Post No. 13,953
Date uploaded in London – 30 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.நிம்பர்கர் எங்கு எப்போது பிறந்தார் ?
நிம்பர்கர் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பதினோராம் நூற் றாண்டில் பிறந்தார் . ஒரு நூலை இவர் பெயரில் தவறாக ஏற்றி யவர்கள் இவர் இதற்கு மிகவும் முன்னால் வாழ்ந்ததாகவும் கூறுகின்றனர்
அவர் பிறந்த ஊர் ஆந்திரத்தில் வைடூயூர்யபட்டம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஊர் ஆகும் .
****
2.அவரது தாய் தந்தையர் யாவர் ?
அருண முனி , ஜெயந்தி தேவி
****
3.அவருடைய பெயரின் பின்னால் உள்ள கதை என்ன?
ஒரு முறை அவர் சமண முனிவர் ஒருவருடன் காலை முதல் மலை வரை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் உணவினையே மறந்துவிட்டு கருமமே கண்ணாயினார் போல இருந்து விட்டனர். நிம்பர்கருக்கு திடீரென உணவு பற்றி நினைவு வரவே சமண முனிவரை சாப்பிட அழைத்தார். சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட மாட்டார்கள் என்று அவர் சொல்லவே , நிம்பர்கர் வருத்தத்துடன் வானத்தைப் பார்த்தார் அப்போது வேப்ப மரத்தின் வழியே சூரியன் தோன்றவே இருவரும் மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர்; இதனால் இவருக்கு வேப்பமர சூரியன் என்ற பெயர் ஏற்பட்டது வேப்ப மரம் – நிம , நிம்ப + அர்க- சூரியன் / கிரணம்
****
4.நிம்பர்கரின் குரு யார் ?
நாரத முனியே இவருக்கு கோபால மந்திரத்தை உபதிசித்ததாக தொண்டர்கள் நம்புகின்றனர். இவரை சூரியன் அல்லது விஷ்ணுவின் சுதர்சன அம்சம் உடையவர் என்றும் பக்தர்கள் போற்றுவர்.
****
5.அவருடைய போதனை என்ன ?
துவைத அத்வைதம் என்பது அவர் போதித்த முறை ஆகும்
சங்கர் – அத்வைதம்
ராமானுஜர்- விசிஷ்டாத்வைதம்
மத்வர்- த்வைதம்
வல்லபர்- சுத்த அத்வைதம்
நிம்பர்கர் – துவைத அத்வைதம் போதித்தனர் . இவையெல்லாம் பகையின் பல நிலைகள். இறைவனை தன்னிடமிருந்து வேறாகக் கருதி அல்லது அவருடன் ஒன்றாக கருதி வழிபடும் பல படிகள் ஆகும்.
****
6.நிம்பர்கரின் சீடர்கள் யாரை வணங்குகிறார்கள் ?
அவர்கள் ராதா கிருஷ்ணரை வழிபடுகிறார்கள்; அதாவது ராதையும், கிருஷ்ணரும் அவர்கள் வழிபடும் தெய்வங்கள்; கிருஷ்ணனே உயர்ந்த கடவுள்; பாகவதமே உயர்ந்த புஸ்தகம் என்பது அவர்களுடைய அணுகுமுறை. வைஷ்ணவ வழிபாட்டிலுள்ள நான்கு வழிகளில் இதுவும் ஒன்று.
****
7.அவர் எழுதிய நூல்கள் என்ன ?
பல நூல்களை அவர் எழுதினாலும் பிரம்ம சூத்திர உரையும் வேதாந்த பாரிஜாத செளரபிய நூலும் பிரபலமான நூல்கள் ஆகும் அவர் எழுதிய நூல்களின் பட்டியல்:
· Vedanta Parijat Saurabh– Commentary on the Brahma Sutras
· Sadachar Prakasha– a treatise on karma kanda
· Commentary on the Bhagavad-Gita
· Rahasya Shodasi- Sri Gopala Mantra explained
· Prapanna Kalpa Valli-Sri Mukunda Mantra explained
· Prapatti Chintamani– On Supreme surrender
· Pratah Smarana Stotram
· Dasa Shloki or Kama Dhenu– Ten Verses
· Savisesh Nirvisesh
· Sri Krishna Stavam
·
****
8.கோபால மந்திரம் என்பது என்ன ?
நிம்பர்க்கருக்கு நாரதர் பதினெட்டு அக்ஷரம் கொண்ட கோபால மந்திரத்தை உபதேசித்தார் அந்த மந்திரம்-
க்லிம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா
பக்தர்கள் சொல்லும் மஹா மந்திரம்
ராதே கிருஷ்ண ராதே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ராதே ராதே
ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம்
ஷ்யாம் ஷ்யாம் ராதே ராதே.
****
9..நிம்பார்க்க சம்பிரதாயத்துக்கு வேறு பெயர்கள் உண்டா?அவர்களுடைய குரு பரம்பரை என்ன?
உண்டு. குமார சம்பிரதாயம் , ஹம்ச சம்பிரதாயம், சனகாதி, சம்பிரதாயம் என்றும் அவர்களை அழைப்பார்கள்
ஹம்ச பகவான் இதை சனகாதி முனிவர் நால்வருக்கு அளித்த பின்னர், அவர்கள் நாரத முனிவருக்கு வழங்கினர்.
நாரதர்தான் நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கும் ஆசிரியர். அவர் நிம்பர்க்கருக்கு பதினெட்டு அக்ஷரம் கொண்ட கோபால மந்திரத்தை உபதேசித்தார்.
****
10.அவர் உபதேசித்த ஐந்து வழிகள் என்ன ?
நிம்பர்கரின் அணுகுமுறையை பேதாபேதம் என்பார்கள்; அதாவது பேதம்+ அபேதம் . அவர் இறைவனை அடைய ஐந்து வழிகளைக் காட்டினார்; அவை கர்மம் (சடங்குகள்) வித்யா (ஞானம்) உபாசனை அல்லது தியானம், பிரபத்தி (சரண் அடைதல்) , குருபசத்தி — குரு வினிடம் சரண அடைதல்
—SUBHAM—
TAGS- கோபால மந்திரம், நிம்பர்கர் , துவைத அத்வைதம் ,