ராமாயணத்தில் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள் (Post No.13,892)

Picture: Ravana abducting Sita 

Written by London Swaminathan

Post No. 13,892

Date uploaded in London – 16 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கம்ப ராமாயணத்திலும் வால்மீகி  ராமாயணத்திலும் திரிசடை கண்ட கனவுகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன. தசரதன் பரதன் கண்ட கனவுகளையும் வால்மீகி பாடுகிறார். ராமாயண காலத்திலிருந்து கனவுகள் பற்றி இருந்த நம்பிக்கைகளை இவைகள் உறுதி செய்கின்றன. மேலை நாட்டினர் சொன்ன கனவு விஷயங்கள் அரை வேக்காடுகளின் முடிவுகளே. அவர்கள் சொன்ன கனவுகள் கீழ்மட்ட கனவுகள்; உயர் நிலைக் கனவுகளை பற்றி அவர்கள் ஒன்றும் அறியார்

***

அயோத்யா காண்டத்தில் தசரதன் கண்ட கனவு

அத்தியாயம்  4 (81)  (தாயின் ஆசிர்வதம் பெறுதல்)

(ஜானகிகிருஷ்ணன்.காம் வெப்சைட்டிலிருந்து சுருக்கித் தந்துள்ளேன்)

ராமன் சென்ற பின், கூடியிருந்த மந்திரிகளிடமும், முக்கியமான பிரஜைகளிடமும் தசரதன் கலந்து ஆலோசித்து, , நாளை புஷ்ய நக்ஷத்திரம்.  நாளையே என் மகன் முடி சூட வேண்டும். என்று எண்ணி ராமனை அழைத்து வர சுமந்திரனை அனுப்பினார்; ராமர் வந்தவுடன் தசரதர் சொன்னார்:

“ராமா, எனக்கு வயதாகி விட்டது. வேண்டிய அளவு சுகங்களையும் போகங்களையும் அனுபவித்தாயிற்று.  நிறைய தக்ஷிணைகள் கொடுத்து,  நூற்றுக் கணக்கான யாகங்களும், அன்ன தானமும், செய்த பின் நீ பிறந்தாய்.  உனக்கு முடி சூட்டுவதைத் தவிர எனக்கு வேறு கடமைகள் எதுவும் பாக்கியில்லை. நாளை யுவராஜாவாக உனக்கு முடி சூட்டுகிறேன்.  தவிர, மகனே, இன்று அசுபமான கனவுகளைக் காண்கிறேன். பயங்கரமான கனவுகள். ஆகாயத்திலிருந்து கற்களும், நெருப்பைக் கக்கும் நக்ஷத்திரங்களும் வந்து விழுவதைக் கண்டேன். பல வேறு கிரஹங்கள் என்னை சூழ்ந்து கொண்டன. அவை செய்த சப்தங்கள்  தெளிவாக இல்லை. ஆனால் பயங்கரமாக இருந்தது. சூரியன், அங்காரகன், ராகு இவர்களின் இது போன்ற நிமித்தங்களைக் காண நேர்ந்தால், அரசன் மடிவான் என்று சொல்கிறார்கள்.  அல்லது கோரமான ஏதோ ஆபத்து வரும் என்றார்கள்.  அதனால்,  என்  புத்தி  மழுங்குவதற்கு  முன்,  ராமா,  நீ  முடி  சூட்டிக்கொள். மனித புத்தி சஞ்சலமானது, தெரிந்ததே.

****

அத்தியாயம் 69 அயோத்யா காண்டம் (பரதன் கண்ட கெட்ட கனவு)

 (ஜானகிகிருஷ்ணன்.காம் வெப்சைட்டிலிருந்து சுருக்கித் தந்துள்ளேன்)

தூதர்கள் அந்த நகரத்தில் நுழைந்த அதே இரவு பரதன் ஒரு கெட்ட கனவைக் கண்டான். அந்த கெட்ட கனவைக் கண்டு மிகவும் பரிதவித்தான். நண்பர்கள், அவனுடைய தாபத்தைக் கண்டு வினோதமாக பேசியும், கதையளந்தும், அவன் மனத்துயரை மாற்ற முயன்றனர்.  ஒரு நண்பன், ஏன் இந்த விளையாட்டுகளில் உன் மனம் செல்லவில்லை? சந்தோஷமாக இல்லையே என்று வினவினான். அவனுக்கு பரதன் பதில் சொன்னான். கேள். என்ன காரணத்தினாலோ என் மனம் அலை பாய்கிறது. .

கனவில்  என் தந்தையைக் கண்டேன். ஒரே அழுக்காக, தலையை விரித்துக் கொண்டு, மலையுச்சியிலிருந்து விழுவது போலக் கண்டேன். விழுந்த இடம் ஒரே அழுக்கு, சாணி நிரம்பிய பள்ளம். அதிலிருந்து வெளி வர நீந்திக் கொண்டிருந்தார். ஏதோ அடிக்கடி சிரிப்பது போலவும் இருந்தது. கைகளை குவித்து தண்ணீர் குடிப்பது போல இருந்தது. பார்த்தால் எண்ணெய். எள் அன்னம் சாப்பிட்டு விட்டு, திரும்பத் திரும்ப தலை கீழாக எண்ணெயில் மூழ்கியவராக, உடலெங்கும் எண்ணெய் பூசிக் கொண்டவராகவும் கண்டேன்.

கனவில் (ஸ்வப்னத்தில்) சமுத்திரம் வற்றிக் கிடக்கிறது. சந்திரன் பூமியில் விழுந்து கிடக்கிறான். பூமியை ஏதோ வாட்டுகிறது. இருட்டு சூழ்ந்து கிடக்கிறது. பட்டத்து யானையின் தந்தம் உடைந்து காணப்பட்டது. கொழுந்து விட்டெரிந்த நெருப்பு திடுமென அணைந்தது. பூமி கீழிறங்கி இருந்தது, மரங்கள் பலவும் வாடி சுருங்கி இருந்தன. மலைகளை, புகை மண்டியதாக அடிபட்டதாகக் கண்டேன். கரும் நிறமுடைய பெண்கள் அரசனைச் சுற்றி, கரு நிற ஆடையணிந்து, அரசன் கறுத்த ஆசனத்தில் அமர்ந்திருக்க சிரிக்கின்றனர். சிவந்த மாலையணிந்து வேகமாக உடல் பூராவும் ஏதோ பூசிக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றார். ராக்ஷஸி ஒருவள், கோரமான முகம் உடையவள், அரசனைப் பிடிப்பது போல ஓடுகிறாள். இந்த பயங்கரமான கனவில் (ஸ்வப்னம்) இன்று கண்டேன். நானோ, ராமனோ, லக்ஷ்மணனோ இறக்கப் போகிறோம்.

கர என்ற கோவேறு கழுதை பூட்டிய வண்டியில் போவது போல எந்த மனிதன் கனவில் காண்கிறானோ, அந்த மனிதன் சீக்கிரமே மரணமடைவான். இதனால் தான் நான் வருத்தமாக இருக்கிறேன்.”

****

கம்பராமாயணத்திலிருந்து

சுந்தர காண்டம் திரிசடை கனவு

காட்சிப்படலம்  

திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)

HANUMAN SEARCHING RAVANA’S PALACE FOR SITA

நீ தூங்குவதில்லை ; ஆகையால் உனக்கு கனவுகள் வருவதில்லை நான் தூங்கியபோது கண்ட கனவினக் கூறுகிறேன் கேள்

5214.  துயிலலை ஆதலில் கனவு தோன்றல;

அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :

பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன

வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!

****

சிறந்த வேலேந்திய இராவணன்; பொன்முடிதொறும்

அழகிய பத்துத்  தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு;

சிவந்த ஆடையை அணிந்தவனாய்; கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற;, சேரும் இறுதியை அறியாத பெரிய தேரிலே (ஏறி) திசையை அடைந்தான்.

தெற்குத் திசை யமனுடைய திசை. இது  வேத புராண இதிகாசங்களிலும் திருக்குறளிலும் உளது. கழுதைத் தேரில் செல்வதாகக் கனவு காண்போன் இறப்பான் என்பது பரதன் கனவிலும் வருகிறது   

 5215. ‘எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்

திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்

அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்

நண்ணினன் தனெ் புலம்; நவை இல் கற்பினாய்!

To be continued…………………………..

 TAGS- ராமாயணத்தில் கனவுகள் தசரதன், பரதன், திரிசடை கண்ட கனவுகள்

Leave a comment

Leave a comment