ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கம்! (Post No.13,918)

Dogs takn to slaughter houses

Written by London Swaminathan

Post No. 13,918

Date uploaded in London – 22 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Snake Blood served hot and fresh  in Glass

ரிக்வேதப் புலவர் வாமதேவ ரிஷி, நாய் மாமிசம் சாப்பிட்டதற்கு புது விளக்கத்தினை ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர் உபதசத்திலுள்ள ஒரு சம்பவத்தின் மூலம் அறியலாம்.

தென் கொரியர்கள் ஆண்டுக்குப் பத்து லட்சம் நாய்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்; சீனர்கள் உயிருள்ள பாம்புகளின் ரத்தத்தைக் குடிக்கிறார்கள்; பல்லி , கரப்பு, தேள்  இவைகளைச் சாப்பிடுகிறார்கள். நகரும் எந்த ஜந்துவும் அவர்களுப் பிடிக்கும் என்பது முது மொழி; அந்த வரிசையில் வாம தேவரைச் சேர்த்துவிடக்கூடாது  அவர் பெரிய ஞானி; ரிக் வேதமோ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது பேராசிரியர் வில்சனின் கணிப்பு. இல்லை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது விஞ்ஞானிகளின் துணிபு. மேலும் இது போன்ற சம்பவங்கள் ஒன்றிரண்டுதான்  உள்ளன .

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் நாலாவது மண்டலம் வாமதேவ ரிஷியின் பெயரில் அமைந்துள்ளது அவரது தெய்வீகக் கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன அவர் பசி வந்தபோது நாயின் குடல்களைச் சாப்பிட்டதாக ரிக் வேதம் பாடுகிறது. மனிதர்களுக்குப் பசிக்கொடுமை வந்துவிட்டால்  என்ன செய்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக மனு ஸ்ம்ருதியும்  (10-106 )அந்த நாய் மாமிச சம்பவத்தைக் குறிப்பிடுகிறது

பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்பதைத் தமிழ்ப்புலவர்களும் பாடியுள்ளனர்; அதாவது பத்து நல்ல குணங்களைக் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்; ஆனால் வாமதேவ ரிஷி சாதாரண மனிதர் அல்ல;. அவருடைய புகழ் ரிக்வேதத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் உள்ளது.

உண்மையான விளக்கம் என்ன வென்றால், ஞானிகளுக்கு உடல் என்பது வெறும் அழுக்குச் சட்டை போன்றது; இதை பகவத் கீதையிலும் கிருஷ்ணன் கிழிந்த ஆடை — வாஸாம்ஸி ஜீர்ணானி — என்று வருணிக்கிறார் திருவாசகத்தில்,  தேவாரத்தில், சித்தர் பாடல்களில்  மலம் சேரும் ஒன்பது வாயில் குடிலினைக் காண்கிறோம்  ஆகவே ஞானிகளுக்கு உடல் ஒரு பொருட்டல்ல; மேலும் அவர்கள் சில நேரங்களில் பைத்தியக் காரன் போலவும் , குழந்தைகள் போலவும், குடிகாரர்கள் போலவும் நடந்து கொள்வார்கள் என்று ராம கிருஷ்ண பரம ஹம்ஸர், பல சம்பவங்கள் மூலம் நமக்குக்  காட்டுகிறார்.

Rig Veda 4.18.13

अव॑र्त्या॒ शुन॑ आ॒न्त्राणि॑ पेचे॒ न दे॒वेषु॑ विविदे मर्डि॒तार॑म् । अप॑श्यं जा॒यामम॑हीयमाना॒मधा॑ मे श्ये॒नो मध्वा ज॑भार ॥
अवर्त्या शुन आन्त्राणि पेचे न देवेषु विविदे मर्डितारम् । अपश्यं जायाममहीयमानामधा मे श्येनो मध्वा जभार ॥
avartyā śuna āntrāṇi pece na deveṣu vivide marḍitāram | apaśyaṃ jāyām amahīyamānām adhā me śyeno madhv ā jabhāra ||

English translation:

“In extreme destitution I have cooked the entrails of a dog; I have not found a comforter among the gods; I have beheld my wife disrespected; then the falcon, (Indra), has brought to me sweet water.” (Amruta).

*****

பகவத் கீதை

वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || 2-22||

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா₂ விஹாய

நவானி க்₃ருஹ்ணாதி நரோ ’பராணி

ததா₂ ஸ²ரீராணி விஹாய ஜீர்ணான்

அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ பகவத் கீதை 2-22

ஒருவன் கந்தல் கீறலாய்ப்போன ஆடைகளை( ஜீர்ணானி வாஸாம்ஸி) அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ​​ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது. பகவத் கீதை 2-22

****

நாயுடன் எச்சில் இலையில் சாப்பிட்ட சாது!

Final minute for this dog

ஒரு சமயம் பகவத் பிரேமையில் ஈடுபட்ட சாது  ஒருவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (ரா.கி.ப)  தங்கியிருந்த ராணி ராசமணியின் காளி கோவிலுக்கு வந்திருந்தார்; அவருக்கு ஒரு நாள் முழுதும் ஆகாரம் கிடைக்கவில்லை.  பசியோடு இருந்தபோதும் தமக்கு சாதம் வேண்டும் என்று அவர் ஒருவரையும் கேட்கவில்லை . ஆனால் ஒரு மூலையில் எறியப்பட்ட எச்சில் சோற்றை ஒரு நாய் சாப்பிடுவதைக் கண்டு  அங்கே சென்று அந்த நாயைத் தழுவிக்கொண்டு , “தம்பி ! எனக்கு கொடுக்காமல் நீ மட்டும் உண்பது எப்படி?” என்று சொல்லிக்கொண்டு அந்த நாயுடன் சாப்பிட ஆரம்பித்தார் ; இப்படிச் சாப்பிட்ட பின், அவர் காளி கோவிலுக்குள் நுழைந்து  மிகுந்த பகுதி பரவசத்துடன் கோவில் முழுதும் ஆனந்த  உணர்ச்சி நிரம்பும்படியாக ஸ்தோத்திரம் பண்ணத்தொடங்கினார் . பிறகு அவர் வெளியே செல்லும்போது பரமஹம்சர்,  தமது உறவினரான ஹிருதய முகர்ஜியை  அந்தச் சாதுவுவின் பின்னால் போகும்படியும் அவர் சொல்வது,  செய்வது, எல்லாவற்றையும் தன்னிடம் செல்லும்படியும் சொல்லி அனுப்பினார்.

ஹிருதயும் அப்படியே அவர் பின்னால் சென்றார்  ; சிறிது தூரம் போன பின், அந்த சாது திரும்பிப் பார்த்து ஏனப்பா என் பின்னால் வருகிறாய்? என்று கேட்டார்  சுவாமி எனக்கு ஒரு உபதேசம் செய்தருள வேண்டும் என்றார் ஹிருதய் .

அதற்கு அவர் “அப்பனே! இந்த அழுக்குப் படிந்த குட்டை நீரும், அதோ பெருக்கெடுத்து ஓடும் சர்வ பாப நாசினியாக கங்கையின் நீரும் ஒன்றென உனக்குத் தோன்றும்போதும் வீணா கானமும் அதோ அந்த தெருக்களில் கேட்கும் ஜனசந்தடியும் உன் காதுகளில் வித்தியாசம் இல்லாமல் கேட்கும்போதும் தான் உனக்கு உண்மையான  ஞானோதயம் உண்டாகும்” என்றார்.  இதைக் கேட்டுவந்து, ஹிருதய் பகவானிடம் (ரா.கி.ப) சொன்னபோது அவர், அந்த சாது உண்மை ஞானத்ததையும் பிரேமையையும் பெற்றிருக்கிறார்; சித்தர்கள் குழந்தைகளைப் போலவும் பெ,,,,,,ய்களைப் போலவும், அத்தோடு பைத்தியக்கார்களைப் போலவும் இன்னும் பலவித வேஷங்களுடனும்  அங்குமிங்கும் அலைந்து திரிவார்கள் என்றார் .

இந்த சம்பவம் மட்டுமின்றி, ஸ்ரீ ராகிருஷ்ணரே பலவித சமய சம்பிரதாயங்களை பின்பற்றி பயிற்சி சாதனைகளை செய்தபோது எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதையும் பார்க்கும் போது வாமதேவரும் ஏன் நாய் மாமிசம், சாப்பிட்டார் என்பது புரிகிறது

நீதி- ஞானிகள் உபாதேசத்தைப் பின்பற்று; அவர்கள் செய்வதை எல்லாம் தகுந்த ஞானம் ஏற்படும்வரை செய்யாதே!

–subham—

Tags- ரிக்வேதப் புலவர் ,வாமதேவ ரிஷி, நாய் மாமிசம், ,புது விளக்கம், ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்

Leave a comment

Leave a comment