ராமாயணத்தில் வரங்கள் (16)  கைகேயி  தசரதனுக்கு கூறியது! (Post No.13,881)

PICTURE OF KAIKEYI ND DASARATHA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.881

Date uploaded in London – –13 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (16) 

ராமாயணத்தில் வரங்கள் (16) கைகேயி  தசரதனுக்கு அலர்க்கன் என்னும் ராஜரிஷி தனது கண்களைத் தந்தது பற்றிக் கூறியது!

ச. நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் பன்னிரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ கைகேயியை நிந்திப்பது’ என்ற ஸர்க்கம்.

ராமனுக்கு வனவாசம்; பரதனுக்கு பட்டாபிஷேகம் என்ற கைகேயியின் இருவரங்களையும் கேட்ட தசரத மன்னன் மனக்கலக்கம் அடைந்து ஒரு முகூர்த்த காலம் சுயநினைவற்று மயங்கிக் கிடந்தார்.

பின்னர் ஒருவாறு தன்னறிவை அடைந்து கடும் சினம் கொண்டு கைகேயியைப் பலவாறாக நிந்திக்கிறார்.

“கொடிய விஷமுள்ள பாம்பு போல எனக்கே அழிவைத் தருவாய் என்பதை தெரியாமல் என்னால் எனது மாளிகையில் வைக்கப்பட்டாய். ராமனை எப்படி நான் பிரிவேன்” என்று இப்படிப் பலவாறாகப் புலம்புகிறார்.

கைகேயியைக் கடும் வார்த்தைகளால் நிந்திக்கிறார்.

கைகேயியோ மனம் மாறவில்லை. தனது வரங்களை ராஜா தசரதன் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

ஒருவன் வாக்தத்தம் செய்து விட்டால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக மிகப் பெரும் தியாகங்களையும் செய்வான் என்பதை கைகேயி ராஜா தசரதனுக்கு எடுத்துரைத்து அவன் தனக்குத் தந்த இரு வரங்களையும் வாக்குதத்தம் மீறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

“சக்ரவர்த்தியாரே! ஏதோ ஒரு வரத்தை வாக்தத்தம் செய்து விட்டு இப்பொழுது மாறான மொழிகளை உரைக்கின்றீர். மன்னவர்களுக்கே ஒரு குறையை விளைவிக்கப் போகின்றீரா என்ன?”

“சிபி சக்ரவர்த்தி இந்திரன் பருந்தாகவும் அக்னி பகவான் புறாவாகவும் உருவம் தரித்து சண்டை போடுவதாய் நடனம் செய்து கொண்டு வந்த போது தனது மாமிசத்தை பருந்நாயிருந்த இந்திரனுக்குக் கொடுத்தருளினார். (அவர் புறாவாக இருந்த அக்னிதேவனுக்கு வாக்தத்தம் முன்னமேயே பண்ணியிருந்ததனால்!)

 அலர்க்கன் என்னும் ஓர் ராஜரிஷி தனது இரு கண்களையும் பிடுங்கிக் கொடுத்து விட்டு உத்தம கதியை அடைந்தார்.”

என்று இவ்வாறாக தனது வாதத்தை கைகேயி முன் வைக்கிறாள்.

ஷைப்ய ஷ்யேனகபோதீயே ச்வமாம்சம் பக்ஷிணே ததௌ |

அலர்கஸ்சக்ஷுஷீ தத்த்வா ஜகாம கதிமுத்தமாம் ||

    அயோத்யா காண்டம், 12-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 43

ஷைப்ய: –  சிபி சக்ரவர்த்தியானவர்

ஷ்யேன கபோதீயே – இந்திரன் பருந்தாகவும் அக்னி பகவான் புறாவாகவும் உருவம் தரித்து சண்டை போடுவதாய் நடனம் செய்து கொண்டு வந்த போது

ஸ்வமாம்சம் – தனது மாமிசத்தை

பக்ஷிணே – பருந்தாயிருந்த இந்திரனுக்கு

ததௌ – கொடுத்தருளினார் (புறாவாய் இருந்த அக்னி தேவனுக்கு அவர் முன்னமேயே வாக்தத்தம் செய்திருந்தமையால்)

அலர்க: – அலர்க்கனெனும் ஓர் ராஜரிஷி

சக்ஷுஷி – தனது இரு கண்களையும்

தத்த்வா – பிடுங்கிக் கொடுத்துவிட்டு (ஒரு பிராம்மணனுக்கு முன்னமே வாக்குக் கொடுத்தமையால் அவருக்குக் கொடுத்து)

உத்தமாம் – உத்தம

கதிம் ஜகாம – கதியை அடைந்தார்

இவ்வாறாக கைகேயி தசரதனிடம் முன்னர் நடந்த இரு சம்பவங்களைச் சுட்டிக் காட்டி நினைவூட்டி கொடுத்த வாக்கை மீறக் கூடாது என்கிறாள்.

சமுத்திரமானது தேவர்கள் கரையைத் தாண்டி வராமல் இருக்க வேண்டுமென பிரார்த்தித்தபோது அப்படியே செய்வதாய் ஏற்றுக் கொண்டு விட்டு கரையைக் கடக்காமல் இருக்கிறது.

இதுவரையில் இருக்கின்ற தர்ம நெறியை மனதில் வாங்கிக் கொண்டு வாக்குதத்தத்தைப் பொய்யாகச் செய்யாதேயும்” என்கிறாள் கைகேயி.

இங்கு அலர்க்கன் என்ற ராஜரிஷி பற்றிய விவரத்தையும் அவன் தான் கொடுத்த வாக்கின் படி ஒரு  பிராமணனுக்குத் தன் இரு கண்களை ஈந்தது பற்றியும் வான்மீகி விளக்குகிறார்.

***

Leave a comment

Leave a comment