Buddhist Stupe in the desert
Post No. 13,926
Date uploaded in London – 24 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுமார் 1800- ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. புத்தமதம் எங்கும் பரவியது. தக்லாமகன் என்பது ஒரு பெரிய பாலைவனம். இடையிடையே நீர் ஊற்றுக்கள் உள்ள ஒயஸிஸ் Oasis என்னும் வளமான ஊர்களும் உண்டு. அந்தப் பாலைவனத்தில் மஹாபாரத பழஞ் சுவடிகள் அண்மையில் கிடைத்தன. மஹாபாரதம் தொடர்பான மிகப் பழைய சுவடி இதுதான்!
புத்த மத துறவிகள் மலைப் பாறைகளைக் குடைந்து அஜந்தா குகைப் பாணியில் ஏற்படுத்திய குடைவரை Caves, Rock cut monasteries
வசிப்பிடங்களும் மத்திய ஆசியா முழுதும் காண ப்படுகின்றன. அதே காலத்தில்தான் Oasis பாலைவன சோலை நகர்களில் புத்த மத துறவிகள் கூட்டம் பெருகியது; கிஸில் , குசா Kizil, Kucha என்னும் இரண்டு இடங்களில் மட்டும் 10,000 துறவிகளும் 236 குடைவரை பாறை வசிப்பிடங்களும் Rock cut monasteries இருந்தன. மீரான் Miran என்னும் ஊரில் ஜாதகக் கதைகளை சிற்பங்களாக செதுக்கினர். காந்தாரத்திலிருந்து வந்த ஓவியர்கள் குகைகளில் ஓவியம் தீட்டினர். சிங்கியாங் மாகாண மீரான் நகரில் 350-400 CE ஆண்டில் பெரிய பெளத்த மடாலயம் எழுந்தது. ஓவியத்தை வரைந்தவர் தன்னுடைய பெயரை டைட்டா என்று கையெழுத்திட்டு இருக்கிறார். ஒருவேளை ரோமாபுரியிலிருந்து வந்த Titus டைட்டஸ் என்ற பெயராக இருக்கலாம் என்றும் வரலாற்று அறிஞர்கள் செப்புகிறார்கள்.
இரண்டு பாலைவன –ஒயஸிஸ் — சோலை நகர ஓவியங்களில் பல விசித்திரங்களை காணமுடிகிறது ; புத்த மத துறவிகள் அந்தரத்தில் மிதக்கிறார்கள்; சித்தர்கள், யோகிகள் செய்யும் இந்த மிதத்தலை ஆங்கிலத்தில் லெவிடேஷன் levitation என்பார்கள் பேய், பிசாஸு பூதங்களின் உருவங்களும் காணப்படுகின்றன
குமாரவிஜய Kumaravijaya யார் ?
குமாரவிஜய Kumaravijaya 344-413 CE என்பவர் ஒரு பிராமணர். அவருடைய தந்தை இந்தியாவில் ஒரு அமைச்சர். அவரது குடும்பத்தினர் சீனாவில் குசா நகரில் இருந்த சிற்றரசரின் அவையில் பணியாற்றினார்கள் .
அவர் பெரிய சம்ஸ்க்ருத அறிஞர். சம்ஸ்க்ருதத்தில் பல நூல்களை எழுதியதோடு நிற்காமல் மஹாயான புத்தமதப் பிரிவின் நூல்களை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார்.
அவர் மொழிபெயர்த்த முக்கிய நூல் தாமரை சூத்திரம் என்று ஆங்கிலத்தில் பிரபலமாகியது அதன் உண்மையான பெயர் சத் தர்ம புண்டரீக சூத்ரம் empathaakum
The Lotus Sūtra (Sanskrit: Saddharma Puṇḍarīka Sūtram, Sūtra on the White Lotus of the True Dharma, Chinese: 妙法蓮華經. புண்டரீகம் என்றால் தாமரை மலர். வியட்நாம் வரையுள்ள எல்லா புத்த மத நாடுகளிலும் இது அந்தந்த மொழியில் கிடைக்கிறது . அந்த நூலின் தெளிவினையும் ஆக்கத்தையும் காண்பவர்கள் இவரது புலமையை வியக்கிறார்கள்.
குசானர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர், சிறிய அரசுகள் எழுந்தன. குசாவில் இருந்த மன்னரை குமாரவிஜயவின் தாயார் மணந்தார். அவளது பெருமையை குமார விஜயவின் நண்பர் ஹூயகியாவோ 1600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார் அவள் அபார அறிவும் கேட்டதையும் படித்ததையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளும் அபூர்வ சக்தியையும் பெற்றவளாம். அவளுக்கு இருபது வயதானபோது திருமணம் நடந்தது. அவளுக்கு கற்காமலேயே ஸம்ஸ்க்ருதப் புலமை ஏற்பட்டது என்றும் நண்பர் எழுதியிருக்கிறார் குமாரவிஜய பிறந்தவுடன் அவள் புத்தமதத்த துறவி ஆகிவிட்டாள்.
அப்போது குமார விஜயவுக்கு ஏழு வயது . பிட்சுணியான தாயாருடன் அவர் காஸ்மீருக்கு வந்து பந்து தத்தன் என்ற அறிஞரின் கீழ் சமய நூல்களைக் கற்றார். தாயார் இறந்தவுடன் குமார விஜய மத்திய ஆசியாவிலுள்ள பல நகரங்களுக்குச் சென்று மஹாயான புத்தமதப் பிரிவு நூல்களை பயின்றார். பின்னர் குசா நகருக்குத் திரும்பினார். தனது ஆசிரியரையும் மஹாயான பிரிவுக்கு இழுத்தார்; அப்போது வாக்குவாதம் நடந்தது.
சுவையான உரையாடல்
பந்து மித்ரா ஒரு கதையைச் சொல்லி மஹாயான புத்தமதக் கொள்கைகள் அது போன்றதே என்றார்; அந்தக்கதை இதோ,
ஒரு பைத்தியக்காரன் ஒரு நெசவு நெய்யும் தொழிலாளியிடம் வ ந்து மிக மெல்லிய சன்னமான நூல் வேண்டும் என்றும் அதில் ஆடை வேண்டும் என்றும் சொன்னான். நெசவாளியும் உயிரைக்கொடுத்து மெல்லிய ஆடை நெய்தான். பைத்தியக்காரன் இது முரட்டுத் துணி என்று சொல்லிவிட்டு அதை விட மெல்லிய நூலால் ஆடை நெய் என்று ஆர்டர் கொடுத்து விட்டுப் போனான்; இரண்டாவது முறை செய்த மெல்லிய ஆடையையும் பைத்தியக்காரன் ஏற்கவில்லை. நெசவாளிக்குக் கோபம் வ ந்தது ; அடுத்த முறை வா; நல்ல ஆடை செய்கிறேன் என்றான். மூன்றாவது முறை பைத்தியக்காரன் வந்த போது இந்த ஆடை எப்படி இருக்கிறது? என்றான். கண்ணுக்கு ஆடையே தெரிய வில்லையே என்றான் ; நெசவாளி சொன்னான் , உண்மைதான் இது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சன்னமான ஆடை என்றான் . பைத்தியக்காரனும் காசு கொடுத்து அதை வாங்கிச் சென்றான். இது போலத்தான் உன் கொள்கையும் என்றார் குருநாதர்
ஆனால் பிற்காலத்தில் அவரையும் மஹாயானத்தை ஏற்கவைத்தார் குமார விஜய.
அவரது வாழ்வில் இரண்டு முறை குசா நாட்டின்மீது மீது படையெடுத்த எதிரிகளிடம் சிக்கினார்; ஒரு முறை இவரைக் கடத்திச் சென்ற எதிரி அவருக்கு போதை மருந்தைப் பானத்தில் கலந்து கொடுத்து ஒரு வேசியையும் அவருடன் படுக்க அனுப்பினான். அதில் பயங்கிய குமார விஜய மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் தப்பிச் சென்று நாட்டுக்குத் திரும்பியபோது இரண்டாவது முறை கைதானார். ஆனாலவரது அறிவை மெச்சி விடுதலை செ தனர். அவர் தலைமையில் மொழிபெயர்ப்புத் துறையை உண்டாக்கிய மன்னன் ஏராளமான அறிஞர்களை அழைத்து எண்ணற்ற சம்ஸ்க்ருத நூல்களை மொழிபெயர்த்தார். இதனால் சீனாவில் இந்தியாவில் இல்லாத புத்த மத நூல்கள் இப்போதும் சீன மொழியில் கிடைக்கின்றன. இது குமார விஜய செய்த மிகப்பெரிய சாதனை. சம்ஸ்க்ருத நூல்களையும், புத்தமத நூல்களையும் சீன மொழியில் பரப்பியதும் அவர் செய்த பணிகள் ஆகும்
–subham—
tags—சீனா, குமாரவிஜய, சாதனைகள்