அன்னை முதற்றே உலகு- 2 (Post No.13,903)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.903

Date uploaded in London – –19 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது. 

அன்னை முதற்றே உலகு- 2 

  ஸ்ரீஅன்னையின் பிரார்த்தனையும் தியானமும்                        

 —————————————————————————– 

இராதையின் பிரார்த்தனை

     முதலில் கண்டவுடனே எனது பிரபுவும், எனது இறைவனும் நீரே என்று அறியாயும்படியாயுள்ள ஒருவரே, இதோ எனது சமர்ப்பணத்தை,  ஏற்றருளும்.

     எனது எண்ணங்களெல்லாம், எனது மெய்ப்பாடுகளெல்லாம், எனது இதயத்தின் ஆசாபாசங்களெல்லாம், எனது உணர்வெல்லாம், என் வாழ்வின் இயக்கங்கள் அனைத்தும், என்னுடலில் ஒவ்வொரு அணுவும், என் உதிரத்தில் ஒவ்வொரு துளியும் நின்னதே. பரிபூரணமாகவும் எவ்வித மறைப்புமின்றி உமக்கே நான் உரிமையானேன். நீர் எதை விரும்புவீரோ, அவ்வாறே நானாவேன். வாழ்வாயினும், சாவாயினும், இன்பமாயினும், துன்பமாயினும், சந்தோஷமாயினும்,கஷ்டமாயினும், எனக்காக நீர் எதைத் தேர்ந்தெடுப்பீரோ, அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளுதற்கு இனியனவே. நினது ஒவ்வொரு பரிசும் எனக்கு மிக மேலாம் வளங்கொணரும் தெய்வீகப் பரிசாகும்.

திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்

     எந்த அரசாலும் கையாளப்படமுடியாத ஒரு சக்தி இருக்கிறது, இப்புவியின் எந்த வெற்றியாலும் அளிக்கமுடியா ஒரு உலகம் இருக்கிறது, இங்குள்ள எந்த அறிவாலும் எட்டமுடியா ஒரு மெய்ஞான ஒளி இருக்கிறது, எந்த தத்துவ சாஸ்திரமும் கண்டிராத ஒரு வித்தை இருக்கிறது, எந்த ஆசையின் திருப்திகரத்தாலும் உண்டாகாத ஓர் பரமானந்தம் இருக்கிறது, எந்த மானுட உறவாலும் தணிக்கமுடியா ஓர் பிரேமை இருக்கிறது, வேறெங்குமில்லாத, மரணத்திலும் கூட கிட்டாத ஓர் சாந்தி இருக்கிறது.

     தவம், சுகம், மெய்ஞ்ஞான ஒளி, வித்யை, பேரின்பக்களி, பிரேமை, சாந்தி இவையே திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்.

நின் மலரடிக்கு வணக்கம்

    பிரபோ, நினை வேண்டி, நினை நாடுகிறேன். நின் அனந்த பிரேமைக்கு என் இதயம் ஏற்ற பாத்திரம் ஆகும் பொருட்டே விசாலமாய் திறப்பட்டு அது நின் மலரடி வணங்குகிறது.

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது. அச்சமற்றவனுக்கே வெற்றி; எப்போதும் நான் உனக்கு உறுதுணையாயிருந்து ரக்ஷ¢க்கிறேன்.ஒரு போதும் பயப்படக் கூடாது. நீ தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்க வேண்டும்.ஆபத்து ஏதாவது ஏற்படின் என்னை உதவிக்குக் கூப்பிடும் சக்தி உனக்கு வேண்டும்.அதனால் பயங்கரக் கனவுகள் மாயமாய் மறையும்.

எது தேவையோ அதை அருள்வாயாக!

நாம் வற்புறுத்திப் பிடிவாதம் செய்வோமாயின் நம் அறிவில் தெளிவை உண்டாக்கவும், நம் தவறை நாம் உணரவும், மெய்ப்பொருள் தர்மத்தை ஒவ்வ நாம் ஆசை வைத்ததில் எல்லாம் தேவையைக் காண்பதரிது என்பதை நாம் தெளியுமாறு நாம் விரும்புவதை பரமன் நமக்கு அருளவும் கூடும். பொதுவாக பரமன் நம் பொருட்டு கருணை கூர்ந்ததன் விளைவாய் நமக்கு நன்மை பயப்பதற்கு மாறாய் கேடே விளைகிறது. அது சமயம் பரமன் எதற்காக தீமை பயக்கும் வரத்தை அருளினான் என்று அவனை எதிர்த்துக் கேட்கிறோம். நாம் ஆசைப்பட்டதையே அநுக்கிரகம் செய்தான் என்பதை அடியோடு மறந்து விடுகிறோம். இதற்கு மாறாக நாம் ஆசைப்பட்ட பொருளை பரமன் அருளாவிட்டாலோ, ஏன் நான் கேட்டது அது தானே? அது எனக்கு அவசியமாயிற்றே! அது எனக்குக் கிடைக்கவில்லையே! என்றெல்லாம் சொல்லி, பரமனை எதிர்த்து விரோதித்துக் கொள்கிறோம். பரமன் எதைச் செய்த போதிலும்  அவனை எப்போதும் நாம் எதிர்க்கிறோம். இவற்றிற்கெல்லாம் மாறாக, நம்முள் மெய் -வேட்கை இயல்பாக உண்டாயின், அதுவே ஒரு தீவிர தேவை ஆய்விடின், நாம் எதை நம் இருக்கையின் உண்மையெனக் கருதுகிறோமோ அதை காண நம்முள் ஓர் கனியும் ஆர்வம் இருப்பின், அது தான் அனைத்திற்கும் மூலம், பரம சுகம். நாம் தேடி அலைவதற்கெல்லாம் முடிவு, பிரச்சினைகளுக்கெல்லாம் உத்தரம்.

நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

***

Leave a comment

Leave a comment