Post No. 13,945
Date uploaded in London – 28 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாரதி பிறந்த டிசம்பர் மாதத்தில் அவரைத் தவிர வேறு யாரை நினைக்க முடியும் ? அவரது சொற்களில் தலைவர்களை , வீரர்களை, தியாகிகளை, புலவர்களை, அறிஞர்களைக் காண்போம்.
****
பண்டிகை தினங்கள் — டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;
13- கார்த்திகை தீபம் ; 16- மார்கழி மாதப் பிறப்பு ; 25- கிறிஸ்துமஸ்.
சுப முகூர்த்தம்- 5 ;
அமாவாசை -30; பெளர்ணமி- 15;
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 11, 26.
*****
“கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு”
****
டிசம்பர் 2 திங்கட் கிழமை
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
****
டிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை? – அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை.
****
டிசம்பர் 4 புதன்கிழமை
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
****
டிசம்பர் 5 வியாழக் கிழமை
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞாலம் மீது இலக்கணம் கண்டதும்
****
டிசம்பர் 6 வெள்ளிக் கிழமை
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்
வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவனச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்வியே
****
டிசம்பர் 7 சனிக் கிழமை
சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி
யாரம்படைத்த தமிழ்நாடு
****
டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை
தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை
****
டிசம்பர் 9 திங்கட் கிழமை
பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
*****
டிசம்பர் 10 செவ்வாய்க் கிழமை
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
*****
டிசம்பர் 11 புதன்கிழமை
ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்
****
டிசம்பர் 12 வியாழக் கிழமை
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ
****
டிசம்பர் 13 வெள்ளிக் கிழமை
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!
****
டிசம்பர் 14 சனிக் கிழமை
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே
(உ.வே.சா. பற்றி)
*****
டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய் புன்பைத் தாகச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதியைத் தொழுது நிற்பேன்.
****
டிசம்பர் 16 திங்கட் கிழமை
அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்
அன்பினிற் போகுமென்றே – இங்கு
முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி
****
டிசம்பர் 17 செவ்வாய்க் கிழமை
ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,
வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன், மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்,
****
டிசம்பர் 18 புதன்கிழமை
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி.
*****
டிசம்பர் 19 வியாழக் கிழமை
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.
*****
டிசம்பர் 20 வெள்ளிக் கிழமை
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்.
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னோ நம்மவர் இயற்றிய பாவம்?
****
டிசம்பர் 21 சனிக் கிழமை
மலரினில் நீலவானில்
மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகைஈசன்
இயற்றினான், சீர்த்தி இந்த
உலகினில் எங்கும்வீசி
ஓங்கிய இரவிவர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால்
அனைத்தையும் நுகருமாறே.
****
டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை
சீக்கரெனு மெங்கள்விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு. 14
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.
****
டிசம்பர் 23 திங்கட் கிழமை
தூயாஅபே தாநந்த னெனும் பெயர்கொண்
டொளிர் தருமிச் சுத்த ஞானி
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருதிள் நெஞ்சிற் கொண்டு்
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடுமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே.
****
டிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை
சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை? – சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.
****
டிசம்பர் 25 புதன்கிழமை
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி – தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி.
****
டிசம்பர் 26 வியாழக் கிழமை
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர்! புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
*****
டிசம்பர் 27 வெள்ளிக் கிழமை
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்தப் பரமன் ஞானY
ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
விண்ணவர்த முலகை யாள்ப்ர-
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
அஞ்சியறந் தவிர்க்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன்
*****
டிசம்பர் 28 சனிக் கிழமை
நினையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரே
*****
டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
****
டிசம்பர் 30 திங்கட் கிழமை
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க;
****
டிசம்பர் 31 செவ்வாய்க் கிழமை
வ.உ.சி.க்கு வாழ்த்து
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக்கோவே!
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!
–subham—
Tags- டிசம்பர் 2024 காலண்டர் பாரதி, பாடல்களில், தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள்