Post No. 13,912
Date uploaded in London – 21 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாய் மீது கவிதை
பரதனுக்கு கேகய நாட்டு மன்னன் நிறைய தங்கம், ரத்தினம் யானை, குதிரைகளை அளித்ததோடு மிகப்பெரிய நாய்களையும் பரிசளித்தான் என்று வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. அந்த நாய்கள் அரண்மனை வாசலுக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாம்!
இதே போல தமிழ்நாட்டில் ராஜபாளையம் நாய்களும் மிகவும் பிரசித்தம், வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுவதையும் அவை மான் கூட்டத்தைக் கலைத்து விரட்டும் அளவுக்கு வேகமாகச் செல்லக் கூடியவை என்றும் சங்க இலக்கியப்பாடல்கள் பாடுகின்றன.
பெர்னிக்கே என்பது எகிப்திய துறைமுகம். அங்கு டன் கணக்கில் இந்திய பொருட்கள் கிடைத்தன அவைகளில் முத்துக்கள், இரத்தின மணிகள், யானைகள், இந்தியக் குரங்குகளின் எலும்புகள், தேக்கு, பருத்தித் துணிகள் முதலியன அடங்கும். தமிழன் ஒருவன் பிராமி லிபியில் தமிழ் தலைவன் கொற்றன் என்று எழுதியுள்ளான் பிராகிருத மொழியில் ஏனைய தென்னிந்தியர்கள் பெயர்கள் காணப்படுகின்றன
பாபிலோனைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் இந்திய வேட்டை நாய்களை ( Indian hounds) வளர்த்தார்கள் என்று ஹெரடோட்டஸ் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார். கடேசியஸ் (Ctesias) என்பவரும் இதைக் கவனித்து பாரசீகர்கள் இந்திய நாய்களை வளர்த்தத்தைக் கூறுகிறார். இவை கேகய நாட்டிலிருந்து ஈரான்/ பாரசீகம் வரை சென்றிருக்கலாம்.
கடேசியஸ் என்பவர் கிரேக்க நாட்டு டாக்டர் அவர் பாரசீக மன்னனிடம் பணிபுரிந்தவர். இந்தியா பற்றியும் எழுதியுள்ளார்
டாலமி பிலடெல்பஸ் (Ptolemy Philadelphus ) என்ற மன்னனின் பரிவாரத்தில் இந்திய வேட்டை நாய்களும் இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
பப்பைரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகள் கிடைத்துள்ளன அவை 2300 ஆண்டுகள் பழமையுடையவை; அதில் ஒரு நாய் அவரது எஜமானர் காட்டுப்பன்றியை வேட்டை ஆடியபோது அவரைக் காப்பாற்றுவதற்குத் தன்னுயிரை கொடுத்தது இதனால் அவைகளின் கல்லறை மீது இரண்டு கவிதைகள் பொறிக்கப்பட்டன.
பப்பைரஸ் என்ற புல் போன்ற தாவரத்திலிருந்து எகிப்தியர்கள் காகிதம் தயாரித்ததால் பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது
****
நாய்க்கு ஒரு கல்வெட்டு ; நாய் மீது தமிழர்கள் அன்பு
உலகத்திலேயே முதல் முதலில் நாயைக் கவிதையில் ஏற்றிய புகழ் ரிக்வேதத்துக்கு உண்டு சரம/ சரமேயஸ் என்ற நாயை ரிக்வேதம் பாடியது அதை கிரேக்கர்கள் திருடி ஹெர்மஸ் என்றனர். ஏனெனில் அவர்கள் மொழியில் ‘ச’ எழுத்து கிடையாது; இதனால்தான் சிந்துவை ஹிந்துவாக்கி நமக்கும் அந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஆனால் உலகிலேயே முதல் முதலில் நாய்க்கு கல்வெட்டு வைத்தவன் தமிழன்.
உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி எழுதிய செங்கம் நடுகற்கள் என்ற புஸ்தகத்தில் இதைச் செப்பியுள்ளார் கோவிவன் என்ற பெயருள்ள நாய்க்கு எழுப்பிய கல்வெட்டு அது
அது மாமன்னன் மஹேந்திர பல்லவன் காலத்தில் வடஆற்காடு செங்கம் வட்டாரத்தில் எடுத்தனுரில் வாழ்ந்தது. அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.624-ல் வாழ்ந்தது.
திருடர்கள் பசுமாடுகளைத் திருடிச் செல்ல வந்த பொழுது தன்னை வளர்த்த கருந்தேவக் கத்தி என்பானைக் காக்க கோவிவன் போராடியது. ஆயினும் கள்ளர்களின் தாக்குதலில் நாயும் அதை வளர்த்த எஜமானனும் இறந்துபட்டனர். இருவருக்கும் சமைத்த நடுகல் மூலம் நாம் இந்த வரலாற்றை அறிகிறோம்.
****
ஒரே நகரில் 220 கல்வெட்டுகள்
சுகோத்ரா (Socotra) என்னும் தீவு இந்து மஹாசமுத்திரத்தில் (Yemen) யேமன் நாட்டில் உள்ளது. சவுதி அரேபியா அருகில் இருக்கிறது
The Hoq Cave contains a large number of inscriptions, drawings and archaeological objects. Further investigation showed that these had been left by sailors who visited the island between the first century BCE and the sixth century CE
அங்குள்ள ஹக் குகையில் சுமார் 220 கல்வெட்டுகள் இருக்கின்றன; ஆப்பிரிக்காவை நோக்கிச் செல்லும் கப்பல் பயணிகளும் மாலுமிகளும் வியாபாரிகளும் அங்கு இறங்கி தீர்ந்து போன பொருட்களை ,பண்டங்களை நிரப்பிக் கொண்டதாகத் தெரிகிறது . அங்கு சுமார் 220 கல்வெட்டுகள் பாரசீக, அராபிய, எபிரேய , இந்திய மொழிகளில் உள்ளன. பெரும்பாலான எழுத்துக்களும் பெயர்களும் குஜராத்திகளால் விடப்பட்டுள்ளன; பிராமி லிபியில் அவை உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் அவை பொறிக்கப்பட்டன. குஜராத்தின் பாருக்கச்ச — ப்ரோச்– துறைமுகத்திலிருந்து அவர்கள் சென்றிருக்க வேண்டும் 192 கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும், பாக்ட்ரியன் கரோஷ்டி எழுத்துக்களில் ஒவ்வொன்றும் உள்ளன. கிரேக்க மொழியில் இரண்டு குறிப்புகள்தான் உள்ளன. இந்துக்கள் எந்த அளவுக்கு வியாபாரம் செய்தனர் என்பதை கல்வெட்டுகளின் அபார எண்ணிக்கை காட்டுகிறது. லத்தீன் மொழியில் ஒரு கல்வெட்டும் இல்லாததால் இந்துக்கள்தான் எகிப்துக்கும் இத்தாலிக்கும் சென்று வியாபாரம் செய்தனர் என்றும் ஊகிக்கலாம்.
அங்கு காணப்பட்ட பெயர்கள்
காஞ்ச என்ற வியாபாரியின் மகன் விஷ்ணு, , மாலுமி ஸ்கந்தபூதி, பத்ரா ஆகியோர் தங்கள் பெயர்களை பொறித்தனர்; இதைப் பார்கையில் பொரித்த இந்துக்கள் ஸ்வஸ்திகா, த்ரி சூலம் ஸ்தூபங்கள் ஆகியவற்றையும் வரைந்துள்ளனர் மூன்று பாய்மரங்கள் உள்ள கப்பல்களையும் வரைந்துள்ளதால் பெரிய கப்பல்கள் என்பது தெரிகிறது. ராதா கிருஷ்ணன் பெயரில் பிரார்த்தனையும் இருக்கிறது ; ஒரு புத்த பிட்சு, புத்தர் மீதான பிரார்த்தனையையும் விட்டுச் சென் றுள்ளார். சுக + தரா த்வீப என்பது சுகோத்ரா என்று மருவியது சுகத்தினை நல்கும் தீவு என்பது சுகோத்ரா என மாறிவிட்டது
சிரியன் கிறிஸ்தவர்கள் சிலுவைச் சின்னத்தையும் வரைந்துள்ளனர்
கடற்பயணம் சென்றோர் எவ்வளவு கடவுள் நம்பிக்கையுடன் சென்றனர் என்பதையும் சுவர் ஓவியங்களும் பிரார்த்தனைகளும் காட்டுகின்றன.
–subham—
Tags- நாய் மீது கவிதை , கோவிவன், நாய், கல்வெட்டு , Ptolemy Philadelphus Ctesias, 220 கல்வெட்டுகள், சுகோத்ரா, மத்தியக் கிழக்கு, நாடுகள் ,சுவையான