QUIZ வேமனா பத்து QUIZ (Post No.13,957)

Written by London Swaminathan

Post No. 13,957

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.வேமனா யார்? எங்கு பிறந்தார் ?

வேமனா ஆந்திர பிரதேசத்தில் கோதாவரி மாவட்டத்த்தில் பணக்கார ரெட்டி குடும்பத்தில் 1652-ஆம் ஆண்டில் பிறந்தார் 

****

2.அவர் எதனால் புகழ் பெற்றார் ?

அருணகிரிநாதர் போலவே விபச்சாரிகள் பின்னால் அலைந்து, பின்னர் யோகியாக மாறி, தெலுங்கு மொழியில் கவிதை மழை பொழிந்து. சிவபிரானை போற்றியதால் புகழ் பெற்றார் .

****

3.அவருடைய முதல் குரு யார்? இரண்டாவது குரு யார்?

அவரது அண்ணன் அணுவேம ரெட்டி அந்த வட்டாரத்து அரசர். அவருடைய மனைவி  நரசம்மா, வேமனாவின் முதல் குரு.  அவரது கடையில் வேலை பார்த்த அபிராமா என்ற வேலைக்காரன் இரண்டாவது குரு.

****

4.எப்படி இவர்கள் குரு ஆனார்கள் ?

அண்ணியான நரசம்மா அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி நல்ல உபதேசங்களை சொல்லி அவரைத் திருத்தப் பார்த்தாள். அதனால் அவரை வேமனா முதல் குரு என்று புகழ்ந்தார் . கடைக்கார வேலையாளுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் இவருக்கு கிடைத்ததால் அவரை– அபிராமாவை—  இரண்டாவது குரு என்று புகழ்ந்தார்.

****

5.அபிராமாவுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் எப்படி வேமனாவுக்குக் கிடைத்தது?

வேமனா நடத்திய கடையில் அபிராமா வேலை பார்த்துவந்தார்; தினமும் காலையில் ஆறு மணிக்கு வராமல் தாமதமாக வந்தார். காரணம் என்னவென்றால் தான் காலைப் பிரார்த்தனை செய்யாமல் வரவே முடியாது என்று அபிராமா சாத்தித்தார். வேமனாவுக்கு நம்பிக்கை இல்லை ; ஒரு நாள் மறைவில் நின்று அதிகாலையில் அபிராமா செய்வதையெல்லாம் கவனித்தார். அவர் காலையில்,எழுத்து பூக்களை பறித்து ஒரு யோகியின் கால்களில் சமர்ப்பித்து வழிபடுவதை மறைவிலிருந்தே கவனித்தார்; அந்த யோகி “அபிராமா நாளைக்கு வா; நான் சமாதி அடையப்போகிறேன் அதற்கு முன்னால், உனக்கு ஒரு உபதசம் தருகிறேன்” என்றார்.  இதைக் கேட்ட வேமனாவுக்குத் தான் அந்த உபதேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று. அண்ணன் மனைவி நரசம்மாவுக்கு ஒரு ஆபரணம் வேண்டும் என்றும் அதை அபிராமா மறுநாள் கட்டாயம் செய்துதர வேண்டும் என்றும் அண்ணனான அரசன் மூலம் கட்டளை பிறப்பிக்கச் செய்தார் ; அரசன் கட்டளையைத் தவிர்க்க முடியாமல் அந்த வேலையில் அபிராமா ஈடு பட்டார். அதே நேரத்தில் வேமனா, அந்த யோகி இருக்கும் இடத்திற்குச் சென்று தனது எஜமானன் அபிராமா இன்று வரமுடியாததால் தன்னை அனுப்பி பூக்களை சமர்ப்பிக்க அனுப்பினார் என்று சொன்னார். யோகியும் மூன்று முறை அபிராமா வருகிறானா பார், பார் என்று சொல்லி வேமனாவை அனுப்பினார்;. அபிராமா வரவில்லை. சமாதி அடைவதற்கு முன்னர் வேமனாவின் காதில் சிவ பஞ்சாட்சரத்தை ஓதிவிட்டு சமாதி அடைந்தார். அன்று முதல் வேமனா பெரும் யோகியாக மாறினார்  

*****

6.அபிராமாவை குரு என்று சொல்லி வேமனா அவரது காலில் விழுந்தது ஏன்?

உபதேசம் பெற்ற வேமனா , தான் பொய் சொல்லி அபிராமாவை ஏமாற்றியதை எண்ணி வருந்தினார் கடைக்குச் சென்று வேலையாள் அபிராமாவின் காலில் விழுந்தார் . உனக்குக் கிடைக்கவேண்டிய உபதேசத்தை நான் பெற்றுவிட்டேன்; என்னை மன்னிப்பாயாக என்றார்; கடைக்கு எஜமானரான வேமனா, தனது காலில் ஏன் விழுகிறார்  என்று அபிராமாவுக்கு ஒன்றும் புரியவில்லை . பின்னர் வேமனா நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார்

****

7.வேலையாள் அபிராமாவுக்கு வேமனா எப்படி நன்றி செலுத்தினார் ?

அருணகிரிநாதர் பிரபுட தேவராயனை பல திருப்புகழில் பாடி நன்றி தெரிவித்தது போலவும் ,கம்பன் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாடி நன்றி தெரிவித்தது போலவும் வேமனா தனது குருவான வேலைக்கார அபிராமாவைப் பாடிப் பரவியிருக்கிறார்.

****

8.வேமனாவின் பாடல்கள் எத்தனை ? அதன் சிறப்புகள் என்ன ?

வேமனாவின் சுமார் நாலாயிர   பாடல்களைத்  தொகுத்துள்ளார்கள். அவர் ஆந்திர பிரதேசம் முழுதும் யாத்திரை செய்து பாடிய பாடல்கள் அவை.. வேலைக்காரன் அபிராமாவுக்கு தான் செய்த தீங்குகளுக்கு மன்னிப்புக் கோரியும் அவரது குணங்களைப்  புகழ்ந்தும் பாடிய பாடல்களும் அண்ணி நரசம்மாவின் அருங்குணங்களைப் போற்றிப்  பாடிய பாடல்களும் அந்தப்பாடல்களில் இடம்பெற்றன. அத்வைத வேதாந்தக் கருத்துக்களை முக்கியமாகப் பாடினார் .. அவரது கவிதைகள் பல பொருட்களைத் தரும் வகையில் அமைந்தன. ஆழமான, ஆனால் தெளிவான பாடல்கள் அவை.

*****

9.அவர் மீது எழுதப்பட்ட புஸ்தகம் எது ?

அவரது சீடர்களில் ஒருவர் வேமனா மீது சம்ஸ்க்ருத மொழியில் சதகம் இயற்றியுள்ளார்  அவர் நடத்திய பல அற்புதங்கள் இதில் இடம்பெறுகின்றன .

அவர் வாழ்க்கை பற்றி சில தெலுங்கு திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. பலர் நூல்களையும் எழுதியுள்ளார்கள். 

****

10.அவர் எங்கு, எப்போது சமாதி ஆனார் ? அவர் என்ன அற்புதங்களை செய்தார் ?

வேமனா பிறந்த ஆண்டு பற்றி வாதப் பிரதிவாதங்கள் இருப்பதால் சமாதியான ஆண்டு கிடைக்கவில்லை; கதிரி என்னும் கடாருப்பள்ளியில் அவருடைய சமாதி உள்ளது  சுமார் 300 ஆண்டு வீச்சில் இவரது காலத்தைக் கணிக்கின்றனர் . சி பி பிரவுன் நிறைய ஆராய்ச்சி செய்து முடிவு செய்த ஆண்டு 1652  (.பிறந்த ஆண்டு).

அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை ; எப்போதும் ஒரு முலாம் பழத்தைக் கொடுப்பார் . அதில் பொன்னோ ரத்தினக் கற்களோ இருக்கும். இது பல முறை நடந்துள்ளது  இடி விழுந்தும் கூட அவர் சமாதி சேதம் அடையவில்லை. அவரே அதிலிருந்து தோன்றி பின்னர் சமாதிக்குள் நுழைந்தார். அவரது வாக்குகளும் கவிதைகளும் தெலுங்கு மக்களின் பேசசு வழக்கில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகினறன.

–SUBHAM—

TAGS– வேமனா, தெலுங்கு, கவி ,யோகி , ஆந்திரம், கதிரி அபிராமா, வேலையாள், நரசம்மா , குரு, QUIZ வேமனா பத்து

Leave a comment

Leave a comment