Post No. 13,917
Date uploaded in London – 22 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள் பகுதி 45
விநாயகரை வழிபடும் புராதன கோவில்களில் பிக்கவோலு Bikkavolu Vinayaka Temple) சிறப்பிடம் பெறுகிறது; காரணம் என்னவெனில் இது பழமையான பிள்ளையார் கோவில்; மேலும் ஏழு அடி உயரத்திற்கு கணபதி காட்சி அளிக்கிறார். அத்தோடு இது ஒரு தான் தோன்றி, அதாவது ஸ்வயம்பு சிலை.
இது காகிநாடாவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ளது இதை ராஜ மகேந்திரவரத்திலிருந்ததும் அடையலாம்; சுமார் நாற்பது கி.மீ
இதன் வரலாறு 849 CE ஆம் ஆண்டில் துவங்குகிறது
இந்தக் கோவில் பற்றிய மூன்று சுவையான விஷயங்கள்
1.பிள்ளையார் சிலை வளருகிறது
2. பக்தர்கள் தங்கள் விருப்பங்களை ரகசியமாக பிள்ளையார் காதில் ஓதுகிறார்கள்
(ஏனைய கோவில்களில் நந்தியின் காதில் இவ்வாறு ஆசை அபிலாஷைகளைத் தெரிவிப்பதைக் காணலாம்)
3.மூன்றாவது விசேஷம்- கணபதி காலிலிருந்து நீரூற்று வருகிறது
இயற்கையே பிள்ளையாரின் மகிமையை இவ்வாறு அலங்கரிக்கிறது; அங்கீகரிக்கின்றது போலும்! விநாயகர் சிலை மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த வட்டாரத்தத்தில் பல கோவில்களை கீழைச் சாளுக்கிய வம்ச மன்னர்கள் கட்டினார்கள் கிராமத்திற்கு பிருத்தாங்கினவோலு என்ற பெயரும் உண்டு. மூன்றாம் விஜயாதித்யன் பெயரில் கிராமம் இருக்கிறது
****
கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்
மூன்று சிவன் கோவில்கள் இங்கே இருக்கின்றன அவைகளில் ஒன்று கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில். .(SRI GOLINGESWARA SWAMI VARI TEMPLE, BICCAVOLU ). ஏனைய இரண்டு கோவில்கள் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோவில், சந்திர சேகர சுவாமி கோவில் ஆகும்; எல்லாக் கோவில்களும் ஆயிரம் ஆண்டு அல்லது அதற்கு மேல் வரலாறு உடையவை.
கோ லிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால் கரு வறையில் அழகான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது ;சுற்றிலும் சிற்பக் களஞ்சியம்தான். வாயில் புடையில் நீண்ட 33 வரி சாசனத்தைப் பொறித்துள்ளார்கள் . இன்னும் ஒரு சிறப்பு ஆலிங்கன நிலையில் சிவனையும் பார்வதியையும் செதுக்கியுள்ளார்கள் இது முக மண்டபத்தில் இருக்கிறது . விமானம் ஒரிஸ்ஸா பணியில் இருக்கிறது சில சிலைகள் கஜுராஹோ (காமக் கலை) சிற்பங்களை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
ராஜ ராஜேஸ்வரி ஆலயம்
இந்த ஆலயத்தில் சிவலிங்கமும் ராஜேஸ்வரியும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர் சுற்றியுள்ள பிறைகளில் / மாடங்களில் கணபதி, மயில் மீதரமர்ந்த முருகன், மஹிஷாசுர மர்த்தனி ஆகியோர் உள்ளனர் .
சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் சந்திரசேகரனையும் பாலா திரிபுர சுந்தரியையும் தரிசிக்கலாம்; மகர தோரணங்களுடன் மண்டபம் காட்சிதருகிறது.
கணேசரையும் மறுபுறம் லட்சுமியையும் காட்டும் ஒரு சிற்பம் இங்கிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மியூஸியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கிராமத்துக்கு வெளியே இருக்கும் சிவன் கோவிலில் சிவபிரானின் சதுரங்க நடனத்தைக் காணலாம் .
சின்னச்சின்ன கோவில்களாக வயல்வெளி முழுதும் நிறைந்திருக்கும் ஆலயங்களில் கங்கை யமுனா நதி தேவதைகளின் சிற்பங்கள், பல்லவ, ராஷ்டிரகூட பாணி விமானங்கள் ஆகிய யவற்றையும் தொல் பொருட் துறை அறிஞர்கள் பட்டியலி ட்டுள்ளார்கள்.
–subham—
Tags- பிக்கவோலு விநாயகர் கோவில்,ஆந்திர மாநில , புகழ்பெற்ற கோவில்கள் ,பகுதி 45 , கோ லிங்கேஸ்வர சுவாமி கோவில்