ராமாயணத்தில் வரங்கள் (19) சதி அனசூயை சீதைக்கு வரம் அளிக்க முன் வந்தது! (Post No.13,906)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.906

Date uploaded in London – –20 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (19) 

ராமாயணத்தில் வரங்கள் (19) சதி அனசூயை சீதைக்கு வரம் அளிக்க முன் வந்தது!

ச. நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் நூற்றுப்பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ சீதைக்கு ஆபரணம் முதலியவற்றை அளித்தல்’ என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமர் சீதையுடனும் லக்ஷ்மணருடனும் கிளம்பிச் சென்று நேராக அத்ரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.

அத்ரி  முனிவரை ராமர் பணியவே அவரைத் தன் புதல்வன் எனவே ஏற்றுக் கொண்டார்

அத்ரி மஹரிஷி.

அத்ரி மஹரிஷியின் மனைவியான பதிவிரதை அனசூயை சீதையை வரவேற்று உபசரித்து பதிவிரதா தர்மத்தைப் பற்றிப் பேசலானார்.

சீதை, “சாவித்ரி தேவி பதி சுச்ருஷையைச் செய்து ஸ்வர்க்க லோகத்தில் கொண்டாடப்படுகிறாள். ரோஹிணி ஆகாயத்தில் சந்திர பகவானை விட்டு ஒரு நிமிடம் கூட அகல்வதில்லை. இத்தகைய உத்தம மாதர்கள் தங்கள் புண்ய செயலால் நன்கு மதிக்கப்படுகின்றனர்” என்று இவ்வாறு அனசூயையிடம் கூறவே அதனால் அனசூயை வெகு சந்தோஷமடைந்து சீதையை இன்னும் அதிகமாய் உற்சாகப்படுத்துபவளாய் உச்சி முகர்ந்து பேசினாள் இப்படி:

நியமைர்விவிதைராப்தம் தபோ ஹி மஹதஸ்தி மே |

தத்சம்ஸ்ரித்ய பலம் சீதே சந்தயே த்வாம் சுசிஸ்மிதே ||

சீதே – சீதே

விவிதை: – எத்தனையோ விதங்களான

நியமை: – நியமங்களால்

ஆப்தம் – கிடைத்த

மஹத் – மஹத்தான

தப: தவ மஹிமை

மே அஸ்தி – எனக்கு இருக்கிறது

சுசிஸ்மிதே – கபடமற்ற புன்னகையுள்ள பெண்மணியே!

தத் பலம் – அந்த தவத்தின் திறத்தை

சம்ஸ்த்ரித்ய ஹி – கைப்பற்றி இருப்பதால்

த்வாம் – உன்னை

சந்தயே  – வேண்டியதைக் கேள் என்கிறேன்

உபபன்னம் ச யுக்தம் ச வசனம் தவ மைதிலி |

ப்ரீதா சாஸ்ம்புசித்தம் கிம் தே கரவாணி வ்ரவீஹி மே ||

அயோத்யா காண்டம் 118-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14 & 15

மைதிலி – மைதிலி

தவ வசனம் – உனது சொல்

உபபன்னம் ச – ஏற்றதாயும்

யுக்தம் ச – சரியானதாகவும் இருக்கிறது

ச – ஆகையால்

ப்ரீதா – மனம் மகிழ்ந்தவளாக

அஸ்மி – இருக்கிறேன்

தே – உனக்கு

உசிதம் – இஷ்டமானது

கிம் – யாதோ அதை

கரவாணி – செய்வேன்

மே வ்ரவீஹி – எனக்குச் சொல்வாயாக

இவ்வாறு அனசூயை சீதையின் சொற்களால் மனம் மிக மகிழ்ந்து வேண்டியதைக் கேள் தருகிறேன் என்கிறாள்;.

ஆனால் சீதையோ எனக்கு வேண்டியது யாதொன்றுமில்லை என்று பதில் உரைக்கிறாள்.

 இதனால் இன்னும் அதிக சந்தோஷமடைந்த அனசூயை மாலை, வஸ்திரம், ஆபரணங்கள், வாசனை திரவியங்கள், வெள்ளை சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அனைத்தையும் அன்புடன் சீதைக்கு மனமுவந்து வழங்குகிறாள்.

அவற்றை சீதை ஏற்கிறாள்.

இங்கு அனசூயை தனது தவ மஹிமையால் வரம் தருகிறேன் என்று கூறிய போதும் அதை சீதை ஏற்கவில்லை.

ஆனால் அன்புடன் கொடுக்கப்பட்ட வஸ்திரம், ஆபரணம் உள்ளிட்டவற்றை ஏற்கிறாள்.

***

Leave a comment

Leave a comment