வறுத்த பருப்பை விடாதே , சுட்ட எண்ணெயைத் தொடாதே (Post.13,865)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,865

Date uploaded in London – 8 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வறுத்த பருப்பை விடாதே சுட்ட எண்ணெயைத் தொடாதே (Post.13,865)

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்– என்ற மருத்துவப் பழமொழியின் பொருளை முந்தைய கட்டுரையில் கண்டோம் இதோ அடுத்த பழமொழி – வறுத்த பருப்பை விடாதேசுட்ட எண்ணெயைத் தொடாதே!

சுட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆயினும் நம்மவர்கள் அந்தக் காலத்தில் சுட்ட எண்ணெயைத் தொடாதே என்று சொன்னார்கள் ; காரணம் என்னவெனில் அதைப் பாதுகாத்து வைக்காமல் அதே சட்டியில் வைத்து மீண்டும்மீண்டும் பயன்படுத்துகையில் அதில் அதிகம் அசுத்தங்கள் பூச்சி பொட்டுக்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

தற்கால ஆராய்ச்சிகளும் பல நிபந்தனைகளுடன்தான் சுட்ட எண்ணெயைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. முதலில் அதில் என்ன பண்டத்தைப் பொறி த்தீர்கள், அதை இதற்கு முன் எத்தனை முறை பயன்படுத்தினீர்கள் என்பதைப் பொறுத்தே அதை  நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியும்;. பலரும் அந்த எண்ணெயை ஆறவைத்து பாட்டிலில் விட்டு, குளிர்பதனப் பெட்டி என்னும் பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள் இப்படிச் செய்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.

மேலும் எந்தப் பண்டத்தை முதலில் பொறித்தீர்களாளோ அதே பண்டத்துக்கு மேலும் பயன்படுத்தலாம். அல்லது முந்திய பண்டத்தின் மணம் இதிலும் ஏறும். எடுத்துக்காட்டாக வெங்கா யத்தைப்  பொறித்துவிட்டு அடுத்த படியாக நீங்கள் எந்தப் பண்டத்தைப் பொறித்தாலும் அதில் வெங்காய மணம் ஏறக்கூடும்.

குறிப்பாக விருந்தாளிகள் வருகையில் அல்லது இறைவனுக்குப் படைக்கையில் எல்லாவற்றுக்கும் புதிய எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று தாய்மார்களுக்குச் சொல்லாமலே விளங்கும்

இதற்கான அறிவியல் விளக்கம் என்ன என்பதையும் காண்போம்.

Repeatedly heated cooking oils (RCO) can generate varieties of compounds, including polycyclic aromatic hydrocarbons (PAH), some of which have been reported as carcinogenic. Taking into account exploratory study, the present review aims to provide the consumption of RCO and its fumes cause the high incidence of genotoxic, mutagenic, tumorigenic and various cancers.

மீண்டும் மீண்டும் அதாவது பலமுறை எண்ணெயைச் சுடவைக்கும்போது அதில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் காம்பவுண்ட்ஸ்  என்னும் ரசாயனப் பொருட்கள் உண்டாகின்றன. அவை புற்றுநோயை உண்டாகும் ரசாயனப் பொருட்களில் ஒன்றாகும்

மேலும் நமது சகோதரிகள் சமையல் அறையில் அந்தப் புகையையும் சுவாசிக்கின்றனர். அதுவும் புற்றுநோய்க்கான காரணிகளாக அமைகிறது

நோயாளிகளையோ நோயற்றவர்களையோ  இதற்காக நிறுத்தி ஆராய்ந்து இந்த முடிவினை  விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே டாக்டர்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்த தகவலின் அடிப்படியில் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாம் மருத்துவரிடம் சென்றால், குறிப்பாக மேலை நாடுகளில், அவர்கள் நமது வாழ்க்கை முறை, அன்றாட நடவடிக்கைகள் பற்றி பல கேள்விகளையும் கேட்பார்கள்; நமக்கு கோபமும் ஆத்திரமும் கூட் வரக்கூடும். இது என்னடா, நான் முதுகு வலி என்று போனால் அவர் சமையல் அறையில் நீங்கள் எத்தனை மணி நேரம் இருக்கிறீர்கள், வெப்பம் எப்படி, புகைபோக்கி உண்டா என்றெல்லாம் கேட்கிறார்களே என்று நமக்கு எண்ணத் தோன்றும் ஆயினும் நாம் சொல்லும் எல்லா பதில்களையும் அவர்கள் அப்படியே கம்பியூட்டரில் பதிவு செய்கிறார்கள். பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் புகை போக்கி என்று ஆய்வு பட்டனைத் தட்டினாலும் கம்ப்யுயூட்டர் அத்தனை புகைபோக்கி விஷயங்களையும் கொட்டிவிடும். அப்படி செய்யப்பட ஆராய்ச்சியில் சுட்ட எண்ணெய் பற்றி கிடைத்த முடிவுதான் மேற்சொன்ன புற்று நோய் விஷயம் .

****

( புற்று நோய் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கொத்தனாரைக் கூப்பிவிட்டு செங்கற்களைத் வைத்து கட்டிடம் கட்டச்  சொன்னோம். அவர் சரியாக அளவு பாக்காலமல் செங்கற்களைத் தாறுமாறாக வைத்துக் கட்டினால் அடுத்த மழையில் கட்டிடமோ சுவரோ சரிந்துவிடும். இதே போல நமது உடலில் செல் என்னும் செங்கற்ககளை  புதுப்பிக்கும் வேலை ஒவ்வொரு நிமிடமும் நடக்கிறது. அவை  நம் உடல் உறுப்புளைக் கட்டி வருகிறது; யாரோ ஒன்றோ அல்லது ஏதோ ஒன்றோ தவறான தகவலைக் கொடுத்தவுடன் அந்த செல்கள் தாறு மாறாக வளரத் தொடங்குகின்றன. அதை நாம் கட்டி என்போம் அந்தக் (Tumour) கட்டிகள் மற்ற ரத்தக் குழாய்களையோ நரம்புகளையோ அழுத்தினால் பிரச்சினை பெரிதாகி மரணம் சம்பவிக்கிறது 

ஏன் செல்கள் தவறான தகவலை அனுப்புகின்றன என்பதற்கு சில காரணங்கள் மட்டுமே இதுவரை தெரிய வந்துள்ளன. புகை பிடித்தல், தடை செய்யப்பட ஒருட்களை சாப்பிடுதல் அணுசக்தி கதிரியக்கத்தில் நிற்றல் முதலியன சில. அடுப்பறையில் புகையைச் சுவாசித்தல், கடுமையான வெப்பத்துக்கு அருகில் நிற்றல் முதலியவற்றையும்  ஆராய்ந்ததில் மேற்கண்ட சுட்ட எண்ணெய் தகவல் கிடைத்தது. இது செல்களில் உள்ள    க்ரோமோசோம்களைப் பாதிக்கிறது).

****

இப்பொழுது வறுத்த பருப்புக்கு வருவோம். நிலக்கடலை அல்லது கொண்டைக் கடலையை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உலகெங்கிலும் உளது. அத்தோடு  மக்காச் சோள விதைகளையும் வறுத்து விற்கிறார்கள்.

வறுத்த பருப்பு உடலுக்கு நல்லது; அவைகளில் தேவையான உலோகச் சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் இருக்கின்றன. அவைகளைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து ஏறுவது இல்லை அல்லது குறைவு. இதை glycaemic index கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு ,பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு க்ளைசெமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை ஏறுதல் ) என்றெல்லாம் தற்காலத்தில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் .

Roasted chickpeas are also rich in essential vitamins and minerals, such as iron, magnesium, and folate, which support overall health. Additionally, they have a low glycaemic index, making them a good snack for maintaining stable blood sugar levels.

ஆயினும் முக்கியமான  மெத்தியோனைன் என்ற அமினோ அமிலத்தை அது அழித்துவிடுகிறது( Heat treatment causes loss of methionine). வறுத்த பருப்பிலுள்ள புரதச் சத்து உடலில் எளிதில் சேரும்; ஆனால் கொதிக்க வைத்த பருப்பிலுள்ள புரத்தச் சத்து உடலில் மெதுவாகக்   கலக்கிறது வறுத்தால் மணமும் சுவையும் கூடுகிறது அதை வறுக்க ஆலிவ் எண்ணெய் முதலியவற்றைப் பயன்படுத்தினால் அதன் நற்பயன்களும் சேரும்.

வறுத்த நிலக்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1.இருதயத்துக்கு வலுவூட்டும் கொழுப்புச் சத்து இருக்கிறது; கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

2.ரத்தக் குழாய்களின் பலவீனத்தைத் தடுக்கும் பொருளும் உள்ளது

3.ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் மக்னீசியமும் இருக்கிறது

4.புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் சரிவிகிதத்தில் உள்ளன

5.உடல் உற்பத்தி செய்யாத நல்ல அமினோ அமிலங்களை வறுத்த கடலை நமக்கு கொடுக்கிறது

6. உடல் தசைகள் வளர உதவுகின்றன. குறிப்பாக பசித்த நேரத்தில் முழு சாப்பாடு கிடைக்காதபோது இது பசியையும் தணித்து உடலுழைப்புக்குத் தேவையான சக்தியையும் தரும்.

கெடுதிகள் என்ன ?

மேலை நாட்டில் நிறைய பேருக்கு அலர்ஜி/ ஒவ்வாமை உண்டு.

ஆகையால் எல்லா பாக்கெட் மேலும் பொட்டலம் மேலும் அலர்ஜி எச்சரிக்கை இருக்கும். அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது

இந்தப் பருப்பை வறுக்கும் போது அதில் உப்பினைச் சேர்க்கிறார்கள் சுவை கூடினாலும் அதிலுள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

கடைசியாக கெட்டுப்போன பூஞ்சைக்காளான் பிடித்த பருப்புகளைக் சாப்பிடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும்

****

மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தது நிலக்கடலை. லண்டனில் எல்லா குஜராத்தி கோவில்களிலும் பிரசாதத்தில் நிலக்கடலையும் சேர்க்கிறார்கள்.  கடலை மிட்டாய் பிடிக்காத தமிழர்கள் உண்டா ? கடலை மிட்டாய் வாழ்க. அளவோடு  சாப்பிடுங்கள்.

****

ஆங்கிலக் குறிப்புகளை கீழே இணைத்துள்ளேன் ; தேவையானோர் அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்

Heat treatment causes loss of methionine

Roasted Peanut Benefit in Heart Health

  • Healthy Fats: Roasted peanuts contain monounsaturated and polyunsaturated fats, which are beneficial for heart health, helping to lower bad cholesterol levels and reduce the risk of heart disease.
  • Antioxidant Properties: They are also a good source of antioxidants, such as resveratrol, which can improve heart health by protecting against arterial damage.
  • Blood Pressure Regulation: Magnesium found in roasted peanuts contributes to blood pressure regulation, further supporting cardiovascular health.
  •  

Roasted Peanut Benefit in Blood Sugar Control

  • Low Glycemic Index: Roasted peanuts have a low glycemic index, meaning they do not cause large spikes in blood sugar levels, making them a safe snack for individuals managing diabetes.
  • Rich in Magnesium: Magnesium has been linked to a lower risk of type 2 diabetes through its role in glucose metabolism, and roasted peanuts are a good source of this essential mineral.
  • Protein and Fat Balance: The balance of protein and healthy fats in roasted peanuts helps in slow digestion and steady energy release, aiding in blood sugar control.
  •  

Roasted Peanut Benefit in Muscle Building

  • High-Quality Protein: Roasted peanuts are a great source of high-quality protein, essential for muscle growth and repair. This makes them an excellent snack for athletes or anyone looking to increase muscle mass.
  • Amino Acids: They provide essential amino acids that the body cannot produce on its own, which are crucial for muscle development and repair.
  • Energy for Workout: The healthy fats in roasted peanuts offer sustained energy, making them a beneficial pre-workout snack to fuel physical activities and muscle building.
  •  

Side-Effects of Eating Roasted Peanuts

While roasted peanuts offer numerous health benefits, there are potential side-effects worth noting:

  • Allergic Reactions: Peanuts are a common allergen, and consuming them can trigger severe allergic reactions in some individuals, including anaphylaxis.
  • High Calorie Count: Due to their high fat content, roasted peanuts are calorie-dense, which could contribute to weight gain if consumed in excessive amounts.
  • Increased Sodium Intake: Some roasted peanuts come with added salt, which can lead to increased sodium intake, potentially raising blood pressure.
  • Risk of Contaminants: Peanuts can be susceptible to aflatoxins, a type of mould that can be carcinogenic. Proper storage and choosing high-quality products can minimize this risk.
  •  

Eating roasted peanuts in moderation is key to avoiding these potential side effects, ensuring you can enjoy their benefits without adverse effects.

–subham—

 tags- வறுத்த பருப்பை விடாதே ,,சுட்ட எண்ணெயை, தொடாதே ,நிலக்கடலை, வறுத்த பருப்பு, சுட்ட, எண்ணெய்

Leave a comment

Leave a comment