கதாசரித் சாகரத்தை வெளியிட்ட  ஹெர்மன் ப்ரொக்கோஸ் (Post No.13,895)

Written by London Swaminathan

Post No. 13,895

Date uploaded in London – 17 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கதாசரித் சாகரத்தை வெளியிட்ட  ஹெர்மன் ப்ரொக்கோஸ்

கதைக் கடல் என்னும் கதா சரித் சாகரம் இந்தியாவின் பழங்கால நாட்டுப்புறக் கதைகளைக் கூறும் சம்ஸ்க்ருத நூலாகும். இதை ஆராய்ச்சி செய்து அதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர் ஹெர்மன் ப்ரோக்கவுஸ் என்னும் ஜெர்மானியர் ஆவார்

பழங்கால இந்தியாவின் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் நமக்குக் காட்டுவது  கதா சரித் சாகரம் நூல் ஆகும் இதே போல ஐரோப்பாவிலும் சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டுப்புற கதைகளை ஜெர்மன் மொழியில் வெளியிட்டிருந்தார்கள்; அவைகளை ஒப்பிட்டு ஆராய இவரது மொழிபெயர்ப்பு உதவி செய்தது.

HERMANN BROCKHAUS 1806- 1877

பிறந்த தேதி – 28-1-1806

 இறந்த தேதி – 5-1-1877

பிறந்த ஊர் – ஆம்ஸ்டெர்டாம்   AMSTERDAM, The Netherlands/Holland,

கல்வி கற்ற இடம்  – லைப்சிக் , கோட்டிங்கன் , பான் LEIPZIG, GOETTINGEN,

வேலைபார்த்த இடம் –லைப்சிக் பல்கலைக் கழகம்பேராசிரியர்

****

PUBLISHED WORKS

Kathâsarit-sâgara (a large collection of tales by Somadeva) and

an edition of songs by the Persian lyric poet Hafez (Lieder des Hafis).

an edition of the Vendidâd Sâde,

an edition of a philosophical drama by Krishna Mishra called Prabodhachandrodaya and

author of the influential Über den Druck sanskritischer Werke mit lateinischen Buchstaben (Concerning Sanskrit Works Printed in Latin Letters).

From 1853 he was editor of the Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft (Journal of the German Oriental Society),[3] and for a period of time was editor of the Ersch-Gruber Allgemeine Encyklopädie.

****

இவர் இப்போது ஹாலந்து நாட்டின் தலைநகராக விளங்கும் ஆம்ஸ்டெர்டாமில் பிறந்தார்; அங்கு அவருடைய தந்தை ஒரு நூல் வெளியீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். அது ஜெர்மனியில் உள்ள லைப்சிக் நகருக்கு மாற்றப்படவே அவரும் அங்கு சென்று கல்வி கற்றார். பின்னர் கோட்டிங்கன் , பான் நகரங்களிலும் கல்வியைத் தொடர்ந்தார்  இந்திய மொழிகளைக் கற்றார். ஐரோப்பிய நகரங்களிலும் ஆராய்ச்சி நடத்திவிட்டு பாடலிபுத்திரம் நகரின் தோற்றம் உபகோஸவின் வரலாறு என்ற ஆராய்ச்சியை வெளியிட்டார்; உடனே அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது ஜேனா நகரில் உதவிப் பேராசிரியராகி, பின்னர் சாகும் வரை லைப்சிக்கில் பேராசிரியர் பதவியில் இருந்தார்

லய்ப்சிக் நகரில் பிரபோத சந்த்ரோதயா  நூலை வெளியிட்டதன் மூலம் இவர் புகழ் பரவியது. அதை ஜெர்மன் லத்தீன் மொழிகளில் வெளியிட்டார் . பின்னர் சில்வஸ்டர் டே சசி வெளியிட்ட கதாசரித் சாகரத்தை முறையாக தொகுத்து வெளியிட்டார் ;அத்துடன் பஞ்ச தந்திரக் கதைகளையும் ஆராய்ந்தார்  ஆனால் இந்திய பண்டிதர்களின் உதவியை நாடாததால் அதில் தவறுகள் இருந்தன.

இந்துக்களின் – விஞ்ஞான அறிவிலும் நாட்டம் ஏற்படவே பாஸ்கராச்சார்யாவின் ALGEBRA OF BHASKARA சம்ஸ்க்ருத அல்ஜீப்ரா நூலையும் வெளியிட்டு இந்தியாவின் அபார கணித அறிவை மனமார பாராட்டினார்

கங்காதாஸரின் சந்தோமஞ்சரி நூலும் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தது எழுத்து விஷயத்தில் ஒரு புரட்சி செய்தார் ;சம்ஸ்க்ருத தேவநாகரி லிபிக்குப் பதிலாக லத்தீன் மொழியில் ஸம்ஸ்க்ருதத்தை எழுதினார். அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுதும் எல்லோரும் லத்தீன் மொழியைக் கற்றாக வேண்டும்

பாரசீக மொழியிலும் இவருக்கு பாண்டித்தியம் உண்டு; இதனால் ஜொராஸ்டரின் வென்டிடாட் பாரசீக கவிஞர் ஹபிஸ் ஆகியோரின் நூல்களையும் முறையாகத் தொகுத்து– அதாவது எடிட் செய்து வெளியிட்டார்.

நாட்டுப்புறவியலுக்கு இவர் செய்த தொண்டு மகத்தானது .

–சுபம் Subham—

Tags- வென்டிடாட், பாரசீக கவிஞர், ஹபிஸ், கதைக் கடல், கதா சரித் சாகரம்ஹெர்மன் ப்ரொக்கோஸ், HERMANN BROCKHAUS .

Leave a comment

Leave a comment