ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி (Post No.13,904)

Written by London Swaminathan

Post No. 13,904

Date uploaded in London – 19 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முத்துக்களையும் மிளகையும் தமிழர்கள் ஏற்றுமதி செய்து இதாலியிலிருந்து தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்தனர் . இதனால் ரோமாபுரியின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதாக அந்தக் கால இத்தாலிய அரசியல்வாதிகள் புலம்பித் தள்ளினர்.

முத்து, மிளகு ஏற்றுமதி

ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் முத்துக்கள் குறித்தும் இந்தியர்கள் குறித்தும் நிறைய செய்திகள் உள்ளன. அனால் ஷேக்ஸ்பியர் இந்தியர்களின் எதிரி. இது தெரிந்தால் இந்தியாவில் முன்னூறு ஆண்டு ஆங்கில  ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதி அவர் இந்தியர் என்று சொன்னது மேற்கிந்தியத்தீவுகளின் கருப்பர்கள் என்று பொய்யுரை பரப்பினர்.

முத்துக்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மன்னர் வளைகுடாவிலிருந்து எடுப்பபட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பாரசீக வளைகுடாவில் முத்துக்கள் கிடைத்தாலும் அதை  எடுத்ததாக வரலாற்றுச் செய்திகள் கிடையாது.

உலகப் பேரழகி கிளியோபாட்றா மதுபானத்தில் முத்துக்களைக் கரைத்துக் குடித்தது உலகறிந்த செய்தி.

அகஸ்டஸ் சீசர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தை வென்றார். அங்கு டாலமி வம்ச அரசர்கள் சேகரித்த அத்தனை பொக்கிஷங்களையும் ரோமாபுரிக்கு கொண்டு சென்றார். பாம்பி என்ற மன்னனும் ரோமாபுரிக்கு நிறைய செல்வத்தைக் கொணர்ந்தான் ; இதனால் முத்துக்களின் மோகம் அதிகரித்தது.

ஸ்டராபோ என்ற கிரேக்க எழுத்தர் எழுதிய குறிப்பில் 120 கப்பல்கள் ஒரே நாளில் இந்தியாவை நோக்கிச் சென்றதை தான் கண்டதாக எழுதிவைத்துள்                                                  ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு ஏற்றுமதி, முது ஏற்றுமதி பற்றி சங்க இலக்கியத்திலும் சம்ஸ்க்ருத இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன .

சங்க இலக்கியத்தில் யவனர்கள் பற்றிய குறிப்புகள் குறைந்தது ஆறு இடங்களில் வருகிறது ;அலெக்ஸ்சாண்டர் படையெடுத்தபோது  இந்தச் சொல்லை கிரேக்கர்களுக்குப் பயன்படுத்தினர். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரையில்  இது ரோமானியர்களையே குறித்தது . கடந்த  400 ஆண்டுகளாக இது அராபிய வியாபாரிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது அப் போது யவனர் என்பதை யோனர் என்று சொன்னார்கள்.

இத்தாலியில் ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு விலையுயர்ந்த முத்தினை விழுங்கிய செய்தியும்  உள்ளது.

ரோமானிய பிரபுக்களின் பெண்கள் முத்து மாலைகளுக்குச் செலவிடும் பணத்தால் ரோமானிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது அவர்கள் தங்கக் கட்டிகளை தமிழ் நாட்டுக்கு அனுப்பி முத்துக்களையும் மிளகினையும் ஏற்றிச் சென்றனர். இதனை சங்கத் தமிழ்ப்   புலவர்களும் பாடியுள்ளனர்.

எகிப்தில் பெர்னிக்கே என்ற இடத்தில் ஜாடிகளில் மிளகு கண்டுபிடிக்கப்பட்டது எகிப்திலுள்ள இந்தத் துறைமுகத்தில் பத்து கிலோ மிளகு ஜாடிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஆங்கிலத்தில் மிளகினை பெப்பர் PEPPER , BLACK PEPPER என்பார்கள்; இது பிப்பலி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தது ; தமிழ் தெரியாத ஒருவர் இதைத் தமிழ்ச் சொல் என்று தவறாக எழுதினார். பிப்பலி என்பது தமிழ்ச் சொல் என்று அவர் கருதினார் ; சங்க இலக்கியத்திலோ தற்காலத்திலோ இப்படி ஒரு தமிழ்ச் சொல் கிடையாது .சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆனந்த விகடன் அகராதியிலும் கூட பிப்பலி என்பது திப்பிலி என்ற மருந்துச் சரக்கு என்றே கூறுகிறது அதுவும் சங்க இலக்கியத்தில் இல்லாத சொல்லே.

முத்து என்பதை பேர்ல் PEARL என்று ஆங்கிலத்தில் விளம்புவர் ;அது பரல் என்ற தமிழ்ச் சொல்லின் மருவு. அதையும் ஆங்கிலயர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை அது ஏதோ ஒரு லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கதை அளபார்கள். காரணம் என்னவெனில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையதே. அதற்கு முன்னால் அவர்களால் பார்க்க முடியாது  

இப்போது மிளகு கிடைப்பது போல முதல் நூற்றாண்டிலேயே ரோமாபுரியில் மிளகு கிடைத்தது  அபிஷியஸ் என்பவர் ஒருவர் Eighty percent of the 478 recipes  included in the Roman cook book of Apicius அந்தக் காலத்தில் சமையல் புஸ்தகம் எழுதினார் அதிலுள்ள 478 சமையல் குறிப்புகளில் எண்பது சதவிகித உணவுப் பண்டங்களில் மிளகினை சேர்த்து இருக்கிறார்கள்  அதே காலத்தில் ஸ்பெயின் நாட்டில் மார்டியல் Spanish poet Martial  என்ற புலவர் இருந்தார். அவர் பாடிய பாடலில் “அடக் கடவுளே எனது சமையல்காரன் எனக்குத் தயாரிக்கும் உணவில் சேர்க்கும் மிளகின் அளவினைப் பார்த்தால் அதை விலைக்கு வாங்குவதிலேயே என்னை போண்டி ஆக்கி விடுவான்- திவால் ஆக்கி விடுவான் — போல இருக்கிறதே என்றும் புலம்பியுள்ளார்.

****

Baveru Jataka Story

அரி/சிங்கம், கரி/யானை, புலி, கிளி, மயில்

தமிழர்கள் இஞ்சி GINGER IVORY ROMAN KARUR BR DR R NAGASWAMY தந்தம் ஆகியவற்றையும் தேக்கு மரத்தையும் ஏற்றுமதி செய்தார்கள் ; பாபிலோனில் ஊர் Ur என்னும் மிகப் புராதன நகரில் தேக்கு மரத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்தன.

ஜிஞ்சர் என்ற ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகவும் அது தமிழ் அல்லது ஸ்ருங்கிவேர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து கிரேக்க மொழியில் நுழைந்திருக்கலாம் என்றும் எழுதினர். ஆனால் தமிழ் நாட்டில் இஞ்சி விளைவதால் அதைத் தமிழ்ச் சொல் என்றே கருதவேண்டும் இதற்கு எடுத்துக்காட்டாக மிளகுத் தண்ணீர் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில அகராதிகளில் நுழைந்ததைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நூற்றுக்ககணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்கக் காசுகளும் தாமிரக் காசுகளும் கிடைத்ததை உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் இரா நாகசாமி ரோமன் கரூர் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார் இதனால் சங்க கால பர ணர் போன்றோரின் காலமும் உறுதி செய்யப்பட்டதை அவர் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள கரூரின் ரோமானியத் தொடர்புகளையும் டாக்டர் இரா. நாகசாமி விளக்கியுள்ளார்

ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் பிரபுக்கள், உயர்மட்ட தலைவர்கள் இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிவார்கள்; அவர்களுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் தாவர பிராணிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாயத்தை ஏற்றி அனுப்பியதையும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்

பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் எகிப்து, பாரசீகம் ரோமானிய சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு அனுப்பியதற்கான சான்றுகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிடைக்கின்றன. இந்துக்களுக்குப் பருவக்காற்று ரகசியம் தெரிந்து இருந்ததால் குறிப்பிட்ட நாளில்  பாயமரத்தை விரித்தால் காலணாக் காசு செலவில்லாமல் உலகம் முழுதும் சுற்றி வந்தனர். இந்த விவரம் மகாவம்ச நூலிலும் உளது.

ஹெரோடோடஸ், அரிஸ்டாடில் ஆகியோர் எழுதியவற்றிலிருந்து மூவாயிரம் ஆண்டுத் தகவல் கிடைக்கிறது.

பாம்பும் மயிலும்

இந்தியாவிலிருந்து பாம்பு, மயில், கிளி, புலி, சிங்கம், யானை ஆகியன கப்பலில் சென்றன; இந்தியாவிலிருந்து வந்த ஒன்பது அடி நீள பாம்பினை எகிப்தில் கண்டதாக ஸ்டராபோ எழுதியிருக்கிறார்

வார்மிங்க்டன், மக்  கிரிண்டில் ஆகியோர் எழுதிய நூல்க ளில் வேட்டை நாய் , குரங்கு, யானை ஏற்றுமதி பற்றியும் உளது; ஜாதக கதைகளிலே– அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரே—- மயில், கிளி ஏற்றுமதி பற்றிய குறிப்பு உளது. மயிலைக் கொண்டு சென்று பாபிலோனிய அரண்மனையில் நிறுத்தி உறுமி மேளம் வாசித்தபோது மயில்கள் மேக கர்ஜனை என்று கருதி ஆடின. அதைக் கண்டு அசந்தே போயினர் பாபிலோனிய மன்னர்களும் பொது மக்களும்.

சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மத்தியக் கிழக்கில் இருக்கும் கல்வெட்டும் கிடைத்துள்ளது

ஆப்பிரிக்காவில் யானைகள் இருந்தபோதும் எகிப்திலோ வேறு எங்குமோ யானைகள் பற்றிய குறிப்புகளே இல்லை. ஆனால் இந்திய மாவுத்தர்கள் யானை மொழியை உண்டாக்கி கஜ சாஸ்திரம் என்று புஸ்தகமே எழுதிவிட்டனர். அலெக்ஸ்சாண்டர் படை எடுப்பின்போதுதான் அவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்து வியந்தது போலப் பார்த்து பிரமித்து நின்றனர். ஹனிபால் காலத்திலிருந்து யானைகள் ஐரோப்பாவில் காணப்படுகின்றன.

ரோமாபுரியில் மிகப்பெரிய கொடுமை நடந்தது; அதற்கு இந்தியாவிலிருந்து வந்த சிங்கங்களையும் புலியையும் பயன்படுத்தினர்; எதிரிகளை கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்; அவர்களையும் மிருகங்களையும் கூண்டுக்குள் வைத்து பிரம்மாண்டமான திடலில் மோத விடுவார்கள் .உயரமான இடத்திலிருந்து பாதுகாப்புடன் அதைக் கண்டு ஆனந்திப்பார்கள்; புலியும் சிங்கமும் மனிதனைக் குதறுவதைக் கண்டு கூச்சலிட்டு மகிழ்ந்தார்கள் இதற்கு இந்திய மிருகங்களைப் பயன்படுத்தினர் அந்த மனித மிருகங்கள்!!!

அகஸ்டஸ் போன்றார் புலி சிங்கத்தைக் கண்டு வியந்த செய்திகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள்

அரியும் கரியும் புலியும் கிளியும் இந்தியாவின் புகழை மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பரப்பிய விஷயங்களை ஒரு புஸ்தகம் முழுதும் எழுதலாம் .

****

Augustus (born September 23, 63 BCE—died August 19, 14 CE Nola, near Naples [Italy]) was the first Roman emperor.

அகஸ்டஸ் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. ஜுவலியஸ் சீசரைப் படு கொலை செய்தவர்களைப் பழிவாங்கினார். அவரது சபைக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தூதர்களை அனுப்பியதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

****

Strabo (born c. 64 BCE Amaseia, Pontus—died after 21 CE

ஸ்டராபோ என்பவர் கிரேக்க நாட்டு வரலாற்று புவியியல் அறிஞர்

***

Herodotus (born 484 BCE? Greek author of the first great narrative history produced in the ancient world,

ஹெரோடோட்டஸ் — கிரேக்க வரலாற்று ஆசிரியர் ; நமது புராணத்தில் சொன்ன வரலாற்றை நமபாத அரை வேக்காடுகள் இவரை வரலாற்றின் தந்தை என்று அழைக்கும்!!!

****.

Hannibal 247 BCE – between 183 and 181 BCE) கார்தேஜ் படைத்த தளபதியான ஹனிபால் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று ரோமுடன் சண்டை போட்டார்

—SUBHAM —

TAGS- முத்து, மிளகு, ஏற்றுமதி அரி ,சிங்கம் ,கரி ,யானை, அரி – சிங்கம் ,கரி, யானை ,புலி கிளி மயில்

Leave a comment

Leave a comment