மத்தியக் கிழக்கு நாடுகளில் சுவையான கல்வெட்டுகள் ! (Post No.13,912)

Written by London Swaminathan

Post No. 13,912

Date uploaded in London – 21 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 நாய் மீது கவிதை

பரதனுக்கு கேகய நாட்டு மன்னன் நிறைய தங்கம், ரத்தினம் யானை, குதிரைகளை அளித்ததோடு மிகப்பெரிய நாய்களையும் பரிசளித்தான் என்று வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டத்தில் ஒரு ஸ்லோகம்  உள்ளது. அந்த நாய்கள் அரண்மனை வாசலுக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பெரிதாம்!

இதே போல தமிழ்நாட்டில் ராஜபாளையம் நாய்களும் மிகவும் பிரசித்தம், வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுவதையும் அவை மான் கூட்டத்தைக் கலைத்து விரட்டும் அளவுக்கு வேகமாகச் செல்லக் கூடியவை என்றும் சங்க இலக்கியப்பாடல்கள் பாடுகின்றன.

பெர்னிக்கே என்பது எகிப்திய துறைமுகம். அங்கு டன் கணக்கில்  இந்திய பொருட்கள் கிடைத்தன அவைகளில் முத்துக்கள், இரத்தின மணிகள், யானைகள், இந்தியக் குரங்குகளின் எலும்புகள், தேக்கு, பருத்தித் துணிகள் முதலியன அடங்கும். தமிழன் ஒருவன் பிராமி லிபியில் தமிழ் தலைவன் கொற்றன் என்று எழுதியுள்ளான் பிராகிருத மொழியில் ஏனைய தென்னிந்தியர்கள் பெயர்கள் காணப்படுகின்றன

பாபிலோனைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களில் இந்திய வேட்டை நாய்களை ( Indian hounds) வளர்த்தார்கள் என்று ஹெரடோட்டஸ் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார்.  கடேசியஸ் (Ctesias)    என்பவரும் இதைக் கவனித்து பாரசீகர்கள் இந்திய நாய்களை வளர்த்தத்தைக் கூறுகிறார். இவை கேகய நாட்டிலிருந்து ஈரான்/ பாரசீகம்  வரை சென்றிருக்கலாம்.

கடேசியஸ் என்பவர் கிரேக்க நாட்டு டாக்டர் அவர் பாரசீக மன்னனிடம் பணிபுரிந்தவர். இந்தியா பற்றியும் எழுதியுள்ளார்

டாலமி பிலடெல்பஸ் (Ptolemy  Philadelphus )   என்ற மன்னனின்    பரிவாரத்தில் இந்திய வேட்டை நாய்களும் இருந்ததாகவும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 

பப்பைரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட  இரண்டு கவிதைகள் கிடைத்துள்ளன  அவை 2300 ஆண்டுகள் பழமையுடையவை; அதில் ஒரு நாய் அவரது எஜமானர் காட்டுப்பன்றியை வேட்டை ஆடியபோது அவரைக் காப்பாற்றுவதற்குத் தன்னுயிரை கொடுத்தது இதனால் அவைகளின் கல்லறை மீது இரண்டு கவிதைகள் பொறிக்கப்பட்டன.

பப்பைரஸ் என்ற புல்  போன்ற தாவரத்திலிருந்து எகிப்தியர்கள் காகிதம் தயாரித்ததால் பேப்பர் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது

****

நாய்க்கு ஒரு கல்வெட்டு ; நாய் மீது தமிழர்கள் அன்பு

உலகத்திலேயே முதல் முதலில் நாயைக் கவிதையில் ஏற்றிய புகழ் ரிக்வேதத்துக்கு உண்டு சரம/ சரமேயஸ் என்ற நாயை ரிக்வேதம் பாடியது அதை கிரேக்கர்கள் திருடி ஹெர்மஸ் என்றனர். ஏனெனில் அவர்கள் மொழியில் ‘ச’ எழுத்து கிடையாது; இதனால்தான் சிந்துவை ஹிந்துவாக்கி நமக்கும் அந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஆனால் உலகிலேயே முதல் முதலில் நாய்க்கு கல்வெட்டு வைத்தவன் தமிழன்.

உலகப் புகழ்   பெற்ற வரலாற்று அறிஞர் தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி எழுதிய செங்கம் நடுகற்கள் என்ற புஸ்தகத்தில் இதைச் செப்பியுள்ளார் கோவிவன் என்ற பெயருள்ள நாய்க்கு எழுப்பிய கல்வெட்டு அது

அது மாமன்னன் மஹேந்திர பல்லவன் காலத்தில் வடஆற்காடு செங்கம் வட்டாரத்தில் எடுத்தனுரில் வாழ்ந்தது. அதாவது இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.624-ல் வாழ்ந்தது.

திருடர்கள் பசுமாடுகளைத் திருடிச் செல்ல வந்த பொழுது தன்னை வளர்த்த கருந்தேவக் கத்தி என்பானைக் காக்க கோவிவன்  போராடியது. ஆயினும் கள்ளர்களின் தாக்குதலில் நாயும் அதை வளர்த்த எஜமானனும் இறந்துபட்டனர். இருவருக்கும் சமைத்த நடுகல் மூலம் நாம் இந்த வரலாற்றை அறிகிறோம்.

****

ஒரே நகரில் 220 கல்வெட்டுகள்

சுகோத்ரா (Socotra)  என்னும் தீவு இந்து மஹாசமுத்திரத்தில் (Yemen) யேமன் நாட்டில் உள்ளது. சவுதி அரேபியா அருகில் இருக்கிறது

The Hoq Cave contains a large number of inscriptions, drawings and archaeological objects. Further investigation showed that these had been left by sailors who visited the island between the first century BCE and the sixth century CE

அங்குள்ள ஹக் குகையில் சுமார் 220 கல்வெட்டுகள் இருக்கின்றன; ஆப்பிரிக்காவை நோக்கிச் செல்லும் கப்பல் பயணிகளும் மாலுமிகளும் வியாபாரிகளும் அங்கு இறங்கி தீர்ந்து போன பொருட்களை ,பண்டங்களை நிரப்பிக் கொண்டதாகத் தெரிகிறது . அங்கு சுமார் 220 கல்வெட்டுகள் பாரசீக, அராபிய, எபிரேய , இந்திய மொழிகளில் உள்ளன. பெரும்பாலான எழுத்துக்களும் பெயர்களும் குஜராத்திகளால் விடப்பட்டுள்ளன; பிராமி லிபியில் அவை உள்ளதால்  2000 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் அவை பொறிக்கப்பட்டன. குஜராத்தின் பாருக்கச்ச — ப்ரோச்– துறைமுகத்திலிருந்து அவர்கள் சென்றிருக்க வேண்டும்  192 கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும், பாக்ட்ரியன் கரோஷ்டி எழுத்துக்களில் ஒவ்வொன்றும் உள்ளன. கிரேக்க மொழியில் இரண்டு குறிப்புகள்தான் உள்ளன. இந்துக்கள்  எந்த அளவுக்கு வியாபாரம் செய்தனர் என்பதை கல்வெட்டுகளின் அபார எண்ணிக்கை காட்டுகிறது. லத்தீன் மொழியில் ஒரு கல்வெட்டும் இல்லாததால் இந்துக்கள்தான் எகிப்துக்கும் இத்தாலிக்கும் சென்று வியாபாரம் செய்தனர் என்றும் ஊகிக்கலாம்.

அங்கு காணப்பட்ட பெயர்கள்

காஞ்ச என்ற வியாபாரியின் மகன் விஷ்ணு, , மாலுமி ஸ்கந்தபூதி, பத்ரா ஆகியோர்  தங்கள் பெயர்களை பொறித்தனர்; இதைப் பார்கையில் பொரித்த இந்துக்கள் ஸ்வஸ்திகா, த்ரி சூலம்  ஸ்தூபங்கள் ஆகியவற்றையும் வரைந்துள்ளனர் மூன்று பாய்மரங்கள் உள்ள கப்பல்களையும் வரைந்துள்ளதால் பெரிய கப்பல்கள் என்பது தெரிகிறது. ராதா கிருஷ்ணன் பெயரில் பிரார்த்தனையும் இருக்கிறது ;  ஒரு புத்த பிட்சு, புத்தர் மீதான பிரார்த்தனையையும் விட்டுச் சென் றுள்ளார். சுக +  தரா  த்வீப என்பது சுகோத்ரா என்று மருவியது சுகத்தினை நல்கும் தீவு என்பது சுகோத்ரா என மாறிவிட்டது

சிரியன் கிறிஸ்தவர்கள் சிலுவைச் சின்னத்தையும் வரைந்துள்ளனர்

கடற்பயணம் சென்றோர் எவ்வளவு கடவுள் நம்பிக்கையுடன் சென்றனர் என்பதையும் சுவர் ஓவியங்களும் பிரார்த்தனைகளும் காட்டுகின்றன.

–subham—

Tags- நாய்   மீது கவிதை , கோவிவன், நாய், கல்வெட்டு , Ptolemy  Philadelphus Ctesias, 220 கல்வெட்டுகள், சுகோத்ரா, மத்தியக் கிழக்கு, நாடுகள் ,சுவையான

ராமாயணத்தில் வரங்கள் (20) ப்ரம்மா விராதனுக்கு வழங்கிய வரம்! (Post.13,911)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.911

Date uploaded in London – –21 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ராமாயணத்தில் வரங்கள் (20) 

ராமாயணத்தில் வரங்கள் (20) ப்ரம்மா விராதனுக்கு வழங்கிய வரம்!

ச. நாகராஜன்

இனி ஆரண்ய காண்டத்தில் வரும் வரங்களைப் பார்ப்போம்.

ஆரண்ய காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘ விராதனை அடிப்பது” என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணனோடு ஆரண்யத்தில் புகுந்த போது  பெரிய முகம் உடையவனும், பயங்கரமானவனும், மேடு பள்ளமான வயிறை உடையவனும், பார்க்கவே முடியாதவனும், வக்கிரனும், நீண்டவனும், விகாரமானவனும், கொடிய தோற்றமும் உடையவனும் புலித்தோலை உடுத்தவனும், ரத்தத்தினால் பூசப்பட்டவனும் வாயை யமன் போன்று பிளந்தவனுமான ஒருவன் பெரும் கூச்சலிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான்.

சீதையை அவன் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.

“விராதன் என்னும் அரக்கனான நான் ரிஷிகளின் மாமிசங்களையே புசிப்பவன். அழகு வாய்ந்த இந்தப் பெண் எனக்கு மனைவியாகட்டும். உங்கள் இருவரின் ரத்தத்தையும் குடிப்பேன்” என்றான்.

“நீங்கள் யார்” என்று விராதன் கேட்க இக்ஷ்வாகு வசமத்தைச் சேர்ந்த க்ஷத்ரியர்கள் நாங்கள். நீ யார்? என்று ராமர் கேட்டார்.

அதற்கு விராதன் இவ்வாறு பதில் கூறினான்:

“புத்ர: கில ஜயஸ்மாஹம் மம மாதா சதஹ்ரதா |

விராத இதி மாமாஹு: ப்ருதிவியாம் சர்வராக்ஷஸா: ||

அஹம்  – நான்

ஜயஸ்ய – ஜயன் என்பவனுடைய

புத்ர: – புதல்வன் என்று

கில – வதந்தி

மம – எனது

மாதா – தாய்

சதஹ்ரதா – சதஹ்ரதை என்பவள்.

ப்ருதிவியாம் – உலகில்

சர்வ ராக்ஷஸா: – அரக்கர்கள் அனைவரும்

மாம் – என்னை

விராத: இதி – விராதன் என்று

ஆஹு: – அழைப்பார்கள்

தபஸா சாபி மே ப்ராப்தா ப்ரஹ்மணோ ஹி ப்ரஸாதஜா |

சஸ்த்ரேணாவத்யதா \லோகேஸ்ஸேத்யா மேதத்வமேவ ச |\

மே – எனக்கு

தபஸா அபி – தவத்தால்

லோகே – உலகில்

சஸ்த்ரேண – ஆயுதத்தால்

அவத்யதா – சாவின்மை

ப்ரஹ்மண: – பிரம்மாவினது

ப்ரஸாதஜா ஹி – அனுக்ரஹத்தின் பயனாய்

ப்ராப்தா – கிடைத்திருக்கிறது

அச்சேதாம வரத்வம் ச – வெட்டமுடியாமையும் பிளக்கமுடியாமையும்

ஏவ ச – அங்ஙனமே கிடைத்திருக்கிறது.

ஆரண்ய காண்டம் மூன்றாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 5 & 6

என்று இவ்வாறு விராதன் பதில் உரைக்கிறான்.

பிரம்மாவினால் ஆயுதங்களால் தனக்கு மரணம் கிடையாது என்று தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான் விராதன்.

“ஓடி விடுங்கள்” என்று விராதன் கூற சினத்துடன் அவனை பாணத்தால் அடிக்கிறார் ஶ்ரீ ராமர். அவன் கை துண்டிக்கப்பட்டது. பிறகு அவன் ராம லக்ஷ்மணரை தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.

ராமர், “தவ வலிமையால் இவன் போரில் ஆயுதத்தால் கொல்லப்படாதவனாக இருக்கிறான். ஆகவே இவனைப் பள்ளம் வெட்டிப் புதைத்து விடுவோம்” என்கிறார்.

உடனே விராதன் அவரை வணங்கி தனக்கு குபேரன் இட்ட சாபத்தைக் கூறுகிறான்.

ராமரால் அவன் உடலை நீத்து ஸ்வர்க்கம் அடைகிறான்.

இங்கு ப்ரம்மா தனக்கு தந்த வரத்தை விராதன் கூறுவதைப் பார்க்கிறோம்.

Hindu Crossword Puzzle 20112024 (Post No.13,910)


Written by London Swaminathan

Post No. 13,910

Date uploaded in London – 20 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

12 3 4
X X X 
5   X 
X X X 
X XXX 
6   7 
X XX X
XX8   

Across

1.Avatar with …… on his shoulder (Sanskrit word)

5.English word Mega came from this (Sanskrit word)

6. Name of a Yādava, a friend and uncle of Kṛṣṇa. [It was he who induced Balarāma and Kṛṣṇa to go to Mathurā and kill Kaṃsa. Kṛṣṇa consented to go and promised to slay the demon within 3 nights, which he succeeded in doing.

8. Fire ceremony, Havan, Yaga (Sanskrit word)

****

Down

2.Kingless, so disorderly (Sanskrit word)

3.Netajis Army’s First word meaning Free, Independence, Urdu/Persian word

4.North, Reply (Sanskrit word)

7.Son of Dasaratha

*****

ANSWER/ SOLUTION

P1A2RA3SU4
xRxZxT
M5AHAxT
xJxDxA
xAxxxR
A6KRUR7A
xAxxAx
xxH8OMA

 –Subham–

Tags—Hindu Crossword Puzzle ,2011202.

தமிழ் தெரியுமா ? – 20112024 (Post.13,909)

Written by London Swaminathan

Post No. 13,909

Date uploaded in London – 20 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Tamil Crossword Puzzle

1  
  XXXXXXXXXXXX 
2  
  XXXXXXXXXXX3

 எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

குறுக்கே வலம் இடமாக செல்க

1.அந்தப் பெண் ரொம்ப ….(3 எழுத்து)

2.உடலில்  செல்களுக்கு இடையே உள்ள சுவர்  (3) Membrane

மேலிருந்து கீழே செல்க

1.இரு கைகளையும் கூப்பி …… செலுத்தினார் (4)

கீழிருந்து மேலே செல்க

3.இதைக் கொண்டு அடிக்கலாம்; விறகும் எரிக்கலாம்; இது ஒரு மரம்(4)

*************

A thing of beauty is joy for ever– John Keats

விடைகள்

அ1கு 
ஞ் க் 
ச2வ்வு 
லி ச3 

—-Subham—

Tags- தமிழ் தெரியுமா ? – 20112024 , Tamil Crossword Puzzle

Brahmi Letters from Egypt to South East Asia; Tamil, Sanskrit Names in the Middle East (Post .13,908)

Written by London Swaminathan

Post No. 13,908

Date uploaded in London – 20 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil and Sanskrit names are found in the inscriptions in Yemen near Saudi Arabia. Brahmi letters were used by the Hindu merchants who travelled towards Egypt 2000 years ago.

WilliAm Dalrymple gives very interesting details about 219 inscriptions found in one place called Socotra , a place in Yemen near Saudi Arabia. Surprisingly only two Greek inscriptions are there and none in Latin. That means Romans did not do the trade and a very few Greeks involved in the trade.

Tamil and other South East Asian scripts have been derived from Brahmi and we have even Sanskrit inscriptions in the virgin forests of Borneo (Indonesia).

Other interesting details are the names found are Vishnu, Skandabhuthi etc which shows Hindus were the merchants. One more interesting thing is they have drawn Swastika, Trisula of Shiva symbols in the caves in Socotra. That shows they were God fearing Hindu merchants.

Here is what William Dalrymple says in his book The Golden Road (year 2024)

“At the height of the Indo-Roman trade Socotra seems to have functioned as a refuelling stop, as well as a source of Dragon’s Blood, i.e.red Indian cinnabar resin. Over the centuries many of the merchants who pulled in to take water and food supplies carved their names into the walls and stalagmites of the caves in a variety of languages: Persian, Palmyrene, Aramaic, Ethiopic, Aksumite, Arabian, and Nabatean.  But most of the graffiti have been left by Indians, mainly Gujaratis from Barygaza (Broach or Bharuch); out of 219 inscriptions dating from second century CE to fifth century CE, 192 are written in the Indic Brahmi script and one each in Bactrian and Kharosthi. In contrast there are just two inscriptions in Greek and none in Latin.

“They give names that are clearly and unquestionably Indian: Vishnu,  son of merchant Ganja, Skandabhuti, the sea captain or the nicely laconic ‘Bhadra arrived’. They appear to come from differing levels of Indian society Kshatrias and Vaisyas . There are images of Stupas, Swastikas, Trisulas , Syrian Christian Crosses and pictures of large three masted  Indian ships , as well as prayers to Krishna and Radha, invocations of the Buddha and Triratna symbol inscribed by a Buddhist monk . Even the name of the island itself derives from  Sanskrit Sukhadhara Dwipa, the blissful island.”

****

Tamil Inscription in Egypt

Berenike is a port in Egypt. Tons of Indian finds including gems and pearls, woven mats and baskets teak from Kerala, and even bones of monkeys and elephants – specifically rhesus and bonnet macaques from India are discovered.  Indeed, a steady stream of finds from the Indian trading community had been emerging from the stretch of Egyptian desert sand for some time.  A great many finds of cotton weave have turned up in Berenike, which the archaeologists believe to be of a variety grown in Gujarat and Indus delta.

A Tamil pottery graffito was written by a Tamil visitor who called himself Chieftain Korran, while Prakrit inscriptions recorded the visits of other South Indians. Deposits of rice, dal, coriander, coconuts and tamarind show that these South Indian merchants preferred their own deliciously peppery cuisine to that of Egypt”.

(Sanskrit inscriptions in Brahmi script are found in many South East Asian countries from second century CE. From Egypt to Indonesia we see Sanskrit names such as Vishnu, Mulavarman, Skanda bhuti etc. Tamil inscriptions are also found in Malaysia).

–Subham—

Tags- Brahmi script, Tamil Sanskrit names, Socotra ,Berenike, Egypt, Indonesia, 219 inscriptions, Gujaratis, The Goden Road

கபிலேஸ்வரம் சிவன் கோவில் Part- 44 (Post No.13,907)

Written by London Swaminathan

Post No. 13,907

Date uploaded in London – 20 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கபிலேஸ்வரம் சிவன் கோவில் Part- 44 (Post No.13,907)

ஆந்திரப் பிரதேசத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 44

திருப்பதி செல்வோர் திருமலைக்கு ஏறிச்சென்று வெங்கடாசலபதியை மட்டும் தரிசித்துவிட்டு லட்டு வாங்கிக்கொண்டு மலையிலிருந்து இறங்கி சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள் மலை மேல் அருவிகள், மலைக்குகைகள், வினோத வடிவ பாறைகள் இருப்பது தெரியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தகைய பாறைகளை இயற்கை அதிசயங்களாக அறிவித்து சுற்றுலாப் பயணிகளை இழுக்கிறார்கள்; ஒரு வகையில் பார்த்தால் இத்தகைய இடங்கள் புகழ் பெறாமல் இருப்பது நல்லதே; ஏனெனில் ஏற்கனவே கூட்டம் குவியும் திருமலையின் புனிதத்தை சுற்றுலாப்பயணிகள் கெடுத்து விடுவார்கள். நிற்க.

சிவன் கோவில்

மலை அடிவாரத்திலேயே ஒரு சிவன் கோவில் இருப்பதும் அழகான அருவி இருப்பதும் பலருக்கும் தெரியாது. கபிலேஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றுதான் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே சிவன் கோவில்

திருமலை  அடிவாரத்தில் கபில தீர்த்தம் உள்ளது. அருகிலுள்ள மலையிலிருந்து வரும் அருவி நீரால் அது நிறைகிறது. அங்கு குகையில் தான்தோன்றி- அதாவது ஸ்வயம்பு லிங்கம் உள்ளது 

அங்கு கபில முனிவர் பூஜித்த சிவன் காட்சி தருகிறார். அதனால் கபிலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவ பக்தர்கள் சிவராத்திரி , கார்த்திகை தீப விழா, ஏனைய சைவ சம்பந்தமான விழா நாட்களில் இங்கு அதிக அளவு வருகிறார்கள்

கபிலேஸ்வரம் -ஒரு சிவன் கோவிலாக இருந்தாலும் இதுவும் திருப்பதி பாலாஜி கோவிலின் நிர்வாகத்திலேயே இருக்கிறது .

கோவிலில் காமாட்சி அம்மன், விநாயகர்  சுப்பிரமணியன், அகத்தீசுவரர், ருக்மிணி சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின் விக்கிரகங்களும் இருக்கின்றன.

முக்கிய விழா பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். அப்போது ஒன்பது நாட்களுக்கு பலவகை வாகனங்களில் இறைவன் பவனி வருகிறார்.

சிவன் சந்நிதியின் முன்னால் நந்தியும் உளது.

இந்தக் கோவிலின் வரலாறு எழுநூறு ஆண்டுகள் பழமையானது விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் இதை வணங்கி வழிபட்டது தெரிகிறது அவர்களில் குறிப்பாக சாளுவ நரசிம்மதேவ ராயர்  கிருஷ்ண தேவ ராயர், அவருக்குப்  பின்னால் வந்த மன்னர்களும் வழிபட்டனர்.

மலை மீதிருந்து விழும் அருவியிலும் கபில தீர்த்த குளத்திலும் பகதர்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

மலை அடிவாரத்தில் சக்கரத்தாழ்வார் பெயரில் உள்ள ஆழ்வார் தீர்த்தம் அருகில் இருக்கிறது. இயற்கை அழகு மிக்க இடம். ஆழ்வார் தீர்த்தம் ராமானுஜர் காலத்திலிருந்தே பெயர் பெற்றதால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடம் வழிபடப்பட்டிருக்கிறது ஆனால் கபிலேஸ்வரர் பற்றிய முதல் குறிப்பு  1563 கல்வெட்டில் உள்ளது.

ஒருகாலத்தில் இந்த இடம் சோழர் ஆட்சிக்குட்பட்டு இருந்தது ; கோவிலில் சோழர் கால செல்வாக்கினைக் காணலாம். ஐந்து கல்வெட்டுகள் கோவில் வளாகத்தில் உள்ளன. ஒன்று முக மண்டப கதவிலும், ஏனைய நான்கு,  குளத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன. விஜயநகர மன்னன் அச்சுத ராயன், குளத்துக்கான படிகளையும் சந்தியா வந்தன மண்டபத்தையும் கட்டினான் என்று கல்வெட்டு சொல்கிறது. கருவறைப்பகுதி சோழர் காலத்தைச்  சேர்ந்தது. மற்ற பகுதிகள் விஜய நகர அரசர் காலத்தில் எழுப்பப்பட்டன.

எப்படிச் செல்வது ?

திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் செல்கின்றன. தனியார் கார்களிலும் செல்லலாம். ஆனால் கார்களை நிறுத்த வசதிகள் குறைவு. மலையடிவாரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு. அலிப்பிரி வாசலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு. 

திருப்பதி நகரிலிருந்து ஆட்டோ, டாக்சிக்கள்  மூலமும் செல்லலாம்

–subham—

Tags- கபிலேஸ்வரம், சிவன் கோவில், Part- 44, ஆந்திரம், 108 புகழ்பெற்ற, கோவில்கள்

ராமாயணத்தில் வரங்கள் (19) சதி அனசூயை சீதைக்கு வரம் அளிக்க முன் வந்தது! (Post No.13,906)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.906

Date uploaded in London – –20 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (19) 

ராமாயணத்தில் வரங்கள் (19) சதி அனசூயை சீதைக்கு வரம் அளிக்க முன் வந்தது!

ச. நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் நூற்றுப்பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘ சீதைக்கு ஆபரணம் முதலியவற்றை அளித்தல்’ என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமர் சீதையுடனும் லக்ஷ்மணருடனும் கிளம்பிச் சென்று நேராக அத்ரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.

அத்ரி  முனிவரை ராமர் பணியவே அவரைத் தன் புதல்வன் எனவே ஏற்றுக் கொண்டார்

அத்ரி மஹரிஷி.

அத்ரி மஹரிஷியின் மனைவியான பதிவிரதை அனசூயை சீதையை வரவேற்று உபசரித்து பதிவிரதா தர்மத்தைப் பற்றிப் பேசலானார்.

சீதை, “சாவித்ரி தேவி பதி சுச்ருஷையைச் செய்து ஸ்வர்க்க லோகத்தில் கொண்டாடப்படுகிறாள். ரோஹிணி ஆகாயத்தில் சந்திர பகவானை விட்டு ஒரு நிமிடம் கூட அகல்வதில்லை. இத்தகைய உத்தம மாதர்கள் தங்கள் புண்ய செயலால் நன்கு மதிக்கப்படுகின்றனர்” என்று இவ்வாறு அனசூயையிடம் கூறவே அதனால் அனசூயை வெகு சந்தோஷமடைந்து சீதையை இன்னும் அதிகமாய் உற்சாகப்படுத்துபவளாய் உச்சி முகர்ந்து பேசினாள் இப்படி:

நியமைர்விவிதைராப்தம் தபோ ஹி மஹதஸ்தி மே |

தத்சம்ஸ்ரித்ய பலம் சீதே சந்தயே த்வாம் சுசிஸ்மிதே ||

சீதே – சீதே

விவிதை: – எத்தனையோ விதங்களான

நியமை: – நியமங்களால்

ஆப்தம் – கிடைத்த

மஹத் – மஹத்தான

தப: தவ மஹிமை

மே அஸ்தி – எனக்கு இருக்கிறது

சுசிஸ்மிதே – கபடமற்ற புன்னகையுள்ள பெண்மணியே!

தத் பலம் – அந்த தவத்தின் திறத்தை

சம்ஸ்த்ரித்ய ஹி – கைப்பற்றி இருப்பதால்

த்வாம் – உன்னை

சந்தயே  – வேண்டியதைக் கேள் என்கிறேன்

உபபன்னம் ச யுக்தம் ச வசனம் தவ மைதிலி |

ப்ரீதா சாஸ்ம்புசித்தம் கிம் தே கரவாணி வ்ரவீஹி மே ||

அயோத்யா காண்டம் 118-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14 & 15

மைதிலி – மைதிலி

தவ வசனம் – உனது சொல்

உபபன்னம் ச – ஏற்றதாயும்

யுக்தம் ச – சரியானதாகவும் இருக்கிறது

ச – ஆகையால்

ப்ரீதா – மனம் மகிழ்ந்தவளாக

அஸ்மி – இருக்கிறேன்

தே – உனக்கு

உசிதம் – இஷ்டமானது

கிம் – யாதோ அதை

கரவாணி – செய்வேன்

மே வ்ரவீஹி – எனக்குச் சொல்வாயாக

இவ்வாறு அனசூயை சீதையின் சொற்களால் மனம் மிக மகிழ்ந்து வேண்டியதைக் கேள் தருகிறேன் என்கிறாள்;.

ஆனால் சீதையோ எனக்கு வேண்டியது யாதொன்றுமில்லை என்று பதில் உரைக்கிறாள்.

 இதனால் இன்னும் அதிக சந்தோஷமடைந்த அனசூயை மாலை, வஸ்திரம், ஆபரணங்கள், வாசனை திரவியங்கள், வெள்ளை சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அனைத்தையும் அன்புடன் சீதைக்கு மனமுவந்து வழங்குகிறாள்.

அவற்றை சீதை ஏற்கிறாள்.

இங்கு அனசூயை தனது தவ மஹிமையால் வரம் தருகிறேன் என்று கூறிய போதும் அதை சீதை ஏற்கவில்லை.

ஆனால் அன்புடன் கொடுக்கப்பட்ட வஸ்திரம், ஆபரணம் உள்ளிட்டவற்றை ஏற்கிறாள்.

***

Poems on Indian Hunting Dogs on papyrus! (Post No.13,905)

Written by London Swaminathan

Post No. 13,905

Date uploaded in London – 19 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindus are the first one to give a place to DOGS. We see dog Sarameyas in the oldest book in the world, The Rigveda. Then we see the dog that accompanied Yuthisthira upto heaven in the Mahabharata.  Before that we see dogs in the Ramayana, where Kekaya was praised for its dogs. And this goes upto Tamil Nadu whee a dog got a place in he tamil inscription.

***

Rajapalayam in Tamil Nadu is also famous for its special kind of dogs.

Indian hounds were much valued by foreigners. According to Herodotus , the Persians of his time had four villages around Babylon to raise and feed the Indian hounds.

Ctesias also noticed the Indian hounds of the Persians , and similar dogs were shown  in the procession of Ptolemy  Philadelphus. We have also a papyrus of third century BCE on which are two separate epitaph  poems  written for Tauron, which had given is life in saving the master in a fight with a wild boar.

I am reminded of a Tamil Hero Stone in Tamil Nadu, where a dog by name Kovithan is praised. It saved the villagers from robbers attacks.

South Indian hunting dogs are well known for their ferocity. Sangam Tamil poets also gave apt epithets to such dogs. Natrinai and Purananuru poems described the hunter keeping such dogs in the forest. They run very fast to chase the deer, the poets say.

Apart from dogs, India exported all sorts of birds and big animals such as tigers, lions and elephants. The 2300-year-old Baveru Jataka, one of the Jataka tales, describe how the Hindus thrilled the Babylonian people and kings with dancing peacocks.  They used to play the drums in such a way to emit the sound of thundering clouds, and then the peacocks danced. Babylonians were excited to see a strange bird with big, long feathers. Indians took with them parrots as well and showed them how they repeat what they say.

Strabo , Greek historian and geographer says, that he saw a nine foot long Indian cobra in Egypt.

From the days of Augustus India had direct contact with the Roman empire. He conquered Egypt in the first century BCE. Chera, Choza, Pandyan kings sent ambassadors to him. He got excited to see Indian elephants, tigers and snakes.

Unfortunately, Indian animals were used in the shows of gladiators. They set the ferocious animals in the open ground against slave and prisoners. Most of the times tigers and lions tore the victims and the huge crowd and the rulers welcomed it with big uproar. If the men win the fight they were released from slavery.

A lot of references to Indian exports are in the Roman and Greek books.

Indian elephants were first introduced into Europe by Hannibal who took the mighty elephants across the Alps. Before that the Greeks knew about elephants after the invasion of Alexander.

Indian cotton and silk also went up to Rome. Dye from Indigo plant and sea shells were used to colour the silk garments of the rulers and lords in Rome. Indian cotton was used in embalming Egyptian kings as mummies after their death. Teak wood was found in Ur in Babylonia. All this evidence show India had very fruitful relation with the Middle East and Europe for thousands of years. Mc Grindle, Warmington and several others have given a long list of Indian products found in Europe. Prof K A Neelakanta Shastri and Dr R Nagaswamy have written about these contacts.

World famous Tamil archaeologist Dr R Nagaswamy has given a long list of Roman coins found in Tamil Nadu and Kerala. We got several thousand gold and Copper coins from the banks of river in Karur (ancient Vanchi) and many other places. After third century CE, all the contacts stopped suddenly due to political turmoil.

Tamil Sangam literature referred to Yavanas (Romans) in six places.

–subham—

Tags- Roman contacts, Tamil Hindus, hounds, pomes, elephants, Gladiators, Cobra, Strabo, Herodotus, Augustus.

ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி (Post No.13,904)

Written by London Swaminathan

Post No. 13,904

Date uploaded in London – 19 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முத்துக்களையும் மிளகையும் தமிழர்கள் ஏற்றுமதி செய்து இதாலியிலிருந்து தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்தனர் . இதனால் ரோமாபுரியின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதாக அந்தக் கால இத்தாலிய அரசியல்வாதிகள் புலம்பித் தள்ளினர்.

முத்து, மிளகு ஏற்றுமதி

ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் முத்துக்கள் குறித்தும் இந்தியர்கள் குறித்தும் நிறைய செய்திகள் உள்ளன. அனால் ஷேக்ஸ்பியர் இந்தியர்களின் எதிரி. இது தெரிந்தால் இந்தியாவில் முன்னூறு ஆண்டு ஆங்கில  ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதி அவர் இந்தியர் என்று சொன்னது மேற்கிந்தியத்தீவுகளின் கருப்பர்கள் என்று பொய்யுரை பரப்பினர்.

முத்துக்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மன்னர் வளைகுடாவிலிருந்து எடுப்பபட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பாரசீக வளைகுடாவில் முத்துக்கள் கிடைத்தாலும் அதை  எடுத்ததாக வரலாற்றுச் செய்திகள் கிடையாது.

உலகப் பேரழகி கிளியோபாட்றா மதுபானத்தில் முத்துக்களைக் கரைத்துக் குடித்தது உலகறிந்த செய்தி.

அகஸ்டஸ் சீசர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தை வென்றார். அங்கு டாலமி வம்ச அரசர்கள் சேகரித்த அத்தனை பொக்கிஷங்களையும் ரோமாபுரிக்கு கொண்டு சென்றார். பாம்பி என்ற மன்னனும் ரோமாபுரிக்கு நிறைய செல்வத்தைக் கொணர்ந்தான் ; இதனால் முத்துக்களின் மோகம் அதிகரித்தது.

ஸ்டராபோ என்ற கிரேக்க எழுத்தர் எழுதிய குறிப்பில் 120 கப்பல்கள் ஒரே நாளில் இந்தியாவை நோக்கிச் சென்றதை தான் கண்டதாக எழுதிவைத்துள்                                                  ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு ஏற்றுமதி, முது ஏற்றுமதி பற்றி சங்க இலக்கியத்திலும் சம்ஸ்க்ருத இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன .

சங்க இலக்கியத்தில் யவனர்கள் பற்றிய குறிப்புகள் குறைந்தது ஆறு இடங்களில் வருகிறது ;அலெக்ஸ்சாண்டர் படையெடுத்தபோது  இந்தச் சொல்லை கிரேக்கர்களுக்குப் பயன்படுத்தினர். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரையில்  இது ரோமானியர்களையே குறித்தது . கடந்த  400 ஆண்டுகளாக இது அராபிய வியாபாரிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது அப் போது யவனர் என்பதை யோனர் என்று சொன்னார்கள்.

இத்தாலியில் ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு விலையுயர்ந்த முத்தினை விழுங்கிய செய்தியும்  உள்ளது.

ரோமானிய பிரபுக்களின் பெண்கள் முத்து மாலைகளுக்குச் செலவிடும் பணத்தால் ரோமானிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது அவர்கள் தங்கக் கட்டிகளை தமிழ் நாட்டுக்கு அனுப்பி முத்துக்களையும் மிளகினையும் ஏற்றிச் சென்றனர். இதனை சங்கத் தமிழ்ப்   புலவர்களும் பாடியுள்ளனர்.

எகிப்தில் பெர்னிக்கே என்ற இடத்தில் ஜாடிகளில் மிளகு கண்டுபிடிக்கப்பட்டது எகிப்திலுள்ள இந்தத் துறைமுகத்தில் பத்து கிலோ மிளகு ஜாடிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஆங்கிலத்தில் மிளகினை பெப்பர் PEPPER , BLACK PEPPER என்பார்கள்; இது பிப்பலி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தது ; தமிழ் தெரியாத ஒருவர் இதைத் தமிழ்ச் சொல் என்று தவறாக எழுதினார். பிப்பலி என்பது தமிழ்ச் சொல் என்று அவர் கருதினார் ; சங்க இலக்கியத்திலோ தற்காலத்திலோ இப்படி ஒரு தமிழ்ச் சொல் கிடையாது .சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆனந்த விகடன் அகராதியிலும் கூட பிப்பலி என்பது திப்பிலி என்ற மருந்துச் சரக்கு என்றே கூறுகிறது அதுவும் சங்க இலக்கியத்தில் இல்லாத சொல்லே.

முத்து என்பதை பேர்ல் PEARL என்று ஆங்கிலத்தில் விளம்புவர் ;அது பரல் என்ற தமிழ்ச் சொல்லின் மருவு. அதையும் ஆங்கிலயர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை அது ஏதோ ஒரு லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கதை அளபார்கள். காரணம் என்னவெனில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையதே. அதற்கு முன்னால் அவர்களால் பார்க்க முடியாது  

இப்போது மிளகு கிடைப்பது போல முதல் நூற்றாண்டிலேயே ரோமாபுரியில் மிளகு கிடைத்தது  அபிஷியஸ் என்பவர் ஒருவர் Eighty percent of the 478 recipes  included in the Roman cook book of Apicius அந்தக் காலத்தில் சமையல் புஸ்தகம் எழுதினார் அதிலுள்ள 478 சமையல் குறிப்புகளில் எண்பது சதவிகித உணவுப் பண்டங்களில் மிளகினை சேர்த்து இருக்கிறார்கள்  அதே காலத்தில் ஸ்பெயின் நாட்டில் மார்டியல் Spanish poet Martial  என்ற புலவர் இருந்தார். அவர் பாடிய பாடலில் “அடக் கடவுளே எனது சமையல்காரன் எனக்குத் தயாரிக்கும் உணவில் சேர்க்கும் மிளகின் அளவினைப் பார்த்தால் அதை விலைக்கு வாங்குவதிலேயே என்னை போண்டி ஆக்கி விடுவான்- திவால் ஆக்கி விடுவான் — போல இருக்கிறதே என்றும் புலம்பியுள்ளார்.

****

Baveru Jataka Story

அரி/சிங்கம், கரி/யானை, புலி, கிளி, மயில்

தமிழர்கள் இஞ்சி GINGER IVORY ROMAN KARUR BR DR R NAGASWAMY தந்தம் ஆகியவற்றையும் தேக்கு மரத்தையும் ஏற்றுமதி செய்தார்கள் ; பாபிலோனில் ஊர் Ur என்னும் மிகப் புராதன நகரில் தேக்கு மரத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்தன.

ஜிஞ்சர் என்ற ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகவும் அது தமிழ் அல்லது ஸ்ருங்கிவேர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து கிரேக்க மொழியில் நுழைந்திருக்கலாம் என்றும் எழுதினர். ஆனால் தமிழ் நாட்டில் இஞ்சி விளைவதால் அதைத் தமிழ்ச் சொல் என்றே கருதவேண்டும் இதற்கு எடுத்துக்காட்டாக மிளகுத் தண்ணீர் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில அகராதிகளில் நுழைந்ததைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நூற்றுக்ககணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்கக் காசுகளும் தாமிரக் காசுகளும் கிடைத்ததை உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் இரா நாகசாமி ரோமன் கரூர் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார் இதனால் சங்க கால பர ணர் போன்றோரின் காலமும் உறுதி செய்யப்பட்டதை அவர் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள கரூரின் ரோமானியத் தொடர்புகளையும் டாக்டர் இரா. நாகசாமி விளக்கியுள்ளார்

ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் பிரபுக்கள், உயர்மட்ட தலைவர்கள் இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிவார்கள்; அவர்களுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் தாவர பிராணிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாயத்தை ஏற்றி அனுப்பியதையும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்

பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் எகிப்து, பாரசீகம் ரோமானிய சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு அனுப்பியதற்கான சான்றுகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிடைக்கின்றன. இந்துக்களுக்குப் பருவக்காற்று ரகசியம் தெரிந்து இருந்ததால் குறிப்பிட்ட நாளில்  பாயமரத்தை விரித்தால் காலணாக் காசு செலவில்லாமல் உலகம் முழுதும் சுற்றி வந்தனர். இந்த விவரம் மகாவம்ச நூலிலும் உளது.

ஹெரோடோடஸ், அரிஸ்டாடில் ஆகியோர் எழுதியவற்றிலிருந்து மூவாயிரம் ஆண்டுத் தகவல் கிடைக்கிறது.

பாம்பும் மயிலும்

இந்தியாவிலிருந்து பாம்பு, மயில், கிளி, புலி, சிங்கம், யானை ஆகியன கப்பலில் சென்றன; இந்தியாவிலிருந்து வந்த ஒன்பது அடி நீள பாம்பினை எகிப்தில் கண்டதாக ஸ்டராபோ எழுதியிருக்கிறார்

வார்மிங்க்டன், மக்  கிரிண்டில் ஆகியோர் எழுதிய நூல்க ளில் வேட்டை நாய் , குரங்கு, யானை ஏற்றுமதி பற்றியும் உளது; ஜாதக கதைகளிலே– அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரே—- மயில், கிளி ஏற்றுமதி பற்றிய குறிப்பு உளது. மயிலைக் கொண்டு சென்று பாபிலோனிய அரண்மனையில் நிறுத்தி உறுமி மேளம் வாசித்தபோது மயில்கள் மேக கர்ஜனை என்று கருதி ஆடின. அதைக் கண்டு அசந்தே போயினர் பாபிலோனிய மன்னர்களும் பொது மக்களும்.

சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மத்தியக் கிழக்கில் இருக்கும் கல்வெட்டும் கிடைத்துள்ளது

ஆப்பிரிக்காவில் யானைகள் இருந்தபோதும் எகிப்திலோ வேறு எங்குமோ யானைகள் பற்றிய குறிப்புகளே இல்லை. ஆனால் இந்திய மாவுத்தர்கள் யானை மொழியை உண்டாக்கி கஜ சாஸ்திரம் என்று புஸ்தகமே எழுதிவிட்டனர். அலெக்ஸ்சாண்டர் படை எடுப்பின்போதுதான் அவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்து வியந்தது போலப் பார்த்து பிரமித்து நின்றனர். ஹனிபால் காலத்திலிருந்து யானைகள் ஐரோப்பாவில் காணப்படுகின்றன.

ரோமாபுரியில் மிகப்பெரிய கொடுமை நடந்தது; அதற்கு இந்தியாவிலிருந்து வந்த சிங்கங்களையும் புலியையும் பயன்படுத்தினர்; எதிரிகளை கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்; அவர்களையும் மிருகங்களையும் கூண்டுக்குள் வைத்து பிரம்மாண்டமான திடலில் மோத விடுவார்கள் .உயரமான இடத்திலிருந்து பாதுகாப்புடன் அதைக் கண்டு ஆனந்திப்பார்கள்; புலியும் சிங்கமும் மனிதனைக் குதறுவதைக் கண்டு கூச்சலிட்டு மகிழ்ந்தார்கள் இதற்கு இந்திய மிருகங்களைப் பயன்படுத்தினர் அந்த மனித மிருகங்கள்!!!

அகஸ்டஸ் போன்றார் புலி சிங்கத்தைக் கண்டு வியந்த செய்திகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள்

அரியும் கரியும் புலியும் கிளியும் இந்தியாவின் புகழை மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பரப்பிய விஷயங்களை ஒரு புஸ்தகம் முழுதும் எழுதலாம் .

****

Augustus (born September 23, 63 BCE—died August 19, 14 CE Nola, near Naples [Italy]) was the first Roman emperor.

அகஸ்டஸ் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. ஜுவலியஸ் சீசரைப் படு கொலை செய்தவர்களைப் பழிவாங்கினார். அவரது சபைக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தூதர்களை அனுப்பியதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

****

Strabo (born c. 64 BCE Amaseia, Pontus—died after 21 CE

ஸ்டராபோ என்பவர் கிரேக்க நாட்டு வரலாற்று புவியியல் அறிஞர்

***

Herodotus (born 484 BCE? Greek author of the first great narrative history produced in the ancient world,

ஹெரோடோட்டஸ் — கிரேக்க வரலாற்று ஆசிரியர் ; நமது புராணத்தில் சொன்ன வரலாற்றை நமபாத அரை வேக்காடுகள் இவரை வரலாற்றின் தந்தை என்று அழைக்கும்!!!

****.

Hannibal 247 BCE – between 183 and 181 BCE) கார்தேஜ் படைத்த தளபதியான ஹனிபால் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று ரோமுடன் சண்டை போட்டார்

—SUBHAM —

TAGS- முத்து, மிளகு, ஏற்றுமதி அரி ,சிங்கம் ,கரி ,யானை, அரி – சிங்கம் ,கரி, யானை ,புலி கிளி மயில்

அன்னை முதற்றே உலகு- 2 (Post No.13,903)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.903

Date uploaded in London – –19 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது. 

அன்னை முதற்றே உலகு- 2 

  ஸ்ரீஅன்னையின் பிரார்த்தனையும் தியானமும்                        

 —————————————————————————– 

இராதையின் பிரார்த்தனை

     முதலில் கண்டவுடனே எனது பிரபுவும், எனது இறைவனும் நீரே என்று அறியாயும்படியாயுள்ள ஒருவரே, இதோ எனது சமர்ப்பணத்தை,  ஏற்றருளும்.

     எனது எண்ணங்களெல்லாம், எனது மெய்ப்பாடுகளெல்லாம், எனது இதயத்தின் ஆசாபாசங்களெல்லாம், எனது உணர்வெல்லாம், என் வாழ்வின் இயக்கங்கள் அனைத்தும், என்னுடலில் ஒவ்வொரு அணுவும், என் உதிரத்தில் ஒவ்வொரு துளியும் நின்னதே. பரிபூரணமாகவும் எவ்வித மறைப்புமின்றி உமக்கே நான் உரிமையானேன். நீர் எதை விரும்புவீரோ, அவ்வாறே நானாவேன். வாழ்வாயினும், சாவாயினும், இன்பமாயினும், துன்பமாயினும், சந்தோஷமாயினும்,கஷ்டமாயினும், எனக்காக நீர் எதைத் தேர்ந்தெடுப்பீரோ, அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளுதற்கு இனியனவே. நினது ஒவ்வொரு பரிசும் எனக்கு மிக மேலாம் வளங்கொணரும் தெய்வீகப் பரிசாகும்.

திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்

     எந்த அரசாலும் கையாளப்படமுடியாத ஒரு சக்தி இருக்கிறது, இப்புவியின் எந்த வெற்றியாலும் அளிக்கமுடியா ஒரு உலகம் இருக்கிறது, இங்குள்ள எந்த அறிவாலும் எட்டமுடியா ஒரு மெய்ஞான ஒளி இருக்கிறது, எந்த தத்துவ சாஸ்திரமும் கண்டிராத ஒரு வித்தை இருக்கிறது, எந்த ஆசையின் திருப்திகரத்தாலும் உண்டாகாத ஓர் பரமானந்தம் இருக்கிறது, எந்த மானுட உறவாலும் தணிக்கமுடியா ஓர் பிரேமை இருக்கிறது, வேறெங்குமில்லாத, மரணத்திலும் கூட கிட்டாத ஓர் சாந்தி இருக்கிறது.

     தவம், சுகம், மெய்ஞ்ஞான ஒளி, வித்யை, பேரின்பக்களி, பிரேமை, சாந்தி இவையே திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்.

நின் மலரடிக்கு வணக்கம்

    பிரபோ, நினை வேண்டி, நினை நாடுகிறேன். நின் அனந்த பிரேமைக்கு என் இதயம் ஏற்ற பாத்திரம் ஆகும் பொருட்டே விசாலமாய் திறப்பட்டு அது நின் மலரடி வணங்குகிறது.

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது. அச்சமற்றவனுக்கே வெற்றி; எப்போதும் நான் உனக்கு உறுதுணையாயிருந்து ரக்ஷ¢க்கிறேன்.ஒரு போதும் பயப்படக் கூடாது. நீ தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்க வேண்டும்.ஆபத்து ஏதாவது ஏற்படின் என்னை உதவிக்குக் கூப்பிடும் சக்தி உனக்கு வேண்டும்.அதனால் பயங்கரக் கனவுகள் மாயமாய் மறையும்.

எது தேவையோ அதை அருள்வாயாக!

நாம் வற்புறுத்திப் பிடிவாதம் செய்வோமாயின் நம் அறிவில் தெளிவை உண்டாக்கவும், நம் தவறை நாம் உணரவும், மெய்ப்பொருள் தர்மத்தை ஒவ்வ நாம் ஆசை வைத்ததில் எல்லாம் தேவையைக் காண்பதரிது என்பதை நாம் தெளியுமாறு நாம் விரும்புவதை பரமன் நமக்கு அருளவும் கூடும். பொதுவாக பரமன் நம் பொருட்டு கருணை கூர்ந்ததன் விளைவாய் நமக்கு நன்மை பயப்பதற்கு மாறாய் கேடே விளைகிறது. அது சமயம் பரமன் எதற்காக தீமை பயக்கும் வரத்தை அருளினான் என்று அவனை எதிர்த்துக் கேட்கிறோம். நாம் ஆசைப்பட்டதையே அநுக்கிரகம் செய்தான் என்பதை அடியோடு மறந்து விடுகிறோம். இதற்கு மாறாக நாம் ஆசைப்பட்ட பொருளை பரமன் அருளாவிட்டாலோ, ஏன் நான் கேட்டது அது தானே? அது எனக்கு அவசியமாயிற்றே! அது எனக்குக் கிடைக்கவில்லையே! என்றெல்லாம் சொல்லி, பரமனை எதிர்த்து விரோதித்துக் கொள்கிறோம். பரமன் எதைச் செய்த போதிலும்  அவனை எப்போதும் நாம் எதிர்க்கிறோம். இவற்றிற்கெல்லாம் மாறாக, நம்முள் மெய் -வேட்கை இயல்பாக உண்டாயின், அதுவே ஒரு தீவிர தேவை ஆய்விடின், நாம் எதை நம் இருக்கையின் உண்மையெனக் கருதுகிறோமோ அதை காண நம்முள் ஓர் கனியும் ஆர்வம் இருப்பின், அது தான் அனைத்திற்கும் மூலம், பரம சுகம். நாம் தேடி அலைவதற்கெல்லாம் முடிவு, பிரச்சினைகளுக்கெல்லாம் உத்தரம்.

நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

***