தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு? (Post No.13,900)

Written by London Swaminathan

Post No. 13,900

Date uploaded in London – 18 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு?

PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM ,LAUSANNE, SWITZERLAND

நீண்ட காலமாக  மனதில் இருந்த ஒரு கருத்தினைச் சொல்வதற்கு 17-11-2024 நாளன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. மதுரை திட்டம் (PROJECT MADURAI) ப்ராஜெக்ட் மதுரை என்ற வெப்சைட்டினை அறியாத தமிழர் இருக்க முடியாது ; அதை நிறுவி இன்றுவரை அதில் நீடித்துப் பணியாற்றும், சுவிட்சர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகப் பணியாற்றும், டாக்டர் கே கல்யாண சுந்தரத்தை பேட்டி கொடுக்க அழைத்திருந்தோம். அப்போது தமிழ் இலக்கிய நோபல் பரிசு பெறுவதற்கு உள்ள ஒரே அமைப்பு ப்ராஜெட் மதுரை என்ற ஞானமயம் குழுவினரின் ஏகோபித்த முடிவினையும் தெரிவித்தோம். இந்தக் குழுவில் 130- க்கும் மேலான தமிழ் நூல்களை எழுதிய பெங்களூரு நாகராஜன்,  135- க்கும் மேலான தமிழ், ஆங்கில நூல்களை எழுதிய லண்டன் ச சுவாமி நாதன் போன்றோர் அடக்கம்.

ஒருவரையோ ஒரு அமைப்பினையோ இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தால் அதற்கு மறுக்க முடியாத காரணங்களையும் முன்வைக்க வேண்டும்.

டாகடர் கு. கல்யாண சுந்தரத்தைப் பேட்டி கண்ட போது லண்டன் சுவாமிநாதன் சொன்ன விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் தருகிறேன். முழு ஒளிபரப்பையும் பேஸ்புக்,  யு டியூபில் காணலாம்.

“உங்களை பேட்டி கொடுக்க அழைத்ததற்காக நான் இதைச் சொல்லவில்லை; உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் ப்ராஜெக்ட் மதுரை குழுவுக்குத்தான் இலக்கிய நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் சொல்லும் முக்கியக் காரணங்கள்:

1.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள்.

2).1500 நூல்களுக்கு மேல் இலவசமாக அளிக்கிறீர்கள்.

3.நூற்றுக்கணக்கனா தமிழ் ஆர்வலர்களை, தொண்டர்களை உருவாக்கி அவர்களின் படைப்புகளை உங்கள் தளத்தில் வெளியிட்டு வருகிறீகள்.

4.பணமோ புகழோ விரும்பவில்லை; பணத்தை உண்டாக்க இந்த தளத்தில் விளம்பரங்களையும் போடுவதில்லை.

5.எல்லாவற்றுக்கும் மேலாக காப்பி எடுக்க அனுமதிக்கிறீர்கள்.

6. குக்கிக்களை ஒப்புக்கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை.

****

இப்போது ஏனைய தளங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்லி விடுகிறோம் ; நேற்று வந்த யுனிவர்சிட்டி போல இல்லாமல் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக தமிழ் ஆர்வத்தில் இதைச் செய்யத் துணிந்தீர்கள்; ஏனைய தளங்கள் எல்லாம் — மன்னிக்கவும் ஒரு கொச்சையான சொற்றோடரைப் பயன் படுத்தப்போகிறேன்– அதாவது அவர்களில் பெரும்பாலோர் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளிகளால்  செய்யப்படுகிறது; சிலப்பதிகாரத்தை டைப் செய்யும் போது மாத சம்பளம் கிடைக்கவில்லை என்றால் சிலப்பதிகாரம் முழுமை பெறாது!!

மேலும் பல இடங்களில் குக்கிக்களை ஒப்புக்கொள் என்று நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள்; இது நமது PRIVACY, பிரைவசி-யில் தலையிடும் விஷயம். ப்ராஜெக்ட் மதுரை அதைச் செய்யவில்லை.

மேலும் பலர் விளம்பரங்களை போட்டு காசு சம்பாதிக்கிறார்கள் அதை ப்ராஜெக்ட் மதுரை செய்யவில்லை.

பலர் தங்கள் பணிகளை காப்பி செய்ய அனுமதிப்பதில்லை இத் தனைக்கும் தமிழ் இலக்கியம் எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தங்கள் சொந்த சொத்துக்களாக நினைக்கிறார்கள்.

உங்களைப்போல இவ்வளவு நூல்களை யாரும் கொடுக்காவில்லை; முன்னர் சொன்னது போல கூலிக்கு மாரடிக்கும்அதாவது சம்பளம் வாங்கிக்கொண்டு செயல்படும் நிறுவனங்கள் வேண்டுமானால் அப்படி அளிக்க முடியும்.

மேலும் பல வெப்சைட்டுகள் பாதியில் ERROR / பிழை என்று துண்டிக்கப்படுகிறது; அதையும் உங்கள் தளத்தில் காணவில்லை.

பலரும் சென்ற இடமெல்லாம் தங்கள் அமைப்பின் பெயரைச் சொல்லி தமிழுக்குச் சேவை செய்வதாக தம்பட்டம் அடித்து வருகிறார்கள் ; தமிழை விட்டு விட்டு அவர்களுடைய படங்களை போட்டு வருகிறர்கள் ;உங்கள் அமைப்போ தொண்டர்களோ அப்படிச் செய்யவில்லை .

உங்களுக்கு இணையாக ஒருவரை மட்டுமே என்னால் ஒப்பிட முடியும் பட்டத்துக்கோ, பணத்துக்கோ, புகழுக்கோ ஆசைப்படாமல் ஊர் ஊறாகச் சென்று தமிழ் வளர்த்த உவே சாமிநாத அய்யர் போல உங்கள் குழு வேலை செய்கிறது; இன்னபிற காரணங்களால் உங்களுக்கே ,உங்கள் அமைப்புக்கே இலக்கிய நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று எங்கள் குழு விரும்புகிறது.

****

பேட்டியின் போது  டாக்டர் கல்யாண சுந்தரம் அளித்த பதிலின் (முழு விவரங்களையும் பேஸ்புக், யூ ட்யூப்-பில் காண்க)

சுருக்கம் பின்வருமாறு:

36 ஆண்டுகளாக இந்தப்பணி நடக்கிறது நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இந்தப் பணியைச் செய்கின்றனர் , மாதத்துக்கு  முப்பதாயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் புகழையோ, அங்கீகாரத்தையோ விரும்பி நடக்கும் பணி அல்ல இது. பலரைச் சந்திக்கும்போது அவர்களே பாராட்டுகிறார்கள் அமெரிக்காவிலுல்ள டாக்டர் ஹார்ட்டின் மனைவி திருமதி கெளசல்யா ஹார்ட் போன்றோர் பாராட்டினர்.

எதிர்காலத்தில் சிற்றிலக்கியங்களான  பிரபந்தங்கள், கலம்பகங்கள் ஆகியவற்றையும் தளத்தில் ஏற்ற ஆசை. இந்தப் பணியில் ஈடுபட எல்லோரையும் வரவேற்கிறேன். 

****

லண்டன் சுவாமிநாதன் கேட்ட கேள்விகள்:–

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஞான மயம் ஒளிபரப்பில் பேசினீர்கள்; இப்போது ப்ராஜெக்ட் மதுரை பற்றிய புதிய செய்திகள் என்ன ?

நீங்கள் படித்ததோ  ரசாயன இயல்; டாக்டர் பட்டம் வாங்கியதும் அதில் தான்; விஞ்ஞானியான உங்களுக்குத் தமிழில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

யார் யாரையோ அழைத்து உலகத் தமிழ் மகாநாடு நடத்தி மேடையில் ஏற்றி பொன்னாடை போர்த்துகிறார்களே; அப்படி உங்களுக்குத் பாராட்டுக்கள் ,அங்கீகாரம் கிடைத்ததா ?

இப்படிப்பட்ட பணியில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன ?

****

டாக்டர் கல்யாண சுந்தரம் மிகவும் பணிவுடன் பதில் கொடுக்கையில் துவக்க காலத்தில் உதவியோரின் பெயர்களைச் சொல்லி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்; எதிர்காலக் கனவுகளையும் முன்வைத்தார் .

குக்கி COOKKIES இல்லாமல், விளம்பரம் இல்லாமல், இடையில் ERROR கிராஷ் ஆகாமல், காப்பி எடுக்க அனுமதிக்கும் ப்ராஜெக்ட் மதுரை நூல்களை அனைவரும் பயன்  படுத்திப் பயன்  பெறவேண்டும் என்று ஞானமயம் குழு அன்புடன் வேண்டுகிறது.

–subham—

PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM LAUSANNE, SWITZERLAND, தமிழில், இலக்கிய நோபல் பரிசு, யாருக்கு? , ஞானமயம், தமிழ் ,டாக்டர் கல்யாணசுந்தரம், ப்ராஜெக்ட் மதுரை

Leave a comment

1 Comment

  1. santhanam nagarajan's avatar

    santhanam nagarajan

     /  November 18, 2024

    அருமையான பேட்டி. திரு கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வளமுடன் நீடு வாழ்க

Leave a comment