பீமாவரம் கோவில்கள் – 46 (Post No.13,935)

Someswara Swami Temple

Written by London Swaminathan

Post No. 13,935

Date uploaded in London – 26 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Maulamma Temple

xxxx  

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 46

ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பல புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு பஞ்சராம க்ஷேத்திரங்கள் என்ற ஐந்து புகழ் பெற்ற கோவில்களில் அடங்கும் .

பின்னரும் கோவில்களுக்கு அதிகமான பக்தர்கள் செல்கிறார்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில்

கோட சட்டம்மா அம்மாவாரி கோவில்

வாசவி மாதா கோவில்

வீரபத்ர சுவாமி கோவில்

இவை தவிர கடந்த இருநூறு ஆண்டுகளில் எழுந்த புதிய கோவில்களும் உள்ளன.

****

Maddi Anjaneya Temple மட்டி ஆஞ்சனேயர் கோவில்

மாவட்டத்திலுள்ள முக்கிய ஆஞ்சாசனேயர் கோவில் குரவைக்கூடம் என்னுமிடத்தில் உள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத் தலைநகரான ஏழூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் குரவைக்கூடம் அமைந்துள்ளது

மட்டி என்று தெலுங்கு மொழியில் சொல்லப்படும் மருதமரத்தின் அடியில் அனுமன் இருப்பதால் இதை மட்டி ஆஞ்சனேயர் கோவில் என்பார்கள்.

இந்த இடத்தை ஜனரெட்டிகுடம் என்றும் சொல்கிறார்கள்  ரெட்டி ராஜு சிற்றசர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வணங்கினர்.

ராவணனிடம் பணிபுரிந்த ஒரு அசுரன் அனுமன் பக்தன் என்றும் அவனே பின்னர் இங்கு வந்து  குரங்காகப் பிறந்து வேண்டியதன் பெயரில் அனுமன் தோன்றியதாகவும் தல புராணம் சொல்லும்;  மட்டி மரத்துக்கு அடியில் அமர்ந்த நிலையில் அனுமன் ,ஒரு கையில் பழத்தையும் இன்னுமொரு கையில் கதையையும் ஏந்தியவாறு தரிசனம் தருகிறார்

எல்லா இந்துப் பண்டிகை தினங்களில் பக்தர்கள் வந்தாலும் ராம நவமி ,அனுமன் ஜெயந்தி போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருகுகிறது

****

Mavullamma   Temple, BHIMAVARAM பீமாவரம்

கடந்த இருநூறு ஆண்டுகளாக மாவுலம்மா வழிபாடு பிரபலம் ஆகியுள்ளது . முதலில் வீதியில் ஒரு அரசமரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் இடையில் வழிபடப்பட்டாள்.  ஜ்யேஷ்ட மாதத்தில் ஒரு மாத கால உற்சவம் நடக்கும்போது பீமாவரம் நகரமே விழாக்கோலம் பூணும் .

வட்டார வியாபாரிகள் சங்கம் பிரபல கலைஞர்களையும் பேச்சாளர்களையும் அழைத்தது தினமும் செவிக்கு விருந்து படைக்கிறார்கள் .

தேவியின் உருவம் சக்தி வாய்ந்த கண்களுடன் காட்சி தருகிறாள்.. .

பொங்கல் /சங்கராந்தி நேரத்திலும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள். வெளியேயுள்ள கடைகளில் வேண்டிய பொருட்களை வாங்கும் வசதி இருக்கிறது . முன்னர் உக்ரமான வடிவில் இருந்த சிலையை ஸ்ரீ கிராந்தி அப்பராவ் சுமுகமான ,சாந்தமான சிலையாக வடிவமைத்தார்.

****

Gunupudi Someswara Janardhana Swamy Temple:

பீமாவரம் நகரிலுள்ள முக்கியக் கோவில் குனுபுடி சோமேஸ்வர ஜனார்த்தன  சுவாமி கோவில் ஆகும்.

பஞ்சராம கோவில் வரிசையில் இது சோமராம கோவில்.  எனப்படும்.

இருபதே கிலோமீட்டர் தொலைவில் பாலகொல்லுவில் இன்னும் ஒரு பஞ்சராம கோவில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய முடிகிறது .

இவைகள் சிவன் கோவில்கள்.  சோமேஸ்வர லிங்கத்தை  சந்திரன் (சோமன்)  நிறுவியதாக தல புராணம் சொல்லும்.  நாலாவது நூற்றாண்டில், சாளுக்கிய மன்னன் பீமன் காலத்தில்  இதன் வரலாறு துவங்குகிறது. லிங்கத்தின் நிறம் அமாவாசை , பெளர்ணமி தினங்களில் மாறுகிறது  கருவறைக்கு மேலே அன்னபூரணி சந்நிதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது ஆதிலட்சுமி, கந்தன், கணேசர் சூரியன் சந்நிதிகளும் இடம்பெறுகின்றன. ராம பிரானுக்கும் அனுமனுக்கும் தனியே சந்நிதிகள் இருக்கின்றன.

****

பாலகொல்லு சிவன் கோவில்

பாலகொல்லு சிவன் கோவிலை க்ஷீர ராமலிங்கேஸ்வர கோவில் என்று அழைக்கிறார்கள். சிவலிங்கத்தை நாலாபுறமுள்ள ஜன்னல்கள் வழியாகவும் தரிசிக்கும் படி கருவறை அமைக்கப்பட்டது இதன் சிறப்பு ஆகும்   விஷ்ணுவே நிறுவிய லிங்கம் என்பதால் ராமலிங்கம் பெயர் வந்தது  இங்குள்ள ஏனைய சந்நிதிகள் :  துர்கா, லெட்சுமி, சப்த மாத்ரிகா, நடராஜர்,கணேசன், கந்தன் , சனீஸ்வரன், பிரம்மா. கோவில் கோபுரம் ஆந்திரத்திலுள்ள பழமையான கோவில்களில் மிக உயமான கோபுரத்தைக் கொண்டுள்ளது ஒன்பது நிலைக்கு கோபுரத்தின் உயரம் 120 அடி.

சிவலிங்கம் பாற்கடலின் வெண்மை நிறத்தை உடையது . அருகில் ஓடும் நதி நரஸாபூரில் கோதாவரியுடன் சங்கமிக்கிறது  கோவிலில் கருங்கற்களில் சமைக்கப்பட்ட 72 அழகான தூண்களும் உள்ளன

*****

அருகில் மேலும் சில சிவன் கோவில்களும் இருக்கின்றன.

ஜூட்டிகா, நட்ட ராமேஸ்வரம் கோவில்கள் குறிப்பிடத் தக்கவை .  நட்ட ராமேஸ்வர கோவிலில் கடல் கிளிஞல்களால்  ஆன சிவலிங்கம் உளது . Juttiga and Natta Rameswaram (Dakshina kasi):

****

பாலகொல்லுவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது

Sri Vasavi Kanyakaparameswari Temple, Penugonda:

அருகில் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கும் நாகேஸ்வர சுவாமி கோவிலும் பார்க்க வேண்டிய ஆலயம் ஆகும்.

****

Famous Temples in West Godavari

Sri Venkateswara Swami Vari Devasthanam.

Sri Venkateswara Swamy Temple.

Ksheera Ramalingeswara Swamy Temple.

Sree Kota Sattemma Ammavari Temple. …

Vasavi Matha Temple.

New Vasavi Kanyaka Parameswari Temple. …

Ratnalamma Temple.

Veerabhadra Temple

–subham—

Tags- பீமாவரம் கோவில்கள் , பஞ்சராம கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற  108 கோவில்கள், Part 46

Leave a comment

Leave a comment