ஶ்ரீ அன்னை – 2 (Post No13,952)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.952

Date uploaded in London – –30 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 24-22-2024 ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

 ஶ்ரீ அன்னை – 2

   ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் – சில முக்கிய குறிப்புகள்

   ————————————————————————————-

கீழ்க்கண்ட விசேஷ நாட்கள் ஆசிரமத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்களின்  பட்டியல் ஸாதகர்களுக்காகத் தரப்படுகிறது.

தேதி       மாதம்             விவரம்                வருடம்

 1         ஜனவரி   புதுவருட தியானம்                    

21         பிப்ரவரி   ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம்        1878

29          பிப்ரவரி     தி கோல்டன் டே                 1956

24         ஏப்ரல்     ஸ்ரீ அன்னை இறுதியாக புதுச்சேரி வந்தது  1920

15         ஆகஸ்ட்     ஸ்ரீஅரவிந்தர் பிறந்த தினம்               1872

17         நவம்பர்   ஸ்ரீ அன்னையின் மஹா சமாதி            1973            20         நவம்பர்      ஸ்ரீ அன்னையின் அடக்கம்              1973

24         நவம்பர்      ஸித்தி தினம்                           1926

1-2       டிசம்பர்     ஆசிரமம் பள்ளியின் ஆண்டு விழா        1943

 5         டிசம்பர்    ஸ்ரீஅரவிந்தரின் மஹா சமாதி             1950

 9          டிசம்பர்      ஸ்ரீஅரவிந்தரின் அடக்கம்                1950

            ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள் 

            ———————————————–

01.பூரணயோகத்தில் சாதனைக்கும், புறவாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை; அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உண்மையை கண்டு கடைப்பிடித்தொழுக வேண்டும்.

02. தெய்வீக அருளையே சார்புற்று, எல்லா சந்தர்ப்பங்களிலும் அதன் உதவியையே நாம் நாடி அழைக்க கற்போமாகில், அது அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்விப்பதைக் காண்போம்.

03. நாம் பிரார்த்தன செய்வதைப் போலவே வேலை செய்வோமாக; ஏனெனில், வேலையே உடல் இறைவனுக்குச் செய்யும் மிகச் சிறந்த பிரார்த்தனையாம்.

04. இறைவனை விட்டு புறம்பாய் எங்கேயும் நீ ஆதரவை நாடாதே. உன் தேவைகளின் பூர்த்திக்கு – எதுவாக இருந்தாலும் – இறைவனைத் தவிர வேறு எவரையும் அண்டாதே. எந்த விஷயத்திலும் எந்த சமயத்திலும் ஆதரவிற்கும், உதவிக்கும், ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் தன்மை ஒருக்காலும் உன்னிடம் இருக்கவே கூடாது. இதற்கு விதிவிலக்கே இல்லை. இறைவனைத் தவிர வேறெதனிடத்தோ அல்லது வேறெவரிடமோ சார்புற்று நம்பிக்கை வைக்காதே. ஏனெனில் வேறெதையோ அல்லது வேறெவரையோ நீ உன் ஊன்றுகோலாகக் கொள்வையேல், அது  முறிந்து போவதைக் காண்பாய்.

05. உண்மையாக நீ கனவிலும் ஆர்வத்துடனிருந்தால் உனது ஆர்வத்தில் நீ சித்தியடைய உதவாத சந்தர்ப்பமே கிடையாது. எல்லாமே உனக்கு உதவ வரும் – தானே தானான பூரணப் பேருணர்வே உன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தியது போல! நீ உனது புறவுணர்வின் அஞ்ஞானத்தில் இதைப் புரிந்து கொள்ளாதிருக்கலாம், அந்த சந்தர்ப்பங்களை வரும்போது நீ அவற்றை மறுத்தொதுக்கலாம், நொந்து கொள்ளலாம், மாற்ற முயற்சிக்கலாம். சிறிது காலத்திற்குப் பின் உனக்கு கொஞ்சம் ஞானம் வந்திருக்கும். உனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சிறிது தொலைவு ஏற்படும்போது உனக்குத் தேவைப்பட்ட முன்னேற்றம்

06. தற்புகழ்ச்சிக்கும் அர்த்தமில்லை. தன்னை இகழ்ந்து கொள்வதிலும் அர்த்தமில்லை. தெய்வம் உன்னை மதிப்பிடட்டும்; இதுவே உண்மையான தன்னடக்கம்.

07. உடலால் உழைத்துக் கொண்டே ஒருவன் முற்றும் ஒருமுனைப்பட்டு ஸாயுஜ்யாநுபவம் பெறலாம் என்பது என் சொந்த அநுபவம்.ஆனால் இதற்கு கொஞ்சம் அப்பியாசம் தேவை; இதன் பொருட்டு வம்பளப்பை அறவே ஒழித்தல் அவசியம். நம்மை தெய்வத்தினின்று தொலைவில் நிறுத்துவது பணியல்ல, வம்பளப்பே.

08. நீ விடாது முயன்றால், காரிய ஸித்தி நிச்சயம். என் துணைபற்றி ஐயுற வேண்டாம்; அது உனக்கு என்றும் உண்டு. தெய்வத்தின் பால் செய்யும் முறையீடு என்றும் வீண் போனதில்லை.

9.நாம் உழல்வது அஞ்ஞானத்தில்; நமக்கோ ஒன்றுமே தெரியாது. நாம் கோருவது உண்மையில் தேவை தானா என்று கூட நாம் பரமனைக் கேட்பதில்லை; ஆனாலோ பரமனை அந்தத் தேவையை பூர்த்தி செய்து நமக்கு திருப்தியை உண்டுபண்ணும்படி அவனிடம் முறையிடுகிறோம்… . நமக்கு என்ன தேவை என்று நம்மை விட அவன் பரமனாய் இருப்பது பற்றி பரமனுக்குத் தெரியாதா? ஆகவே நம் உண்மைத் தேவையை நமக்கு பரமன் அருள்வான்.

10. நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

11. ஸ்ரீ அரவிந்தர் நம்மை எச்சரிக்கிறார்:- மந்தம், சோம்பர், எளிதில் திருப்தி அடைதல், இவை  முயற்சிக்கு விரோதி; இவை யாவும் மனித சுபாவத்தில் அடங்கும். போராட்டத்தைக் கண்டு பின் வாங்கல், பலன் கிடைக்குமுன்  ஓய்வை நாடல், ஸாதனா யாத்திரையில் கொஞ்சம் முன்னேறியதும் திருப்தி அடைந்து விடல் , சிறிய முன்னேற்றத்தை ஒரு பெரிய அற்புதமாக கல்பனை செய்துகொளல் – நடுவழியில் நின்று விட இவற்றை சரியான காரணங்களாகக் கொள்கிறோம். நம் சேதனம் வரம்பற்று விரிவடைதலும், சேதனம் விசுவ சேதனமாதலிலுமே உண்மையான ஓய்வு. இந்த உலகம் போல் விசாலமாவோம்; நமக்கு அப்போது இடைவிடா ஓய்வுண்டு.

12. இலட்சியமற்ற வாழ்க்கை இரசமற்றது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் இலட்சியத்தைப் பொறுத்திருக்கிறது நீங்கள் அதில் சுவைக்கும் இரசம். உங்கள் இலட்சியம் உயர்ந்தும் விரிந்தும், தன்னலமற்றும், பற்றற்றும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையும் பயனுளதாகும்.

13. மனிதன் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் முழுவதும் இடையறாது கல்வி பயில வேண்டும்.

14.உடல்,பிராணன், மனம், சைத்திய புருஷன், ஆன்மா என்ற இவ்வைந்து முக்கிய அங்கங்களைக் கொண்டவன் மனிதன். இவ்வைந்து அங்கங்களுக்கும் பயிற்சி அளிக்கவல்ல முறையையே பூரணக் கல்வி எனலாம்.

15. ஒருவன் தான் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் பூராவும் தன் உடலுக்குப் பயிற்சி அளித்து வர வேண்டும். உடற்பயிற்சி வயதைப் பொறுத்ததல்ல; எந்த வயதில் வேணுமானாலும் அதைத் தொடங்கி, விடாது செய்து வரலாம். உடல் பயிற்சி மூவகைத்து :- 1) உடலை முழு சுவாதீனத்துக்கு கொண்டுவருதல் 2) உடலின் எல்லா உறுப்புகளையும் சீராய் முறையோடு வளர உதவுதல் 3) அங்கக்கோணலால் ஏற்படும் குறை ஏதேனும் இருப்பின் அதை நேராக்கல்

16. தன்னைத் தான் ஆளுவது, தன் சுபாவத்தின் மாற்றம் இதுவே ஸித்தி.

17. மனிதனை உயரிய வாழ்க்கைக்கு தயாரிக்கும் உண்மையான மனப்பயிற்சி ஐந்து     முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வைந்து அம்சங்களும் ஒன்றை ஒன்று தொடரும். இவ்வைந்து அம்சங்களாவன :- 1) மனம் ஒருமுனைப்படும் திறன், சக்தி, இவற்றின் வளர்ச்சி 2) மனம் விரிவடைதல், மனம் விசாலமாதல், மனம் செறிவுறுதல் ஆனவற்றின் பெருக்கம், வளர்ச்சி 3) வாழ்க்கைக்குத் துணையாக உதவ நாம் தேர்ந்தெடுத்த கருத்தையோ அல்லது வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியத்தையோ அல்லது உன்னத ஆதர்சத்தையோ நடுநாயகமாகக் கொண்டு நம் எண்ணங்கள் அமைதல் 4) எண்ணங்களை அடக்கி ஆளல், கெட்ட எண்ணங்களை விட்டொழித்தல், நாம் வேண்டும்போதோ அல்லது நாம் வேண்டியதையோ நினைக்கும் சக்தி 5) மனதில் அமைதி, பரிபூரண சாந்தி, நம் இருக்கையின் உச்ச ஸ்தானத்திலிருந்து வரும் அநுபூதிகளை மேலும் மேலும் ஏற்கவல்ல மனோ சாமர்த்தியம்.

18. பிறர் குறையை எடுத்துச் சொல்லாதே. பிறர் சுபாவக்குறையை நீக்கவோ அல்லது திருத்தவோ உனக்கு சக்தி ஏற்பட்டதும் அக்குறையை நீக்கு.

19. சில கருத்துகள் இந்த மண் உலகையே மாற்றித்தர வல்லவை. இவற்றையே நாம் “வாக்கால்” வெளிப்படுத்த வேண்டும். இவையே சிதாகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள். இவையே புவியை அதன் பரம உன்னத இலட்சியத்தின் வழி நடத்திச் செல்ல உதவக் கூடியவை.

20. ஒருவன் தன் ஆத்மாநுபவங்களைப் பற்றி ஒருபோதும் வம்பளக்கக் கூடாதென்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. இப்படி வம்பளப்பதால் அநுபவத்தில் குவிந்து சேர்ந்த சக்தி ஒரு நொடி நேரத்தில் உருவற்றுப் போவதைக் காணலாம்.

21. நாம் எதில் நாட்டங்கொள்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். இது அனைவருக்கும் தெரிந்ததே. நீ தெய்வம் ஆக விரும்புவையேல் தெய்வத்திடத்து மட்டுமே நாட்டங்கொள்ள வேண்டும்.

22. இறைவனின் பெருங்கருணை எப்போதும் உண்மையான பிரார்த்தனைகளை பூர்த்தி செய்கிறது.

23. பரிபூரண சரணாகதிக்கு வழி :- 1) உன்னுடைய விருப்பப்படியே நடக்கட்டும், என் விருப்பப்படி அல்ல 2) நீ விரும்பியபடியே, நீ விரும்பியபடியே 3) நான் ஒழிவில் காலமெல்லாம் உன்னவனே

24. இறைசக்தியைப் மட்டுமே நினை. அது உன்னுடன் இருக்கும்.

25. தெய்வீகசக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும். அப்போது நிலையான அற்புதங்களை அது நடத்தும்.

அன்னையை வணங்குவோம்; அவன் அருளைப் பெறுவோமாக!

***

Leave a comment

Leave a comment