Post No. 13,861
Date uploaded in London – 7 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்
Use ghee after melting, and curds diluted
இரண்டு மருத்துவ, ஆரோக்கிய பழமொழிகளை ஆராய்வோம்.
மோர் பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன் (கடைசியில் பழைய குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்)
சாப்பாட்டின் முடிவில் மோர் குடிக்க வேண்டும் ; தயிராகச் சாப்பிட்டால் ஜீரணம் ஆவது கடினம். அதை நீர்விட்டு மோர் ஆக்கி சாப்பிடுவது நலம்.
நெய்யை ஏன் உருக்க வேண்டும்? அப்போதுதான் நறுமணம் வெளிப்பட்டு; சாப்பாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் எதையும் சூடாகப் பரிமாறினால் கூடுதலாக சாப்பிடுவார்கள்; ஆறிப்போனால் அதற்கு மகிமை குறைவு. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று அலட்சியப்படுத்தும் பழமொழியே நமக்கு உருக்கிய, சூடான நெய்யின் பெருமையை உணர்த்தும்.
***
நெய்யில் கொழுப்புச் சத்து இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த கொழுப்புச் சத்து அதிகம் தீங்கிழைக்காத மானோசாச்சுரேட்டட் எண்ணெயும் ஒமேகா-3யும் நிறைந்த நல்ல சத்து ஆகும்
மானோசாச்சுரேட்டட் எண்ணெய் என்பது தீமை செய்யாத கொழுப்புச் சத்து; ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதை நினைவிற்கொண்டு சாப்பிட வேண்டும்
மேலும் உருக்கிய நெய்யிலுள்ள ஒமேகா-3 என்பது உடலிலுள்ள முக்கிய உறுப்புகள் திறமையுடன் செயல்படத் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு நமது இருதயம் ஒரு லட்சம் முறை ரத்தத்ததை உடலுக்குள் பம்ப் செய்கிறது அதாவது பலூனில் தண்ணீர் நிரப்பி அதை அழுத்தினால் எப்படி தண்ணீர் வேகமாக வெளியே செல்லுமோ அது போல பீய்ச்சி அடிக்கிறது. மூளையோ மணிக்கு 260 மைல் வேகத்தில் செய்தியை அனுப்புகிறது. கண்களோ பத்து கோடி செல்களைக் கொண்டு ஒளியை ஊட்டி நமக்கு பார்வையை அளிக்கிறது இதற்கான ஒமேகா-3 வெளியிலிருந்தே கிடைக்கிறது ; அதாவது நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது
Omega-3 supports major organs in the body, helping them to function normally, such as the heart, brain and eyes. When these organs work optimally, the heart pumps over 100,000 times a day, the brain passes information around at over 260 mph and over 100 million cells in the eye work to convert light into signals which enable you to see. Omega-3 is ESSENTIAL because the body cannot produce it from scratch and can only get it through outside sources such as diet and supplements.
***
வயிற்றில் புண் அல்லது குடல் /இரைப்பை அழற்சி நோய் உண்டானால் ஆயுர்வேத சிகிச்சைப்படி நெய்யினைத் தருகிறார்கள் அது ஜீரணத்துக்கான சுரப்பிகளை ஊக்குவித்து தேவையான என்சைம்களை சுரக்கவைக்கும்; புண்களை ஆற்றும்
According to Ayurveda, when an individual is suffering from chronic ulcer or gastritis, ghee is used to promote healing within the intestinal tract. It lubricates the connective tissues and stimulates the digestive enzymes
***
நெய்யிலுள்ள மேலும் ஒரு நல்ல பொருள் ப்யூட்டிரிக் அமிலம் ஆகும். ஜீரண சக்தி இல்லாதவர்களுக்கு இந்த அமிலம் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது நெய்யில் இருப்பதால் ஜீரண சக்தி- செமிக்கும் சக்தி—அதிகரிக்கும்.
It is often observed that people suffering from digestive problems do not produce butyric acid. They also show low levels of fatty acid and other related oils. Since ghee is rich in butyric acid and other vitamins and oils, it proves to be an amazing product to heal the gut.
****
நெய்யில் பல வகைகள் உண்டு பசுக்கள் ஏ 1, ஏ 2 என்ற இரண்டு வகை புரத்தச் சத்துக்களுடன் நமக்கு வெண்ணை, நெய்யினை அளிக்கின்றன. சில உயர்ந்த ஜாதி பசுக்களின் நெய்யில் ஏ- 2 உள்ளது . புல்லை மட்டும் மேயும் பசுக்களின் நெய்யினை மட்டுமே உபயோகிக்க வேண்டும் இது குடலுக்கும் வயிற்றுக்கும் வலிமை ஊட்டும்; மேலே குறிப்பிட்ட நல்ல சத்துக்கள் அனைத்தும் இந்த ஏ- 2 நெய்யில் இருக்கிறது
A1 ghee is derived from cows that produce both A1 and A2 protein. A2 ghee on the other hand is derived from cow breeds like Gir, Badri, and Sahiwal. While any ghee of high quality is beneficial for your gut health, it is advisable to select grass-fed A2 ghee. This particular product is power-packed with essential nutrients to improve your digestive well-being.
****
மோரின் மகிமை
1.லலித அந்தானி கீதானி ப்ரஸூத அந்தம் யெளவனம்
விசாகாந்தா மேக மாலா தக்ரந்தம் கலு போஜனம்
பாடலின் முடிவு ராகத்தால் சிறக்கும்; பிள்ளை பெறுவதால் இளமை சிறக்கும்;
மேகங்கள் சூழ்வதால் வைகாசி மதம் சிறப்படையும் ; விருந்தின் முடிவில் மோர் குடிப்பதால் சாப்பாடு சிறக்கும்.
****
ஒரு கவி மோரின் பெருமையைப் புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .
2.அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா
பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
பொருள்:-
மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது அரிது.
தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிது.
தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.
இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.
உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.
****
3.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:
நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே
சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.
****
அடுத்த பழமொழி
வறுத்த பருப்பை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே
இதையும் விரிவாக ஆராய்வோம்.
TO BE CONTINUED……………………
—SUBHAM—
TAGS- மோர் நெய் ஒமேகா 3, கொழுப்புச் சத்து , தயிர்