Valmiki cursing a hunter for killing a bird in the forest ; later his soka/grief gave birth to a sloka/oouplet. That is how we got Ramayana
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.887
Date uploaded in London – –15 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (18)
ராமாயணத்தில் வரங்கள் (18) காளிந்திக்கு ச்யவனர் கொடுத்த வரம்!
ச. நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் நூற்றுப்பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ மனுவம்சத்தைச் சொல்வது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமருக்கு வசிஷ்ட முனிவர் இக்ஷ்வாகு குல பரம்பரை சரித்திரத்தை விரிவாகச் சொல்கிறார்.
“மகாபாகுவான பரதனுக்கு அஸிதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சூரர்களான ஹேஹயரென்பவர்களும் தாலஜங்கர் என்பவர்களும் சசிபிந்துக்கள் என்பவர்களும் எதிரிகளாய் பகைமன்னவர்களாய் ஏற்பட்டார்கள்.
அரசரான அவர் அனைவரையும் எதிர்த்து போரில் விரட்டப்பட்டு அழகிய இமயமலையில் மன திருப்தி கொண்டவராக தவம் புரிந்து காலம் கழித்தார்.
அவருடைய மனைவிமார்கள் இருவர்களும் கர்ப்பிணிகளாக இருந்தனர் என்று கேள்வி. இவர்களில் ஒருத்தி கருவை அழைப்பதற்காகச் சக்களத்திக்கு விஷத்தைக் கொடுத்தாள். காளிந்தி என்று பெயர் பூண்ட அவள் மனம் மிக வருந்தினாள்.
பிருகுவின் புதல்வரான ச்யவனர் என்பவர் ஹிமவத் பர்வதத்தில் இருந்தார். காளிந்தி அந்த முனிவரை அணுகி விஷயத்தைத் தெரிவித்தாள்.
அந்த அந்தணர் புத்திரனைப் பெறும் விஷயத்தில் வரம் கோரும் அவளைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்; “தேவி! உனக்கு மகாத்மாவும் உலகப் பிரசித்தி பெற்றவனும் தார்மிகனும் சீலவானும் வம்சத்தை விளங்கச் செய்பவனும் சத்ரு சம்ஹாரகனுமான ஒரு புதல்வன் பிறப்பான்.
அந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடைய தேவி மனம் பூரித்தவளாய் அந்த ரிஷியை பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து அவ்விடத்திலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்து தாமரைப் பூவின் நடுத்தளத்தை ஒத்த நிறமுடைய ஓர் புதல்வனைப் பெற்றாள்.
இதை விவரிக்கும் ஸ்லோகங்கள் பின்வருமாறு:
ச தாமம்யவதத்திப்ரபோ வரேப்சும் புத்ரஜன்மனி |
புத்ரதே பவிதா தேவி மஹாத்மா லோவிஸ்ருத: ||
தார்மிகஸ்ச சுசீலஸ்ய வம்சகர்தாரிசூதன: ||
அயோத்யா காண்டம், 110ம் ஸர்க்கம்,, 20 மற்றும் 21-ம் ஸ்லோகம்
ச விப்ர: – அந்த அந்தணர்
புத்ரஜன்மணி – புத்திரனைப் பெறும் விஷயத்தில்
வரேப்சும் – வரத்தைக் கோரும்
தாம் – அவளைப் பார்த்து
அப்யவதத் – பின்வருமாறு சொன்னார்
தேவி தே – தேவி உனக்கு
மஹாத்மா – மஹாத்மாவும்
லோகவிஸ்ருத:- உலக பிரசித்தி பெற்றவனும்
தார்மிக ச – தார்மிகனும்
சுசீல: – சீலவானும்
வம்சகர்தா – வம்சத்தை விளங்கச் செய்பவனு
அரிசூதன: ச – சது ஸம்ஹாரகனுமான
புத்ர: – ஓர் புதல்வன்
பவிதா – பிறப்பான்
க்ருத்வா ப்ரதக்ஷிணம் ஹ்ருஷ்டா முனிம் தமபிவாத்ய ச |
பத்மபத்ரவிசாலாக்ஷீ பத்மகர்பசமப்ரபம் ||
தத: ஸா க்ருஹமாகம்ய தேவீ புத்ரம் வ்யஜாயத ||
அயோத்யா காண்டம், 110ம் ஸர்க்கம்,, 22-ம் ஸ்லோகம்
ஸா – அந்த
பத்மபத்ரவிசாலாக்ஷீ – தாமரை இதழ் போன்ற கண்களை உடைய
தேவீ – தேவி
ஹ்ருஷ்டா – மனம் பூரித்தவளாய்
தம் முனிம் – அந்த ரிஷியை
ப்ரதக்ஷிணம் க்ருத்வா – பிரதக்ஷிணம் செய்து
அபிவாத்ய – நமஸ்கரித்து
தத: – அவ்விடத்திலிருந்து
க்ருஹம் – வீட்டிற்கு
ஆகம்ய ச – வந்து சேர்ந்து
பத்மகர்பசமப்ரபம் – தாமரைப் பூவின் நடுத்தளத்தையொத்த நிறமுடைய
புத்ரம் – ஓர் புதல்வனை
வ்யஜாயத – பெற்றாள்
சக்களத்தியால் கருவழிக்க ஆசையால் காளிந்திக்கு விஷமானது கொடுக்கப்பட்டது. விஷத்தோடு கூடவே அவளது புத்திரன் பிறந்தான். அக்காரணத்தாலேயெ அவனும் ஸகரன் என்று அழைக்கப்பட்டான்.
ஸகரனுடைய ஜன்மம் பற்றி பாலகாண்டத்திலும் 70ம் ஸர்க்கத்தில் (ஸ்லோகம் 34, 35) கூறப்படுகிறது.
இதை வரமாகவோ அல்லது ஆசீர்வாதமாகவோ கொள்ளலாம். வால்மீகி வரமா அல்லது ஆசீர்வாதமா என்பதை (பாலகாண்டத்தில்) சொல்லவில்லை. ஆனால் அயோத்யா காண்டத்தில் வரேப்சும் (ஸ்லோகம் 20ஐ மேலே காண்க) – வரத்தைக் கோரும் என்று தெளிவாகக் கூறுவதால் இதை வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
***