Post No. 13,871
Date uploaded in London – 10 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜஸ்டஸ் குண்டர் கிராஸ்மானுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் பிறந்தன; அவர்களில் மூன்றாவது குழந்தை ஹெர்மன் கிராஸ்மான்.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்தான் என்ற ஆன்றோர் வாக்கின்படி ஹெர்மன் கிராஸ்மானுக்கும் 11 குழந்தைகள்!
கிராஸ்மான் கிறிஸ்தவ குருமார்கள் குடும்பத்தில் ஸ்டெட்டின் என்ற ஊரில் பிறந்தார் ப்ராட்டஸ்டண்ட் மதப்பிரிவின் கொள்கைகளை பயின்றார்; ஆனால் கணிதத்தில்தான் அதிக ஈடுபாடு.; சாகும்வரை கணித ஆசிரியராகவே பணியாற்றினார்; சம்ஸ்க்ருதத்தில் ஆர்வம் பிறக்கவே கணித மூளையைக் கொண்டு ரிக்வேதத்தைக் கணக்கிட்டார். அதை எளிய ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். தனக்காக ஒரு ரிக்வேத அகராதியைத் தயாரித்து வைத்துக்கொண்டார்; அதைப்பார்த்த அறிஞர்கள் இதை வெளியிடுங்கள் என்று வேண்டவே அதையும் அச்சிட்டார்.
ஒரு கணித மேதை எப்படி ஒரு விஷயத்தை அணுகுவாரோ அப்படி முறையாக அணுகித் தயாரித்த அகராதி அது; இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைப் பொழுதுபோக்குவதற்காகக் கற்றார். கடல் அலைகளின் ஏற்ற இறக்கம், கால்குலஸ் போன்ற அறிவியல், கணித விஷயங்களை புஸ்தகமாக எழுதி வெளியிட்டார். பின்னர்தான் சம்ஸ்க்ருத-கிரேக்க மொழிகளை ஒப்பிட்டு பழைய கொள்கைகளைத் தகர்த்தார் ; சம்ஸ்க்ருதம் பல மாறுதல்களை அடைந்த நிலையையே நாம் காண்கிறோம். இதை வைத்து இந்தோ- ஐரோப்பிய மொழி பற்றி முடிவு செய்யக்கூடாது என்பது கிராஸ்மானின் கொள்கை. ரிக்வேதத்தில் இடைச் செருகல்கள் என்று அவர் கருதிய விஷயங்களை பின்னுக்குத் தள்ளினார்.
மொழிகளின் மீது மட்டும் அவருடைய ஆர்வம் நிற்கவில்லை. பள்ளி மாணவர்களுக்காக தாவரங்களின் பெயர்கள் பற்றி புஸ்தகம் எழுதினார். நாட்டுப்புற பாடல்களையும் தொகுத்து வெளியிட்டார். பதினோரு பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருவதில் பெரும்பொழுதைச் செலவிட்டார்; இயற்பியல் பற்றியும் எழுதினார்.
இவருடைய நூல்கள் பற்றி பின்னர் ஸ்லகல் என்ற அறிஞர் எழுதினார். டியூபிங்கன் பல்கலைக் கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது .
இவருக்குப் புகழ் தேடித்தந்த கணித, மொழியியல் கண்டுபிடிப்புகள் :
Bivector
Color space
Grassmannian
Grassmann algebra
Grassmann number
Grassmann’s law
Grassmann’s laws
****
HERMANN GRASSMANN 1809-1877
ஹெர்மன் கிராஸ்மான்
பிறந்த தேதி – 15-4-1809
இறந்த தேதி – 26-9-1877
பிறந்த ஊர் – STETTIN ஸ்டெட்டின்
கல்வி கற்ற இடம் – BERLIN பெர்லின்
வேலைபார்த்த இடம் –பெர்லின் , ஸ்டெட்டின் கணித ஆசிரியர்
எழுதிய அல்லது மொழிபெயர்த்த நூல்கள்
Grassmann, Hermann (1844). Die Lineale Ausdehnungslehre (in German). Leipzig: Otto Wigand.
Grassmann, Hermann (1994). A New Branch of Mathematics. Translated by Kannenberg, Lloyd C. Open Court. pp. 9–297. ISBN 9780812692761.
Grassmann, Hermann (1847). Geometrische Analyse (in German). Leipzig: Weidmannsche Buchhandlung.
Grassmann, Hermann (1861). Lehrbuch der Mathematik für höhere Lehranstalten. Vol. 1: Arithmetik. Berlin: Adolph Enslin.
1862. Die Ausdehnungslehre. Vollständig und in strenger Form begründet.. Berlin: Enslin.
English translation, 2000, by Lloyd Kannenberg, Extension Theory, American Mathematical Society ISBN 0-8126-9275-6, ISBN 0-8126-9276-4
1873. Wörterbuch zum Rig-Veda. Leipzig: Brockhaus.
1876–1877. Rig-Veda. Leipzig: Brockhaus. Translation in two vols., vol. 1 published 1876, vol. 2 published 1877.
1894–1911. Gesammelte mathematische und physikalische Werke, in 3 vols. Friedrich Engel ed. Leipzig: B.G. Teubner.[11] Reprinted 1972, New York: Johnson.
ஜெர்மனியில் அப்பொழுது குழப்பமான அரசியல் நிலவியது; ஆகையால் சகோதரருடன் சேர்ந்து ஜெர்மனி ஜக்கியமாக வேண்டும் என்று எழுதினார்கள்; இதனால் அரசியல் விரோதத்தைச் சம்பாதித்தார்கள்.
கணிதத் துறையில் இவர் பல புதிய விதிகளைக் கண்டுபிடித்தார்; ஆனால் அதை உலகம் உணர்ந்து பாராட்டவே சில காலம் ஆயிற்று ; மொழிகள் விஷயத்தில் இவர் கண்டுபிடித்த விதி உடனே அங்கீகாரம் பெற்று கிராஸ்மான் விதி GRASSMAAN LAW என்று பெயர் சூட்டப்பட்டது.
—SUBAHM—
TAGS- GRASSMAAN LAW, HERMANN GRASSMANN , ஹெர்மன் கிராஸ்மான் கணித ஆசிரியர் , ரிக்வேதம், மொழிபெயர்ப்பு