திருக்குறள்,  தமிழ்ப் பழமொழிகளில் கனவுகள் (Post No.13,885)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,885

Date uploaded in London – 14 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழில் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  திருக்குறளிலும் சிலப்பதிகார காவியத்திலும் நிறைய கனவு விஷயங்கள் வருகின்றன. திருக்குறளில் காதலியின்  கனவுகளே மிகுதி; சிலப்பதிகாரத்தில் தீய கனவுகளே நிறைய உள. இனி நடக்கப்போகும் நல்ல , கெட்ட நிகழ்ச்சிகளை கனவுகள் அறிவிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மேலை நாட்டினர் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை.

கனவுகள் விஷயத்தில் புரட்சி செய்தவர் திருவள்ளுவர். உலகில் வேறு எந்த நூலிலும் காண முடியாத ஒரு விஷயத்தைச் செய்தார் . காதலியின் கனவுகளுக்கு ஒரு அதிகாரத்தையே ஒதுக்கினார். அதிலுள்ள பத்து குறள்களுக்கு அப்பாலும் கனவு பற்றிப் பாடினார்

தமிழ்ப் பழமொழிகளில் வரும் செய்திகள் பயனற்ற நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களை சுட்டிக்காட்டுகின்றன

****

கனவு நிலை உரைத்தல் என்னும் அதிகாரத்தின் கீழ் வரும் பத்துக் குறள்கள் பின்வருமாறு :–

தலைவி தான் கண்ட கனவுகளைத் தோழிக்கு உரைத்தாள்

1211.கனவே என் தலைவனிடமிருந்து தூதாக வந்தாய்; உனக்கு நான் என்ன விருந்து கொடுக்க முடியும்? 

1212.கண் மூடித்தூங்க முடியுமானால் என் பிரிவித்துயரை தலைவனுக்கு எடுத்துரைப்பேன்

1213. தோழீ! நேரில் வராத தலைவனைக் கனவில் காண்பதால்தான் என் உயிர் இருக்கிறது.

1214.நேரில் வராத தலைவனைக் கனவு கண்டுபிடித்து எனக்குத் தந்து விடுகின்றது.

1215.தலைவனை நேரில் அனுபவித்த இன்பத்தைக் கனவிலும் அனுபவிக்கின்றேன்; இரண்டும் ஒன்றுதான்

1216.நனவு என்ற பாவி இல்லாவிட்டால் கனவில் கண்டவர் தப்ப முடியாதே.

1217.ஒரு நாளும் நேரில் வரவில்லை ; ஆனால் கனவில் மட்டும் தினமும் வருகிறார் ; என்ன கொடுமை இது? யார் அவருக்கு இந்த அனுமதியைக் கொடுத்தார்?

1218.தோழீ அவர் நான் தூங்கும்போது என் தோளின் மீது தூங்குகிறார்நான் விழ்த்தவுடன் ஓடிப்போய் என் இதயத்தில் புகுந்துவிடுகிறார்.

1219.காதலனும் இல்லை; கனவும் இல்லை; அத்தகைய பெண்கள்தான் நேரில் வராத என் காதலனைப் பழித்துப் பேசுவார்கள்

1220.காதலன் என்னைப் பிரிந்துவிட்டான் என்று இந்த ஊர்ப் பெண்கள் வதந்தி பரப்புகிறார்கள்; என் காதலன் தினமும் கனவில் வருவதை அவர்கள் அறியவில்லை

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து–.குறள் 1211:

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.—1212

நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்.–1213

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.-1214

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.-1215

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.-1216

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்

என்எம்மைப் பீழிப் பது.–1217

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து-1218

நனவினால் நல்காரை நோவர் கனவினால்

காதலர்க் காணா தவர்—1219

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.-1220

***

வேறு சில கனவுகள்

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.—819

சொல்லும்  செயலும் வேறுபட்ட பேர்வழிகளைக் கனவில் கண்டாலும் வருத்தம் தரும்

****

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.—1054

கனவில் கூட இல்லை என்று சொல்லாத, கொடைத்தன்மை கொண்ட, நல்ல மனிதர்களிடம் பிச்சை கேட்பது அவர்கள் வாரி வழங்கியது போன்ற இன்பத்தைக் கொடுக்கும்.

  *****

தமிழ்ப் பழமொழிகளில் கனவுகள்

Dreams in Tamil Proverbs

1004. இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கதை.
The story of one who in a dream of the night saw Saturn swelling as a large pot.

1430. ஊமை கண்ட கனாப்போல் இருக்கிறது.
It is like the dream of the dumb.
He is unable to relate his dream and therefore cannot obtain its interpretation.

1687. எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின.
My days are like the dream of the dumb.

2347. கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைவு.
Even in its dreams, the crow’s thoughts turn on eating filth.

2348. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
Will the money seen in a dream meet one’s expenses?

2349. கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.
The wealth seen in a dream, the water observed in a mirage.

2350. கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா?
Will the rice consumed in a dream appease hunger ?

2351. கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.
The story of a woman given in marriage to a man seen in a dream.

2492. காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது.
Dreams of bliss and premature wisdom are not lasting.

2517. கிடக்கிறது குட்டிச்சுவர் கனாக் காண்கிறது மச்சுவீடு.
Dwelling in a ruinous hut and dreaming of a palace.

2584. குடி இருப்பது குச்சுவீடு, கனாக் கண்டது மச்சுமாளிகை.
He who dwells ina humble cottage dreams ofceiled apartments.

4468. படையாது படைத்த மருமகளே உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
O, my daughter-in-law, who art – entertaining me sumptuously, I dreamt that thou wast being dissected by a pariah.

—Subham—

TAGS- திருக்குறள்,  தமிழ்ப் பழமொழிகள்,  கனவுகள்

Leave a comment

Leave a comment