Post No. 13,949
Date uploaded in London – 29 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.வல்லபாச்சாரியார் எங்கு, எப்போது பிறந்தார் ?
சம்பாரணியத்தில் 1473-ல் பிறந்தார். சம்பரன் என்ற பெயரில் இப்போது சட்டிஷ்க்கார் மாநிலத்தில் உள்ளது.
Champaranya, formerly known as Champajhar, named after forests of Champa flowers which are extinct from here, is a village in the Raipur District in the state of Chhattisgarh, India, which lies about 60 km from the state capital of Raipur via Arang and 30 km from Mahasamund via Bamhani, Tila.
****
2.அவருடைய தாய் தந்தையர் யார் ? மனைவி மக்கள் யார் :
தாயின் பெயர்- இல்லம்மா; தந்தையின் பெயர்- லட்சுமண பட்டர் என்னும் தெலுங்குப் பிராமணர். வல்லபரின் மகள் லெட்சுமியை சைதன்யர் திருமணம் செய்துகொண்டார் .
****
3.அவர் எங்கே என்ன கற்றார் ?
பதினோரு வயத்தில் தந்தையை இழந்த அவர் காசிக்குச் சென்று வேதம், இதிகாசம், புராணங்களைக் கற்றார் . பின்னர் பிருந்தாவனத்துக்குச் சென்று தங்கிவிட்டு, பாரத நாடு முழுதும் தல யாத்திரை மேற்கொண்டார்.
****
4. வைஷ்ணவாச்சாரியார் என்ற பட்டத்தை அவருக்கு யார் வழங்கினார் ?
வல்லபர் விஜயநகரத்துக்குச் சென்று பல அறிஞர்களை வாதில் வென்றார்; அவரது புலமையை மெச்சிய மன்னர் கிருஷ்ண தேவ ராயர் அவருக்கு வைஷ்ணவாச்சாரியார் என்ற பட்டத்தை வழங்கி, பொன்னும் மணியும் கொடுத்தார்.
****
5. வல்லபரின் கோவில் எங்கே உள்ளது ?
அவர் பிறந்த சம்பரன் நகரில் பக்தர்கள் ஒரு கோவிலைக் கட்டியுள்ளனர். அவரை அக்கினி தேவனின் அவதாரம் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்றும் அவரது தொண்டர்கள் அந்த இடத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்
****
6.அவர் மறைந்தது எப்படி? எப்போது?
வல்லபர் தமது அந்திம காலத்தை காசியில் கழித்தார்; ஒருநாள் அவர் கங்கையிலுள்ள அனுமார் படித்துறையில் நீராடச் சென்றார்; அப்போது ஒரு ஒளி நிலவுளத்தைவிட்டு விண்ணிற்குச் செல்வதைக் கண்டார்கள். அவருக்கு 52 வயது ஆன போது 1531- ல் இது நடந்தது.
****
7.வல்லபரின் கொள்கைகள் எங்கே பரவின?
ராஜஸ்தானத்திலும் குஜராத்திலும் அவர் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் (சுத்த அத்வைதத்தைப்) பரப்பினார் .
****
8.வல்லபர் எழுதிய நூல்கள் யாவை?
வியாசரின் சூத்திர பாஷ்யம், ஜைமினி சூத்திர பாஷ்யம், பாகவத டீகை சுபோதினி, புஷ்டிப் ப்ரவாள மரியாதை , சித்தாந்த ரஹஸ்யம் — இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. விரஜ மொழியிலும் அவர் பல நூல்களை எழுதினார்.
****
9.வல்லபரின் கொள்கைகள் என்ன ?
அவர் சுத்த அத்வைதத்தைப் பரப்பினார்; இதன்படி இறைவன் ஒருவரே. ஸ்ரீ கிருஷ்ணர்தான் உயர்ந்த பிரம்மம் .; அவர் சச்சிதானந்தப் பேரொளி; புஷ்டி எனும் கருணையையும் பக்தியையும் அவர் வலியுறுத்தினார்.
****
10.வல்லபர் கொள்கையின் தற்போதைய பெயர் என்ன ?
வல்லபரின் பக்தர்கள் புஷ்டிமார்க்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்; அவரது மார்க்கம் புஷ்டிமார்க்கம்; கிருஷ்ணர் ஒருவரையே பரப்பிரம்மம் ஆக அவர்கள் வணங்குகிறார்கள்; அவரை ஸ்ரீநாத்ஜி என்பர்; அவரது முக்கியக் கோவில் ராஜஸ்தானில் நாத் த்வாரா என்னும் நகரில் இருக்கிறது அவரது சீடர் விட்டலநாத புஷ்டிமார்க்கத்தைப் பரப்பினார்.
–subham—
Tags-வல்லபர், புஷ்டிமார்க்கம், சுத்த அத்வைதம், விட்டலநாத, ஸ்ரீநாத்ஜி, நாத் த்வாரா, வல்லபாச்சாரியார், சம்பாரணியம், சம்பரன், வல்லபர் பத்து.