WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.960
Date uploaded in London – —2 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் நிகழ்ச்சி 1-12-2024 அன்று சந்தான சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. திரு ச. நாகராஜன் நிகழ்த்திய உரை இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
( ஞான மயம் நிகழ்ச்சிகளில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவக்கிரகக்ங்கள் , சித்த வைத்தியம் பற்றி சுமார் பத்து உரைகளை நிகழ்த்தியவர் சென்னை சந்தானம் சீனிவாசன் )
சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் சுவாமிநாதன் அவர்களே அனைவருக்கும் சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் ஒரு அபூர்வமான மனிதருக்கு நமது அஞ்சலியைச் செலுத்தும் நிகழ்ச்சி இது.
திரு சந்தானம் சீனிவாசன் என்ற மாமனிதர் மறைந்து ஒராண்டு ஆக இருக்கும் நிலையில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவர் படைத்து வெளியாகியுள்ள இரு புத்தகங்களை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார். 10-12-2023 அன்று மறைந்தார்.
அவரது படைப்புகள் பல. இரு புத்தகங்களை www.pustaka.co.in என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நவீன ஞான மொழிகள் பாகம் 1 என்ற அவரது புத்தகம் 24 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அதில் சுமார் 654 நவீன ஞான மொழிகள் உள்ளன.
இதன் விலை ரூ 160 பக்கங்கள் 140
கிடைக்கும் இடம் : www.pustka.co.in
தொலைபேசி எண் 91 7418555884
இந்தப் புத்தகத்தில் திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரை இது.
நவீன ஞான மொழிகள் பாகம் 1
முன்னுரை
கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.
இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.
அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!
இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.
இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.
அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.
இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
சென்னை சந்தானம் சீனிவாசன்
19-7-2023
இந்த நூலுக்கு அணிந்துரையை அடியேன் வழங்கியுள்ளேன். அணிந்துரை இது:
காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.
இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.
இந்தப் பழமொழிகளை பெரும் புலவர்களும் மகான்களும் தம் தம் இலக்கியங்களிலும் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.
நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.
அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.
இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.
இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.
ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.
இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.
இதற்கான மகத்தான பின்னணியை அவர் கொண்டவர். பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட தேசபக்த, பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே இதை வெற்றிகரமாகச் செய்யும் நுட்பமான வழிமுறைகள் அவருக்குக் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.
அத்தோடு தொழில்ரீதியாகவும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுய முன்னேற்றம், வாழும் வழி முறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் அவர் பயிற்சி வகுப்புகளைப் பல ஆண்டுகள் எடுத்து வந்துள்ளார்.
இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.
இந்தப் பயிற்சிகளில் இவரது நகைச்சுவை ததும்பிய பேச்சுக்கு ஒரு காரணமாக அமைந்தது இந்த நவீன ஞான மொழிகளின் தொகுப்பு என்றால் அது மிகையல்ல.
இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.
இவரது முயற்சியை அனைவரும் பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை.
அவருக்கு எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த முதல் பாகத்தில் சுமார் 500 மொழிகளையே நாம் படித்து மகிழ்கிறோம்.
அடுத்து பல பாகங்கள் வெளிவரும்படி ஏராளமான நவீன ஞான மொழிகள் அவரிடம் இருப்பதால் அவற்றையும் நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.
அவர் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
19-7-2023
நூலில் உள்ள அனைத்து நவீன ஞான மொழிகளைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட எடுத்துக்காட்டாக சில மொழிகளை இப்போது பார்க்கலாம்:
நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன???
குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை
படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது
மூட நம்பிக்கை!!!
கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???
கணிப் பொறியில் எலி வெளியே இருக்கும்
எலிப் பொறியில் மவுஸ் உள்ளே இருக்கும்………
உலகத்தில் தலை சிறந்த ஜோடி எது????
செருப்பு…..
ஒன்று இல்லையென்றால் இன்னொன்று வாழாது.
ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???
ரேஷன்லே எடை குறையும் !!!
பேஷன்லே உடை குறையும்!!!
கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.
கடவுள் டென்ஷனானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….
டாக்டர் டென்ஷனானா கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!
எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,
என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!
திருவள்ளுவர் இப்போதிருந்து திருக்குறள் எழுதியிருந்தாலும்,
இறுதி வரியில் “உண்மையான தமிழனாக இருந்தால் இதை
ஷேர் செய்” என்றே எழுதியாகணும்!!!
HOTEL ADVT
WE OFFER THREE KINDS OF FOOD!!!
GOOD. – CHEAP – FAST
BUT YOU CAN PICK ONLY TWO.
GOOD AND CHEAP. WON’T BE FAST
FAST AND GOOD. WON’T BE CHEAP
CHEAP AND FAST. WON’T BE GOOD
நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும்,
மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார், உன் முகம்
எல்லோருக்கும் பிடிக்கும்!!!
மேடம், நாங்க சோப்பு கம்பேனிலேர்ந்து சர்வே எடுக்க வரோம்.
துணி துவைக்க நீங்க எதை உபயோகிக்கிறீங்க???
என் கணவரை……!!!!
ஓரெட்டில் (8) வளர்க்காத வளர்ப்பும்,
ஈரெட்டில் (16) படிக்காத படிப்பும்,
மூவெட்டில் (24) நடவாத மணமும்,
நாலெட்டில் (32) பிறவாத மகவும்,
ஐயெட்டில் (40) சேர்க்காத பொருளும்,
ஆறெட்டில் (48) பெறாத புகழும்,
ஏழெட்டில் (56) கற்காத ஞானமும்,
எட்டெட்டில் (64) சாவாத சாவும்,
பின்னால் துன்பமே விளைவிக்கும்.
உலகில் ஏழு பாவங்கள்
1.உழைப்பில்லாத சொத்து
2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை
3.ஒழுக்கமில்லாத கல்வி
4.நாணயம் இல்லாத வார்த்தை
5.மனித நேயமில்லாத அறிவியல்
6.தியாகமில்லாத பிரார்த்தனை
7.கொள்கையில்லாத அரசியல்
டீக்கும் காப்பிக்கு என்ன வித்தியாசம் தெரியுமா???
டீ (TEA) ல ஒரு ”ஈ“ இருக்கும், காப்பில இரண்டு “ஈ” இருக்கும்!!! (COFFEE)
KNOWLEDGE DECIDES WHAT TO SAY……
SKILL DECIDES HOW TO SAY….
ATTITUDE DECIDES HOW MUCH TO SAY
WISDOM DECIDES WHETHER TO SAY OR NOT!!!
திருடனுக்கு பிடித்த ராகம்……………”சுருட்டி”!!!
உடுத்திக்கொள்ள முடியாத டிரஸ்……..”அட்ரஸ்”
உண்ண முடியாத பன் …………….”ரிப்பன்”
சாப்பிடக்கூடிய கட்டை………….”கொழுக்கட்டை”
பேச முடியாத வாய் …………… “செவ்வாய்”
ஜெயிலர் ஒரு கைதியைப் பார்த்து : உன்னைப் பார்க்க நண்பர்களோ,
உறவினர்களோ ஏன் யாரும் வருவதில்லை???
கைதி : அவர்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்………
A ENGLISH PUBLICATION OFFERED A PRIZE FOR THE BEST DEFINITION OF A “FRIEND”
OUT OF THOUSANDS OF ANSWERS, BEST ANSWERS WERE GIVEN PRIZES.
“ONE WHO MULTIPLY JOYS, DIVIEDS GRIEF,AND WHOSE HONESTY IS INVIOLABLE”.
“ONE WHO UNDERSTANDS OUR SILENCE “.
“A WATCH WHICH BEATS TRUE FOR ALL TIME AND NEVER RUNS DOWN”.
“A VOLUME OF SYMPATHY BOUND IN CLOTH”
BEST PRIZE GOES TO,
“A FRIED IS ONE WHO COMES IN, WHEN THE WHOLE WORLD HAS GONE OUT !!!
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள்
வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின்மேல் “ ஒன்றுக்கு மேல் எடுக்க வேண்டாம்.
கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”
என்று எழுதியிருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த சாக்லெட் பெட்டியின் மேல் ஒரு குழந்தை
பின்வருமாறு எழுதியது. “எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்
கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”
to be continued………………………………………
tags- சந்தானம் சீனிவாசன் , அஞ்சலி – 1,