Post No. 13,959
Date uploaded in London – 1 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
COLLECTED FROM POPULAR TAMIL AND ENGLISH DAILIES AND EDITED FOR BROADCAST.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத் வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் முதல் தேதி 2024-ம் ஆண்டு
********
வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் ஆகியவற்றை கொடுப்பதற்காக ருத்ரபிரோதி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாதசியாம சுந்தர் ஆகிய 2 சாமியார்கள் சென்றுள்ளனர். அப்போது அந்நாட்டு போலீசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் :
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
, வங்கதேசத்தில் இடைக்கால அரசால் இந்து கோயில்கள் எரிப்பு, இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் பிரச்சனை உருவாகும்போதெல்லாம் இந்து மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் கரு.நாகராஜன் கூறினார்.
இந்து மக்களை காக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்றும், வங்கதேச இந்து மக்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்பதகாவும் கரு.நாகராஜன் கூறினார்.
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் மீது, வன்முறை கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது.
வங்க தேசத்தில் ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சிறுபான்மை ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சின்மாய் கிருஷ்ண தாஸ், ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்ததால், இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணி
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி யினர் பேரணி நடத்தினர்.
கொல்கத்தாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமான பாரதீய ஜனதா கட்சியினர் வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
**********
அடுத்ததாக ஆந்திர மாநில செய்தி
திருப்பதி லட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கியது
திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. திருப்பதி, ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குக் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்தவிசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ‘சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது
அதன்படி, சிபிஐ இந்த மாத தொடக்கத்தில் 5 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.
********
அடுத்ததாக தமிழ் நாட்டுச் செய்திகள்
இசைவாணி, ரஞ்சித் மீது நடவடிக்கை தேவை:
கஸ்தூரிக்கு ஒரு நீதி; இசைவாணிக்கு ஒரு நீதியா ?
இந்துக்கள் கேள்வி
ACTRESS kASTURI
: ”சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்’ என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார்.
திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.
அண்மையில் வேறு ஒரு விஷயத்தில், மன்னிப்புக் கேட்டும் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார் ; அவர் எனக்கு ஒரு நீதி இசைவாணிக்கு ஒரு நீதியா என்றும் கேட்டிருக்கிறார்.
இசைவாணி மீது ,சில நாட்களுக்கு முன்னால், பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில் பாரதீய ஜனதாக கட்சி பிரமுகர்களும் ஹிந்து முன்னணி, மஸ்துார் யூனியன் பிரமுகர்களும் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர்.
அதில், இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். ‘ஐம் சாரி ஐயப்பா’ என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல் ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
மதுரையில் பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ”இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதித்துறையை நாடுவோம். இது ஒரு திட்டமிட்ட சதி. இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது” என்றார்.
பாரதிய பார்வர்டு பிளாக் புகார்
சபரிமலை ஐயப்பனை இழிவு படுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக்., கட்சியினர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.
அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
*******
கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.
கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
******
கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி:
சென்னை: ‘கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
நிபந்தனை
பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.
அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ”ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ”கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.
XXXXXXXXX
பிற மாநிலச் செய்திகள்
சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.
ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.
இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர்.
மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம்.
சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
*******
ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ? ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்
ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம்து.
அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.
இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.
இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
******
இடஒதுக்கீடுக்கான மதமாற்றம் ஒரு மோசடி!
இடஒதுக்கீட்டுப் பலன்களுக்காக மட்டுமே மத மாற்றம் செய்வது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இந்து தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு பிறந்த பெண் ஒருவர், சில மாதங்களிலேயே கிறிஸ்தவராக ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரியில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்காக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.
இதனை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் செய்யப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த பதிவை ரத்து செய்ய அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தது.
தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தை தழுவுவதாகக் கூறுவது, இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இடஒதுக்கீட்டு கொள்கையின் சமூக நெறிமுறைகள் தோற்கடிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு
டிசம்பர் எட்டாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும் நடைபெறும். வணக்கம்.
—-subham—-
TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல் 1-12-2024, HINDU NEWS