ஞானமயம் வழங்கும்உலக இந்து செய்தி மடல் 24-11-2024 (Post No.13,928)

Written by London Swaminathan

Post No. 13,928

Date uploaded in London – 24 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 24- ஆம் தேதி,  2024-ம் ஆண்டு

****

 COLLECTED AND EDITED FROM VARIOUS NEWSPAPERS.

பிரேசிலில்  ராமாயணம் —  மோடி  கண்டுகளிப்பு   

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்றது

அப்போது பிரேசில் நாட்டி ல் பல கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதில் ஒன்று ராமாயண நாடகம். 

அங்கு சம்ஸ்க்ருத மொழியில் ராமாயணத்தை நடித்துக்காட்டினர்; அதை பார்த்த இந்திய பிரதமர் ந ரேந்திர மோடி நடிகர்களை பாராட்டினார்..

வேதாந்தத்தையும் ஸம்ஸ்க்ருதத்தையும் போதிக்கும் விஷ்வ வித்யா குருகுலத்தின் மாணவர்கள் இந்த ராமாயணத்தை நடித்துக் காட்டினார்கள்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோனாஸ் மாசெட்டி நிறுவிய கல்வி நிறுவனம் இது

அவர் சம்ஸ்க்ருத மந்திரம் ஓதி மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி மாணர்களைப் பாராட்டினார்.

இதே போல மற்றும் ஒரு தென் அமெரிக்க நாடான கயானாவில் ஆர்ய சமாஜ இயக்கத்தினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். ஆர்ய சமாஜத்தை ஸ்தாபித்த தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இரு நூறாவது ஆண்டுவிழா நடக்கும் ஆண்டில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது தனக்கு மன நிறைவை அளிப்பதாக மோடி தெரிவித்தார்

****

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது! ஹைகோர்ட் அதிரடி தடை

2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி கர்நாடக இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது

மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், கடந்த 2004 ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம் எஸ் சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மியூசிக் அகாடமியின் இசை கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுவதாகவும், வரும் டிசம்பரில் 98 வது ஆண்டு விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,. தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பாடகர்.டி.எம்.கிருஷ்ணா கூறிவரும் நிலையில் , மியூசிக் அகாடமியின் அறிவிப்பு சுப்புலட்சுமியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பாடகர்.டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வந்தார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை மியூசிக் அகாடமி எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருதும் வழங்க கூடாது என்றும் பேரன் சீனிவாசன் வழக்கில் முறையிட்டிருந்தார் .

எம் எஸ் சுப்புலட்சுமி உலகப் புகழ்பெற்ற பாடகி; ஐ நா சபையில் பாடியவர்; பாரத ரத்நா  பட்டம் பெற்றவர் அவரை இழிவுபடுத்திய பாடகருக்கு விருது மறுக்கப்பட்டது மியூசிக் அகாடமி மேல் விழுந்த பலத்த அடி என்று இசை ரசிகர்கள் கூறி, ஹைகோர்ட் தீர்ப்பினை வரவேற்றனர்

*****

திருப்பதி கோவிலில் மாற்று மதத்தினரை நீக்க முடிவு

திருப்பதி, திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் ஹிந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் இந்த மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். பி.ஆர்.நாயுடு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதுகுறித்து பி.ஆர். நாயுடு கூறியுள்ளதாவது:

ஹிந்து கோவிலில் ஹிந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. ஹிந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒன்று அவர்களாகவே, வி.ஆர்.எஸ்., எனப்படும் விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம்.திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியது.

அதனால் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, திருப்பதியில் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு பி.ஆர். நாயுடு கூறினார்.

******

மருதமலை கோவிலில் மாற்று மதத்தினரை பணியிலிருந்து நீக்காவிட்டால் போராட்டம்’: ஹிந்து முன்னணி அறிவிப்பு

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நவம்பர் 18 ஆம் தேதி அளித்த பேட்டி:

கடந்தாண்டு, ‘சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்’ என சிலர் கூறியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டும், திருப்பூர், கொங்கணங்கிரியில் வேல் வழிபாடு துவங்கி, திருப்பூர், அழகு மலையில் நிறைவடையும். டிசம்பர் 25ம் தேதி, திருப்பூரில் நடக்கும் வேல் வழிபாட்டில், ஹிந்துக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதன் முன்னோட்டமாக, மருதமலையில் வேல் வழிபாடு நடந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தியுள்ளனர். அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.

அர்ஜுன் சம்பத், அவருடைய மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் நடிகை கஸ்துாரி ஆகியோரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்துள்ளனர்; அது கண்டிக்கத்தக்கது. ஈஷா இயக்கம் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து வருகிறது. அங்கு யாரேனும் அத்துமீறி நுழைந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., அரசு, தி.க., மற்றும் நக்சலைட் சார்ந்த அரசாக உள்ளது.

இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஹிந்துக்கள் இணைந்து போராட வேண்டும். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அரசின் நடவடிக்கைகளுக்காக மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வாறு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

*****

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99–வது பிறந்த நாள் விழா

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா நேற்று நவம்பர் 23–ஆம் தேதி கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணிக்கு வேதங்கள் ஓதப்பட்டன. 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனம் நடந்தது.

*****

அடுத்ததாக சபரிமலை செய்திகள்

சபரிமலையில் படி பூஜை: 2039 வரை முன்பதிவு

சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசம், களபாபிேஷகம், புஷ்பாபிஷேகம்.இதில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் பக்தர்கள் உடனடியாக பதிவு செய்து நடத்தும் வசதி இருந்தது. இந்த ஆண்டு முதல் களபாபிஷேகமும் முன்பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பாபிஷேகம் மட்டுமே பக்தர்களால் உடனடியாக செய்யும் வழிபாடாக எஞ்சியுள்ளது.

 படி பூஜைக்கான கட்டணம், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய்; 2039 மார்ச் வரை முன்பதிவு முடிந்துள்ளது

****

பிள்ளளையார் பட்டி கோவில்

ஐயப்ப பக்தர்கள் இந்த சீசனில் பிள்ளையார்பட்டி  கணபதியைத் தரிசிக்கவும் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் கோவிலை நாள் முத்தும் திறந்து வைப்பதாக அறிவித்துள்ளனர் .

****

தமிழ்நாட்டு கோவில்கள் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைப்பு

தமிழ்நாட்டு திருக்கோவில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  நேற்று நவம்பர் 23–ஆம் தேதி சென்னை, பாடி, அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை  தொடங்கி வைத்தார்.

****

கடைசியாக, லண்டன் நிகழ்ச்சி பற்றிய செய்தி

சம்பிரதாய பஜனை உலகத்தில்  மிகவும் புகழ்பெற்ற டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தந்தார்கள் . நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ் பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளித்தார்கள். இது அந்தக் குழுவின் நாலாவது ஆண்டு விஜயம்.

லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்; மூன்று நாள் விழா இன்று நிறைவு அடைந்தது .

XXXXXX

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் முதல் தேதி,  லண்டன் நேரம் ஒருமணிக்கும்,  இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். 

வணக்கம்.

–SUBHAM—

TAGS–உலக இந்து செய்தி மடல் 24-11-2024 

Leave a comment

Leave a comment