிய மாணவர்களைத் திட்டப் பயன்படும் பழமொழிகள் இவை.
இதில் வியப்பு என்னவென்றால் ஆசியா முழுவதும் இந்தப் பழ மொழி உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் இல்லை.
சீனாவில் மாட்டுக்கு யாழ் வாசித்தது போல என்பார்கள்
இந்தியாவில் யாழ் மறைந்து வீணை வந்து விட்டது ஆனால் ஐரோப்பாவிலும் வேறு பல நாடுகளிலும் யாழ் போன்ற இசைக்கருவிகள் இன்றும் வாசிக்கப்படுகின்றன.
இந்தப் பழமொழி பற்றிய சீனக் கதை பின்வருமாறு :-
பெரிய இசை மேதையான காங்மிங் யீ, யாழ் வாசிக்கும் போது ஒரு பசு மாடு பக்கத்தில் நின்றது; உடனே பசு மாட்டுக்காக ஒரு விசேஷ ராகத்தை வாசித்தார் ; அது சங்கீதத்தை ரசிக்கவே இல்லை. பிறகு கொசுக்களின் ரீங்காரத்தையும் கன்றுகள் கொஞ்சும் அம்மா, அம்மா என்பதையும் வாசித்தார் ; இதைக் கேட்ட பசு வாலை ஆட்டியது: காதுகளை சொறிந்துகொண்டது .
யாருக்கு எது பிடிக்குமோ, எது புரியுமோ அதைத்தான் சொல்லவேண்டும் அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல பயனற்ற செயலாகவே இருக்கும்.
தாய் , கொரியன், சீன, ஜப்பானிய வியட்நாமிய. பாரசீக மொழிகளிலும் இந்தியாவில் பிஹாரி, சிந்தி மொழிகளிலும் இதற்கு இணையான பழமொழிகள் இருக்கின்றன.
பீஹார் மாநிலத்தில் அவன் எருமைக்கு வாசிக்கிறான்; அது பேசாமல் மேய்ந்து கொண்டு இருக்கிறது என்பார்கள்
சிந்தி மொழியில்
ஆட்டுக்கு பல ஆண்டுகளாக பாடினான்; ஒரு பயனும் இல் என்பார்கள் .
குதிரை காதில் புத்த மத பிரார்த்தனை சொன்னது போல என்பார்கள் ஜப்பானியர்கள்.
கழுதை காதில் குரான் ஓதியது போல என்பது பாரசீக மொழியில் உள்ள பழமொழி; இப்பொழுது இரான் நாட்டில் பாராசீக மொழி வழங்குகிறது .
கொரியாவில் பசுவின் காதில் புத்தமத சூத்திரம் சொன்னது போல என்பார்கள்.
இப்படி உலகம் முழுதும் எருமை அல்லது பசு அல்லது குதிரை அல்லது கழுதையைப் பயன்படுத்துவதால் ஒரு பொதுக் கருத்தும் நிலவுகிறது; அதாவது சொன்னதைக் கேட்காதவன் அல்லது புரிந்து கொள்ளாதவன் விலங்குக்குச் சமம் !
–subham—
Tags- செவிடன் காதில், சீனக் கதை, எருமை,பசு, குதிரை, கழுதை, பழமொழிகள், மாட்டுக்கு யாழ் வாசித்தது