ஜனவரி 2025 காலண்டர்; வள்ளலார் பொன்மொழிகள் (Post No.14,039)

Written by London Swaminathan

Post No. 14,039

Date uploaded in Sydney, Australia – 1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்/ வள்ளலார் பொன்மொழிகள்

வள்ளலாரின் தெய்வமணிமாலை பாடலிலிருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள்

****

பண்டிகை நாட்கள்:– ஜனவரி 1-புத்தாண்டு தினம்; 6-குரு கோவிந்த ஜெயந்தி; 10-வைகுண்ட ஏகாதசி; 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி ; தேசீய இளைஞர் தினம் ;  13- போகிப் பண்டிகை; ஆருத்ரா தரிசனம் 14- பொங்கல்/ மகர சங்கராந்தி 15- மாட்டுப்பொங்கல் ;கணுப்பொங்கல்- திருவள்ளுவர் தினம்; 16-உழவர் தினம்; 23- நேதாஜி ஜெயந்தி 26-குடியரசு தினம்; 29-தை அமாவாசை; 30- காந்திஜி நினைவு தினம்

*****

அமாவாசை- ஜனவரி 29; பெளர்ணமி-13; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25

சுப முஹுர்த்த நாட்கள்

  • January 16: Thursday, with a Subh Tithi of Tritiya 
  • January 19: Sunday, with an auspicious marriage muhurat from 12:28 PM to 8:28 PM 
  • January 23: Thursday, with an auspicious marriage muhurat from 3:38 PM to 5:06 PM 
  • January 24: Friday, with an auspicious marriage muhurat from 7:17 AM to 5:37 PM 
  • January 26: Sunday, with an auspicious marriage muhurat from 2:04 PM to 7:32 PM 
  • *****

ஜனவரி 1  புதன் கிழமை

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

***

ஜனவரி 2  வியாழக் கிழமை

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

****

ஜனவரி 3  வெள்ளிக் கிழமை 

மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

****

ஜனவரி 4  சனிக் கிழமை

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

ஜனவரி 5  ஞாயிற்றுக் கிழமை

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத

இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்

இடுகின்ற திறமும்

****

ஜனவரி 6  திங்கட் கிழமை

இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள

நினைவிடா நெறியும்

****

ஜனவரி 7  செவ்வாய்க் கிழமை

அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று

நெகிழாத திடமும்

****

ஜனவரி 8  புதன் கிழமை

உலகில்

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்

தீங்குசொல் லாததெளிவும்

திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்

திருவடிக் காளாக்குவாய்

****

ஜனவரி 9  வியாழக் கிழமை

வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை

மதித்திடுவ தன்றிமற்றை

வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்

மாட்டினும் மறந்தும்மதியேன்

****

ஜனவரி 10  வெள்ளிக் கிழமை 

கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு

கடவுளர் பதத்தைஅவர்என்

கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்

கடுஎன வெறுத்துநிற்பேன்

****

ஜனவரி 11  சனிக் கிழமை

எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை

என்னை ஆண் டருள்புரிகுவாய்

என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே

என்றன்அறி வேஎன்அன்பே

****

ஜனவரி 12  ஞாயிற்றுக் கிழமை

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

எனைப்பற்றி டாமல்அருள்வாய்

****

ஜனவரி 13  திங்கட் கிழமை

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்

திறன்அருளி மலயமுனிவன்

சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ

தேசிக சிகாரத்னமே

****

ஜனவரி 14  செவ்வாய்க் கிழமை

அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்

அடிமலர் முடிக்கணிந்தோர்க்

கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்

தற்பமும்வி கற்பம்உறுமோ

****

ஜனவரி 15  புதன் கிழமை

வள்ளல்உன் சேவடிக்கண்

மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை

வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு

பித்துண்ட வன்குரங்கோ

****

ஜனவரி 16  வியாழக் கிழமை

பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ

பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்

காற்றினாற் சுழல்கறங்கோ

காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது

கர்மவடி வோஅறிகிலேன்

****

ஜனவரி 17  வெள்ளிக் கிழமை 

கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி

கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்

கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்

கருதிலேன் நல்லன்அல்லேன்

குற்றமே செய்வதென் குணமாகும்

****

ஜனவரி 18  சனிக் கிழமை

 அப்பெருங் குற்றம்எல் லாம்குணம்எனக்

கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்

குறைதவிர்த் தருள்புரிகுவாய்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்

பெற்றெழுந் தோங்குசுடரே

****

ஜனவரி 19  ஞாயிற்றுக் கிழமை

 . சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு

தேவரைச் சிந்தைசெய்வோர்

செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு

சிறுகருங் காக்கைநிகர்வார்

****

ஜனவரி 20  திங்கட் கிழமை

நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்

நற்புகழ் வழுத்தாதபேர்

நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத

நவையுடைப் பேயர் ஆவார்

****

ஜனவரி 21  செவ்வாய்க் கிழமை

நீவலந் தரநினது குற்றேவல் புரியாது

நின்றுமற் றேவல்புரிவோர்

நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற

நெடியவெறு வீணராவார்

****

ஜனவரி 22  புதன் கிழமை

பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ

பெய்சிறையில் இன்னும்ஒருகால்

பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்

பெறுந்துயர் மறந்துவிடுமோ

****

ஜனவரி 23  வியாழக் கிழமை

இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்

இறப்பிக்க எண்ணம்உறுமோ

எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்

இருந்தவடு எண்ணுறானோ

****

ஜனவரி 24  வெள்ளிக் கிழமை 

கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு

காசுக்கும் மதியேன்எலாம்

கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்

கலந்திடப் பெற்றுநின்றேன்

****

ஜனவரி 25  சனிக் கிழமை

உடைஉண்டு கொடையும்உண்டு

உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்

உளம்உண்டு வளமும்உண்டு

தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள

செல்வங்கள் யாவும்உண்டு

தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்

தியானமுண் டாயில் 

****

ஜனவரி 26  ஞாயிற்றுக் கிழமை

உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை

ஒல்லைவிட் டிடவுமில்லை

உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை

உனைஅன்றி வேறும்இல்லை

இளையன்அவ னுக்கருள வேண்டும்

****

ஜனவரி 27  திங்கட் கிழமை

எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே

என்உயிர்க் குயிராகும்ஓர்

ஏகமே ஆனந்த போகமே யோகமே

என்பெருஞ் செல்வமே

****

ஜனவரி 28  செவ்வாய்க் கிழமை

நன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான

மூர்த்தியே முடிவிலாத

முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்

முத்தாடும் அருமைமகனே

****

ஜனவரி 29  புதன் கிழமை

பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்

பற்றருளி என்னைஇந்தப்

படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்

பண்ணாமல் ஆண்டருளுவாய்

****

ஜனவரி 30  வியாழக் கிழமை

நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை

நாடாமை ஆகும் இந்த

நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட

நாய்வந்து கவ்விஅந்தோ

தான்கொண்டு போவதினி என்செய்வேன்

ஜனவரி 31  வெள்ளிக் கிழமை 

தளராமை என்னும்ஒருகைத்

தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்

தன்முகம் பார்த்தருளுவாய்

வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை

மழையே மழைக்கொண்டலே

வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே

மயில்ஏறு மாணிக்கமே

தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

*****

MY OLD ARTICLES /POSTS

வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)  29 September   2021   

****

மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள்நவம்பர் 2021 நற்சிந்தனை காலண்டர் (10,280) October 312021

****

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386) November 28, 2021

****

—-Subham—-

Tags- வள்ளலார் , பொன்மொழிகள் , அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி! (Post No.14,038)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,038

Date uploaded in Sydney, Australia – –1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-12-24 KALKIONLINEல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

மூளை ஆற்றல் 

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி! 

ச. நாகராஜன் 

எந்த மொழி ஆகட்டும் அதில் வரும் எந்தப் பத்திரிகை ஆகட்டும், அது கொண்டிருக்கும் ஒரு முக்கியமான அம்சம் – குறுக்கெழுத்துப் போட்டி.

வேலை வெட்டி இல்லாமல் இதை ஏன் குடைந்து கொண்டிருக்கிறாய் என்று குறுக்கெழுத்துப் போட்டியுடன் போராடிக் கொண்டிருப்பவர்களை கிண்டல் செய்பவர்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

ஆனால் அது மூளைக்கு வேலை கொடுத்து புத்திகூர்மையை வளர்க்கும் ஒரு போட்டி என்பதை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

குறுக்கெழுத்துப் போட்டி முதன் முதலாக 21-12-1913 அன்று நியூயார்க் வோர்ல்ட் என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டது.

இதை உருவாக்கியவர் ஆர்தர் வைன் (Arthur Wynneஎன்னும் ஒரு பத்திரிகையாளர் தான்.

இதை வோர்ட்  க்ராஸ் என்று முதலில் கூறி வந்தனர். பின்னர் க்ராஸ் வோர்ட் பஸில் என்று பெயர் மாறியது.

இது அடைந்த வரவேற்பைப் பார்த்த இதர பத்திரிகைகளும் இதை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க ஆரம்பித்தன.

இப்போதுள்ள கட்டங்கள் போல் அல்லாமல் முதலில் இது டயமண்ட் வடிவத்தில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் இதன் வடிவம் இப்போது உள்ளது போல மாறியது. 1942ல் நியூயார்க் டைம்ஸ் இதை முதன் முதலாக பிரசுரிக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான், இதன் புகழ் பெரிதும் பரவி விட்டது.

யார் சிறந்த புதிர்களை அமைத்துத் தருகிறார்களோ அவர்களுக்கு நியூ யார்க் டைம்ஸ் வியக்க வைக்கும் ஊதியத்தைத் தந்தது. ஞாயிற்றுக்கிழமை புதிர் என்றால் 1500 டாலர். இதர நாட்களில் வரும் புதிர் என்றால் 500 டாலர்.

நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்துப் போட்டியை 2 நிமிடம் 14 வினாடிகளில் பூர்த்தி செய்து சாதனை படைத்தவர் ஸ்டான்லி நியூமேன் என்பவர். 1996ல் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

1926ம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் இந்த புதிரைத் தீர்க்க முடியாத ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் இந்த புதிரை விடுவிப்பவர்களுக்கு அது தெரியும் என்று எழுதி இருந்தார். ஆனால் அந்த புதிர் விடுபடவே இல்லை.

இந்தப் புதிர்களில் ஆறு வகைகள் இருந்தன.

புதிர்கள் வர வர அதற்கான புத்தகங்களும் வரலாயின. இன்று உலகில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உருவாகி விட்டன. முதல் புத்தகம் 1924இல் வெளியானது.

இந்தப் புதிரில் வந்த மிகப் பெரிய வார்த்தை 56 (ஆங்கில) எழுத்துக்களைக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்து ஆயிர்த்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் உருவானது தான் நாம் பார்க்கும் ஸ்க்ராபிள் என்னும் புதிர்.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தவுடன் இது பாரிஸ் நகரில் தடை செய்யப்பட்டது. காரணம் இதில் ரகசிய சங்கேத செய்திகளை அனுப்பி நாசவேலைகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் தான்!

இங்கிலாந்தில் ரூபஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரோஜர் ஸ்குயிரெஸ் (Roger Squires )75000 குறுக்கெழுத்துப் போட்டிகளை உருவாக்கினார். இவற்றை விடுவிப்பதற்கான 20 லட்சம் துப்புகள் (Clues) தரப்பட்டன. இவை 33 நாடுகளில் இந்தப் போட்டியின் ஆர்வலர்களால் விளையாடப்பட்டன.

7”x7” கட்டத்தில் 91000 சதுரக் கட்டங்களில் 28000 துப்புகள் தரப்பட்டிருந்த குறுக்கெழுத்துப் புதிரை கின்னஸ் புக் ஆஃப் ரிகார்ட்ஸ் மிகப் பெரிய குறுக்கெழுத்துப் புதிர் என்று பதிவு செய்திருக்கிறது.

சாமானியன் முதல் அரசர் மற்றும் அரசிகளாலும் இது வரவேற்கப்பட்டது என்பது ஒரு சுவையான செய்தி.

மிகப் பெரிய குறுக்கெழுத்துப் போட்டியில் 244971 கட்டங்கள் இருந்தன. இதை விடுவிக்க 66,666 துப்புகள் தரப்பட்டன. இதை ஜப்பானைச் சேர்ந்த நிகோலி கம்பெனி தயாரித்திருந்தது.

குறுக்கெழுத்துப் போட்டி ஆர்வலர்களுக்கு . “cruciverbalists” என்று ஒரு விசேஷ பெயரும் உண்டு

ஏராளமான உயிர் எழுத்துக்கள் இருப்பதால் இத்தாலிய  மொழியில் குறுக்கெழுத்துப் போட்டியை அமைப்பது என்பது ஒரு கஷ்டமான காரியம் என்று சொல்லப்படுகிறது,

பயன்கள் என்ன?

குறுக்கெழுத்துப் போட்டியை சரியாக பூர்த்தி செய்வதால் என்ன பயன்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு பெரும் பட்டியலே தரப்படுகிறது.

மனதிற்கான பயிற்சி இது. மனோவேகம் அதிகரிப்பதோடு பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உருவாகிறது. நினவாற்றல் கூடுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய் தடுக்கப்படுகிறது.

மூளையின் மோட்டார் திறமைகள் (நரம்பு இயக்கு தசை) அதிகமாகின்றன. மன அழுத்தம் குறைகிறது.

மூளையில் டோபமைன் அதிகரிக்கிறது. இதனால் மனோநிலையும் மூளை திறமையும் கூடுகிறது.

இடது மற்றும் வலது பக்க மூளை ஆற்றல் செயல்படுவதால் முழு மூளை ஆற்றலை இது ஊக்குவிக்கிறது.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இந்த புதிரை விடுவிக்க ஆரம்பிக்கும் போது குடும்பத்தில் ஒரு குதூகலம் ஏற்படுத்துகிறது.

குழந்தையிலிருந்து அதிக வயதானவர்கள் வரை, ஆண், பெண் பாகுபாடின்றி, தேசம், இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து அனைவரும் புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.

மொத்தத்தில் உடன்மறை சிந்தனை ஆற்றல் கூடுகிறது.

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதில் பல வித அணுகுமுறையைக் கையாள நேர்வதால் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி அதிகரிக்கிறது.

மூளைக்கு உற்சாகம் தருவதோடு இவை அதிகம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சமூக ஊடகங்களில் தேவையற்று நேரத்தைக் கழிப்பது போன்றவற்றைத் தடுத்து அதனால் ஏற்படும் தீமைகளைத் தடுக்கிறது.

என்ன, குறுக்கெழுத்துப் போட்டி வெளியாகியுள்ள பக்கத்தை எடுப்பதற்கு கிளம்பிவிட்டீர்களா? வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

Hindu Crossword311224 (Post No.14,037)

Written by London Swaminathan

Post No. 14,037

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2345
     6
  7   
8     
  9   

ACROSS

1.humility, polite conduct; boy’s name

6. (right to left); old age; gerontology is derived from this Sanskrit word

7.bird,

8.weapon used with Mantras,

9.Pranava mantra; primordial sound

DOWN

1.boon, 2.Word Night is derived from this Sanskrit word

3.Rig Vedic word for enemy, weapon, envious, unkind

4.Big Fire Sacrifice that goes with Asvamedha, Rajasuya etc

5.Indumathi’s husband in Raghuvamsa of Kalidasa; also Brahma, Goat  

311224

V1IN2A3Y4A5
A ARAJ6
R K7AGA
A8STRA 
M A9UM 

—subham—

Tags-Hindu Crossword311224

திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-10 (Post No.14,036)

Written by London Swaminathan

Post No. 14,036

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவெம்பாவை- திருப்பாவை  ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10

1

தமிழில் நமக்குக் கிடைத்த பாவை நூல்கள் இரண்டு ; அவை திருவெம்பாவையும் திருப்பாவையும்  ஆகும்.

****

2

மாணிக்கவாசகர்  இயற்றியது திருவெம்பாவை;இருபது பாடல்கள் உடையது

ஆண்டாள் இயற்றியது திருப்பாவை; முப்பது பாடல்கள் உடையது.

*****

3

மாணிக்கவாசகர் காலம்  என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர் என்று நிரூபித்துள்ளேன் ; ஆகையால் ஆண்டாளுக்கு முந்தியவர் மாணிக்க வாசகர்

****

4

திருவெம்பாவையிலும் திருப்பாவையிலும் ஒரே மாதிரியான சொற்கள் வருவதைப் பார்த்தவுடன் ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பி copy  அடித்தார்களோ என்று எண்ணுவோம். அது சரியல்ல; பாவை என்பது ஒரு வகைப் பாடல் (genre) ; பரணி என்பது போல ; ஆகையால் ஒரே அமைப்பு இருக்கும் .

இரண்டு பாவைகளும் மணலில்  பாவை  உருவத்தைச் செய்து காத்தியாயனீ தேவியை வழிபடும் நோன்பினைக் குறிப்பிடுகின்றன .

****

5

இரண்டின் நோக்கமும் ஒன்றே ; கண்ணனைப் போல அல்லது சிவனடியாரைப்போல கணவன் அமைய வேண்டும் ; நாடு செழிக்க  நல்ல மழை பெய்ய வேண்டும்  இந்த இரண்டு நோக்க்கங்களையும் பாடல்களில் காணலாம் .

****

6

மேலும் இரண்டும், மார்கழி மாதத்தில் பாடப்பட்டவை திருப்பாவையில் 3 இடங்களில் மார்கழி வருகிறது ; திருவெம்பாவையில் ஓரிடத்தில் வருகிறது .

***

7

இரண்டும் பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை

மிருக சீர்ஷ நட்சத்திரம் அல்லது திருவாதிரை பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை .

***

8

திருப்பாவையில் முப்பதாவது பாசுரத்தில் நாந்திச் செய்யுள் என்னும் பலச் சுருதியைக் காண்கிறோம் . திருவெம்பாவையில் அது இல்லை; ஏனெனில் திருவாசகம் என்னும் பெரிய நூலில் திருவெம்பாவை ஒரு சிறிய பகுதியே.

****

9

மழை பெய்ய பிரார்த்தனை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

        நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

        ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள

        பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

        வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!-3

****

   ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து

பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4

**

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்–திருவெம்பாவை 16

இதை ஆழி மழைக் கண்ணா! பாசுரத்துடன் ஒப்பிடுக

*****

10

ஆண்டாளின் நோக்கம் சிற்றஞ் சிறு காலே பாடலிலும் மாணிக்கவாசகரின் நோக்கம்/ குறிக்கோள் 19 ஆவது திருவெம்பாவையிலும் வருகின்றன

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய். (29)

****

 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

*****

11

போற்றி போற்றி

இரண்டு பாவைகளிலும் போற்றி போற்றி  என்று துதி பாடுவதையும் காண்கிறோம் :

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !

பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !

கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !

குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !

என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!- திருப்பாவை

****

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். திருவெம்பாவை 20

******

  12

குடைந்து நீர் விளையாடுதல்

திருப்பாவையில் ஏழு பாடல்களிலும் 1,2, 3, 4, 13, 20, 26 திருவெம்பாவையில் ஆறு பாடல்களிலும்12, 13, 14, 15, 17,  18  நீராடல் வருகின்றது . மார்கழிக்  குளிரில் ‘ஜில்’ என்ற தண்ணீர் பட்டவுடன் இருள் அகன்று ஒளி வருவது போல அறியாமை அகன்று ஆத்ம எழுச்சி ஏற்படும். காரணம்? பிரம்ம முஹூர்த்த நேரத்தில் இறைவன் பெயரைச் சொல்லி நீராடுவதால் அந்த மாதம் முழுதும் ஆன்மீக நாட்டத்தை எழுப்பும்.

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று

புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.13

**

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

**

………………………….

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

இன்றும் கேரளத்தில் பெண்கள் இப்படி நீராட செல்வதைக் காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் என்ன செய்தனர் என்பதைக அவர்கள் திருவாதிரை கொண்டாடுவதை காட்டுகின்றன.

****

13

நிறைய சொற்களில் ஒற்றுமையையும் காணலாம்; கிளியே , நேரிழையீர் என்று பெண்களை அழைப்பது மற்றும் வாய்ப்பேச்சில் காட்டியத்தைச் செயலில் செய்யவில்லையே என்று கிண்டல் செய்வது / ஏசுவது , சிவ பெருமானையும் கண்ண பரமாத்வையும்  பல சொற்களால் வருணிப்பது , பறவைகள் எழுப்பும் ஒலியை வருணிப்பது — இப்படி நிறைய ஒப்பிடலாம்

****

14

நகைகள் பற்றி ஆண்டாள் பாடல்களில் காண்பதைப் போல

திருவெம்பாவையிலும் நகைகள் பற்றி மாணிக்கவாசகர் பா டியுள்ளார்

*****

15

இரண்டு நூல்களிலுள்ள பாடல்களும் பாவாய் என்று முடிகின்றன

*****

16

திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா பாடலில் முழங்கையில் நெய் ஒழுக /வழிய சர்க்கரைப் பொங்கல் அல்லது அக்கார அடிசில் உண்பது போல திருவாதிரையில் களியும் அதற்குத் துணையாக கூட்டும் உண்ணப்படுகின்றன.

இன்றும் தமிழ் நாட்டில் பிராமணர் வீடுகளில் திருவாதிரைக் களியும் கூட்டானும் சமைக்கப்படுகின்றன. கடை முழுக்கு என்னும் தை நீராடல்  காவிரிக்கரையில் மிகவும் பிரசித்தம். வைகை நதியில் நீராடிய காலத்தில் பாண்டிய நாட்டிலும் இது நடந்ததை பரிபாடல் என்னும் சங்க நூல் வருணிக்கிறது

*****

சிவனடியார்களும், பரம பாகவத அடியார்களும் ஒரே நோக்கத்துடன் அனுஷ்டித்த காத்யாயனி பாவை நோன்பு, இரண்டாயிரம் வருட தமிழ்ப் பெண்கள் வரலாற்றினைப்/ பண்பாட்டினை நமக்கு  வெள்ளிடை மலை என உணர்த்துகின்றன/ காட்டுகின்றன என்றால் மிகையாகாது.

XXXX

திருவெம்பாவை பற்றிய எனது பழைய கட்டுரைகள்

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)Date: 12 May 2018

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441) Date: 12December 2016

பாரதிதிருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333),  12 DECEMBER 2019

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)

மார்கழித் திங்கள்மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486) 25 December 2021

மாணிக்கவாசகரின் காலம் என்னமிகப் பெரிய சைவப் புதிர்!! Post No 880 Date: 2-3- 2014

மாணிக்கவாசகரின் காலம்—2

Post No. 882 Date: 3-3- 2014

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › மா…

23 Dec 2016 — மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் ..

திருவாசகத்தில் ரிக் வேதம்! (Post No.9829) 8 JULY   2021        

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

Date: 25 JANUARY 2018

கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)

Date: 26December 2016

நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470) Date: 21 December 2016

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Date: 22December 2016


திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › திர…

14 July 2023 — திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் …

திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 …

Tamil and Vedas

https://tamilandvedas.com › திர…

15 July 2023 — அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் …

QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12253)

Tamil and Vedas

https://tamilandvedas.com › quiz-…

Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253). WRITTEN BY LONDON …

—subham—

Tags- திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10

ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி பெற்ற வரம்! (Post No.14,035) 

Rama killing the demons

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,035

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (26)

ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி என்ற அசுரன் பெற்ற வரம்!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் வரங்களைப் பார்த்ததைத் தொடர்ந்து இப்போது நாம் கிஷ்கிந்தா காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரங்களைக் குறித்துப் பார்க்கலாம்.

கிஷ்கிந்தா காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது வாலியின் பராக்ரமத்தை வர்ணிப்பது என்ற ஸர்க்கமாகும்.

சுக்ரீவனுடன் நட்பு கொண்ட ராமர் அவனுக்கு உதவி செய்ய விழைந்தார்.

உற்சாகம் கொண்ட சுக்ரீவன் அவரைப் போற்றிப் புகழ்ந்தான்.

பின்னர் வாலியின் பராக்ரமம் பற்றி ராமருக்கு விரிவாக எடுத்துரைக்க ஆரம்பித்தான். 

சூர்யோதயத்திற்கு முன்பேயே மேற்கு சமுத்திரத்திலிருந்து கிழக்கு சமுத்திரத்திற்கும் தெற்கு சமுத்திரத்திலிருந்து வடக்கு சமுத்திரத்திற்கும் வாலி அனாயாசமாகத் தாண்டிச் செல்வதுண்டு. மலைகளின் உச்சியில் ஏறி கொடுமுடிகளை செருக்குடன் பிடுங்கி எறிவதுண்டு.

பராக்கிரமசாலியான துந்துபி என்ற ஒரு அரக்கன் எருமை உருவம் தரித்து ஆயிரம் யானை பலத்தைக் கொண்டிருந்தான்.

ஸ வீர்யோத்ஸேகதுஷ்டாத்மா வரதானாஸ்ட மோஹித: |

ஜகாம சுமஹாகாய: சமுத்ரம் சரிதாம் பதிம் |\

வீர்யோத்ஸேக துஷ்டாத்மா – பலத்தின் கர்வத்தால் துஷ்ட ஸ்வபாவமுடையனும்

வரதானாத் – வரம் பெற்றதால்

மோஹித: – தலைக்கனம் பிடித்தவனும்

சுமஹாகாய: ச – பேருருவமும் உடையவனுமான

ஸ: – அவன்

சரிதாம் – நதிகளுக்கு எல்லாம்

பதிம் – அரசனான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

ஜகாம – சென்றான்

சமுத்திரத்தைப் போர் புரிய துந்துபி அழைக்க சமுத்திரம் அவனுடன் தன்னால் போரிட இயலாது என்று கூறி இமயமலைக்குச் சென்று அந்த மலையுடன் போரிடலாம் என்று கூறியது. உடனே இமயமலை சென்ற துந்துபி இமயமலையைப் போருக்கு அழைக்க இமயமலை தன்னால் துந்துபியுடன் போரிட முடியாது என்று தன் இயலாமையைத் தெரிவித்தது.

இப்படி துந்துபியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த சுக்ரீவன் துந்துபியைப் பற்றித் தொடர்ந்து விவரித்தான்.

சமுத்திரத்தாலும் இமயமலையாலும் தன்னுடன் போரிட முடியாது என்று துந்துபி அறிந்து கொண்டான்.

அவனுடன் போரிடத் தக்கவன் வாலியே என்று இமயமலை கூற, கிஷ்கிந்தை சென்று வாலியுடன் போர் புரிந்து துந்துபி மரணமடைந்தான்.

மேலே உள்ள ஸ்லோகத்தில் கூறியபடி

இங்கு சுக்ரீவன் பேசுகையில் ‘வர தானாத்’  என்று கூறுவதைப் பார்க்கலாம்.

துந்துபி வரம் பெற்றதால் தலைக் கனம் கொண்டவனாக ஆனதை சுக்ரீவன் குறிப்பிடுகிறான்.

ஆனால் எப்படிப்பட்ட வரங்கள், யாரால் அவனுக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இங்கு காணப்படவில்லை.

என்றாலும் கூட அவன் வரம் பெற்ற செய்தியை நாம் அறிகிறோம்.

***

Hindu Crossword 301224 (Post No.14,034)

Written by London Swaminathan

Post No. 14,034

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Crossword 301224

1 2 3
     
    4
     
56   
     
     
7    

ACROSS

1.goddess of protection; also means fort

4.(right to left)birth

 5.word for great man, saint,

7.most famous philanthropist in Mahabharata

DOWN

1.Sanskrit word which cannot be translated into English; means law, way of life, Dos in life

2.war, battle

3.Monkey Chief who located Sita in Lanka.

6.woman’s name; wish, desire 

HINDU CROSSWORD301224

D1UR2GA3
H A N
AMNAJ4
R A A
M5A6HAN
AS  E
 H  Y
K 7ARNA

—subham—

Tags-Hindu Crossword 301224

GNANAMAYAM SUNDAY BROADCAST 29-12-2024 SUMMARY

GNANAMAYAM SUNDAY BROADCAST 29-12-2024 SUMMARY

29-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

*****

TIME:  12 noon LONDON TIME; 5-30 PM IST; 11 PM Sydney Time

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer was sung by Neeraj Nurani from New Zealand.

World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan lectured about Great Sanskrit Grammarian Panini

***

Brahannayaki Sathyanarayan explained the significance of on THIRUVALLIKKENI Parthasarathy Temple from Bengaluru

***

Londo Swaminathan from Sydney, Australia INTERVIEWED WITH FAMOUS SINGER SRI MANIKKAM YOGESWARAN of BERLIN

COORDINATOR, SOUTH ASIAN MUSIC AT GLOBAL MUSIC ACADEMY, BERLIN

Mr Yogeswaran is currently in Tamil Nadu performing his 30 th year concert at the same Sabha in Chennai.

M.Yogeswaran is a classical musician trained in 

carnatic music which originates from South India. When he performs on the world stage, his ensemble of talented traditional artists and world-renowned orchestras accompany him.

During childhood he was trained in classical music under his teachers “Sangita Bhushanam” Sri P Muthukumarasamy and “Sangita Bhushanam” Sri S Balasingam. His Guru is the world-renowned musician and singer “Padma Bhushan” “Sangita Kalanidhi” Prof Sri T V Gopalkrishnan. Since then, his work as a live performer extends into different branches of music, film and contemporary music.

His popular accomplishments include; the movie soundtracks Migration for Eyes Wide Shut in 1999 directed by Stanley Kubrick this was achieved together with Jocelyn Pook, Spike Lee’s 25th Hour in 2002 for the song The Fuse and in 2007 again with Jocelyn Pook for the songs Quiet Joy Memories of a Summer and Love Blossoms in Sarah Gavron’s film Brick Lane and his song tribute The Bells for Queen Elizabeth II for her Diamond Jubilee celebrations in June 2012.

As a soloist he has played a role as Mahatma Gandhi in a musical celebrating the Bi centenary of the Norwegian constitution. The musical titled Stemmer  composed by the British composer  Orlando Gough and performed with the Bergen Philharmonic Orchestra in May 2014. The event was presided by His Highness The Crown Prince of Norway.

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

JOIN US ON SUNDAYS.

—subham—

TAGS- SUNDAY 29- 12 2024, GNANAMAYAM BROADCAST, Summary

ஆலயம் அறிவோம்! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் (Post.14,033)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14,033

Date uploaded in Sydney, Australia — 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை! 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது பிரஹந்நாயகி சத்யநாராயணன்.

வேதத்தை,

வேதத்தின் சுவைப்பயனை,

விழுமிய முனிவர் விழுங்கும் கோதில் இன்கனியை,

நந்தனார் களிற்றை,

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை,

அமுதை,

என்னை ஆளுடை அப்பனை,

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாடமயிலைத்

திருவல்லிக்கேணி கண்டேனே

–    திருமங்கை ஆழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவல்லிக்கேணி திருத் தலமாகும்

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ளது. இதில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவில் சென்னையில் உள்ள கடற்கரை அருகில் உள்ளது.

மூலவர் : வேங்கடகிருஷ்ணன்

          நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுகமண்டலம்

உற்சவர் ஶ்ரீ பார்த்தசாரதி

தாயார்: ருக்மிணி தாயார்

விமானம் : ஆனந்த விமானம்

தீர்த்தம் : கைரவிரணி புஷ்கரிணி

மங்களாசாஸனம் : பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார்.

சென்னை நகரில் மிகப் பழமையான பகுதியாகும் இது. மைலாப்பூரை அருகில் கொண்டு விளங்கும் இந்தத் தலம் மிகவும் பிரசித்தமான தலமாகும். இங்குள்ள பார்த்தசாரதி கோவிலின் முன்னால் அமைந்துள்ள அல்லி மலர் நிறைந்துள்ள குளத்தால் இது அல்லிக்கேணி என்ற பெயரைப் பெற்றது. முன்பொரு காலத்தில் இது துளசி வனத்தில் நடுவில் அமைந்திருந்தது.

இத்தலத்தைப் பற்றி பிரும்மாண்ட புராணத்தில் பிருந்தாரண்ய மாஹாத்மியம் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளஸி. ஆரண்யம் என்றால் காடு என்று பொருள் எனவே பிருந்தாரண்யம் என்றால் துளஸி வனம் என்று பொருள்.

முன்னொரு காலத்தில் சுமதி என்ற மன்னன் வேங்கடமலையில் திருவேங்கடமுடையானை வழிபட்டு, அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணனாக பெருமாளை தரிசிக்க எண்ணி, தவம் இருந்தான். பகவான் அவனிடம் கைவரணி தீர்த்தம் கொண்ட பிருந்தாரண்யம் வந்து நீ விரும்பிய தோற்றத்துடன் என்னை தரிசிப்பாயாக என்று அருள் பாலித்தார். அவ்வண்ணமே வியாஸருக்கும் சுமதி ராஜாவுக்கும் இரு திருக்கரங்களுடன் வேங்கடகிருஷ்ணனாகக் காட்சி தந்தார்.

வேங்கடவனால் காட்டப்பட்டதால் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமம் ஏற்பட்டது..

கர்பக்ருஹத்தில் குடும்ப சமேதராய் ருக்மிணி, பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தனோடு கிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார்.

மஹாபாரத யுத்தத்தில் பீஷ்மரால் அம்புகளால் துளைக்கப்பட்ட வடுக்கள் திருமுகத்தில் திகழ, உற்சவர் பார்த்தசாரதி இன்றும் காட்சி தருகிறார்.

இங்குள்ள தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்னி, மீன, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீகம்.

வைணவத் திருத்தலங்களுள் முக்கியமானதாக உள்ள வேங்கடம், திருவரங்கம், கச்சி ஆகிய மூன்று தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.

இத்தலத்திற்கு பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இங்குள்ள மூலவரான வேங்கடகிருஷ்ணன் கம்பீரமான மீசையுடன் காட்சி தருகிறார். 108 திவ்ய க்ஷேத்திரங்களுள் இப்படி மீசையுடன் காட்சி தருவது இத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஶ்ரீ பார்த்தசாரதி கோவில் வைகாநஸ பகவத் சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விதிப்படியே பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.மானுட வாசுதேவன் மற்றும் பர வாசுதேவன் என்று இருவிதமாகச் சொல்லப்படுவதில் இங்கு மானுட வாசுதேவனாக குடும்பத்துடன் கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். ஆக அந்த சாஸ்திரம் சொல்லியுள்ளபடி யுக்தியையும், புத்தியையும் சேர்த்து பொருத்தமான வடிவத்தில் விக்ரஹத்தை அமைத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பெருமாள் இங்கு மீசையுடன் தோற்றமளிக்கிறார்.

இங்கு பெருமாள் தனது சுதர்ஸன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று வாக்களித்ததால் அவர் கையில் ஆயுதம் இல்லை. ஆனால் போரின் ஆரம்பம் மற்றும் முடிவினைத் தெரிவிக்கும் வகையில் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.

உற்சவ மூர்த்தியும், தன் கதாயுதம் இல்லாமல், செங்கோலுடன் காட்சி தருகிறார்.

இங்கு தங்கத்தால் ஆகிய இரு கருட வாஹனங்கள் உள்ளன. பெரிய கருட வாஹனத்தில் ஶ்ரீ பார்த்தசாரதி வருடத்தில் ஏழு முறை உலா வருகிறார். சிறிய கருட வாகனம் ஶ்ரீ ரங்கநாதருடைய வாகனமாக அமைகிறது.

12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இங்குள்ள அல்லிக் கிணற்றில் தான் பிறந்தார் என்றும் அவர் இங்கு ஓடிக்கொண்டிருந்த கைரவிரணி நதி வழியே பார்த்தசாரதி கோவிலில் உள்ள வேங்கடகிருஷ்ணனைத் தொழ வந்தார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

இது எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில் என்று வரலாறு தெரிவிக்கிறது.

கோவிலின் முன் மண்டபம் தொண்டைமானால் கட்டப்பட்டது என்பதை திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார் இப்படி:

‘மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்

மாட மாளிகையும், மண்டபமும்,

தென்னன் தொண்டையர்கோன் செய்த

நன் மயிலைத் திருவல்லிக்கேணி’

என்கிறார் அவர்.

வேங்கட கிருஷ்ணனின் புகழை விரும்பிப் பாடினால் அது பிறப்பை அறுக்கும் மருந்தாகும் என்கிறது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி.

இந்தப் பகுதியில் தான் பாரதியார் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் பாரதியார் நினவில்லமாக இப்போது திகழ்கிறது. அதே போல விவேகானந்தர் தங்கிய ஐஸ் ஹவுஸின் பெயரானது 1963ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் என்று மாற்றப்பட்டது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ பார்த்தசாரதியும் ருக்மிணித் தாயாரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

***

 tags-ஆலயம் அறிவோம், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் 

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024

Nationala Yogasana Meet; Tamil Nadu Students came first.

Written by London Swaminathan

Post No. 14,032

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024

Collected from National Newspapers and edited.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்




அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 29–ம் தேதி 2024-ம் ஆண்டு

*****

வைகுண்ட ஏகாதசி 2025 ஜனவரி 10ம் தேதி

விரதங்களில் மிகவும் புண்ணியமான விரதமாகவும், பெருமாளுக்கு மிகவும் விருப்பமான விரதமாகவும் கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பஞ்சமா பாவமும் நீங்கி, அவர்களுக்கு நன்மைகள் அதிகம் கிடைப்பதுடன், இறுதியில் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி, வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகியவற்றில் வருவது உண்டு. அதாவது மாதத்திற்கு 2 ஏகாதசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரத நாட்கள் வரும். இவை ஒவ்வொன்றிற்கும் தனியான பெயர்கள், சிறப்புகள் மற்றும் தனியான பலன்கள் உண்டு. சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அப்படி மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என சிறப்பித்து கொண்டாடுகிறோம். மார்கழி மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாகவும் விரத நாளாகவும் வரும் வைகுண்ட ஏகாதசியை மோட்ச ஏகாதசி என்றும் சொல்லுவதுண்டு.

****

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 30-ந் தேதி தொடங்குகிறது

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, வருகிற 30-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 31-ந்தேதி முதல், ஜனவரி 9-ந்தேதி வரையிலும், ராப்பத்து உற்சவம் ஜனவரி 10-ந்தேதி முதல், 20-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற உள்ளது.


இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் நடத்தப்படும். வைகுண்ட துவாரம் எனப்படும் இந்த வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பவர்களுக்கு வைண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏராளமானோர் இரவு முழுவதும் கண் விழித்து, உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பது உண்டு

ஜனவரி 10ம் தேதி வரக் கூடியது தான் வளர்பிறை ஏகாதசி .அதைத் தான் வைகுண்ட ஏகாதசியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பதியில் பாலாஜி கோவிலிலும் 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது

*****

வைஷ்ணவ தேவி கோவில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரிலுள்ள புகழ்பெற்ற சக்தித்  தலமான

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ரோப் வே ROPE WAY எனப்படும் கயிறு வழிப்பாதை அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள வியாபாரிகள் 72 மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மூன்று நாள் கிளர்ச்சி நடத்திய சங்கர்ஷ கமிட்டி, இந்த ரோப் வே என்னும்  கயிறு வழிப்பாதை வழக்கமான நடை முறைகளையும் வியாபாரிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று கூறியுள்ளது

250 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது .

 கிளர்ச்சிக்கு முன்னர் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை .

மாதா வைஷ்ணவி தேவி கோவில் நிர்வாகம் இதை 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற எண்ணியது. இதன் மூலம் பக்தர்கள் 13 கிலோமீட்டர் பாதையைக் கஷ்டப்பட்டு கடக்காமல், ஆறே நிமிடங்களில் கோவில் வளாகத்தை அடைய முடியும். 

பகதர்கள் இப்படி ரோப் காரில் சென்றால் 13 கிலோமீட்டர் பாதையிலுள்ள வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது சங்கர்ஷ கமிட்டியின் வாதம் . பல்லக்குத் தூக்கிகள், மட்டக் குதிரை சவாரி நடத்துவோர் கற்களை வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வியாபாரிகளின் கவலையைத் தீர்க்க பேச்சுவார்த்தை உதவும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

******

பெற்றோர் பாத பூஜைக்கு தடை: இந்து முன்னணி  கடும் கண்டனம் 

 ‘பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது’ என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை, ஹிந்து முன்னணி கண்டித்துள்ளது. இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

‘தனியார் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்வது கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தான், தமிழர்களின் அடிப்படை பண்பாடு. பெற்றோரை போற்றுதல், வணங்குதல் என்பது தமிழர் மரபிலே உள்ள நல்லொழுக்கமாகும்.

யாரெல்லாம் பெற்றோரை போற்றினரோ, அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மக்களால் போற்றப்படுகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். தனியார் பள்ளியில் பெற்றோர், மாணவர் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடக்கிறது. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.

இதுபோன்ற நிகழ்வுகளால், மாணவர் – பெற்றோர் உறவு மேம்படுகிறது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீதான அன்பும், அக்கறையும் கூடுகிறது என்பதே உண்மை. இத்தகைய நிகழ்வுகள் தவறான செயலாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. நம் பண்பாட்டை சிதைக்கும் வெளிநாட்டு கலாசாரத்தை, பள்ளிகளில் புகுத்துவதை திராவிட மாடல் ஆட்சி ஊக்கப்படுத்துகிறது.

மாணவர்களிடம் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் வன்முறை பெருகி வருகிறது. இதற்கு தீர்வாக பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வைத்த கோரிக்கையை, நடைமுறைப்படுத்த கல்வித் துறை மறுக்கிறது. தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும்

என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கையில் கூறியுள்ளார்.

******

 சபரிமலையில் மண்டல பூஜை: தங்க அங்கி வருகை

 சபரிமலையில் டிசம்பர் .26 ஆம் தேதி  மண்டல பூஜை நடைபெற் றது. அதற்கு முன்னர், தங்க அங்கி சன்னிதானம் வந்தடைந்தது.

நவ., 16-ல் தொடங்கிய மண்டல கால சீசன் சபரிமலையில் இத்துடன்  நிறைவு பெறுகிறது. 

ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி   பம்பை வந்தடைந்தது

மாலை 3:00 மணி வரை பம்பை கணபதி கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு . அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமடாக நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது . அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு , மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர்  அதை பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்தினார்கள்.

மதியம்  களபாபிேஷகத்துக்கு   பின் இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது . இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறுகிறது

டிச.,22ல் ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி 74 கோயில்களுக்கு சென்று விட்டு இன்று பம்பை வந்தது

2018ல் ஏற்பட்ட பெருவெள்ளம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றால் தடைபட்ட பம்பா சங்கமம் நிகழ்ச்சி 2025 ஜன.,12-ல் பம்பையில் நடைபெறும். அன்றைய தினம் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 75 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி 75 தீபங்கள் அனைத்து கோயில்களிலும் ஏற்றப்படும். 2025 மகர விளக்கு சீசனில் ஐயப்பன் படம் பொறித்த தங்க லாக்கெட் விற்பனைக்கு விடப்படும்.

மகர ஜோதி தரிசனத்துக்கு முன்னர் மீண்டும் நடை திறக்கப்படும்

*****

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.

அதில்,: துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார் என

கூறியிருந்தார்.

ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை டிச.,15ல் கைது செய்தனர்.

இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ‘ சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டா்’ எனக் கூறியிருந்தார்.ஆனால் போலீசார் சா்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ விதிகளை பின்பற்றித் தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது’ எனக்கூறியிருந்தனர்.

இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றிபேசக்கூடாது என்ற நிபந்னையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

*******

திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை

 திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகைதீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.

 விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த 13-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்த மகாதீபத்   ததரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். சுமார் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், மழை மற்றும் பலத்த காற்றிலும் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. செங்குத்தான மலைப்பாதையில் தீப கொப்பரை இறக்கி கொண்டு வரப்பட்டது தொடர்பான டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.


*******

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் ஆதியோகி ரத யாத்திரை இந்தாண்டு 30,000 கி.மீ பயணிக்க உள்ளது.

கோவை: ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே ஆதியோகியை தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை டிசம்பர் 22–ல்
தொடங்கியது. கோவை ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் பயணிக்க உள்ள ஆதியோகி ரத யாத்திரையை தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் ஆரத்தி எடுத்து தொடங்கி வைத்தனர்.

 முன்னதாக, கிழக்கு மற்றும் தெற்கு திசை நோக்கி செல்லும் ரத யாத்திரையை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.


******

பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி, பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படிபழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள்வர தொடங்கி உள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், தைப்பூச திருவிழா அனுமதி பெறுவதற்கும் பழனி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி யாகம் நடந்தது.


ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

******

தேசிய அளவிலான யோகாசன போட்டி – தமிழ்நாடு அணி சாம்பியன்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 68வது தேசிய அளவிலான யோகாசன போட்டி பொள்ளாச்சியில் நடைபெற்றது.இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட டார்கள். அவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் மொத்தமாக 780 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்தது.

*****

அமெரிக்காவில் சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு உயர் பதவி!

வாஷிங்டன்: அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.


இந்தியாவை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக நியமித்துள்ளார். தொழில் முனைவோரான ஸ்ரீராம் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். முன்னதாக, மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

‘பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்ஸூடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்,’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

*****

ராமாயணம்‘: ராவணனாக நடிக்க யாஷ் வாங்கும் சம்பளம் !


பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் யாஷ். இந்த படங்கள் அனைத்து ரசிகர்களையும கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து யாஷ் தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ராமாயணம் படங்களில் நடித்து வருகிறார்.

ராமாயணம் படத்தில் ராவணனாக யாஷ் நடிக்கிறார். மேலும், ராமராக ரன்பீர் கபூரும் , சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

வில்லனாக நடிக்கும் யாஷ் இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வில்லன் கதாபாத்தித்திற்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக யாஷ் இருப்பார்.

*******

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

ஜனவரி 5 –ஆம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

நேரம் மாறுதலைக் கவனத்திற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

நேயர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே 2025–ஆம் ஆண்டு புத்தாண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

வணக்கம்.

—-subham—-Tags- ஞானமயம், உலக இந்து செய்தி மடல் 29-12-2024,

திருப்பாவையின் அமைப்பு; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 9 (Post No.14,031)

Written by London Swaminathan

Post No. 14,031

Date uploaded in Sydney, Australia – 30 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்பாவை நூலை நன்றாகப் படிப்பவர்கள் அதிலுள்ள அழகான அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். அதைப் பாடிய ஆண்டாள் ஒரு கோர்வையாக அதைப் பாடுகிறார். முஃப்தீ பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோர் நாவிலும் பாவைப் பாசுரங்கள் ஒலிப்பதற்கு  இதுவே காரணம். தட்டொளி, உக்கம், பறை, முதலிய புதிய சொற்களைத்  தந்து தமிழ் மொழியையே வளப்படுத்துகிறார்.

சங்கத் தமிழ் மாலை முப்பது என்பதுதான் அவர் தனது பாசுரத் தொகுப்புக்கு கொடுத்த பெயர். அது மிகவும் பொருத்தமான பெயரே. ஏனெனில் அவர் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலிருந்தும் மேற்கோள் காட்ட முடிகிறது; திருப்பாவை மாலை நூலை எழுதிய திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கக் காரியதரிசி , தமிழ் வித்துவான், பந்தல்குடி மாடபூசி ரெ. திருமலை அய்யங்கார் எழுதிய 276 பக்க நூல் முழுதும் சங்க இலக்கிய மேற்கோள்களைக் காட்டியுள்ளார். ஆண்டாள் சொன்னதை கம்பனும் வில்லிப்புத்தூராரும் கூடப் பிற்காலத்தில் பாடியுள்ளதையும் காட்டுகிறார்.

***** 

அமைப்பு

பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவையின் பாடல்களும் எட்டடியால் அமைந்த  தரவு கொச்சகக் கலிப்பாக்களே . அவற்றினும் ஈரசைச் சீர்கள் வந்திருக்கின்றன. ஆயினும் அவை முற்றிலும் வெண்டளையினாலேயே அமைந்திருக்கின்றன.

நாந்திச் செய்யுள்

திருப்பாவையின் ஈற்றுப் பாசுரம் நாந்திச் செய்யுள். நாந்திச் செய்யுளாவது நூல் இயற்றுவோர் நூலுக்கு முன்னாகவேனும் பின்னாகவேனும் தம்மைப் படர்க்கையில் வைத்து, இன்னார் இயற்றியது இந்நூல் என்பது தோன்றக்கூறுவது . இங்ஙனமே ஆழ்வார்களுள் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுர கவியாழ்வார் என்னும் இவ்வருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர்.

சைவ சமயாச்சாரியாருள் சம்பந்தர், சுந்தரர் இருவரும் நாந்திச் செய்யுள் கூறியிருக்கின்றனர். திருவெம்பாவையில் நாந்திச் செய்யுள் இல்லை.

*****

திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு

முதல் பாசுரத்தில் நோன்புக் காலம் பற்றியும்

இரண்டாவது நோன்புக்காலத்தில் செய்யவேண்டியது பற்றியும்

மூன்றாம் பாசுரத்தில் மாதம் மும்மாரி மழை பெய்து நாடு செழிக்கச் செய்யும் நல்ல நோக்கம் பற்றியும், நான்காம் பாசுரத்தில் மழைக்குரிய தேவதை பற்றியும் பாடுகிறார்

ஐந்தாம் பாசுரத்தில் இப்படிப்பாடி, மனதில் சிந்தித்தால் அஹங்காரம் அழியும் என்பார் .

ஆறாவது முதல் பதினைந்தாம் பாசுரம் வரை பத்துப்பாசுரங்களில் யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பருவப் பெண்கள் அனைவரையும் தட்டி எழுப்புகிறார் இதுதான் பஜனையின் கருத்தும் கூட. எல்லோரும் பயன் பெற சத் சங்கம் உதவுகிறது

பதினாறாம் பாசுரம் முதல் இருபத்தொன்பதாம் பாசுரம் வரையிலுமுள்ள பதிநான்கு பாசுரங்களில் கண்ணனின் திருமாளிகையை அடைந்து வாயிற்காப்போன் , நந்தகோபர், யசோதைப் பிராட்டி, கண்ணன், பலராமன்,நப்பின்னைப் பிராட்டி முதலியோரை எழுப்புபவத்தையும் காண்கிறோம்.

இறுதியில் கண்ணனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி போற்றி போற்றி என்று துதித்து நோன்பு இருந்த காரணத்தையும் சொல்லி, உள்க்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

ஆண்டாள் ஒரு திரைப்பட இயக்குனராக இருந்தால் , வெவ்வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருப்பார் திருப்பாவை முப்பதையும் நாம் காட்சி வடிவில் மனக்கண் முன் கண்டால்,  இயற்கைக் காட்சிகளில் துவங்கி கண்ண பரமாத்மாவின் அரண்மனை வரை கண்டுகொண்டே போகலாம். இது நமது ஆத்மாவின் பயணம் . இதன் சிறப்பு,  தான் மட்டும் பயன்பெறாமல் மற்றவர்களையும் இறைவனிடத்தில் இட்டுச் செல்வதாகும். அதே நேரத்தில் மழை எய்து நாடு செழிக்கவும் வேண்டுவதாகும்.  திருப்பாவை யில் நாட்டின் செழிப்பு போற்றப்படுகிறதா? அல்லது தனி ஒரு பெண்ணின் முன்னேற்றம் போற்றப்படுகிறதா? அல்லது மக்கள் அனைவரின் ஆன்மீக முன்னேற்றம் போற்றப்படுகிறதா? என்று பட்டி மன்றமே ந டத்தலாம்.  இதற்கு திருப்பாவையின் திட்டமிட்ட அமைப்பு நமக்குத் துணை புரியும்.

–SUBHAM—-

TAGS-திருப்பாவையின் அமைப்பு, திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 9,ஆண்டாள்